அழகான நாட்கள்
நெடுஞ்சாலையில் வேகமாய் சென்றது, அவனின் வாகனம்.......
அவன் உள்ளம் ஊமையாய் அழுக..... கண்கள் அதிகாலை செஞ்சூரியனை போல் சிவந்திருந்தன......
உடலில் உள்ள வலியை விட உள்ளத்து வலியே அவன் உயிரை வதைப்பதாய் உணர்ந்தான்....
உணர்வுகள் புதைக்கப்பட்டு பழகிய அவன் மனது, எந்நேரமும் வெடித்துவிடும் எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தது.......
இவ்வாறு தான் நடக்கும் தான் என ஏற்கனவே தெரிந்தும், இப்போது நடந்த ஏமாற்றத்தை தாங்க, அவன் மனதில் தெம்பில்லாமல் போனது....
தன் நம்பிக்கையின் சிகரமாய் விளங்கும், தனக்குரியவளே அவன் நெஞ்சத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் கோடாரி கொண்டு தகர்ப்பாள்....என அவன் ஒருகாலமும் எண்ணியதில்லை....
தன்னுயிரே இனி தனதில்லை, என தன்னவளின் வாய்மொழியாய் கேட்டதிலிருந்து, உயிரானது உடலை விட்டு பிரிந்தது போல் உணர்ந்தான்......
கோபத்தை யாரிடம் வெளிப்படுத்துவது என புரியாமல், ஒன்றுமறியா காரின் கியரில் தன் கோபத்தை வெளிப்படுத்தி, வேகமாக செல்லும் காரின் வேகத்தை மேலும் கூட்டினான்.....
வேகத்திலும் கோபத்திலும் சென்ற அவனின் வாகனம், தறிகெட்டு சென்று தானாய் நின்றது, டீசல் தீர்ந்தமையால்....
கோபமும், பாரமும் நெஞ்சை அழுத்த, கண்களில் கண்ணீர் தேங்க ஆரம்பித்தது....
பார்வையை விழிநீர் மறைக்க, கண்களில் இருந்து நீர் தானாய் நிரம்பி வழிந்தது.....
தன்னிரக்கம் நெஞ்சில் மேலோங்க, காரின் ஸ்டியரிங்கில் முகத்தை புதைத்தபடி, பெருங்குரலெடுத்து அழத்துவங்கினான், அவன் ....
சில மணிநேரங்களில், தன் கண்களை துடைத்து , காரில் இருந்து வெளியேறினான்.....
நடுநிசியானதால், ஆள்நடமாட்டம் அத்தெருவில் இல்லை......
யாருமற்ற சாலையில் அங்கும் இங்குமாய் அலைந்த படியும், கீழிருந்த கற்களை கால்களால் ஏத்தியபடியும், மனஉளைச்சலில் சிக்கி தவித்தான்.......
அவன் அப்பாவிடமிருந்து தொடர்ந்து அவன் அலைபேசியில், அழைப்புகள் வந்த வண்ணமிருந்தன......
முதலில் அதை அலட்சியப்படுத்தியவன்...... ஒரு கட்டத்திற்கு மேல் அவனின் அழைப்பொலி எரிச்சலை ஏற்படுத்த..... அவன் கைபேசியை தரையில் வீசினான்....
அனுவின் " எனக்கு ஏற்கனவே கல்யாணமாயிடுச்சு............. " என்ற வார்த்தைகள் அவன் பெருமூளையெங்கும் எதிரொலிக்க, அவன் சிறுமூளை செயலிழந்தது.......
உடலின் நிலைப்புதன்மை சிறுமூளை செயலிழப்பால் ஆட்டம் காண, நிற்க திறனற்று, முழங்காலூன்றி, சரிதமர்ந்தான்.....
"ஏன் எனக்கு மட்டும் இப்படிலாம் நடக்குது...... ஏன் டோரா இப்படி பண்ண?????....... கடைசிவரை நீ எனக்கு கிடைக்கவே மாட்டியா????..... நீ எப்படி என்ன விட்டுட்டு வேற யாரையோ கல்யாணம் பண்ணுவ?????..... என்னய உனக்கு பிடிக்கலையா???? ..... ஏன் டோரா ? .... ஏன்???? " என வாய்விட்டு புலம்பியவன், கைகளால் முகத்தை மூடியபடி, வாய்விட்டு அழதுவங்கினான்....
மீண்டும் அவன் அப்பாவிடமிருந்து அழைப்பு வர, அழைப்பொலி முடியும் நேரத்தில் நிமிர்ந்தவன், அவன் கைபேசி திரையை பார்க்க......
அழைப்பு முடிவுற, விரிசலுற்று இருந்த திரையில் அனுவின் சிரித்த முகமாய் இருக்கும் சிறுவயது படம் ஒளிர, அனுவின் வடிவான முகம் அவனுக்கு அமைதியை தர, அப்படம் எடுக்கப்பட்ட காலத்தை அவன் மனம் நினைக்க......
நினைவுசுழல்களால் பின்னோக்கி இழுத்து செல்லப்பட்டான், யுவராஜ் ...
.
.
.
.
.
.
.
யுவராஜின் மனவோட்டம் :
என் சிறுவயது நினைவுபிம்பங்கள் என் மனக்கண்ணில் நிழலாடின....
நான் பிறந்தவுடனே என் அம்மா இறந்துவிட்டார்கள்..... என் அப்பா வாசன் மட்டுமே என்னை வளர்த்தார்......
உறவினர்கள் வலியுறுத்தியும் எனக்காகவே அவர் மறுமணத்தை நிராகரித்தார்....
அப்பா, சொந்தமாக பல வியாபாரங்கள் செய்வதினால், வீட்டிலே இருக்கமாட்டார்..... அவர் என்னுடன் செலவிடும் நேரமும் மிகக்குறைவு......
எனக்கு சமைப்பதற்கு ஒருத்தர், என்னை பார்த்துக்கொள்ள ஒருத்தர், என்னை ஸ்கூலில் விட ஒருத்தர், என பலர் இருந்தும், எனக்கே எனக்காய் அன்பை ஊட்டும் ஒருத்தர் கிடைக்கவில்லை.....
இல்லாத ஒன்றுக்கு ஏங்கி தவிப்பது, மனிதஇயல்பு...... நான் மட்டும் அதில் விதிவிலக்கல்ல......
சிறுகுழந்தையான எனக்கு தாயின் பாசமும், தந்தையின் நேசமும் சரியான நேரத்திற்கு கிடைக்கவில்லை....
என் சிறுமனம் பாசத்திற்கு ஏங்கியது..... தாய் வேண்டுமென என் உள்ளம் எதிர்பார்த்தது.... எதிர்பார்ப்புகள் பொய்த்து போனதால் வெறுமை சூழ்ந்தது.....
மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்க வேண்டிய வயதில், வெறுமை மட்டுமே என்னில் குடியிருந்தது.....
யாரிடமும் நான் நான் பேசுவதில்லை..... விளையாடுவதும் இல்லை.... சிரிப்பு கூட எனக்கு அரிதாகி போனது.....
நான் படித்த பள்ளியில், சில குழந்தைகளின் அன்னையர், அவர்களின் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போதும், பாசமாக அவர்களின் கன்னத்தில் முத்தமிடும் போதும் என் பிஞ்சு மனம் வலியை உணர்ந்தது.....
..... யாரும் எனக்கில்லை என்ற எண்ணம் பசுமரத்தாணி போல் என் மனதில் பதிந்தது.................
தாழ்வுமனப்பான்மை நெஞ்சில் குடிகொண்டது...... யாரையும் பிடிக்காமல் போனது.......
அனைவரிடமிருந்தும் ஒதுங்கிபோனேன்
... தரைமட்டுமே என் சொந்தமாகி போனது......
தனிமையே என் துணையாகி போனது..... என் பள்ளியில் என்னுடன் படிப்பவர்கள் எல்லாம் ஊமை என்றும், செவிடு என்றும் என்னை கேலிப்பொருள் ஆக்கினர்.....
அது எனக்கு பெரும் மனஉளைச்சலை தர, பள்ளி செல்வதே எனக்கு வேண்டா வெறுப்பாகிப்போனது.......
ஐந்தாம் வகுப்பு ஆரம்பமாகும் போது, எனக்கு பள்ளிக்கு செல்லவே விருப்பம் இல்லை......
"அப்பா நான் இனிமே ஸ்கூலுக்கு போமாட்டேன்..... " என நான் சாப்பிடாமல் அடம்பிடிக்க, என் நடவடிக்கைளை ஆசிரியர் மூலம் அறிந்த அப்பா, என் பள்ளியை மாற்றினார்......
அன்று பள்ளியில் சேர நான் காத்திருந்த பொழுது, என் வயதை ஒத்த ஒரு சிறுமி, டோரா போன்ற முடியுடன், கொழுகொழு கன்னங்களுடன், இமைகளை சிமிட்டி, பெரிய கண்களை உருட்டியபடி, கைகளை காற்றில் ஆட்டியபடி, ஒரு சிறுவனிடம் கதையளந்து கொண்டிருந்தாள்......
அனைவைரையும் வெறுக்கும் நான், அவளை கண்டவுடன், அவளிடம் நட்பு பாராட்ட விரும்பினேன்......
அவள் வகுப்பிலே சேர விரும்பினேன்..... அவ்வாறு நான் எண்ணிகொண்டிருக்கும் போதே, என் அப்பா என்னை அங்கிருந்து அழைத்து சென்றுவிட்டார்....
" இங்கேயாச்சும் நாலு பேரு கூட பேசி பழகணும்..... ஓகேவா,???.... உம்முனு இருக்க கூடாது..... " என என் உயரத்திற்கு மண்டியிட்டு என் அப்பா சொல்ல.....
நான் சம்மதமாய் தலையசைத்தேன்......
தலைமையாசிரியர், "விடுங்க சார்... நான் பாத்துக்குறேன் " என்க,
என்னை தலைமையாசிரியரிடம் விட்டுவிட்டு, எனது அப்பா சென்றுவிட்டார்.....
வாசலில் இருந்த போதே , நான் நட்பு பாராட்ட நினைக்கும், அந்த டோராவை கண்டுகொண்டேன்.... அவளுடைய வகுப்பில் தான் படிக்க போகிறோம் என்ற நினைப்பு ஒரு சிறுநிம்மதியை படர செய்தது....
டோராவின் குழப்பம் நிறைந்த முகத்திலிருந்தே, அவளுக்கு அப்பாடம் பிடிக்கவில்லை.... என தெளிவாய் விளங்கியது......
அவளின் முகபாவனைகள், அழகாகவும், சிரிப்பை தோற்றுவிப்பதுமாய் அமைந்தது..... அவள் செய்கையில் ஒரு நொடி சிரித்த நான், மறுநொடி மீண்டும் தலையை தொங்கபோட்டுக்கொண்டேன்...
அப்போது தலைமையாசிரியர் "இவன் இனிமே உங்களோட தான் படிக்க போறான்..... இவன் பெயர் யுவராஜ் " என்றுவிட்டு ஆசிரியரிடம் ஏதோ சொல்லிவிட்டு சென்றார்....
ஆசிரியர் என்னை எல்லோர் முன்னிலையிலும் அறிமுகம் செய்ய சொன்னார்... எனக்கு அறிமுகம் செய்ய விருப்பம் இல்லாததால், என் தலை தரையை நோக்கி இருக்க "சரி நீ போய் உக்காரு "என்றார், ஆசிரியர்....
வேறெங்கும் இடம் இல்லாத காரணத்தினால், டோராவின் அருகே இருக்கும் சிறுவன் அருகில் அமர்ந்தேன்......
அடிக்கடி திருட்டுதனமாய், அவர்கள் இருவரையும் ஓரக்கண்ணில் பார்த்தவாறு, அமர்ந்திருந்தேன்.......
.
.
.
.
உணவு இடைவேளை நேரம்....
"அவன் எதுக்கு இங்க வந்து உக்காந்தான்?? " வார்த்தையில் கோபம் கொப்பளிக்க டோரா அச்சிறுவனிடம், கேட்டாள்...
"ஹே அனு வேற இடம் இல்லை பாரு..... விடு உக்காந்துட்டு போட்டும் "என்றான், அச்சிறுவன்....
அவனின் கூற்றிலிருந்து, " அப்போ டோராவோட பேர், அனுவா???...ஆனா டோரா தான் நல்லா இருக்கு.. " என உள்ளூர எண்ணிக்கொண்டேன்.....
"ஹாய்.. ஐ அம் சித்ததார்த் "என்று அவன் என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்டான்.....
அவன் சிரித்த முகமாய், என்னிடம் பேசினாலும், ஏனோ என் மனம் அவனிடம் ஒட்டவிட்டலை....
அதனால் நான், வழக்கம் போல்,
மௌனமாய் தரையை நோக்கியவாறே அமர்ந்திருந்தேன்....
"பாரு அவனுக்கு திமிர " என கோபமாய் டோரா கத்த, சித்தார்த் அவளை அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான்...
அவள் கத்தியதை வைத்து, "டோராவுக்கு ரொம்ப தான் கோபம் வருது..... " என எண்ணிய நான், அவள் கோப முகத்தை பார்ப்பதற்காக நிமிர்ந்த நான் சித்தார்த்தை பார்த்துவிட்டு, டோராவை பார்த்தேன்.....
கோபத்தில் அவள், குண்டு கண்களை விரிக்க, அது எனக்கு சிரிப்பையே வரவழைத்தது..... ஆனால், உடனே அதை வெளிப்படுத்த எனக்கு உடன்பாடில்லை......
அதனால், மீண்டும் தரையை நோக்கினேன்.....
அன்றிரவு, அப்பா என் அறைக்கு வந்தார்.....
நான் "டோராவின் பயணங்கள்" கார்ட்டூன் பார்த்து கொண்டிருந்தேன்.....
"யுவி " என பாசமாய் அப்பா அழைக்க,
நான் கேள்வியாய் அப்பாவை நோக்கினேன்...
"இங்க வா" என அவர் அழைக்க நான் அவர் அருகில் செல்ல, என்னை அவர் மடியில் அமர்த்திக்கொண்டார்....
அவர் என் கன்னத்தில் முத்தமிட, என், என் பிஞ்சு மனம் பாசத்தில் கண்ணீர் சிந்தியது.....
"ஏன் யுவி அழகுற..... என்னாச்சு??? " என்றார், என் அப்பா....
நான் பதில் பேசாமல் அவரை கட்டிக்கொண்டு அழ, அவர் புரிந்தது போல் என்னை தட்டிக்கொடுத்தபடி, கட்டிக்கொள்ள நான் அமைதியாய் அவர் மேல் சாய்ந்திருந்தேன்.....
"இனிமேல் அப்பா உன்கூட தான் தூங்குவேன்..... ஓகேவா???, " என அவர் சொல்ல......
" நிஜமாவாப்பா??? " என ஆச்சர்யத்தில் கேட்க.....
"நிஜமாத்தான் " என அவர் என் தலையை கலைத்தபடி, சொல்ல மகிழ்ச்சி மிகுதியால், நான் மீண்டும் அவரை கட்டிகொண்டேன்.....
என்னை விலக்கிய அவர், "புது ஸ்கூல் எப்படி இருந்துச்சு? ??? " என கேட்க.....
அவர் அப்படி கேட்கவும்,, சோகமான நான், தலையை தொங்க போட்டுக்கொண்டேன்......
அவரின் கைவிரலால், என் தாடையை நிமிர்த்தி, அவர் முகம் பார்க்க செய்தவர்......
"யாராச்சும் பிரண்ட்ஸ் கிடைச்சங்களா??? " என அப்பா கேட்க, என் நினைவு, ஸ்கூலில் பார்த்த டோராவால் நிறைந்து இருந்தது......
நான் அமைதியாய் இருப்பதை பார்த்த அப்பா, என் கன்னங்களை அவர் கைகளால் தாங்கியபடி, "யுவி..... இப்டிலாம் இருக்க கூடாது.... எல்லார் கூடவும் பேசணும், பழகணும், விளையாடணும்...... அப்போ தான் யுவி குட் பாயா வளருவான்..... இல்லன்னா...... யுவி பேட் பாயா மாறிருவான்...... எல்லார் கூடவும் பேசணும்.....ஓகேவா???? " என அவர் கேட்க, நான் சம்மதமாய் தலையசைக்க, என் நெற்றியில் முத்தமொன்றை வழங்கினார்......
நானும், அப்பாவும் மெத்தையில் தூங்க, நான் அப்பாவை கட்டிக்கொண்டு, " எப்படியாச்சும் அந்த டோராகூட பிரண்ட் ஆய்டனும்.... அப்போதான், நான் குட் பாயா மாறுவேன்.... " என எண்ணியபடி, உறங்கிபோனேன்.....
இப்படியே ஒரு வாரம் சென்றுவிட்டது......
இந்த ஒரு வாரமாய் நானும் டோராவுடன் பேசி பிரண்ட் ஆகவேண்டுமென்று நினைத்தேன்......
ஆனால் அவள், அந்த சித்தார்த்துடன் மட்டுமே, பேசுவாள், சிரிப்பாள், விளையாடுவாள்.....
அதுவே எனக்கு அந்த சித்தார்த்தின் மீது பொறாமையை ஏற்படுத்தியது...... அவர்கள் இருவரும் பேசி மகிழ்வதை பார்த்த எனக்கு, நானும் அவ்வட்டத்தில் இணையமாட்டேனோ என்ற ஏக்கம் துளிர்விட்டது.....
அவளிடம் நானே தானாக சென்று பேச, ஏதோ ஒன்று என்னை தடுக்க, என் நடவடிக்கையில் பெரிதாய் ஒரு மாற்றத்தையும் நான் ஏற்படுத்திக்கொள்ளவில்லை......
அன்று ஒரு நாள் பள்ளியில் இடைவேளையின் போது, இரு மாணவர்கள் ஓடியாடி
விளையாடிக்கொண்டிருந்தார்கள்....
அவர்களில் ஒருவன் என் மீது மோதியதால் நான் நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டேன்.... சித்தார்த் வேகமாக ஓடிவந்து என்னை தூக்கிவிட்டான்....
"ஹே உனக்கு ஒன்னும் ஆகலையே... "என்றவாறு என் உடலை ஆராய்ந்த படி, கேட்டான்....
எனக்கு சிராய்ப்பு ஏற்பட்டிருந்தது..... வலி ஒன்றும் பெரிதாய் இல்லை....
என்ன தான் நான் சித்தார்த்திடமிருந்து விலகி சென்றாலும், தானாக வந்து பேசும் குணமும், எனக்கு அடிபட்டவுடன் அவன் காட்டிய பரிவும், என் கல் மனதையும் கரைத்துவிட்டது.....
அவன் கையை எடுத்துவிட்டு, நான் அமைதியாக சென்றுவிட்டேன்.....
நான் ஒரு மரத்தின் கீழ் போடப்பட்டுள்ள பெஞ்சின் மீது தரையை பார்த்தவண்ணம் , சித்தார்த்தை பற்றி யோசிக்கலானேன்......
"ரொம்ப நல்ல பையனா இருக்கான் ... அவன் கூடவாச்சும் பிரண்ட் ஆகணும்..... அதுக்கு டோரா ஒதுக்குவாளா??? யார்கூடவும் அவன பேசவிடமாற்றாளே...... சரியான பிடிவாதக்காரி... " என எண்ணியபடி அமர்ந்திருக்க,
... "ரொம்ப வலிக்குதா??? "என்ற, குரல் என் சிந்தனையை தடை செய்தது....... குரலை வைத்து அது டோரா தான் என்றுணர்ந்த என் மனது , காரணமில்லாமல் விதிர்த்துப்போனது.....
" டோரவே என்கிட்ட வந்து பேசிட்டா" என்ற அகக்களிப்பில், எனக்கு வார்த்தை வராததால் , இடவலமாக தலையை அசைத்து இல்லை என்று உணர்த்தினேன்....
"நான் அனன்யா, இவன் சித்தார்த் உன் பேர் என்ன?? "என்றாள், டோரா...
"அது எனக்கு ஏற்கனவே தெரிஞ்ச விஷயம் தானே"..... என நான் யோசித்தபடி, தொண்டையில் என் வார்த்தைகளை வெளிக்கொண்டுவர முயல,
"அனு அவனால் பேசமுடியாது" என சித்தார்த் சொல்ல,
இங்கும், என்னை ஊமை, செவிடு என அழைத்துவிடுவார்களோ என பயந்த நான், தொண்டையை செரும்பி , "யுவராஜ் " என அழுத்தி அவர்கள் காதில் விழும்படி சத்தமாக சொன்னேன்......
நான் அவர்களை பார்க்க, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஆச்சரியமாய் பார்த்துவிட்டு ஒருசேர என்னை நோக்கினார்கள் .....
டோரா வாயை பிளந்தவாறு ஆச்சரியத்தோடு என்னை நோக்கினாள்...., அது எனக்கு சிரிப்பை அழைத்து வர, அப்போதும் நான் அதை வெளிப்படுத்தவில்லை...
" நீ.... நீயா பேசுன??.... என மெல்லிய ஆச்சர்யத்தோடு ஆரம்பித்த டோராவின் குரல்...." சே.. இல்லை இவனால தான் பேசமுடியாதே " என முடிந்திட.
"எனக்கு உன்ன விட நல்லாவே பேச தெரியும் " என நான் அவளை சீண்டும் படி, பேசிட..
"அப்போ உனக்கு பேச தெரியும்....இந்த ஒரு வாரமா பேசத்தெரியாத மாதிரி நடிச்சுருக்க.. .. எல்லாரையும் நம்ப வச்சு ஏமாத்திருக்க ....சரியான பிராடு.... இதுக்குதான் யாரையும் நம்ப கூடாது... "......உயர்ந்த டோராவின் குரலில் கோபத்தின் வெளிப்பாடு இருந்தது....
அவள் என்னை பிராடு என சொல்லவும், கோபத்துடன் மரபெஞ்சில் இருந்து இறங்கிய நான்,
"ஏய் யார பாத்து நடிக்கிறேன்,, பிராடுனு சொல்லுற.... நான் உன்கிட்ட சொன்னேனா என்னால பேச முடியாதுனு..... நீயா நினச்சா நா ஒன்னும் பண்ண முடியாது " என எகிறிட......
"ஆமான்டா நீ பிராடு.... உங்க அம்மா பிராடு.... உங்க குடும்பமே ஒரு பிராடு குடும்பம்..... "என டோரா மேலும் எகிறிட....
அவள் இல்லாத, என் அன்னையை பற்றியும், என் தந்தையை பற்றி திட்டியது எனக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்த, "என் குடும்பத்தை பத்தி பேசுன நா சும்மா இருக்கமாட்டேன் "என நான் ஆவேசமாய் பேசிட...
"அப்டிதான்டா பேசுவேன்... என்னடா பண்ணுவ??? " என டோரா மேலும் என் கோபத்தை தூண்டிட...
"இதுக்கு மேல பேசிதான் பாரேன் " என நானும் ஆவேசமாய் டோராவை அடிக்கும் நோக்கத்தோடு நெருங்க..
அதுவரை கல்லென நின்ற சித்தார்த் என் முன் நின்று "தப்பு என்மேல தான்டா..... சாரி நான்தான் அனன்யா கிட்ட உன்னால பேசமுடியாதுனு சொன்னேன்... அவ ஏதோ தெரியாம பேசுறா விட்டுடு " என சொல்லிட, அவன் மேலிருந்த நல்ல எண்ணத்தால், என் ஆவேசம் சிறிது குறைந்தது....
"நீ எதுக்கு அவனுக்கு சாரி சொல்லுற..., எல்லாரையும் நடிச்சு ஏமாத்துனதுக்கு அவன் தான் சாரி சொல்லனும் "என டோரா சித்தார்த்திடம் பாய்ந்திட.....
நான் கோபமலையின் உச்சிக்கே சென்றுவிட்டேன்...... "இவங்களா ஒன்னு நினச்சா, அதுக்கு நான் மன்னிப்பு கேட்க்கணுமா???? ... என் மேல தப்பு இல்லதாப்போ .........நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும்????? " உள்ளக்குள் கொதித்த நான்,
கனல் பார்வை டோராவை நோக்க, பதிலுக்கு டோராவும் என்னை எரித்திடும்படி பார்க்க, சித்தார்த் டோராவை தரதரவென இழுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.....
அவர்கள் சென்றவுடன் நான் டோராவின் மீது அடங்கா கோபம் கொண்டேன்......." அவ எப்படி எங்க அம்மா, அப்பாவ திட்டலாம்???? ..... சரியான திமிரு பிடிச்சவ..... " என உள்ளூர புழுங்கினேன்......
மறுநாள் காலை வகுப்பில் நான் நுழையும் போதே, டோராவின் இருக்கை காலியாக இருந்தது.....
சித்தார்த் மட்டுமே அமர்ந்திருந்தான்..... வகுப்பை கூட நான் கவனிக்கவில்லை.... என் மனம் நேற்று நடந்ததை மறந்து "டோரா ஏன் வரல " என்ற யோசனையில் ஆழ்ந்தது....
" சித்தார்த்கிட்ட கேப்போமா??? " என எண்ணிய நான், அவனிடம் பேசுவதற்கு தயக்கமாய், தரையை பார்த்து அமர்ந்திருந்த நேரம்,
"யுவராஜ் " என மென்மையாக சித்தார்த் என்னை அழைக்க........
"அப்பாடா..... அவனே பேசிட்டான்..... மெதுவா டோராவை பத்தி கேப்போம் " என்று எண்ணியபடி, நிமிர்ந்த நான் அவனை பார்த்து சிநேகமாய் மெலிதாய் சிரித்தேன்.....
"யுவராஜ் நேத்து.... "என சித்தார்த் ஆரம்பிக்கும் முன்னரே, நொடியில் நேற்று நடந்தது என் நினைவிற்கு வர,
"அத பத்தி பேசவேணாம் "என அவனுக்கு அணையிட்டேன்....சித்தார்த் வழிந்து புன்னகைத்தான்.....
"பிரண்ட்ஸ்? " என சிறிது தயக்கத்தோடு சித்தார்த் என்னிடம் கையை நீட்டினான்.....
அதுவரை சிரித்த முகமாய் இருந்த நான், " அவன் பிரண்ட்ஸ் என கேட்டதும், டோராவிடம் நட்பு பாராட்டமுடியவில்லை என்ற சிறுவருத்தம் மனதில் மேலோங்க கீழே தலையை தொங்கபோட்டுக்கொண்டேன்....
சித்தார்த்தின் முகம் வாடி, அவன் கையை எடுக்க போகும் நேரம், "சரி இவன்கூடவாச்சும் பிரண்டா இருப்போம்..... ரொம்ப நல்லவனா இருக்கான்...." என்றெண்ணிய நான், மலர்ந்த முகத்துடன், அவன்கையை குலுக்கி "ஓகே பிரண்ட்ஸ் "என்றேன்....
"அப்புறம் நாம பிரண்ட்ஸா இருக்குறது அனுவுக்கு தெரியவேணாம்... தெரிஞ்சா பிரச்சனை பண்ணுவா " என மீண்டும் தயக்கம் மேலிட சித்தார்த் என்னிடம் கோரிட....
"அவள் என்ன என் தலையை சீவீடுவாளா??? டோரா...... நீ ரொம்ப ஓவரா போற..... உனக்கு இருக்கு.... " என்று எண்ணிய நான்,
சித்தார்த்தை சிறிது முறைத்து பின் சிரித்து, "சரி " என்றவாறு தலையசைத்தேன்....
அன்று மாலை என்னை அழைத்து செல்ல, என் அப்பா வரவில்லை..... பள்ளியிலிருந்து, அனைவரும் சென்றுவிட்டார்கள்.... என்னையும், சித்தார்த்தையும் தவிர.......
அப்போது அங்கு வந்த சித்தார்த்தின் அப்பா, என்னையும் அழைக்க, நான் தயங்கினேன்.....
என்னிடமிருந்து என் அப்பா எண்ணை வாங்கிய சித்தார்த்தின் அப்பா, அவர்க்கு தகவல் தெரிவித்துவிட்டு என்னை சித்தார்த்தோடு சேர்த்து அவர் வீட்டுக்கு அழைத்துசென்றுவிட்டார்.....
போகும் வழியெல்லாம்" டோரா ஏன் வரல.... " என்ற எண்ணமே நிறைந்து இருந்தது....
அங்கே வீட்டுக்கு சென்ற பிறகே, நான் தெரிந்துகொண்டேன்... அது டோராவின் வீடு என்று......
என் கண்கள் டோராவை தேடியது....
அங்கு ஒரு அம்மா, டோராவின் சாயலில் இருந்தார்..... அவரை சித்தார்த் "அத்தை "என்று அழைத்தான்.....
"அத்தை... இது யுவராஜ்..... என் புது பிரண்ட்... அனுக்கிட்ட சொல்லிறாதீங்க..... " என சித்தார்த் மெதுவாய் சொல்ல....
அவன் உயரத்திற்கு அவரும் குனிந்து "சொல்லல " என்றார்....
"யுவராஜ், இது எங்க தேனு அத்தை.... அனுவோட அம்மா... " என்றான், சித்தார்த்.....
அவரை பார்க்க, என் அம்மா இருந்திருந்தால் இப்படி தான் இருந்திருப்பார்கள் என தோன்ற, நான் அவரிடம் மென்னகைத்தேன்.....
"அத்தை, அனு எங்க?? " என சித்தார்த் ரகசியமாய் அவர் காதில் வினவ.....
"அவளுக்கு உடம்பு சரியில்லேல.... அதுனால டேப்லெட் போட்டுட்டு மாடில உள்ள ரூம்ல தூங்குறா " என அவரும் சித்தார்த்தின் காதில் ரகசியமாய், எனக்கும் கேட்கும்படி, சொன்னார்.....
"சரி, ரெண்டு பேரும் போய் பிரெஷ் ஆகிட்டு வாங்க... ஸ்நாக்ஸ் எடுத்து வைக்குறேன் "தேனு ஆன்ட்டி சொல்ல....
சித்தார்த் " வாடா போலாம் " என முன்னே சென்றுவிட்டான்....
என் மனம் முழுதும் டோராவை பார்க்க வேண்டுமென்று சொல்ல..... என் கால்கள் தானாய் மாடியில் உள்ள அவளின் அறையை அடைந்தன....
கண்களை மூடி மிக அமைதியாய், தூங்கி கொண்டிருந்தாள்..... டோரா....
"தூங்குறப்போ எவ்ளோ அமைதியா இருக்கா... முழிச்சிருக்கிறப்போ பட்டாசு மாதிரி வெடிக்குறா...... " என எண்ணிய நான், அவளின் அறையை ஆராய்ந்தேன்.....
அந்த அறை முழுதும் பொம்மைகளாலும், டோரா அவள் அம்மா, அப்பாவோடு சேர்ந்திருக்கும் படங்களும், அவளின் சிறுவயது படங்கள் முதல் தற்போதுள்ள படம் வரை நிறைந்திருந்தது........
அங்கு உள்ள மேஜையில் டோராவின் அழகான புகைப்படம் ஒன்று என்கண்ணை கவர்ந்தது.....
அதை எடுத்து வருடிய நான், என் பள்ளிப்பையில் அதை திணித்து பத்திரப்படுத்திக்கொண்டேன்......
அப்போது, " யார் நீ???? " என்ற கரகரப்பான குரல் கேட்க...... என் உடல் பதற ஆரம்பித்தது......
நான் திரும்பியவேளை, அங்கு டோராவின் அப்பா நின்றுகொண்டிருந்தார்.......
எனக்கு பயத்தில் பேச்சு தடைபட்டு, வியர்க்க ஆரம்பித்தது..... கை, கால்கள் உதற ஆரம்பித்தது....
அப்போது தெய்வம் போல் வந்த சித்தார்த்......" மாமா..... இவன் என் பிரண்ட் யுவராஜ்...... " என அவரிடம் கூறிவிட்டு,
"நீ இங்க தான் இருக்கியா??? வா டா போலாம்.... அத்தை கூப்பிட்டாங்க " என என்னை கீழே அழைத்துசென்றுவிட்டான்....
ஆனாலும், எனக்கு பயம் விட்டபாடில்லை.... எங்கே என்னிடம் இருந்து டோராவின் படத்தை பறித்துவிடுவார்களோ என்ற பயத்தில், என் பையை கீழே கூட வைக்காமல் கையிலே வைத்துக்கொண்டேன்.....
அதை பார்த்த தேனு ஆன்ட்டி, "அதுல என்ன புதையலா இருக்கு..... கீழ வை..... யாரும் தூக்கிட்டு போகமாட்டாங்க " என சொல்லியும் நான் கேட்கவில்லை...... பையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன்......
என் அப்பா வந்து, என்னை வீட்டுக்கு அழைத்து சென்ற பிறகே, என் உயிர் என்னிடம் திரும்பியது போல் இருந்தது......
Author's note :
Please do votes, comments.... the votes & comments are my appreciation to keep writing.....
Catch u later on next update makkale.....👋👋👋👋👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro