முள்ளும் மலரும் 4
" நிலா மரியாதையா எழுந்துவா " என்று நிலாவை மிரட்டிவிட்டு " என்னடா நான் ஒன்னும் உன்னோட மேகா இல்ல. நீ கேட்டவுடனே எல்லாத்தையும் சொல்றதுக்கு.. உன்னால வெறும் பணத்தை வெச்சிட்டு என்னோட வேலைய மட்டும் தான பறிக்க முடியும்.. என் உழைப்பையில்ல.. இப்ப என்ன பிரச்சனை பண்ண இங்க வந்திருக்க " என்று எரிந்து விழுந்தவள்,
அவனது அருகே அமர்ந்திருந்த
நிலாவினைத் தன்புறம் இழுத்து " உன் நிழல்கூட இவங்க மேல படவிட மாட்டேன்.. மரியாதையா வெளிய போ " என்று கோபமாக கூறினாள்.
" என்ன லூசு மாறி பேசற.. நீ செய்யறது பெரிய கலெக்டர் வேலை.. அதை நான் கெடுக்கனுமாக்கும்.. சுத்த நான்சென்ஸா இல்ல " என்று சளிப்பாக கூறியவன் ,சில நொடிகள் கழித்தே " சாரி மீரா நான் உன்னைக் குத்திக் காட்டனும்னு சொல்லல " என்று மன்னிப்புக் கேட்டான்..
" ஓ தெரியாம.. சொன்னீங்க.. சரி அதைவிடு.. நேத்து என்னை வேலைய விட்டு தூக்குனதுக்கு அந்த மேனாமினிக்கி அப்பாவுக்கு நீ தேங்கஷ் சொல்லல "
" ஏன் மீரா தப்பாவே புரிஞ்சிக்கற.. எங்கம்மாவோட பர்த்டேக்கு அவங்க போட்டோவ சாரில போட்டுத் தரச் சொன்னேன்.. அவ்ளோ தான்"
சரி.. அதைவிடு.. என்னைப் பார்த்து வெக்கம் மானமே இல்லனு நீ சொன்னியா இல்லையா
ஓ சிட்.. மீரா.. நான் கடைய விட்டு வெளிய வந்தப் பிறகு உன்னை இப்பதான் பார்க்குறேன்.. நான் மேகாவ தான் பார்ட்டீ கேட்டானு அப்படி சொன்னேன்..ச்சே ... உன்னை அந்தமாறி பார்த்தவுடனே எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா.. அதான் உடனே வந்துட்டேன்.. உனக்கு என்னாச்சு மீரா.. அங்கிள் ஆன்ட்டீலாம் எங்க " என்று பாவமாய் கேட்டவனை ஓங்கி கண்ணத்திலே அறைந்தாள் மீரா
" போதும்.. இதோட உன் ஆக்டிங்க நிறுத்திக்கோ கிருஷ்.. என்னைக் கொலைகாரியா மாத்தாத " என்று கைநீட்டி எச்சரித்தவள் , " ராம் அவனை வெளிய அனுப்பு " என்று கூறிவிட்டு உள்ளே செல்லப் போனாள்..
நிலா " மீரா என்னை நடந்துச்சுனு சொன்னா திரும்பவந்து தொல்லை பண்ணமாட்டங்கல்ல.. அந்த அங்கிள் எவ்ளோ பொறுமையா பேசறாரு.. நீயேன் எரிஞ்சு விழற " என்று கூற
அவளையும் கண்ணத்தில் ஓங்கி அறைந்தாள்..
" என்னடி உண்மை தெரியனும்.. ஹான்.. இப்ப வந்த இவனுக்காக என்னை எதிர்த்து பேசறியா.. முளைச்சு மூனிலை விடல.. அதுக்குள்ள பேச்சப் பாரு.." என்று மறுபடியும் அவளை அறையப் போனவளை கிருஷ் அவளது கைகளைப் பற்றித் தடுத்தான்..
அதுவரை பார்வையாளனாக இருந்த ராம் " அக்கா இங்க என்ன நடக்குதுக்கா.. யாருக்கா இவன் ஏன் வந்து உன்னை தொல்லைப் பண்றான்.. எங்கிட்ட மறைக்குற அளவுக்கு என்னக்கா ரகசியம் .. எதுவா இருந்தாலும் சொல்லுக்கா .. நான் உங்கோட எப்பவும் இருப்பேன்" என்று தயங்கியவாரே சொல்ல
தனது கோபத்தைக் கட்டுப் படுத்த முடியாதவள்,
" ஓகே .. உங்க எல்லாத்துக்கும் உண்மை தெரியனும் அவ்ளோ தான.. சொல்றேன் .....நல்லா சொல்றேன்.. எல்லாரும் கேட்டுக் கோங்க.. " என்றவள் , ராமிடம் திரும்பி " எவ்ளோ நிறைய கனவுகளோட சந்தோசமாத் திரிஞ்ச என்னை இப்படி தினமும் நரக வேதனைல இருக்க வெச்சது யாருனு கேட்பியே.. அது இவன் தான் ராம் " என்றவள்,
நிலாவைப் பார்த்து " அப்பா அம்மா ஏன நம்மள விட்டுப் போனாங்கனு அழுவியே நிலா.. அதுக்கு முழுக் காரணமும் இவன் தான்.. இதான் நான் உங்களுக்கு தெரியாம மறைக்கனும்னு நினைச்ச உண்மை..
போதுமா " என்று கூறிவிட்டு தன்னறைக்குள் புகுந்து கதவினைத் தாளிட்டுக் கொண்டாள்.
நிலா கதைவைத் திற எனக் கத்திக் கொண்டிருந்ததும், ராம் தன்னை வெளியேத் தள்ளிக் கதவை சாத்தியது என்று எதையுமே உணராமல் அதிர்ச்சியில் பேயறைந்தவனைப் போல பூட்டிய வாசற்கதவின் வெளியே சிலையென நின்றிருந்தான் கிருஷ்.
மீராவின் நல்வாழ்வுக்காக அவன் பார்த்து பார்த்து அனைத்தையும் செய்ய, இப்படி ஒட்டுமொத்த பழியையும் தன்மேல் போடுவாள் என அவன் கனவிலும் நினைக்கவேயில்லை.. அவள் தன்னை விரும்பவில்லை என்று தெரிந்ததும் அவளை மறந்துவிட்டு வேறு வாழ்விற்குத் தயாராக இருந்த கிருஷின் மீது அவள் சுமத்திய பழி அபரீதம்.. நான் கொலை செய்தேனா.. அவள் வாழ்வை அழித்தேனா.. என எண்ணும்போதே தலை சுற்றுவது போல இருந்தது..
அப்படியே சுதாகரித்து நின்றவன் அவள் பேசும்போது உன்னோட மேகா என்று சொன்னாளே.. அவள் என்னையும் என் காதலையும் என்னதான் நினைத்தாள்.. அவள் இஷ்டத்திற்கு பேசிக் கொண்டே செல்கிறாள் என்று அவள்மீது வந்தக் கோபத்தை அடக்க முடியாது தவித்தான். அவளை நேற்றுப் பார்த்ததிலிருந்து மனம் தாங்காமல் அவளது இருப்பிடத்தை சிரமப் பட்டு அறிந்துகொண்டு பதற்றத்துடன் ஓடிவந்தேனே.. இந்த அவமானத்திற்கும் பழிச் சொல்லுக்குமா..என்று தன்னையே கடிந்து கொண்டான்.
ஆயினும் உண்மையை தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற முடிவோடு மேகாவை அழைத்தான்.. இது அவன் வாழ்வில் செய்யும் இன்னொரு பிழையென்பதை அறியாமல்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro