Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

முள்ளும் மலரும் 20

" ஒன்னுமில்ல.. ரிலாக்ஷ் நாங்க வந்துட்டோம்ல.. பயப்படாத " என கிருஷ் ஆறுதல் சொல்லியும் மீரா அவனை விடுவதாக இல்லை..

காவலாளிகள் ஆரவைக் கைது செய்ததும் கிருஷின் குடும்பத்தார் அங்கே வந்ததும் என எதையும் உணரும் நிலையில் மீரா இல்லை..

" கிருஷ் என்னால தான் என்னோட அப்பா அம்மாவ அவன் கொன்னான்.. என்னால எல்லாருக்குமே ஆபத்து தான்.. ஹையோ ராமும் நிலாவும் என்னை விட்டுப் போயிருவாங்களோ " எனத் தன்பாட்டிற்கு புலம்பிக் கொண்டே மயக்கம் அடைந்தாள்.

மன அழுத்தத்தால் வந்த மயக்கம் தான் என்பதால் அவளுக்கு  நிம்மதியான உறக்கம் வேண்டும் என எண்ணி அவளை உறங்க வைத்தனர்.

மீரா கண்முழித்துப் பார்க்கும்போது கிருஷுன் வீட்டில் இருந்தாள். அருகே நிலா தனது உடைகளை அலமாரியில் அடுக்கிக் கொண்டிருந்தாள். அவளிடம் அசைவு தெரிந்ததுமே அவளிடம் வந்த நிலா " மீரா எழுந்துட்டியா.. இந்தா இந்த ஜூஸக் குடி " என்று பழபானத்தை எடுத்துக் கொடுத்தாள்..

" நிலா நாம ஏன் இங்க இருக்கோம் " என்ற கேள்விக்கு " அம்மா தாயே எழுந்தவுடனே ஆரம்பிக்காத.. கீதா ஆன்ட்டி தான் அந்த வீட்ல தனியா இருக்க வேணாம்னு இங்க வரச் சொல்லி்ட்டாங்க.. அது மட்டுமில்ல உனக்கும் கிருஷ் மாமாக்கும் கூட இன்னும் வொன் மன்த்ல மேரேஜ்.. டேட் கூட பிக்ஷ் பண்ணியாச்சு.. ஸோ கல்யாணப் பொண்ணு பிரஷா இருந்தாத்தான் பார்க்க நல்லாருக்கும்.. அதுக்கு இதைக் குடி மீரா "என்று அவள் டம்ளரைக் கையில் திணித்தாள்.

" யாரைக் கேட்டு முடிவு பண்ணாங்க " என்றவளுக்கு தற்போது தான் ஆரவின் துரோகம் நினைவிற்கு வந்தது..எப்படி  சரியாக கிருஷுடன் ராமும் உதயும் வந்தார்கள்.. அப்படியென்றால் ராமிற்கு அனைத்து உண்மையும் தெரிந்து விட்டதா என சந்தேகம் எழுந்தது..

" நிலா ராம் எங்க.. அவன் என்மேலக் கோபமா இருக்கானா " என்று பாவமாகக் கேட்ட மீராவினைப் பார்த்து சிரித்தவள் " மீரா நீ அநியாயத்துக்கு உன் தம்பிய நம்புற.. நான் அன்னைக்கே சொன்னேன்.அவன் சரியான பிராடு பையன்னு நீ கேட்டியா.. " என்றாள் 

"என்ன உலற நிலா.. புரியும்படிச் சொல்லு.. " என கோபமாகக் கேட்க, " ஓ உங்க பாசமலர குறை சொன்னா கோபம் பொத்துக் கிட்டு வருமே.. நல்லாக் கேட்டுக்கோ மீரா.. அந்த ராம், உதய் அண்ணா அப்ரோ கிருஷ் மாமா மூனு பேருமே கூட்டுக் களவாணிங்க.
உன்னைக் காலேஜ்ல மீண்டும் படிக்க பர்மிசன் வாங்குனதுல இருந்து நம்மளோட புது பிளாட் வரைக்கும்.. அவ்ளோ ஏன் மாமா மேல உனக்கு காதல் வரணும்னு அவர கேவலமா பேசுனதுனு எல்லாமே கிருஷ் மாமாவோட பிளான்.. ஆனா நாம ரெண்டு பேரும்தான் முட்டாள் மாறி அவனைப் பார்த்து பயந்துகிட்டு இருந்தோம். "என்றதும் அதிர்ச்சியில் கண்களை அகல விரித்தாள்

" இதுக்கே ஷாக்கானா எப்படி.. ஆரவ் பத்தின உண்மை உனக்கு முன்னாடியே ராம்க்குத் தெரியும்.. எவிடென்சோட புரூவ் பண்ணனும்னு தான் வாசலுக்கு வெளியே காத்துட்டு இருந்தாங்க.. " என்றதும்
தனது தம்பியினை நினைத்துப் பெருமை கொள்வதா.. இல்லை தன்மீது வெறுப்பை மட்டுமேக் காட்டிக் கொண்டிருந்தவளின் மீது அன்பு கொண்டு தனக்காக இவ்வளவு செய்து இருக்கும் கிருஷை நினைத்துப் பெருமை கொள்வதா என அவளுக்குத் தெரியவில்லை.. உடலெலாம் புல்லரிப்பது போல தோன்றியது..

அப்போது கீதா உள்ளே வர " நிலா உங்க அக்காக்கிட்ட எல்லாக் கதையும் சொல்லிட்டியா..சாப்பிடப் போலாமா.. " என்றார்..

" ஆன்ட்டி "என மீரா இழுக்கவும் " மீரா நீ ஒன்னும் பேசாத.. நீ என்னை நினைக்குறேனு எனக்குத் தெரியும்.. கிருஷ் மாறி நீயும் என் பொண்ணு தான்.. ராமும் நிலாவும் அன்னைக்கு நான் சொன்னமாறி எங்களோட பொறுப்பு.. அவங்களும் இங்கேயே இருக்கட்டும்.. தயவு செஞ்சு பிரிச்சுப் பேசி கஷ்டப் படுத்தாத. " என்றதும் அவளும் சரி என்று சம்மதித்தாள்..

மீரா கீழே இறங்கி வரும்போது முதலில் கண்ணில் பட்டது ஷோபாவில் எதையோ சுவாரசியமாகப் பேசி சிரித்துக் கொண்டிருந்த கிருஷும் ராமும் தான்..அவர்களின் ஒற்றுமை மீராவிற்கு இன்னும் சந்தோசத்தை அள்ளித் தெளித்தது..

" மீரா போதும் போதும் கிருஷ் மாமாவ பார்வைலையே கரைச்சிடப்போற.. எல்லாரும் உன்னைத் தான் பார்க்குறாங்க.. வா போலாம் " என நிலா கேலி செய்ய, அவளை முறைத்தவாரே கீழே வந்தாள்..

ராம் மீராவைக் கண்டதும் கிருஷிடமிருந்து விலகி சற்றுத் தள்ளி நி்ன்று பாவமாக முகத்தை வைத்துக் கொள்ளவும் மனதில் அவனை நினைத்து சிரித்துக் கொண்டாலும் " டேய் நடிக்காத.. உன்னை இன்னைக்கு சும்மா விடமாட்டேன்.. "என்று கூறியபடி அவனைத் துரத்த,

" அக்கா வேணாம்கா.. ப்ளீஷ் "என்றவாரே  வெளியே ஓட ஆரம்பித்தான்..

" எல்லாரும் கூட்டு சேர்ந்து என்னமா ஏமாத்திருக்கீங்க. நில்லுடா " என்றபடியே  அவனைப் பின் தொடர்ந்தாள்..

மீராவின் பழைய துள்ளல் மீண்டும் வந்ததால் அனைவர் முகத்திலும் புன்னகை அரும்பியது..
தோட்டத்தின் பக்கம் ராம் செல்ல அவனைப் பின் தொடர்ந்த மீராவை யாரோ கைப்பற்றி இழுக்க ( யாரோ இல்லைங்க.. நம்ம கிருஷ்தான் ) பயத்தில் அப்படியே நின்றாள்..

" கிருஷ் நீயா .. கைய விடு.. யாராவது பார்க்கப் போறாங்க " என மீரா கையை உதற,

" என்ன ஆனாலும் ராம் எனக்கு எதிரி தான் மீரா "என்றான் சிரித்துக் கொண்டு,
" என்னது எதிரியா " எனக் கோபத்தில் வாயைத் திறக்க, "பின்ன என்ன மீரா..நாமளே இப்பதான் ஒன்னு சேர்ந்துருக்கோம்..எங்காவது நம்மள தனியாப் பேச விடறானா.. பாரேன் இப்பக்கூட அவன் என் பக்கத்துல இருந்தா நீ அவனதான் துரத்துன..திட்டுன என்னை ஒன்னும் சொல்லவே இல்லையே.. " என அப்பாவியாக அவன் கூற,

ஆரம்பத்தில் அவன் என்னக் கூறுகிறான் என ஆழ்ந்து கவனித்தவள் பின்பு அவன் கேலியைப் புரிந்துக்  கொண்டு 
" இப்போ என்ன அடிதான வேணும்.. இந்தா வாங்கிக்கோ " என அடிக்க ஆரம்பித்தாள்..

முதலில் சில அடிகளை வாங்கியவன் பின்பு வலி தாங்காதவனாய் அவளிடம் சரணடைந்தான்.. அருகிலிருந்த புல்தரையில் அமர்ந்தவன் அவளையும் அருகே அமரச் செய்தான்..

" கிருஷ் ராம் எங்க.. அவன் என்னைத் தேடப் போறான் " என அவள் கூற,
" உன்னை விட ராம்க்கு மூளை ஜாஸ்தி.. இந்நேரம் இங்க இருந்து போயிருப்பான் " என்றான்..

அவன் தோளில் சாய்ந்தவள் " கிருஷ் ஆரவ் இப்படி பண்ணிடானு உனக்கு வருத்தம் இல்லையா. " என்றாள்.

" வருத்தம் இல்லாமலா.. ஆனா ஒன்னு நல்லாத் தெரிஞ்சுகிட்டேன்.. நல்லவங்க இருக்குற உலகத்துல கண்டிப்பா கெட்டவங்களும் இருக்கிறாங்கனு.. அவனைப் பத்தி பேசாத மீரா.. ப்ளீஷ்  என்றான் வருத்தத்துடன்,

அவனின் வருத்தம் புரிந்தவளாக, " ம்ம்.. ஆனா எப்படி அவன்தானு கண்டு பிடிச்சீங்க " என்றாள் கேள்வியாக,

" அப்படிக் கேளு.. நான் உதய் ராம்ல ஒரே கேங்னு தெரியாம உதய்கிட்டயும் ராம்கிட்டயும் நல்லவன் மாறி பேசி உன்னைக் கல்யாணம் பண்ணக் கேட்ருக்கான்.. அதை வெச்சுதான் அவன்மேல டௌட் வந்துச்சு. அவ உன்னை சந்திச்சாதான் ஒரு முடிவுக்கு வர முடியும்னு பொறுமையா இருந்தோம்.. நாங்க நினைச்ச மாறியே அவன் வாயாலயே உண்மைய ஒத்துக்கிட்டான்.. " என்றான் கிருஷ்..

" ஆனா நீ எப்படி உதயையும் ராமையும் காக்கா பிடிச்ச " என சந்தேகமாக வினவ, " அதெலாம் ஒரு மேட்டரே இல்ல.. நான் உங்க வீட்டுக்கு வந்த அன்னைக்கே ராம் என்னை வந்து மீட் பண்ணான்.. அவன்கிட்ட எல்லாத்தையும் எடுத்துச் சொன்னேன்.. அவனும் உன்னை மாறி இல்லாம என்னைப் புரிஞ்சிட்டு எனக்கு ஹெல்ப் பண்ணான்.. உதயக்கூட அவன்தான் எங்கோட பேச வெச்சான்.. " என்றதும் " ராம்க்கு அப்போ நான் அவளோட சொந்த அக்கா இல்லைனு தெரியுமா " என சோகமாக கேட்கவும்

" நிலாவுக்கே தெரியறப்ப.. அவனுக்குத் தெரியாதா. மண்டைய போட்டு குழப்பிக்காத.. உன்னை யாருதான் விட்டுக் கொடுப்பாங்க.. இதெலாம் மேட்டரே இல்ல..  " என ஆறுதல் சொல்லியும் அவள் சோகமாகவே இருக்க அவளை திசை திருப்பும் விதமாக,

" மீரா அங்கப் பாரேன்.அந்த ஒயிட் ரோஸ் அழகா இருக்குல " என்றான்.. அதில் கடுப்பானவள் " அதான் இப்ப முக்கியமா " என்று கோபமாய் வினவ.

" ஓய் என்ன இப்படி சொல்லிட்ட.. நம்மளோட காதல் சின்னமே வெள்ளை ரோஜா தான்" என்றான்.. " எல்லாரும் ரெட் ரோஸ் தான் சொல்வாங்க.. நீயென்ன ஒயிட் ரோஸ் சொல்ற " என சளித்துக் கொள்ள,

" நீ என்ன வேனா சொல்லு மீரா.. இந்த ஒயிட் ரோஸ பார்க்குறப்பலாம் நீ என் பக்கத்துல இருக்குற மாறியே இருக்கும் " என்றவன் அவள்புறம் திரும்பி " ஒன்னு தெரியுமா மீரா. இந்த வெள்ளை ரோஜா இதழ் வந்து நான்.. அதில இருக்குற முள் நீ " என்றதும் அவனை முறைத்தாள்..

" கோபப்படாத.. வொயிட் என்னோட தூய்மையான மனசக் குறிக்கும்.. இந்த முள் " எனத் துவங்கும்போதே அவனை எரிப்பது போல பார்க்க " அவசரப்படக் கூடாது முழுசா சொல்லிடறேன்.. முள் வந்து  உன்னோட பிடிவாதத்த குறிக்கும்.. நீயும் அந்த பிடிவாதத்தை விடுத்து எப்பதான் இந்த முள்ளும் மலரும்னு னு நானும் வெயிட் பண்ணிட்டே இருப்பேன். அது இன்னைக்கு தான் நடந்திருக்கு.. " என்று காதலோடு வினவ,

"கிருஷ் உன்னோட இந்த அன்புக்கு நான் தகதியானவளா.. நான் அப்படி எதுவுமே செய்யலையே. இந்த லூச உனக்கு எப்படி பிடிச்சுது " என்ற மீராவின் அருகே நெருங்கி அமர்ந்தவன் " நீ லூசா இருக்கனால தான் பிடிச்சது.. லூசு.. காரணம் இருந்தாத்தான் யாரையும் பிடிக்கும்னு அவசியமில்ல.  சிலர பார்த்தாலே பிடிக்கும் " என்றவன் மீராவின் கண்களில் வழியும் கண்ணீரைப் பார்த்துவிட்டு
" ஆனா எனக்குமேத் தெரியல..எப்படி அழகழகா பொண்ணுங்க என்னை சுத்தி சுத்தி வந்தபோதும் உன்னை மாறி சப்ப பிகர பிடிச்சுதுனு " என்றான் நக்கலாக,

அதைக் கேட்டதும் அவனது சட்டைக் காலரை இறுகப் பற்றியவள் " என்னடா சொன்ன சப்ப பிகரா.. இதுவரைக்கும் நீ எப்படி இருந்தனு எனக்குத் தெரியாது   . ஆனா இனி என்னைத் தவிர வேற யாரையாவது நீயோ இல்ல உன்னை யாராவதோ தப்பா பார்த்தாங்க சேதாரம் உனக்குத் தான் பார்த்து நடந்துக்கோ . எங்காவது உன் பேருக்கு ஏத்தமாறி நடந்துகிட்ட நான் காளியா மாற வேண்டியிருக்கும்.. ஜாக்கிரதை " என்றாள் அவனின் முகத்திற்கு நேராக,

" இப்படி பக்கத்துல க்ளோசா வந்து சொன்னா நீ என்ன சொன்னாலும் கேட்பேன் மீரா " என்று கூறி அவன் கண்ணடிக்க,  அப்போதுதான் கிருஷின் மடிமீது தான் அமர்ந்திருப்பதை உணர்ந்தாள்.. அவளது முகம் அந்தி வானமாய் சிவந்தது..

அவனிடம் இருந்து தள்ளி அமர்ந்தவள் தன்னை சமாளித்துக் கொண்டு "இங்கப் பாரு கிருஷ்.. நீ வேணா என்னை பல வருசமா லவ் பண்லாம்..  நானும் உன்னை இப்போ விரும்ப ஆரம்பிச்சிட்டேன்.. அது எதுனாலனு தெரியல.. ஆனா நானும் உன்னை விட குறைஞ்சவ இல்ல.. அதுனால எப்பாவாது என்னை குத்தி காமிச்சு பேசுன கொன்றுவேன் " என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.
தானும் உன் அளவுக்கு உன்னை விரும்புகிறேன்.. என்று காதலை வெளிப்படுத்தும் போது கூட அவள் அடாவடியாக சொன்னது அவள் மீது இன்னும் காதலை அதிகப்படுத்தியது..

நாட்களும் நகர்ந்தது.. அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருந்த கிருஷ் மற்றும் மீராவின் திருமணமும் நல்முறையில் நடந்து முடிந்தது. 
தற்போது மீராவும் பாதியில் விட்ட தனது கனவு லட்சியத்திற்காக மீண்டும் படிக்கத் துவங்கினாள்..
அவனது அன்பான கணவரும் அவளுக்கு பக்கதுணையாக இருந்து அவளுக்கு உதவி புரிந்தான்..
இரண்டு முறை தேர்வில் தோல்வியுற்றாலும் மூன்றாவது முறை வெற்றிக் கனியைப் பறித்தாள் மீரா.. ஆல் இண்டியா அளவில் மதிப்பெண் வாங்கியதால்  தமிழ்நாட்டிலே அவளுக்கு ஆட்சியர் பதவி கிட்டியது..
அடுத்த வருடமே அவர்கள் அன்பின் பரிசாக குட்டி மீரா பிறந்தாள்...
மீரா தன் வாழ்வில் எவ்வளவு வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்தாளோ அதே அளவிற்கு இப்போது ஆனந்தத்தில் திளைத்தாள்.
அவளது குடும்பம் அதற்கு என்றுமே துணையிருந்தது..
அங்கே அவர்கள்  மகிழ்ச்சியுடன் என்றும் வாழ நாம் அனைவரும் வாழ்த்தி விடைபெறுவோம்..

  💕💕💕💕💕💕 சுபம் 💕💕💕💕💕💕

நீங்க எல்லாரும் ராம் , உதய் மற்றும் நிலாவைப் பற்றி எதுவுமே சொல்லலியே என்று கேட்பது புரிகிறது.. உங்க எல்லாருக்கும் ராம் கேரக்டர் பிடிக்கும்னு நினைக்கிறேன்..எனக்கும் தான். அதனால் இதே கதையின் தொடர்ச்சியாக " முள்ளும் மலரும் பகுதி - 2 " எழுதலாம் என்று நினைக்கின்றேன்.. அதில் ராம் தான் கதாநாயகன்.. அதற்கும் தங்களது ஆதரவு வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்..

ராமினைப் பற்றி இதே தொடரில் எழுத ஏனோ மனம் வரவில்லை.. அதனால் தான்.. உங்கள் ஆதரவு இருந்தால் அடுத்த கதையுடன் தங்களைச் சந்திக்கிறேன்.. இந்தக் கதையில் எதாவது குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் epilogue இல் சரி செய்து கொள்கிறேன்..

என்றும் அன்புடன்,
சரண்யா சூரியபிரகாஷ்..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro