முள்ளும் மலரும் 16
கிருஷின் சந்தோசத்திற்கு அளவேயில்லை... ஒருபுறம் அவனது குடும்பத்தார் அனைவரும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் தனது காதலுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டனர். மறுபுறம் தனது காதலியோ தனக்கே தெரியாமல் அவனது வீட்டிற்கு தனது காதலைப் பற்றிக் கூறிவிட்டாள். போதாததற்கு மீராவுடனான இந்தப் பயணம்.. வாய் விட்டு கத்த வேண்டும் போல இருந்தது கிருஷின் நிலைமை..
மீராவைப் பார்த்தவன் அவள் அமைதியாக வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வர, " ஏன் மீரா இப்படி பண்ண, எங்க வீட்ல என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க.. எங்க என்னோட அப்பா என்னை அடிச்சிருவாருனு சொல்லித் தான் நான் உடனே வெளிய போயிட்டேன். இப்போ வீட்டுக்குப் போனாத் தான் தெரியும் அடியா உதையானு " என்று பாவமாக கூறவும் அவளுக்கும் தான் அவசரப் பட்டுவிட்டோமோ என்று தோன்றியது..
கிருஷைப் பற்றித் தெரிந்து கொண்டதில் அவனுக்கு எந்தவொரு கெட்டப் பழக்கமும் இல்லை..பெண்கள் விசயத்தில் கூட மிகவும் நல்லவன் தான்.. என்ன தன்னிடம் மட்டும்தான் அவ்வாறு நடந்து கொண்டான்.. அதுவும் ஒரு வரைமுறையோடு என்பதை தெரிந்து கொண்டாள்.
இருப்பினும் மேகாவின் பேச்சு அவளுக்கு உறுத்தலாய் இருக்க,
" ஏன் கிருஷ் என்னை உனக்குப் பிடிச்சுது " என்று கேள்வியாய் கேட்டாள்.
ஒரு நொடி அவளைப் பார்த்தவன்,
"எனக்கு உன்னை பார்த்தவுடனே பிடிச்சிருந்தது.. உங்கோட வாழனும்னு ஆசைப் படறேன் அவ்ளோ தான் " என்றான் சாதாரணமாக,
இந்த திரைப்பட வசனத்தை நிறைய பேர் தனது தோழிகளிடம் கூறுவதைக் கேட்டிருக்கிறாள். அப்போதெலாம் ' அதென்னமோ அழகான பொண்ணு.. இல்ல பணக்காரப் பொண்ண பார்த்தாதான் உங்களுக்குத் தோனுமா.. " என்று அவர்களிடமே கூறியிருக்கிறாள்.. ஆனால் இன்று கிருஷ் கூறியபோது அவ்வாறு கூறவும் முடியாது என்றும் அதேபோல் அவன் கூறுவது பொய்யில்லை என்றும் அவனது நேர்மையான குரலே எடுத்துக் கூறியது..
அவனது காதல் உண்மை என்று அவளுக்குமேப் புரிந்தது.. இருந்தாலும் அவளுக்கு அந்தக் காதல் தோன்றவில்லையே.
அவனது மனதை இனியும் புண்படுத்த விரும்பாமல்
" சாரி கிருஷ்.. கொஞ்சம் அவசரப் பட்டுடேன்.. " என்றவள் "கொஞ்ச நாள் போனப்பிறகு நானே உங்க வீட்ல பேசறேன்.. ஆனா நீ என்னைத் தொல்லைப் பண்ணக்கூடாது.. நாம பிரண்ஸா எப்பவும் இருக்கலாம் சரியா.. " என்று கூற, தலையை மட்டும் ஆட்டினான்.
கிருஷிற்குத் தெரியும் அவள் இவ்வளவு இறங்கி வந்ததே பெரிதென்று.. அவனும் அவள் போக்கிலே விட்டுப் பிடிக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருந்தான். மேலும் அவளது கனவினை நிறைவேற்ற, தான் இடைஞ்சலாக இருக்கக் கூடாது எனவும் முடிவெடுத்தான்..
" சாரி மீரா.. இனி உங்கிட்ட காதல் கல்யாணம்னு எந்தத் தொந்தரவும் பண்ண மாட்டேன்.. நீ நிம்மதியாப் படி " என்று புன்னகையுடன் கூற,
மீராவிற்கு அவன் உண்மை தான் சொல்கிறானா என்ற சந்தேகம் ஒரு நொடி தோன்றினாலும் அவனது முகத்தைப் பார்க்கும் போது அவன் உண்மையைத் தான் கூறுகிறான் என புரிந்து கொண்டாள்..
அவளும் " பிரண்ட்ஸ் " என்று கைநீட்ட அவனும் மகிழ்ச்சியாகக் கைக் கொடுத்தான்.
அன்றிலிருந்து கிருஷும் மீராவும்
நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.. கிருஷும் தனது வீட்டில் தனது காதலைப் பற்றி மீராவின் படிப்பு முடியும் வரை மூச்சு விடக்கூடாது எனக் கூறியிருந்தான். அவர்களும் அவ்வாறே நடந்தனர்.
மீராவினை ஆரவும் மகேஷும் ஏற்றுக் கொண்டாலும் மேகா அவளை தங்கள் கூட்டத்தில் சேர்க்க விரும்பவில்லை. மீராவாலும் மேகாவைத் தோழியாக நினைக்க முடியவில்லை.
உதய்க்கும் கிருஷுக்கும் அதே நிலைதான்.. எங்கே கிருஷ் மீராவைக் காயப் படுத்தி விடுவானோ என்கிற பயத்திலே இருந்ததால் இருவரும் எலியும் பூனையாகவே இருந்தனர்.
இவர்கள் இருவருக்கும் நடுவே மாட்டிக் கொண்டு மீரா தான் படாத பாடுபட்டாள்.
மீரா கிருஷின் வீட்டிற்கு அடிக்கடி செல்வாள்.. சொல்லப்போனால் அவர்களின் ஞாயிற்றுக்கிழமை மீராவினால் தான் துவங்கும் என்ற நிலை வந்தது.
நாட்களும் ஓடியது.. கிருஷும் தனது இளநிலைப் படிப்பை முடித்துவிட்டு முதுகலைப் படிப்பை பகுதிநேரமாக செய்து கொண்டே அலுவலகம் செல்லத் துவங்கினான்..
அதனால் மீராவினைச் சந்திக்கும் நேரம் குறைந்தது. இந்த இடைவேளைக் கூட, அவர்கள் காதலை வலுப்படுத்தும் என எண்ணினான். வாரத்திற்கு ஒரு முறை அலைபேசியில் அழைப்பான்.. வீட்டிற்கு வந்தால் சிறிது நேரம் பேசுவான் அவ்வளவு தான்.
மீராவின் நிலைமைக் கூட கிட்டத்தட்ட அவ்வாறுதான் இருந்தது. அவன் வேண்டுமென்றே தன்னை ஒதுக்குகிறான் என்பதை அறிந்துதான் வைத்திருந்தாள். அவனது ஒதுக்கம் அவளையும் தாக்கத் தான் செய்திருந்தது.. இருந்தும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தாள..்
மீரா மூன்றாம் வருடத்தில் காலடி எடுத்து வைத்தாள்.. இதுவரை அனைத்தும் நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது..
மகேஷின் பிறந்த நாளுக்காக நட்சத்திர விடுதியில் பார்ட்டி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தான் மகேஷ்.. உதயாவையும் மீராவையும் கூட அழைத்திருந்தான். அங்கே ஆரம்பித்தது தான் அனைத்து பிரச்சனையும்..
அங்கே நடந்தது என்ன? கிருஷை எதனால் மீரா அந்த அளவிற்கு வெறுக்கிறாள்? அங்கே சதி செய்தது யார்? என்பதை அடுத்தப் பதிவில் காண்போம்..
அடுத்த பதிவிலிருந்து கடந்த காலத்தை விடுத்து நிகழ்காலத்திற்கு செல்லப் போகிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.. This quick update dedicated to all my wonderful readers.. 😊
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro