முள்ளும் மலரும் 3
மாலை வீட்டிற்குள் நுழைந்ததுமே " மீரா நாளைக்கு எத்தனை மணிக்கு மாலுக்குப் போரோம்..என் பிரண்ட்ஸும் வராங்களாம். அப்படியே படத்துக்குப் போகலாமா " என்று ஆசையாகக் கேட்ட நிலாவிடம் எந்தப் பதிலும் உரைக்காமல் கட்டலில் வந்து சோர்வுடன் அமர்ந்தாள்.
" ஏன் சோகமா இருக்க.. காசு இல்லையா.. அப்போ அடுத்த வாரம் போலாம் மீரா.. ஃபீல் பண்ணாத " என்று ஆதரவாய் அவள் தலையை தடவிவிட இதுவரைப் பொறுமையாய் தன் உணர்வுகளைக் கட்டுப் படுத்தியிருந்தவள் தனது தங்கையைக் கட்டிப் பிடித்து அழ ஆரம்பித்தாள்.
மீரா கடைசியாக அழுதது தந்தையும் தாயும் இறந்த போது தான்.. அதுவும் ஒரு நாள் மட்டுமே.. எங்கே இவள் அழுதால் ராமும் நிலாவும் பயந்துவிடுவார்களோ என்று தைரியமாக இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டாள்..
ஆனால் இன்றோ அங்கு நடந்த அவமானமும் அவனது ஏளனப் பேச்சும் மனதைப் போட்டு வதைத்தது. யார் முன்பு தான் நன்றாக வாழ்ந்துக் காட்டி
தனது கனவை நினவாக்கிக் காட்ட வேண்டும் என்று நினைத்தாளோ அவர்களிடமே கைநீட்டி சம்பளம் வாங்க வேண்டிய நிலைமை.. இதிலெங்கே அவளது கனவை நினைவாக்குவது. அவளுக்கே அவளின் மீது அருவெறுப்பாக இருந்தது..
அவள் பதறி அழுததில் பயந்துபோன நிலாவும் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். நிலா அழுவதைப் பார்த்து தெளிந்தவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவளை சமாதனப்படுத்தினாள்..
ராம் இன்னும் வீடு வரவில்லை.. இரவு உணவை தயார் செய்தவள் நிலாவிற்கு சாப்பாட்டை ஊட்டிவிட்டு பின்பு வாசலில் சென்று ராமிற்கு காத்துக் கொண்டிருந்தாள்..
என்னிடம் பணம் மட்டும் தானேயில்லை.. மத்தபடி நான் எந்த விதத்திலும் குறையவில்லையே.. தந்தை சேமித்து வைத்த சொத்தில் வெட்டியாக உக்கார்ந்து சாப்பிடவில்லையே உழைத்துத் தானே சாப்பிடுகிறேன். நான் எதற்கு அவனைப் பார்த்து பயப்பட வேண்டும்.. நான் இன்னும் அதே மீரா தான்.. அவனை எப்படி சமாளிக்கனும்னு எனக்குத் தெரியும்.. என்று தன்னைத் தைரியப் படுத்திக் கொண்டாள்..
அங்கே கிருஷிற்கோ மீராவை அந்த நிலையில் பார்த்தது ஆச்சரியத்தைத் தந்தது.. படித்த படிப்புக்கு சிறிதும் சம்பந்தமில்லாமல் தனது கனவிற்கு எதிராய் அதுவும் பழக்கத்திற்கு மாறாய் அவனிடம் சண்டை போடாமல் போனது மனதை உறுத்தியது. ஆனால் அவளது வாழ்க்கையில் அவன் என்ன செய்ய முடியும் என்று அந்த நினைவை அத்தோடு விட்டுவிட முடியவில்லை..
அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமையாக இருக்க, ராம் நிலா மீரா மூவரும் தாமதமாகவே எழுந்தனர். மீரா சமைத்துக் கொண்டிருக்க நிலாவும் ராமும் ஹாலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். இது அவர்கள் வீட்டிலுள்ள வழக்கம் விடுமுறையானாலும் படிக்க வேண்டும் என்பது.
வெளியே யாரோக் கதவைத் தட்ட ராம் கதவினைத் திறந்தான்.. " யார் நீங்க " என்ற ராமின் கேள்விக்கு பதிலளிக்காமல் அவனைத் தள்ளிவிட்டு வீட்டிற்குள் நுழைந்து " மீரா மீரா " என்று கத்தினான் கிருஷ்..
" யோவ் யாருடா நீ.. மரியாதையா வெளிய போயிடு " என்று அவன் சட்டைக் காலரைப் பிடித்தான் ராம்.. அவனது கையை சுலபமாகத் தட்டிவிட்டவன் " உங்க அக்கா மாறியே உனக்கும் மரியாதையே தெரியாது போல பொடிப் பயலே " என்றான் கிருஷ்..
ஏற்கனவே கிருஷைப் பார்த்ததுமே ராமிற்குப் பிடிக்கவில்லை. அதிலும் அவனது அடாவடி நடவடிக்கையும் மீராவைப் பற்றிக் குறை கூறியதும் அவன் மூக்கிலே ஓங்கி குத்த வேண்டும் என்று தோன்றியது.. நிலா இதை அனைத்தையும் ஊமையாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
மீரா " அட நீங்க ரெண்டு பேரும் சண்டைபோட ஆரம்பிச்சிட்டீங்களா.. ஏ நிலா நீ அடங்க மாட்டியா " என்று கூறியபடியே சமையலறையிலிருந்து வந்தவள் கிருஷைப் பார்த்ததும் அதிர்ச்சியானாள்.
" அக்கா யாருக்கா இவன்.. ரொம்ப பேசுறான் " என்று ராம் குற்றப் பத்திரிக்கை வாசிக்க அதை எதுவும் கண்டு கொள்ளாமல் மீரா " வெளிய போ " என்று கத்தினாள்..
" மீரா ப்ளீஷ் நான் உங்கோட பேசனும்.. ஒரு 5 மினிட்ஸ் " என்று முடிப்பதற்குள் " Mr. கிருஷ் போலிஸக் கூப்பிடறக்கு முன்னாடி நீங்களே வெளிய போனா மரியாதையா இருக்கும்.. " என்றாள் கோபமாக..
" ராம் நிலா.. உள்ள போங்க .. யார் வந்தாலும் இப்படி தான் வீட்டுக்குள்ள விடுவீங்களா " என்றவளை அதுவரைப் பொறுமைக் காத்த கிருஷ் அவளது இரு தோள்களைப் பற்றி " இங்க என்ன நடக்குதுனு சொல்லு.. நானே வெளிய போறேன்.. ஆனா அதுக்கு முன்னாடி ஒரு அடி கூட எடுத்து
வைக்க மாட்டேன் என நாற்காலியில் அமர்ந்தான்.
ராமும் நிலாவும் அவளையும் கிருஷையும் மாறிமாறிப் பார்க்க, மனதை திடப் படுத்திக் கொண்டவள் " சரி ஈவ்னிங் பார்க்ல மீட் பண்ணலாம்.. இப்ப நீ இடத்தைக் காலி பண்ணு " என்றவளை ஏற இறங்கப் பார்த்துட்டு
" உன்னை நம்ப முடியாது.. இங்கேயே அதுவும் உன் பாசமலர் முன்னாடியே பேசு.. அவங்களும் உண்மையத் தெரிஞ்சுகிட்டும் " என்றான் சிரிப்போடு
" எங்களுக்கு எந்த உண்மையும் தெரிய வேணாம்.. எங்க அக்காவ பத்தி எனக்குத் தெரியும்.. நீ வெளிய போ " என்றான் ராம்..
" உங்க அத்தான் கிட்ட இப்படி தான் மச்சான் நீ பேசுவியா.. " என்று ஏளனமாக அவன் கேட்க " அக்கா என்னக்கா இதெலாம்.. நீயும் அமைதியா இருக்க.. " என்றான் தனது கையாளாகத தனத்தால்...
" ராம் நீ அமைதியா இரு.. மீரா சொல்லு.. யாரு இவரு.. " என்றாள் நிலா..
" பரவால இந்த வீட்ல எனக்கும் சப்போரட்க்கு ஆள் இருக்கும் போல. இங்க வா நிலா என் பக்கத்துல உக்காரு " என்று அவளைத் தன் அருகே அமர வைத்தான்.
" நிலா " என ராமும் மீராவும் கத்த " நேத்து இவரப் பார்த்துட்டு வந்துதான் இப்படி அழுதியா மீரா " என்று மீராவைப் பார்த்து கேட்கவும் ராம் நிலாவை முறைத்தான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro