முள்ளும் மலரும் 7
" ராம் இவ்ளோ நேரம் எங்கடா போயிருந்த.. எக்சாம் பக்கத்துல வந்திடுச்சு.. இனிமே எங்கயும் போகமா ஒழுங்கா உக்காந்து படிக்குற.. புரியுதா " என்று அதட்டினாள் மீரா..
" ஆமா மீரா.. சரியா சொன்ன.. இப்பலாம் இவன் மார்க் குறைஞ்சிட்டே வருது.. தமிழ்ல இவன் என்னை விட 2 மார்க் கம்மி தெரியுமா " என
வழக்கம் போல போட்டுக் கொடுத்தாள் நிலா..
அதைக் கேட்டுக் கோபம் கொண்ட மீரா " ராம்.. நான் இவ்ளோ கஷ்டப்படறதே நீங்க ரெண்டு பேரும் நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்னு தான்.. எனக்கு ஹெல்ப் பண்றேனு அதை மறந்திடாத " என்ற மீராவின் கண்களில் பட்டது ராமின் கையிலிருந்த புத்தகங்கள்..
" என்ன புக்ஸ் ராம்.. நீ எங்க போயிட்டு வந்த " என்று கேட்ட மீராவின் கைகளைப் பிடித்துக் கொண்டவன் " அக்கா என்மேல நம்பிக்கை இருக்கா.. இல்லையா " என்றான் அவள் கண்களைப் பார்த்தபடி..
ஒரு நொடி தயங்கியவள் அவனது கண்களில் தெரியும் ஏக்கத்தைப் பார்த்தபின்,
" நான் இப்ப நம்பறதே உன்னை மட்டும் தான்டா.. "என்றாள்..
அவளது பதிலில் தெளிந்தவன் " அப்படினா நான் என்ன சொன்னாலும்..எதுவும் எதிர்த்து பேசாம செய்யனும் சரியா " என்று கூறுவிட்டு அவளது வலது கையை எடுத்து தனது தலையின்மீது வைத்தான்..
" ராம் என்னடா.. பெரிய மனுசன் மாறி சத்தியம்ல வாங்குற ..சரி.. நீ எப்பவும் என்னோட நல்லத மட்டும் தான் யோசிப்ப..நீ சொல்றத நான் செய்யறேன் " என்றாள் ராமின் மீதான அதீத நம்பிக்கையால்
" ரொம்ப தேங்க்ஸ் கா.. நீ உன்னோட படிப்பைக் கன்டினீயூ பண்ணனும்.. அதுக்கான புக்ஸ் தான் இதெலாம்.. உங்க காலேஜ்ல நானும் உதய் அண்ணாவும் பேசிட்டோம்.. நீ எக்சாம் அப்போ மட்டும் காலேஜ் போனாப் போதும்.. " என்றான் ராம்..
ராம் கூறக்கூற அவளது கண்கள் குளமாகியது..பழைய நினைவுகளால் துக்கம் தொண்டையை அடைத்தது..
" அக்கா சும்மா அழறத நிறுத்து.. நீதான்கா என்னோட ரோல் மாடல்.. நீயே இப்படி இருந்தா எப்படி .. வாய்ப்பு எப்பவாது தான் வரும்.. அதை நீ இப்ப பயன்படுத்திக்க.. அவ்ளோ தான் " என்றவன், அவளுக்கு பேச இடம் கொடுக்காமல் " ஏய் சோத்துமூட்டை.. என்னையவே மாட்டி விடறியா.. நீ பெயிலாகி அதே கொஸ்டின்ல ரீ எக்சாம் எழுதி என்னைவிட மார்க் வாங்குனங்கறதயும் சொல்ல வேண்டியது தான.. " என்று அவளது
தலையில் கொட்டியவன்,
"ச்சே.. மனுசன்.. எவ்ளோ பாரத்தை தான் தாங்கறது..என்ன பசி.. என்ன பசி.. " என்று தன் பாட்டிற்கு பேசிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்..
தனக்காக இவ்வளவு யோசிக்கும் ராமினை எண்ணிப் பூரித்தவள் அவன் வாங்கி வந்த புத்தகங்களை எடுத்து அலமாரியில் வைத்தாள்..
இரவு ராமும் நிலாவும் உறங்கிய பின்னர் ஒரு புத்தகத்தை எடுத்துப் பார்த்தாள்.. அதைப் பார்க்கும் போதே " உன்னால இனி படிக்க முடியாது.. உன் லட்சியத்தை அடைய முடியாது.. உன் வாழ்க்கை அவ்ளோ தான் " என்ற வார்த்தைகள் கோரசாக காதில் விழ அந்தப் புத்தகத்தைக் கீழே போட்டுவிட்டு கட்டிலில் படுத்து அழுக ஆரம்பித்தாள்..
அப்போது மேசையில், முதல் செமஸ்டரில் யுனிவர்சிட்டி ரேங்க் வாங்கியதால் கல்லூரி பரிசளித்திருந்த டிராபி கண்ணில் பட அதை சுக்கு நூறாய் உடைத்தாள்.. அப்போதும் அவள் மனது ஆறவில்லை.. இதை அனைத்திற்கும் காரணமான கிருஷை பழி வாங்கியே ஆக வேண்டும் என உறுதி பூண்டாள்..
அழுது கொண்டே அவளது பழைய டைரியை எடுத்துப் பார்த்தவள் அதனுள் மூழ்கினாள்..
" ஏன்டா அவனுங்க தான் கிண்டல் பண்றாங்கனு தெரியுதுல.. அப்ரோ ஏன் அமைதியா வந்த.. என்ன சீனியர்ஸ்னு பயந்திட்டியா " என்று கூறி முறைத்த மீராவை " ஏன் சொல்ல மாட்ட.. விட்டா உனக்கு கல்யாணமே பண்ணி வெச்சிருப்பாங்க.. ஏதோ ஐயா அங்க வந்தததால திறமையா பேசி உன்னைக் காப்பாத்துன.. கண்டவங்க கிட்ட வீண்பேச்சு உனக்கெதுக்குடி " என்று தலையில் கொட்டியவனை திருப்பி அடித்தவள்,
" எனக்கு கல்யாணம் பண்ணிருவாங்களா.. அது வரைக்கும் என் கை என்ன புளியங்கா பறிக்குமா.. போடா டேய்.. அவனுங்க மட்டும் அப்படி பண்ணிருந்தா அவனுங்களுக்கு ஆயுள் முழுசும் நரக தண்டனை தான்.. டார்ச்சர் பண்ணியே உயிர எடுத்துடுவேன் " என்றாள் சிரித்துக் கொண்டு..
" ஓ மேடம் கல்யாணக் கனவுக்கு போயிட்டிங்களா.. பாத்துடி அந்த கிருஷ் எமகாதகன்.. அப்ரோ உன் நிலைமை அவ்ளோ தான் " என்று கூறி அவனும் சிரித்தான்..
அதில் கடுப்பானவள் " உதய் உங்கிட்ட எத்தனை தடவை சொல்றது.. கல்யாணம் அது இதுனு பேசாதனு..உனக்கே தெரியும் என்னோட கனவு என்னனு.. நான் இந்த டிகிரிய எப்படியோ முடிச்சிட்டு ஐ.ஏ. எஸ் எக்சாம் எழுதி பாசாகனும்.. அதைத் தவிர வேற எதும் எனக்கு முக்கியமில்ல.. புரியுதா நோக்கு .. சும்மா அந்த வீணாப் போனவங்கக் கூடலாம் என்னை சேத்து வெச்சு பேசாத.. வா " என்று கூறி நடந்தாள்..
இதை அவர்களை பின்தொடர்ந்த இரு செவிகள் நன்றாகக் காதில் வாங்கிக் கொண்டன..
அழுதுகொண்டே அப்படியே தூங்கிப் போனவள் அடுத்த நாள் எழும் போது ஏதோ புத்துணர்வை உணர்ந்தாள்.. இழந்ததை மீண்டும் அடைய வேண்டும் என்ற வெறி தோன்றியது.. அதே உத்வேகத்துடன் தனது பணிகளைத் தொடர்ந்தாள்..
மீராவின் இலட்சியத்தை அவள் அடைவாளா ?
அந்த இரு செவிகள் யாருடையது?
என்பதை அடுத்த பதிவில் காணலாம்..
( கடந்த காலத்தை இந்தமாதிரி நடுநடுவே கூறலாமா?.. அல்லது இப்படிக் கூறினால் குழப்பமாக இருக்கிறதா? என்பதை தெரியப் படுத்துங்கள்.. அதற்கேற்றது போல் எழுதுகிறேன்..)
நன்றி !
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro