முள்ளும் மலரும் 13
மீரா அவனிடம் செல்வதா வேண்டாமா என அரை மனதுடன் யோசித்துக் கொண்டிருக்க அங்கே வந்த உதயை கவனிக்கத் தவறினாள்.
மேகாவும் மீராவை பார்வையால் எரித்து விடுவதைப் போல பார்த்துக் கொண்டிருந்தாள்.
என்ன ஆனாலும் இன்றுடன் ஒரு தீர்வு காண வேண்டும் என எண்ணி துணிந்து படியேறினாள். அவள் முதற்படியில் காலை வைத்ததும்
" அக்கா " என்றழைத்தான் ராம்.
" அக்கா எங்கபோற " என்ற கேள்விக்கு என்ன பதிலளி்ப்பது கிருஷை சந்திக்க என்றால் அவன் தன்னை என்ன நினைப்பானோ எனத் தயங்கினாள்.
அவள் தயக்கத்தைப் பார்த்ததும் " அக்கா நீ போய்ட்டு வந்து என்னனு சொல்லுக்கா..இப்படி நீ என்னைப் பார்த்து பயப்படாத கஷ்டமா இருக்கு.. " என்று சொன்னதும் மீண்டும் தன் தம்பியின் பண்பினைப் பார்த்து பிரமித்துப் போனாள்.
மீரா தனது பின்னால்தான் நிற்கிறாள் என்பதை திரும்பாமலே உணர்ந்த கிருஷ் " சாட்சியும் சந்தர்ப்பமும் எதிரா இருந்தா யாரைப் பத்தி வேணா தப்பா நினைச்சிடுவல்ல மீரா " என்று அவன் சொன்னதும் " சும்மா வளவளன்னு இழுக்காத டக்குனு சொல்லு.. நாங்க சீக்கிரம் வீட்டுக்குப் போகனும் " என்றதும் முகம் சுறுங்கியவன் மீண்டும் பேச ஆரம்பித்தான்.. அவன் சொல்ல சொல்ல பழைய நினைவுகள் அவள் மனதில் கருப்பு வெள்ளைப் படங்களாக தோன்ற தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்தாள்.. அவளை அந்த நிலையில் பார்த்ததும் மனம் கலங்கியவன் அவளக்கு தண்ணீர் தர, அதைப் பருகியவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.
அவன் பதறி அடித்துக் கொண்டு மருத்துவரான தனது அண்ணி கவிதாவை அழைத்து மீராவினை பரிசோதிக்க செய்தான். அதிகப்படியான மன உளைச்சலால் வந்த மயக்கம்தான் என்பதை உறுதிப் படுத்திய கவிதா அவளை தனது அறையில் ஓய்வெடுக்க அழைத்துச் சென்றார்.
இதையனைத்தையும் குடும்பத்தார் அனைவருக்கும் தெரியாமல் இருவரும் பார்த்துக்கொண்டனர்.
ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த மீராவின் அருகில் அமர்ந்தவன் மீராவின் கடந்த காலம் பற்றி எண்ணத் துவங்கினான்.
இனி அவர்களது கடந்த காலத்தை முழுதும் பார்த்துவிட்டு திரும்புவோம்..
செல்வராஜ் ராணி தம்பதியரின் ஒரே செல்ல மகள்தான் மீரா.. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பமென்றாலும் அவளது தேவைகளைப் புரிந்து அவளை மிகவும் செல்லமாக வளர்த்தனர்.
மீராவிற்கு 10 வயது இருக்கும்போதே
வெளியூர் பயணம் சென்ற அவளது தாயும் தந்தையும் சடலங்களாக திரும்பி வந்ததை அவளால் நம்பக் கூட முடியவில்லை.. அவளது முழுப் பொறுப்பும் சித்தி சித்தப்பாவான கணேசன் பானுமதி தம்பதியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவள் அங்கே சென்றபோது ராமும் நிலாவும் 3 வருட கைக்குழந்தைகள். கணேசனும் பானுமதியும் மீராவை தங்களது குழந்தைகளை விட உயர்வாக கவனித்தனர். பெற்றோரை பிரிந்து வாடிய மீராவிற்கு ராம் மற்றும் நிலாவின் மழலை மொழி மிகவும் ஆறுதலாக இருந்தது.
நாட்கள் செல்லச் செல்ல மீரா அவர்களின் குடும்பத்தில் ஒருத்தியானாள்.ராமிற்கும் நிலாவிற்கும் மீரா தனது பெரியப்பா பெண் என்றே தெரியாது.. மீராக் கூட அதை மறந்து விட்டாள். அடம்பிடிப்பது குறும்பு செய்து மாட்டிக் கொள்வது தம்பி தங்கையுடன் சண்டையிடுவது என வயது ஏற ஏற மீராவின் விளையாட்டுத் தனமும் அதிகரித்துக் கொண்டே போனது.. படிப்பிலும் விளையாட்டிலும் படுசுட்டியாக இருப்பதால் அவளை யாரும் எந்தக் குறையும் சொல்வதில்லை..
அவள் விளையாட்டாக இருந்தாலும்
சிறுவயதிலிருந்தே அவளது ஒரே லட்சியம் மாவட்ட ஆட்சியர் ஆவது தான்.. அதற்கு இடையூராக யாராவது அவளை மட்டம் தட்டினால் அதைக் காதில் கூட வாங்க மாட்டாள்.
அதே கனவுடன் தான் கல்லூரி வரை சென்றாள் மீரா.. ஆண்கள் பெண்கள் என்று எந்தப் பாகுபாடு பார்க்காமல் அனைவரிடமும் நட்பு பாராட்டினாள். இருந்தாலும் அவளது ஒரே உயிர்த் தோழன் உதய் மட்டுமே.
அந்த நேரத்தில் தான் கிருஷ் அவளைச் சந்தித்தது..
மீரா கிருஷின் வீட்டிற்கு வந்து சென்ற உடனே அவனை பிடித்துக் கொண்டனர் அவனது குடும்பத்தினர்.
அவன் உண்மையை சொல்லியும் கூட அவனை நம்பவில்லை.. மீராவை தனியாக வீட்டிற்கு அழைத்துவர வேண்டும் என்று அவனுக்கு கட்டளை வேறு பிரப்பிக்கப்பட்டது.
அடுத்தநாள் மீரா கேண்டினில் தனது வகுப்புத் தோழிகளுடன் அமர்ந்திருக்க, அவனும் அருகிலிருந்த நாற்காலியை எடுத்துப் போட்டு மீராவிற்கு எதிராக அமர்ந்தான்.
தன்னிடம் வழியும் பெண்களைக் கூட கண்டுக்காமல் செல்பவன் இன்று தானாக தங்களிடம் வந்து அமர்ந்ததும் மீராவின் தோழிகள் அவனை ஆச்சிரியமாகப் பார்த்தனர்.
மீராவின் தோழி ஒருத்தி அவனிடம் " சீனியர் என்ன வேணும் "என கேட்கவும்
மீரா தன் வீட்டிற்கு வந்ததையும் பாடியதையும் கூறியவன்
" அப்ரோ மீரா நான் சொன்னதைப் பத்தி என்ன முடிவு பண்ணிருக்க" என்று மீராவைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே நேராகவே கேட்டான்.
" நீங்க எதைப் பத்தி பேசறீங்கனு எனக்கு புரியலையே " என்று உதட்டை சுளித்தவளை " என்ன மீரா நேத்து நான் உங்கிட்ட என் காதலைப் பத்தி சொன்னேனே " என்று சொன்னதும் மீராவின் தோழிகள் ஆவென்று வாயைப் பிழந்தனர்.
" சிஸ்டர்ஸ் கொஞ்சம் தனியா பேசனும் " என்று அவர்களிடம் கூறியதும் மூவரும் எழுந்தனர்.
மீரா சிரித்துக் கொண்டே அவர்களை உட்காருமாறு சைகை செய்துவிட்டு
" இப்ப நான் உங்கிட்ட என்ன சொல்லனும்னு நினைக்கிற கிருஷ்.. நானும் உன்னை லவ் பண்றேன் அப்படினா " என்றதும் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதைப் புரியாமல் தவித்தான்.
" ச்சே வெக்கமாயில்ல. எப்படி ஒரு பொண்ணப் பத்தி எதுவும் தெரிஞ்சுக்காம இப்படிலாம் உங்கனால நடந்துக்க முடியுது.. நீங்க பண்றக்கு பேரு ஹீரோயிசம்னு நினைக்கிறீங்களா.. கண்டிப்பாயில்ல.. இப்படி எல்லார் முன்னாடியும் உங்க காதல சொல்ல தெரிஞ்ச உங்கனால அடுத்து அந்தப் பொண்ணுக்கு எவ்ளோ பிரச்சனை வரும்னு தெரியலையா. படிக்கிற வயசுல அதைத் தவிர எல்லாம் செஞ்சிட்டு அப்ரோ உங்க கம்பெனிய பார்த்துக்க போயிடுவீங்க. ஆனா அதுக்கடுத்து நாங்க எங்க லட்சியம் கனவு எல்லாத்தையும் இழந்துட்டு நிற்கனுமா..என்ன?
மரியாதையா போயிடு.. அப்ரோ என்ன நடக்கும்னு எனக்கேத் தெரியாது.. " என்று சிரித்துக் கொண்டே கூறினாள்.
அவனிடம் அளவுக்கதிகமாக பேசிவிட்டோம் என்பதை உணர்ந்தும் எதையும் முளையிலேக் கிள்ளிவிட்டால் நல்லது என எண்ணி அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள். ஆனால் அவசரத்தில் கிருஷின் முகபாவனையைப் பார்க்க மறந்து விட்டாள்.
அமைதி அனைத்து இடங்களிலும் நன்மையைக் கொடுக்குமோ?
கிருஷின் அடுத்த நடவடிக்கை என்ன ?
மீராவின் மனம் மாறுமோ?
என்பதை அடுத்த அத்தியாத்தில் காண்போம்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro