Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

முள்ளும் மலரும் 19

இரவு உணவை சமைத்து முடித்துவிட்டு நிலாவினை சாப்பிட அழைத்தவள் அப்போதுதான் ராம் வீட்டில் இல்லை என்பதைக் கவனித்தாள்.

" நிலா ராம் எங்கே " என்ற கேள்விக்கு " அவன் ஈவ்னிங்கே பார்க் போரேனு சொல்லிட்டுப் போனான்.. வந்துடுவான் மீரா.. வா நாம சாப்பிடலாம் " என நிலா அலட்சியமாகக் கூற, அப்போதுதான் ராமின் கவலையான முகம் நினைவு வந்து அவளை இம்சித்தது.

நிலாவினை கதவினை உள்புறமாகத் தாளிட சொல்லிவிட்டு ராமைத் தேடிப் போனாள் மீரா.. அவளுக்கு அதிகம் தொல்லை தராமல் அருகிலிருந்த பூங்காவிற்கு வெளியே சோகமாக அமர்ந்திருந்தான். அவனை இவ்வாறு பார்த்தவுடனே உயிரேப் போனது மீராவிற்கு..

அவனிடம் வேகமாக சென்று " ராம் என்னாச்சுடா.. ஏன்டா இப்படி உக்கார்ந்திருக்க.. " அவன் தோள்தொட்டு உலுக்க,

" நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுக்கா.. அப்போதான் நான் வீட்டுக்கு வருவேன்.. " என்றான் அவளைப் பார்க்காமல்

ராம் திடீரென்று இப்படிக் கூறுவான் என எதிர்பாராத மீரா ஒரு நொடி தடுமாறினாலும் " ராம் என்னடா சின்னப் பையன் மாறி பேசிட்டு இருக்க.. எதுனாலும் வீட்டுக்குப் போய் பேசலாம்டா.. வாடா நிலா அங்க தனியா இருக்கா.. " என அவள் கெஞ்ச,

அதில் மனமிறங்காதவன் " நீ சரின்னு சொல்லு.. இல்லைனா இங்க இருந்து கிளம்பு.. " என்று உறுதியாக சொல்லவும்

ராமின் பிடிவாதத்தையும் கோபத்தையும் இதுவரை காணாதவள் அதிர்ந்து போனாள்..
" இப்போ அதுக்கென்னடா அவசியம்.. நீயும் நிலாவும் படிப்ப முடி" என அவள் முடிப்பதற்குள் " அப்போ என்ன நேரா அறுபதாங் கல்யாணம் பண்ணப் போறியாக்கா.. இப்போ உனக்கு வயசென்ன ஆகுது.. இந்நேரம் நம்ப அப்பா அம்மா இருந்தா உன்னை சும்மா விட்ருவாங்களா.. ப்ளீஷ்கா " என பதிலுக்கு அவனும் கெஞ்ச,

" அந்த வீட்ல யாராச்சும் எதாவது என்னைப் பத்தி சொன்னாங்களாடா.. ஏன்டா திடீர்னு இப்படி அடம்பிடிக்கற.. அதென்ன உடனேவா பண்ண முடியும். நாம இருக்குற நிலைல யார்க்கும் பாரமா நாம இருக்கனுமாடா.. " என்று கீதா ஆன்ட்டி பேசியதை மனதில் வைத்துக் கொண்டு சொல்ல,

அவனோ " நானும் நிலாவும் இல்லைனா நீ சந்தோசமா இருப்பல்ல.. நாங்கதான உனக்கு பாரமா இருக்கோம் " என்றதும் ஓங்கிப் பளாரென்று அறைந்தாள்..

" ராம் உங்கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கல.. எல்லார் மாறி நீயும் என்னைப் புரிஞ்சிக்கலைல.. நான் உங்களை பாரமாவா நினைச்சேன்..என் ராம் இப்படி பேச மாட்டானே. " என அழுதுகொண்டே கூற,

அவள் அழுததும் " அக்கா நான் சொல்றத தப்பா புரிஞ்சிக்கிட்ட.. ப்ளீஷ்கா இதே நான் உன்னோட அண்ணனா இருந்திருந்தா என்பேச்சு கேட்பீல .. எனக்காக ஒத்துக்கோ..நான் வேலைக்கு போனவுடனே கடனெலாம் அடைச்சிருவேன்கா " என அவனும் அழுதுகொண்டே கெஞ்ச,

அவனிடம் எவ்வாறு பேசி புரிய வைப்பது எனத் தெரியாமல்
" சரி சரி ஒத்துக்குறேன்.. வா போலாம் " என்றாள்.. அவனும் " தேங்க்ஷ் கா " என்ற சிரித்தபடியே எழுந்து நடந்தான்.

ராமின் திடீர் தாக்குதலுக்குக் காரணம் என்ன என சிந்திக்கத் துவங்கினாள் மீரா..
அடுத்தநாள் ராம் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருக்க மீரா மெதுவாக " டேய் நேத்து யார் என்ன சொன்னாங்க . நீ எங்கிட்ட அப்படிக் கேட்ட.." என்று மெதுவாக போட்டுவாங்கினாள்..

அவனும் பையில் தனது புத்தகங்களை எடுத்து வைத்தபடியே " ஒரு அண்ணா உன்னை கல்யாணம் பண்ணித் தரச் சொல்லிக் கேட்டாங்க.. நான் தான் உன்னைக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கனும்னு ரெக்யூஷ்ட் பண்ணாங்க.. அதான்.. " என்றான்..

" அண்ணனா...யாரைச் சொல்ற கிருஷையா " என அவள் கேட்கவும் ராம் தற்போதுதான் அவன் கூறிய வார்த்தையை உணர்ந்தான்..
அவனுக்கு மீராவிடம் எதையும் மறைக்க பிடிக்காது.. அதனால் " ச்சே அவனெலாம் இல்ல..அவனைப் போய் நான் அண்ணனு சொல்வனா " என்றான் அலட்சியமாக,

" ராம் என்ன இது.. உன்னைவிட வயசுல மூத்தவங்கள இப்படித்தான் பேசுவியா.. கிருஷ் ரொம்ப நல்லவன்.. நான்தான் அவனைத் தப்பா புரிஞ்சிக்கிட்டேன் " என்றவள் " யாருடா அந்த அண்ணன் " என்று ராமிடம் கோபமாக கேட்டபின் தான் ' தான் ஏன் கிருஷைத் தவறாக சொன்னதால் இவ்வளவு கோபப்பட்டேன் என தன்னையே கேட்டுக் கொண்டாள்.

" உங்க காலேஜ் தான்.. நேத்து பங்சனுக்கு கூட வந்தாங்கலே.." என்றான்.
யாரைச் சொல்கிறான் இவன்.. அங்கே இருந்ததில் கிருஷ் மற்றும் உதயைத் தவிர வேறுயார் தங்களது கல்லூரியைச் சார்ந்தவர்கள் என யோசித்ததும் அவள் மனதில் வந்தது மகேஷும் ஆரவும் தான்.. ஆனால் இருவரும் கிருஷின் நெருங்கிய நண்பர்கள். அடுத்து யார் என யோசித்துக் கொண்டிருக்க

" ரொம்ப யோசிக்காத அக்கா அது ஆரவ் அண்ணாதான்.. ஆனா எனக்கு அவரை பிடிக்கல.. அதான் அண்ணானு சொன்னேன்.. சரிக்கா டைம் ஆச்சு பாய்.. தரகர்ட கொடுக்க நல்ல போட்டோ ஒன்னு எடுத்து வை.. " என்று கூறிச் சென்றான்.

சிறிது நேரத்தில் நிலாவும் சென்றதும்
வேலைக்குச் செல்லப் பிடிக்காமல் அப்படியே அமர்ந்தாள். ராம் நேற்று இரவு திருமணம் என்று சொன்னதும் அவள் மனதில் கிருஷைத் தவிர வேறு முகம் நினைவிலில்லை..
இது காதலா என சொல்லத் தெரியவில்லை.. ஆனால் வேறொருவனைத் தனது கணவராக நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை..
தனது புகைப்படத்தை தரகரிடம் கொடுக்கச் சொன்னதும் இன்று ஏனோ ராமின் மீது கூட கோபம் வந்தது..
அதுவும் ஆரவ் அவ்வாறு கேட்பான் என நினைக்கவேயில்லை..

முன்புபோல் தற்போதும் தானே தவறாக முடிவெடுக்காமல் கிருஷிற்கு அலைபேசியில் அழைத்தாள். கிருஷ் வேண்டுமென்றே அழைப்பினைத் துண்டித்துக் கொண்டே இருந்தான்.

அவளுக்கு கிருஷ் தன்னை உண்மையிலே வெறுக்கத் துவங்கிவிட்டானா என எண்ணும்போதே
கண்களில் கண்ணீர் வழியத் துவங்கியது.

அந்த நேரம் கதவினைத் தட்டும் சத்தம் கேட்க கதவினைத் திறந்தாள். வெளியே ஆரவைக் கண்டதும் கோபம் கொண்ட மீரா கதவினை மூடப் போக அதைத் தடுத்து உள்ளே வந்தான்..

" ஆரவ் " என கத்த ஆரம்பிக்க, " மீரா ப்ளீஷ் கத்தாததீங்க.. நான் பேசறத பொறுமையாக் கேட்டுட்டு உங்க முடிவ சொல்லுங்க.. " என்றான்.

ஏற்கனவே கோபத்தால் அனைத்தையும் இழந்தது போதும் என எண்ணியவள் அமைதியானாள்.

" மீரா என்னடா இவன் இப்படி பேசறேனு தப்பா நினைக்காதீங்க.. நான் உங்களை காலேஜ்ல இருந்தே லவ் பண்ணேன்.. ஆனா என் பிரண்ட் கிருஷும் உங்கள லவ் பண்ணுவானு நினைச்சுப் பார்க்கல.. மகேஷ் எப்பவும் கிண்டல் பண்றமாறி தான் அன்னைக்கு உங்கள கிருஷோட வெச்சு ஓட்டுனான்.. ஆனா கிருஷ் அதை லவ்னு புரிஞ்சுகிட்டான்.. நானும் அவனுக்காக உங்கள மறக்க டிரைப் பண்ணேன். ஆனா கிருஷ் உங்கள உண்மையா விரும்பலனு எனக்குத் தெரிஞ்சப் பிறகு நான் அமைதியா இருக்கறது அர்த்தமே இல்ல.. என்னை நம்புங்க மீரா.. நான் ராம நிலாவ நல்லாப் பார்த்துப்பேன்.. எனக்கொரு சான்ஸ் கொடுங்க.. " எனக் கெஞ்சினான்..

அவன் என்னதான் பொறுமையாக பேச்சில் தேன் கலந்து பேசினாலும்
பாவம் மீராவிற்குத் தான் அது கருத்தில் பதியவில்லை.. கிருஷின் காதல் பொய் என்று கூறியதுமே அவளது தற்காலிக பொறுமைக் காற்றில் பறந்தது.

" கிருஷ் என்னை உண்மையா விரும்பலையா ஆரவ் " என்று கேள்வியாய் கேட்க,
" ஆமாங்க மீரா.. நேத்துக் கூட பார்த்தீங்களா அவன் உங்களை வேண்டானு சொன்னத.. அப்ரோ உங்க எக்சாம்ல அவன் சீட்டிங் பண்ணத.. உங்க அப்பா அம்மாவக் கூட " என கூற வந்தவன் அப்படியே அமைதியானான்..

" என்ன சொன்னீங்க அப்பாவா... ப்ளீஷ் " என்று வினவ " அதெப்படி மீரா நான் சொல்லுவேன்.. உங்க அப்பா அம்மாவ கொல்ல சொல்லி போன்ல பேசிட்டு இருந்தானே " என கூறி முடிப்பதற்குள் ஓங்கி கண்ணத்தில் அறைந்தாள்..

" என்ன தைரியம் இருந்தா என்கிட்டயே கிருஷ பத்தி தப்பா சொல்லுவ. உன்னையும் பிரண்டா அவன் நம்புனானே ச்சே.. இப்பவே இரு அவன்கிட்ட சொல்றேன் " என கைப்பேசியை எடுக்க,

" என்னை அடிச்சு ரொம்பத் தப்புப் பண்ணிட்ட மீரா " என்றவன் அவள் கைப்பேசியை சுக்குநூறாக உடைக்க அதிர்ச்சியில் அவனைப் பார்த்தாள்..

" ஆரவ் நீ எல்லைத் தாண்டி போற.. மரியாதையா வெளிய போ " என்க,

" அதெப்படி டீ கஷ்டப்பட்டு எல்லாப் பிளானும் நாங்க போட்டா.. அதை புஷ்வானமாக்கிட்டு ஹீரோ கூட சேர்ந்து டூயட் பாடப் போயிடுரீங்க " என்று அவளை ஏளனமாக பேசியவன் அவளிடம் முன்னோக்கி நகர,

" வேண்டாம் ஆரவ் நான் உன்மேல நிறைய மதிப்பு வெச்சிருந்தேன். ப்ளீஷ் " என பின்னோக்கி அவள் நகர,

" ஹஹஹா யாருக்கு வேணும் அந்த மதிப்பு.. நானும் பொறுமையாப் பேசிட்டே இருக்கேன் நீ கேட்க மாட்டீங்கிற.. உனக்காக நான் எவ்ளோ பண்ணிருக்கேன் தெரியுமா.. 3 வருசமா உன்னைத் தேடாத இடமில்ல.. நான் யாருனு உனக்குத் தெரியுமா மீரா. உன்னோட சொந்த மாமா பையன்.. உனக்காகவேப் பொறந்தவன் " என அவள் கன்னம் தொட முயல, அதைத் தட்டி விட்டு ஓட முயன்றாள்.

அவளது இரு கைகளையும் பின்புறம்
மடக்கிப் பிடித்து,
" நான் தான் மீரா உனக்கெல்லாமே.. நீ பொறந்தவுடனே நீ எனக்குதான்.. நான் உனக்கு தான்னு முடிவு பண்ணீட்டாங்க.. ஆனா உங்க அப்பா அம்மா செத்தப் பிறகு எல்லாம் மாறிடுச்சு..அதுக்கப்ரோம் உன்னை பார்க்கவே முடியல..
நீ எங்கப் போனேனு எல்லார்கிட்டயும் கேட்பேன்.. அப்போ எனக்கு நீ எங்க இருக்கனு சொல்லுல..
என்னோட கிரெடுவேசன் டே அப்பதான் எங்கப்பா சொன்னாரு.. நீ தான் என்னோட மீரான்னு.. நான் எவ்ளோ ஹேப்பியானத் தெரியுமா.. ஆனா உனக்கும் எனக்கும் நடுவுல கிருஷ் இருக்கானு தெரிஞ்சதுமே அவனை உங்கிட்ட பிரிக்க நினைச்சேன்.. ஆனா அது முடியல..
அதான் மகேஷோட பர்த்டே பார்ட்டீ அன்னைக்கு அந்தப் பொண்ணுங்கள வெச்சு உனக்கு புரிய வெச்சேன்.. நீயும் அதை புரி்ஞ்சு கிருஷையும் உதயையும் ஒதுக்கிட்ட. நீ எனக்கு மட்டும்தான் மீரா. நீயேன் கண்டவங்க கூட பேசனும் அதான்.. " என்க,

அவன் கூறுவதைக் கேட்டு அதிர்ந்து போனவள் " என்னோட ஹால் டிக்கெட்ல " என அவள் பேசத் துவங்கும்போதே " மீரா அதை நான் வேணும்னே பண்ணல.. அந்தக் கிருஷ் தான் உன்னை கல்யாணம் பண்ண உங்க சித்தி சித்தப்பாக்கிட்ட சம்மதம் வாங்கிட்டான்.. எனக்கு வேற வழி தெரியல.. அதான் உன்னை அவங்கிட்ட சேர விடக்கூடாதுனு அப்படிப் பண்ணேன்.. நான் சம்பாதிச்சுப் போடறேன் மீரா.. நீ வீட்ல ராணி மாறி
இரு.. நீயேன் வேலைக்குப் போகனும்.. " என அவன் கூறவும்,

" ச்சீ கைய எடுடா.. பொறுக்கி நாயே.. அநியாயமா என் வாழ்க்கையவே அழிச்சிட்டியேடா.. ராஸ்கல் " என அவனிடமிருந்து திமிர,

" ப்ளீஷ் மீரா இதெலாம் நான் உனக்காகத் தான் பண்ணேன்.. என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ... ராணி மாறி வெச்சு உன்னைப் பார்த்துக்குவேன்..என்னை நம்பு மீரா.. " என அவன் கெஞ்ச, அவளோ அவனிடமிருந்து எவ்வாறு தப்பிப்பது என யோசித்துக் கொண்டிருந்தாள்..

" மீரா நீ மட்டும் ஒத்துகலைனா ராமையும் நிலாவையும் உங்கிட்ட இருந்து பிரிச்சிருவேன்.. " என்றதும் " நான் உயிரோட இருக்குற வரை அது உன்னால முடியாதுடா.. ராஸ்கல்.. முதல்ல கைய விடுடா. நீ மட்டும் இப்படி பண்றது ராம்க்கு தெரிஞ்சுது " என அவள் முடிப்பதற்குள்,

" ஹஹஹஹா நான் உண்மைய சொன்னா அவனே உன்னை விட்டுப் போயிருவான் " என்று சொன்னதும் அவளது திமிறல் அடங்கியது..

" அதிர்ச்சியா இருக்கா மீரா.. நான் அவனோட அப்பா அம்மாவ கொன்னது உனக்காகத் தானு தெரிஞ்சா அவன் சும்மா இருப்பானா.. உன்னை விட்டுப் போயிர மாட்டான்.. வீணா பிரச்சனை பண்ணாத.. நீயும் நானும் சந்தோசமா இருந்தா அவன்கிட்ட கடைசி வரை எந்த உண்மையும் சொல்ல மாட்டேன்" என்றான் ஆணவத்தோடு..

மீரா அமைதியானாதும் பிடியை தளர்த்தினான்.. அவனது கையை தற்போது சுலபமாகத் தட்டிவிட்டவள் " எங்க அப்பா அம்மா உனக்கென்னடா பாவம் பண்ணாங்க.. நான் தான் வேணும்னா எங்கிட்ட நேரா சொல்லியிருக்கலாம்ல.. ஏன்டா அவங்களக் கொன்ன " என மண்டியிட்டு கதற,

" மீரா ப்ளீஷ் அழாத.. என்னாலத் தாங்க முடியாது.. " என அவனும் அவளுருகே அமர்ந்து " மீரா உங்க சித்தப்பா நல்லவர் இல்லமா.. நான் என்னைப் பத்தி பொருமையா எடுத்துச் சொல்லி கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டேன்..ஆனா அவுங்களுக்கு கிருஷத் தான் பிடிச்சிருக்குனு சொன்னாங்க. அவங்க பணத்தாசை புடிச்சவங்க மீரா.. ஆனா நீ அப்படி இல்ல.. நீ எனக்கு வேணும் மீரா.. அதான் அவங்கள மிரட்டுனேன்.. ஆனா அவங்க உடனே கிருஷுக்கு கால் பண்ண போயிட்டாங்க.. அதான் அவசரத்துல தலைல ஓங்கி உங்க சித்திய அடிச்சிட்டேன்.. அவுங்க பட்டுனு போயிட்டாங்க.. உங்க சித்தப்பா கத்த ஆரம்பிச்டாரு.. எனக்கு வேற வழி தெரியல மீரா.. நான் போலிஷ்ல மாட்டிக்கிட்டா உன்னை யாரு கல்யாணம் பண்ணிப்பா.. சொல்லு.. அதான் அவரையும் கொன்னுட்டேன்.. அப்ரோ என் பிரண்ட்ஸோட உதவியால அதை ஆக்சிடன்ட் மாறி செட் பண்ணிட்டேன்.. ப்ளீஷ் மீரா இதெலாம் நாம சந்தோசமா இருக்கனும்னு தான் பண்ணேன்..அப்பதான் உங்க அப்பா அம்மாவோட ஆத்மா சாந்தியடையும்.. வா மீரா நம்ம வீட்டுக்கு போலாம். இதெலாம் உனக்கும் தெரிஞ்சு என்னைப் பத்தி புரிஞ்சுக்கிட்டா போதும்னு தான் மீரா எல்லாத்தையும் உங்கிட்ட சொன்னேன் வா மீரா " எனக் கைப்பிடித்து இழுக்க,

அதுவரை பொறுமையாக இருந்த மீரா காளியாக உறுமாறினாள்.. அவனை மாறி மாறி கன்னத்தில் அறைந்தவள் அருகிலிருந்த பிளவர் வாஷை அவன் தலையில் தூக்கி அடித்தாள்..

அவன் சுதாகரித்து எழும்முன் இன்னொரு வாஷை எடுத்து அவன் தலையில் போடும் போதே கதவு திறக்கப்பட்டது..
அங்கே கிருஷ், ராம் மற்றும் உதயுடன் இரண்டு காவலர்களும் வந்திருந்தனர்..

ராமும் உதயும் ஆரவைப் போட்டு துவைத்து எடுக்கத் துவங்கினர்..

" உதய் அந்தக் கேமாரவ எடுத்து ஏசி சார் கிட்ட கொடு " என்ற படியே வந்த கிருஷை ஓடிச் சென்று கட்டிக் கொண்டாள் மீரா..

இந்த அப்டேட் ரொம்ப நீளமா இருக்கும் என்று நம்புகிறேன்.. அடுத்த பதிவில் இந்தக் கதை முற்றுப்பெறும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.. என்னை ஊக்குவித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro