முள்ளும் மலரும் 17
மகேஷின் பிறந்தநாளை அவர்கள் கல்லூரியின் கெட் டூ கெதர் என்றே கூறலாம். அந்த அளவிற்கு நண்பர்களை அழைத்திருந்தான். உதய் தனக்கு வேலை இருப்பதாகக் கூறி சற்று தாமதமாக வருவதாக சொல்லியிருந்ததால் மீரா மட்டும் தனியாக சென்றிருந்தாள்.
ரெஸ்ட் ரூம் செல்வதற்கு எழுந்து சென்ற மீராவை யாரோப்பின் தொடர்வதைப் போல உணர, அவள் வேகமாக உள்ளே சென்று விட்டாள். அங்கே இரு பெண்களின் பேச்சுக் குரல் கேட்க சற்று நிம்மதி அடைந்தவள் வெளியே செல்ல எத்தனிக்க அவர்கள் பேச்சில் மீரா என்று அடிபட அவர்கள் பேச்சை கவனிக்க ஆரம்பித்தாள்.
" என்னடி சொல்ற அந்த மீராவா அப்படி.. பார்க்க நல்ல பொண்ணு மாறி தான தெரியுறா.. " என்றாள் ஒருத்தி..
" நானும் அப்படித்தான நினைச்சேன்.. ஆனா காலெஜ்ல உதயையும் வெளிய கிருஷையும் நல்லாத் தான் மெயின்டைன் பண்றா " என்றாள் இன்னொருத்தி..
" ஹே தப்பா பேசாத.. அவங்க பிரண்ட்ஸ் டீ "
அடிபோடி.. அன்னைக்கு நம்ப முன்னாடி தான கேன்டீன்ல கிருஷ் மீராவ லவ் பண்றதான் சொன்னான்.. அடுத்த நாள் ரோஸ்லா கொடுத்தானே.. ஒருவேளை அவ வேண்டானே சொல்லியிருந்தாலும் அவ பிரண்டாவ நினைப்பான்.. அவளுக்கு அந்த அறிவு கூட இருக்காத என்ன.. போடி.. ரெண்டு பேரும் பணக்கார பசங்க.. சொல்லவா வேணும்.."
ஆமாடி நீ சொல்றதும் சரி தான்.. மீராக்கு கேர்ள் பிரண்ட்ஸ் கூட கம்மி தான். எப்பவும் பசங்களோட தான் சுத்துவா.. அவங்க வீட்ல எல்லாம் எனனதான் சொல்லிக் கொடுத்து வளர்த்தாங்களோ.. எனக்கு மட்டும் இப்படிபட்ட பொண்ணு இருந்தா வெட்டியே போட்ருவேன். அவளும் அவ மூஞ்சுயும்..
.
.
.
.
.
இதற்கு மேல் மீராவால் எதையும் காது கொடுத்து கேட்க முடியவில்லை.. துக்கம் தொண்டையை அடைத்தது.. தன்னைப் பற்றி தவறாக பேசுபவர்களை எப்போதும் ஒரு பொருட்டாகவே எண்ண மாட்டாள்.. இன்று ஏனோ அவ்வாறு இருக்க முடியவில்லை.. உண்மையிலேயே எல்லாரும் தன்னை இந்தப் பார்வையில் தான் பார்க்கிறார்களா என்று வருத்தமாக இருந்தது.
ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருந்தால் இந்த சமுதாயம் ஏற்காதா.. நம்நாடு இ்ன்னும் மாறவே மாறாதா என எண்ணியபடியே சோர்வாக ஷோஃபாவில் அமர்ந்தாள்.. இதையெதும் அறியாத கிருஷ் அவளருகே வந்து அமர்ந்தான்..
" ஹாய் மீரா.. எங்க அந்தக் குரங்குக் குட்டி.. வால் மாறி பின்னாடியே சுத்திட்டு இருப்பான்.." என்று எதார்த்தமாக பேச ஆரம்பித்தான்.
அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்ததும்
" ஹேய் என்னடி.. உடம்பெதும் சரியில்லயாடி.. " என்று அவள் தலையைத் தொட,
அவனது கையை மெதுவாக தட்டிவிட்டவள் " கிருஷ் நீ என்னை இன்னும் விரும்பறியா " என்றாள்
அவளது திடீர்கேள்வியால் அதிர்ந்த கிருஷ் அவள் முகத்தைப் பார்க்க, அதில் சோகம் மட்டுமே தெரிந்தது.
" ப்ளீஷ் கிருஷ் எங்கிட்ட உண்மைய மட்டும் சொல்லு.. " என கேட்க,
அவளிடம் பொய் கூற பிடிக்காமல் அமைதியாக இருக்க, அவனது அமைதியை ஆம் என்று எடுத்துக் கொண்டவள் " நான் எதையுமே புரிஞ்சுக்காத முட்டாளாவே இருந்துட்டேன்ல.. நான் ரொம்ப கெட்டப் பொண்ணு கிருஷ்.. எங்கோட இனி பேசாத.. இனிமே நமக்குள்ள எதுவுமே இல்ல.. இனி உங்க வீட்டுக்கும் வரமாட்டேன்.. அவங்க கிட்ட சொல்லிடு.. " என்று கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே எழுந்து சென்றாள்.
அவள் வேகமாக வெளியேறிய போதுதான் உதய் வந்தான். அவனைப் பார்த்ததும் அவன் தோள்களில் சாய்ந்தவள் அந்தப் பெண்களின் பேச்சு ஞாபகம் வர நெருப்பினைத் தொட்டவள் போல விலகி நின்றாள்..
அழுத அவள் கண்களையும் அவள் பின்னே நின்ற கிருஷையும் பார்த்தவன் எதையோப் புரிந்து கொண்டு அவளது கைப்பிடித்து விடுதிக்கு அழைத்துச் சென்றான்..
அன்றிலிருந்து உதயிடம் கூட சற்று இடைவேலி விட்டேப் பழகினாள்.. அவள் வெளிப்படையாக வாயைத் திறந்து சொல்லாததால் அவனுக்கும் அதற்கான காரணம் புரியவில்லை..
கிருஷும் அவளிடம் மன்னிப்புக் கேட்க எவ்வளவோ முயற்சித்து விட்டான். ஆனால் அவள் மாறவேயில்லை.. இதனால் உதய்க்கும் கிருஷிற்கும் இடையே சண்டை வந்ததுதான் மிச்சம்..
கீதாவும் ராஜனும் மீராவைப் பார்க்க வந்தனர். அப்போது தான், அவளது அரைகுறைப் பேச்சின் அர்த்தம் புரிந்தது. யாரையும் நம்பமுடியாமல் தவித்தாள். எல்லாவற்றிற்கும் தனது முட்டாள் தனமே காரணம் என தன்மீதே அனைத்துப் பழியையும் போட்டுக் கொண்டாள்.
இறுதித் தேர்வும் நெருங்கிக் கொண்டிருந்தது. என்றும்போல கிருஷும் அவளிடம் பேச முயற்சிக்க அதில் எரிச்சலைந்தவள் அவனை ஓங்கி அறைந்து விட்டாள்
கிருஷின் பொறுமைக்கும் ஒரு எல்லை இருந்தது... ஆனால் இன்று அவனால் பொறுமையாக இருக்க முடியவில்லை.. கிட்டத்தட்ட ஆறு மாதம் அவள்பின்னே ஒரு நாய்க்குட்டி போலே சுற்றிவந்தவனுக்கு அவள் அதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கவும் ஆத்திரத்தில் என்ன பேசுகிறோம் என்பதை மறந்து உலறிவிட்டான்..
" என்னடி ரொம்பத்தான் குதிக்குற.. என்னை இவ்ளோ இன்சல்ட் பண்ணிட்டல.. அதைவிட அதிகமான தண்டனையா உனக்கு கொடுக்கல.. நான் கிருஷ் இல்லடி.. நீயே வந்து என் கால்ல விழுந்து என்னை ஏத்துக்கோ கிருஷ்னு கெஞ்சுவ.. அப்போ தெரியும் இந்த கிருஷ் யாருனு.. முதல்ல உன் ஆணவத்த அழிக்கனும்.. அப்போத் தான் நீ திருந்துவ.. எண்ணி ஒரு வாரத்துல நீயே என்னைத் தேடி வருவ பாரு.. " என்று அவள்முன்னே சபதம் விடுத்துச் சென்றான்.
அவன் சொன்னதெலாம் நடக்காது என அவனுக்கும் தெரியும் தான். இருந்தாலும் கோபத்தில் பேசிவிட்டான்.பேசிய வார்த்தைகளை திரும்ப பெற இயலாதே.. இந்த வார்த்தைகள் தான் கிருஷ் மீரா பிரியக் காரணமாக அமைந்தது என அப்போது அவன் அறிந்திருக்க மாட்டான்.
மீண்டும் மீராவை சமாதனப்படுத்த நினைத்தவன் அதற்கு வழியாக ஒன்றைத் தேர்ந்தெடுத்தான்.. நேராக மீராவின் பெற்றோரைச் சந்தித்தான். உண்மையை எடுத்துக் கூறினான். அவர்களுக்கும் கிருஷை மிகவும் பிடித்திருந்தது. மீரா வீட்டிற்கு வந்ததும் அவளிடம் பேசிவிட்டு முடிவைச் சொல்வதாக சொல்லினர்..ஒருவேளை மீராவிற்கு பிடிக்கவில்லை என்றால் அவளைத் தொல்லை செய்யக் கூடாது எனக் கட்டாயமாக கூறினர்.
கிருஷ் அதற்கு " அங்கிள் நான் ஒரு மீட்டிங்காக யூ. எஸ் போறேன்.. வர ஒன் மன்த் ஆகும். மீராவ அது வரைக்கும் நல்லா யோசிக்க சொல்லுங்க.. அவளுக்கு சம்மதம்னா மட்டும் இந்த நம்பர்க்கு கால் பண்ணுங்க.. " என்றவன் சற்று இடைவேளை விட்டு " இல்லை பிடிக்கலைனா கால் பண்ணாதீங்க. இனி மீராவ நான் எதற்கும் தொல்லைப் பண்ணமாட்டேன்.. இனி அவ வாழ்க்கைல நான் இல்லைனு ஒதுங்கிடறேன் " என்றான். அவர்களும் அதற்கு சரி என்றனர்.
இதை எதுவும் அறியாத மீரா சந்தோசமாக தேர்வு எழுதிக் கொண்டிருந்தாள்.. திடிரென்று அவளது ஹாலுக்குள் நுழைந்த அதிகாரிகள் அவளது விடைத்தாளைப் பிடிங்கினர்.. அவளது உடமைகளை ஆய்வு செய்தனர். அவளது ஹால் டிக்கெட்டை எடுத்து முகத்திற்கு நேராக நீட்டியவர் " என்ன இது பிட்டா.. மேடம் இந்தப் பொண்ணு மேல டிசிபிலினரி ஆக்சன் எடுங்க.. மூனு வருசம் எக்சாம் எழுதாம இருந்தா தான் இவளுக்கு புத்தி வரும் " என்று ஒருவர் கூற, சப்த நாடியும் அடங்கிப் போனது மீராவிற்கு..
மீராவும் எவ்வளவோ எடுத்துக்கூறினாள். அது எதுவும் அவர்கள் காதில் விழவில்லை.அவளைக் கல்லூரியிலிருந்து கூட வெளியே அனுப்பிவிட்டனர்.. உதயாலும் எதுவும் செய்ய முடியவில்லை..
இது தெரியாத கிருஷ் மீராவை ஊருக்குச் செல்லுமுன் போனில் அழைத்தான். " என்ன மீரா ஒரு வாரமா என் தொல்லை இல்லாம நிம்மதியா இருந்தியா " என்றான். அவள் அதை தவறாகப் புரிந்து கொண்டு " ச்சீ வாயை மூடு. நீ மட்டும் என் கண் முன்னாடி இருந்த கொன்றுவேன்டா " என்று ஒட்டு மொத்த ஆத்திரத்தில் கூற,
அதை வழக்கம்போல எடுத்துக் கொண்டவன் " இதுக்கே அப்படினா உங்க வீட்டுக்கு போய் பாருமா.. அப்போத் தெரியும்.. இந்தக் கிருஷால எதுவும் பண்ண முடியும்னு " என்றவன் " ஓகே மீரா ப்ளைட்டுக்கு டைம் ஆச்சு பாய் " என்று வைத்துவிட்டான்.
அழுதுகொண்டே வீட்டிற்கு சென்றவளுக்கு இன்னும் அதிர்ச்சி காத்திருந்தது.. தனது தாயும் தந்தையும் சடலங்களாக கிடக்க அருகே ராமுவும் நிலாவும் அழுதழுது மயங்கிக் கிடந்தனர்.
உடல்களை அடக்கம் செய்வதற்கு எடுத்துச் செல்லுமுன் அவர்கள் அணிந்திருந்த நகைகளை கழட்டும்போது தான் அவளது தாய் பானுமதி கையில் சிறு காகிதம்
இருப்பதை கவனித்த ஒருவர் மீராவிடம் எடுத்துக் கொடுத்தார்.அதில் கிருஷின் போன் நம்பர் இருந்தது..
மீராவிற்கு அனைத்தும் தவறாகவே புரிந்தது.. விபத்தினால் இறந்த பெற்றோரைக் கொன்றது கூட கிருஷ் தான் என எண்ணினாள். அவனை அடிமனதிலிருந்து வெறுத்தாள்.
ஒரு மாதமாகியும் மீரா அழைக்காததால் அவளது பெற்றோருக்கு கொடுத்த வாக்கிற்காக அவளை மறக்கத் துவங்கினான். இருந்தும் அவளை மறக்க முடியாததால் அங்கேயே தங்கிவிட்டு தாயின் வற்புறுத்தலால் இரண்டு வருடம் கழித்துத் தான் வந்தான்..
இதோடு ப்ளாஷ்பேக் முடிந்தது. மீராவிற்கு அநியாயம் இழைத்தது யார்? அதை கிருஷ் எவ்வாறு கண்டு கொண்டான் என்பதை இனிவரும் அத்தியாயங்களில் காண்போம்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro