அயலவன்
அனுவின் வார்த்தைகளை காதில் வாங்கிய, சித்துவின் இதயம் உடைந்த கண்ணாடி போலானது....
அனுவின் மேலிருந்த அவனது பிடி தளர்ந்தது....
கண்கள் குளமாகி, கண்ணீர் விழிகளில் தேங்கி நின்றது.....
அவன் மூளையில் ரசாயனம் சுரந்து பலவகையில், அவனை சிந்திக்க தூண்டியது..... " அனுவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?? என்னோட அனுவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா??..... ச்ச..... அப்டிலாம் இருக்காது.....
அவள் பொய் சொல்றா.......................... ஆமா அவள் பொய் தான் சொல்றா...................
அவளை நம்பாத சித்து.................. அவள் சரியான டுபாக்கூர்.....
உன்னை ஏமாத்த பொய் சொல்றா..... " என அவன் மூளையை எச்சரிக்கை மணி அடிக்க.....
அவன் மனமோ உடைந்த நிலையில், செயலற்று பலமிழக்க, உள்ளூர நொறுங்கினான் சித்து......
"நீ பொய் தான சொல்லுற,?????...." என சித்து நம்பாமல் கேட்க..
"நான் எதுக்கு உன்கிட்ட பொய் சொல்லணும்..... எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு.... இது தான் உண்மை " என ஆவேசமாய், அழுத்தம் திருத்தமாக வெளிப்பட்டன, அனுவின் வார்த்தைகள்...
"நம்ம ரெண்டு பேருக்கும் எங்கேஜ்மெண்ட் ஆயிடுச்சு... விளையாடாத அனன்யா... " என அனு சொன்னது பொய்யாகிவிடாதா?? எனும் ஏக்கத்தில், சித்து கேட்க......
" ஐயோ....நான் எனக்கு கல்யாணமே ஆயிடுச்சுனு சொல்றேன்.. நீ என்னனா அந்த டம்மி எங்கேஜ்மெண்ட் பத்தியே பேசிட்டு இருக்க.. .....
நான் ஏற்கனவே கல்யாணமானவ..... நான் சொல்றது உன் மரமண்டைக்கு புரியுதா..... இல்லையா.... " என அனன்யா கத்தி சொல்ல......
அவள் சொன்ன விதம்..... சித்துவின் மனதில் பற்றி எரியும் உணர்ச்சி சுவாலைக்கு, எண்ணெய் ஊற்றுவது போல் அமைய, அவனுள் ஒளிந்திருக்கும் மிருகம் வெளிவர, அனுவின் முழங்கையை அழுத்தி பற்றியவன்,
" கல்யாணம் ஆய்டுச்சுன்னு சொல்ற... கழுத்துல தாலிய காணோம்.... காலுல மெட்டியை காணோம்....
பேருக்கு கூட நீ பொட்டு வச்சு நான் பாத்ததில்லை.... எல்லாத்துக்கும் மேல உனக்கு புருஷன்னு ஒருத்தன் இருக்குறதுக்கான எந்த அறிகுறியும் இல்லை....
என்ன பாத்தா உனக்கு கிறுக்குபையன் மாதிரி தெரியுதா?? பொய் சொல்லி தப்பிச்சிரலாம்னு பாக்காத..... உனக்கும், எனக்கும் குறிச்ச தேதில, கண்டிப்பா கல்யாணம் நடக்கும் " என அவள் முழங்கையை மேலும் அழுத்தினான்....
வலியின் மிகுதியினால், அவன் கைகளில் இருந்து தன் கையை விடுவிக்க போராடியபடி,
"வலிக்குது சித்து..... " என கண்களில் விழிநீருடன் அனு சொன்னவுடன், அவள் கைகளை விடுவித்தான், சித்து....
சிறிது, தன்னை ஆசுவாசபடுத்திக்கொண்ட அனு,
"நீ எனக்கும் எப்பவும் ஒரு நல்ல பிரண்ட்.... என்னோட வெல் விஷர்.... நான் என்னைக்குமே உன்னைய அப்படி நினைச்சு பாத்ததே இல்லை....இனிமேலும் அப்படி பாக்க முடியாது சித்து.... " என சித்துவுக்கு தன்நிலை விளக்கம் தர....
"அதான் ஏன் முடியாது??? " என சித்து மீளா கோபத்தில் கேட்டிட....
"புரிஞ்சுக்கோ சித்து ப்ளீஸ்... நான் என் ஹஸ்பண்டை லவ் பண்றேன்... மனசுல ஒருத்தர் நிறைஞ்சு இருக்கும் போது, உன்ன எப்படி என்னால கல்யாணம் பண்ண முடியும்....??? " என கலங்கிய கண்களுடன், அனு வலிமிகுந்த முகத்தோடு சித்துவின் கண்களை பார்த்து வினவ....
அவள் கண்களை நோட்டமிட்ட சித்தார்த்திற்கு அவள் பொய்யுரைப்பதாய் தோன்றவில்லை.....
அப்படியெனில், அனுவிற்கு நிஜமாவாகவே திருமணம் ஆகிவிட்டது என எண்ணும்போதே, ஈட்டி அவன் நெஞ்சில் பாய்வதற்கு நிகரான வலியை உணர்ந்தான்....
சித்துவின் இதயம் தூள்தூளாய் நொறுங்கியது....
ஒன்றும் விளங்காமல், இடிந்த நிலையில் இருக்கும் கட்டிடம் போல் ஆனது அவன் மனது.......
அவன் அவ்வாறு இருக்கும் போது, அனு, சித்துவின் உரையாடலை முழுவதும் கேட்ட யுவி.....
"இப்படி ஏற்கனவே கல்யாணமானவளுக்காக தான் என்னை அவ்ளோ தூரம் அசிங்கப்படுத்தின....?? " குத்தலாய் கேட்டவாறு, சித்துவின் அருகில் வந்தான் யுவி....
சித்துவின் மௌனம் மட்டுமே யுவியின் கேள்விக்கு பதிலாய் அமைந்தது....
"ச்சா.... என்னமா நடிச்சுருக்கா...... எப்பவும் என்னய பிராடுனு சொல்லுவா.....! இப்போ அவள் பண்ண வேலைக்கு பேரு என்னவாம்??? " என யுவி மீண்டும் குத்தலாய் சித்துவிடம் கேட்க.....,
சித்து தலையை குனிந்தபடி, பதிலளிக்க திராணியற்று நின்றான்..
"என்னோட சித்து.... என்னோட சித்து..... நடிச்சு... உன்னையும் ஏமாத்தி..... நல்ல பொண்ணு மாதிரியே நடிச்சு.... எங்க அப்பாவையும் ஏமாத்தி..... ச்ச.... என்ன ஒரு கேவலமான பிறவி..... உன்ன நடிச்சு ஏமாத்தின மாதிரி..... டெல்லில இன்னும் எத்தனை பேர ஏமாத்தியிருக்காளோ?????...... " என யுவி அனுவின் மேல் உள்ள மொத்த ஆத்திரத்தையும் தன் வார்த்தைகளால் குத்திக்காட்ட.....
சித்து கோபமாக யுவியின் கன்னத்தில் ஒரு அறைவிட்டான்.....
" என் அனுவ பத்தி இன்னொரு வார்த்தை தப்பா பேசுன பல்ல உடைச்சுடுவேன் ராஸ்கல்.... "என யுவியின் சட்டையை பற்றி, எச்சரித்த சித்து அனுவை பார்க்க... அவள் அங்கிருந்து வேகமாய் நடக்க தொடங்கினாள்...
யுவி தன் உதட்டோரம் வழிந்த உதிரத்தை துடைத்துக்கொண்டு,ஏளனத்துடன் சிரித்தவாறே, "என்னது உன்னோட அனுவா????"
"ஆமான்டா.... அவ நேத்துவரைக்கும் உன்னோட அனு.....; இன்னைக்கு வேற ஒருத்தனோட அனு.....; நாளைக்கு யாரோட அனுவோ???? " என யுவி முடிக்கும் முன்பே, யுவியின் முகத்தில் ஒரு குத்து சித்துவால் தரப்பட்டது......
யுவியும் சித்துவை தாக்க, யுவி - சித்துவின் சண்டை மேலும் வலுத்து, இருவர்க்கும் இரத்த காயங்களை பரிசாய் வழங்கியது......
இருவரும் சண்டையிட்டு சோர்ந்த நேரம்......
" போடா.... .....போ..... என் அனு.... என் அனுனு....... அவ பின்னாடியே பைத்தியம் போல சுத்து...... அவ உனக்கு நல்லா அல்வா கொடுத்துட்டு, வேற ஒருத்தன் கூட போ போறா...
அப்புறம் காதல் பரத் மாதிரி "ஞஞஞ..."னு பைத்தியமா அலையப்போற ... நீயெல்லாம் பட்டா தான் திருந்துவ... " என சினத்தில் சிவந்து சித்துவிடம் சொன்ன யுவி, அவன் காரில் ஏறி சென்றுவிட்டான்......
தாடையில் வழிந்த ரத்தத்தை தன் கையால் தொட்டு பார்த்த சித்து, அனு நின்றிருந்த இடத்தை நோக்கினான்....
அனு அங்கு இல்லாமல் போகவே......, வீட்டிற்கு தான் போயிருப்பாள் என எண்ணினான்,சித்து ...
அங்கு கீழே அவளின் கைப்பை கிடந்தது.....,
பணம் இல்லாமல் எவ்வாறு சென்றிருக்க முடியும் என எண்ணிய சித்து, அனுவை அலுவலகம் முழுதும் தேடினான்...
சுற்றி எங்குமே அனு,சித்துவுக்கு தென்படாமல் போகவே, அவளின் அலைபேசிக்கு முயன்றான்......
அவளின் அழைப்பொலி அவனுக்கு மிக அருகில் கேட்க...
நிமிர்ந்து.... அழைப்பொலி கேட்ட இடத்திற்கு சென்றான்..... அது அவளின் ஸ்கூட்டி விழுந்திருந்த இடத்தில் கிடந்தது..... அவளின் அலைபேசியை கையில் எடுத்தவன்..... கம்பெனி மற்றும் பக்கத்து தெருவிலும் அவளை தேடினான்.....
எங்கும் அவள் கிடைக்காமல் போகவே, அவனின் தேனு அத்தைக்கு முயன்றான்.....
அழைப்பை ஏற்ற தேன்மொழி, "ஹலோ சித்து..... ஏன்டா..... இவ்ளோ நேரம்???.... நீயும், அனுவும் எப்போ வீட்டுக்கு வருவீங்க??? " என கேட்க.....
அவரின் பேச்சிலிருந்தே, அனு அங்கு செல்லவில்லை என உணர்ந்தவன் "கொஞ்சம் வேலை அத்தை.... முடிஞ்சதும் வந்துருவோம் " என அவரிடம் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்......
அரைமணி நேரமாக எங்கு சென்று அனுவை தேடுவது என தெரியாமல், சித்து, காரில் அலைந்தபடி,அனுவை தெருத்தெருவாக, தேடிக்கொண்டிருந்தான்......
ஏமாற்றமமும், சோகமும் அவனின் உள்ளதை ஆக்கிரமித்து இருந்தாலும், அதை நெஞ்சின் ஒரு ஓரம் ஒதுக்கிவிட்டு, அனு கிடைத்தால் போதும் என சொன்னது சித்துவின் உள்மனது......
அவன் தீவிர தேடலில் ஈடுபட்டிருக்கும் சமயம், யுவியின் அப்பா வாசனிடமிருந்து சித்துவின் கைபேசிக்கு அழைப்பு வந்தது.......
யோசனையோடு அழைப்பை ஏற்ற சித்து " ஹலோ அப்பா " என்றான்.....
"அனன்யா இங்க தான் இருக்கா.... வந்து அவளை கூட்டிட்டு போ " என வாசன் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தார், வாசன்..
அனு எப்படி அங்கு சென்றாள்???? என யோசித்தபடியே யுவியின் வீட்டை நோக்கி பயணமானான், சித்தார்த்......
பயணத்தின் போது சித்துவின் மனது பல வலிகளால் நிறைந்தது...
எதிர்பாராமல் நிகழ்ந்த துன்பம் மிகுந்த அதிர்ச்சி, சித்துவின் மனதை வாட்டி வதைத்தது....
அனுவிற்கு கல்யாணம் ஆன செய்தி, அவனுக்கு பேரதிர்ச்சியாய் அமைந்தது....
கண்ணீர் சுரப்பிகளும் வற்றிடும் அளவு, விழிநீர் பெருக்கெடுத்து, அடிபட்டு புடைத்திருந்த அவன் கன்னங்களை வஞ்சமின்றி நனைத்தது.....
அவன் மனமோ, அனுவிற்கு கல்யாணம் ஆகிவிட்டது என்பதை ஜெபம் போல் உச்சரிக்க, மனவலியால், துடித்துப்போனான் சித்தார்த்.....
தெளியா யோசனை கலந்த சோகத்துடன், யுவியின் வீட்டை அடைந்தான், சித்து.....
யுவியின் வீட்டில் யுவியின் அப்பா மட்டுமே இருக்க,
"..... அப்பா.... அனன்யா எங்க??" என தயங்கி கேட்டான் சித்து......
அவனின் காயங்களை ஆராய்ந்த வாசன், " அவள் மாடில என் ரூம்ல இருக்கா...... நான் கார்ல போகும் போது, ரோட்ல மயங்கி கிடந்தா..... நான் தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்..... டாக்டர் பாத்துட்டு போய்ட்டாங்க..... சாதாரண மயக்கம் தான்.... " என வாசன் மூச்சுவிடாமல், விறைத்த முகத்துடன் கூற......
அனன்யாவின் நிலை அவனுக்கு மேலும் வருத்தத்தை தர, "நான் போய் அனன்யாவ கூட்டிட்டு போறேன்பா..."
என சித்து வாசனிடம் கூற,
அவனின் பேச்சை காதிலே வாங்காதது போல், சித்துவின் கையை பற்றி, சோபாவில் அமர செய்து, அவன் காயங்களுக்கு முதலுதவி செய்தார்...., வாசன்...
சித்துவின் மேல் அவருக்கு கோபம் இருந்தாலும், அதை ஒதுக்கி அவன் காயத்திற்கு மருந்திட்டது.... உள்ளூர அவனை நெகிழச் செய்தது......
"அப்பா அன்னைக்கு நான் அப்படி பேசியிருக்க கூடாது.. " என சித்து அவரிடம், மன்னிப்பு கோர முயல......
கையுயர்த்தி அவன் பேச்சுக்கு அணையிட்டவர்.... "அனன்யா கண்முழிச்சிட்டா.... கூட்டிட்டு போ....." என அதே விறைத்த முகத்துடன் சொல்லிவிட்டு அவ்விடத்தை அகன்றார், வாசன்....
இன்னைக்கு நாளே சரி இல்லை..... என்று எண்ணியபடி, மனம் நொந்து, அனு இருந்த அறையை அடைந்தான், சித்து....
அனு அங்கு படுத்தபடி, அமர்ந்திருக்க....
"வா அனு போலாம்..... " என சித்து அழைக்க, எதுவுமே பேசாமல் அமைதியாக சித்துவுடன் கிளம்பினாள், அனு......
கிளம்பும் போது, வாசனிடம் சென்ற அனு...... " சாரி அங்கிள்......எல்லாத்துக்கும்..... அண்ட் தேங்க்ஸ் அங்கிள் " என அமைதி கலந்த வருத்தத்துடன் தெரிவிக்க, வாசன் பதில் பேசாமல் அமைதியாகவே இருக்க...
அனு காரில் அமர்ந்துகொண்டாள்..... சித்து வண்டியை இயக்கினான்....
சித்து வண்டியை செலுத்திக்கொண்டிருக்க, அனு சத்தமின்றி, சாலையை வெறித்தபடி, வந்தாள்..
"அனன்யாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு.... ஆனா அவள் புருஷன் யாரு....
ஏன் அனன்யா அவளுக்கு கல்யாணம் ஆன விஷயத்தை என்கிட்ட மறைச்சா....
ஏன் அவள் புருஷன விட்டு பிரிஞ்சு, இங்க வந்து இருக்கா....
இந்த யுவி வேற, எதையும் புரிஞ்சுக்காம பேசி, என் கோபத்தை தூண்டுறான்.... " என்ற சிந்தையோட்டம் சித்துவின் ஒரு புற நெஞ்சை நிறைத்தது......
மறுபுறம், " இனி அனன்யா... என்னுடைய அனன்யா இல்லை..... அந்த உரிமையை நான் இழந்துட்டேன்......
யாரவன்,???..... என் அனன்யாவை என்னிடம் இருந்து திருடி சென்றது.....???" தன் உலகில் இருந்து, அனன்யாவை நீக்கிய அந்த முகமறியா அயலவன் மீது, பொறாமை கலந்த கனல் சித்துவின் உள்ளமெங்கும் பரவியது.....
எல்லா கேள்விகளுக்கும், பதில் அனன்யாவிடம் தான் கிடைக்கும் என்று சித்து உணர்ந்த சமயம், அவன் வீட்டை அடைந்திருந்தான்.....
அனு வேகமாக காரை விட்டு இறங்க, சித்து காரில் இருந்தவாறே, " அனு...." என அழைக்க,
அனு சித்துவை நோக்கினாள்..
" ஏன் என்கிட்ட உன் கல்யாணத்தை மறச்ச..... உன் ஹஸ்பண்ட் யாரு??..ஏன் நீ இங்க தனியா வந்துருக்க.....?? உங்களுக்குள்ள ஏதாச்சும் பிராபலமா,??..... " என சித்து அனுவிடம் விடை தேட.....
" சித்து..... எதையும் சொல்ற நிலைமைல இப்போ நான் இல்லை.... நேரம் வரப்போ சொல்றேன்...." என அனு சொல்ல,
"சொன்னா... என்னால முடிஞ்ச அளவு ஹெல்ப் பண்ணுவேன் அனு " என சித்து கேட்க...
"எனக்கு ஒரு உதவி மட்டும் செய்..... எப்படியாச்சும் உனக்கும், எனக்கும் நடக்கப்போற கல்யாணத்த நிறுத்திரு..... ப்ளீஸ்..... " என வலி கலந்த கோரிக்கையை சித்துவிடம் வைத்துவிட்டு, வேகமாக அவள் அறைக்கு சென்றுவிட்டாள், அனு....
சித்தார்த்திற்கு, வீட்டிற்குள் செல்ல மனமில்லை..... அவனின் தேனு அத்தைக்கு அலைபேசியில் அழைத்து, " ஹலோ அத்தை " என்றான்....
" வந்துடீங்களா டா.... எல்லாரும் தூங்கியாச்சு.... நான் ரூம்ல இருக்கேன்...இருங்க வரேன் " என தேன்மொழி, கேட்க....
"அத்தை நாங்க வெளில சாப்டுட்டோம்... அனு அவ ரூம்ல ரெஸ்ட் எடுக்குறா.... அவளை டிஸ்டர்ப் பண்ணாதீங்க..... எனக்கு ஒரு வேலை இருக்கு.... முடிச்சுட்டு காலைல வரேன்.... " என விடாமல் பேசிவிட்டு, அவரின் பதிலுக்கு காத்திராமல் அழைப்பை துண்டித்தான், சித்து
அமைதியை தொலைத்த சித்து, எங்கு செல்வதென புரியாமல், நிம்மதியை தேடி நெடுந்தூரம் பயணமானான்......
வேகமாக அறையின் கதவை சாற்றிய அனு...., கண்களில் மிகையான விழிநீருடன், கதவில் சாய்ந்தபடி, சரிந்தமர்ந்து உடைந்து அழதுவங்கினாள்......
"சாரி..... சாரி..... உனக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுக்குறேனு எனக்கு தெரியுது..... ஆனா எனக்கு வேற வழி இல்ல..... என்ன மன்னிச்சுடு...... என்ன மன்னிச்சுடு..... ப்ளீஸ்..... " என வாய்விட்டு புலம்பியபடி, கதறி அழுதாள் அனு.....
Catch u later on next update makkale 👋👋👋👋👋👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro