முள்ளும் மலரும் 10
ராமின் கேள்வியால் மனமுடைந்தவள் " அவன் பண்ண தப்புக்கு அவுங்கள அவமானப் படுத்த சொல்றியாடா.. நம்ப அம்மா அப்பா நம்பள அப்படி வளர்த்துலயேடா.. " என்றாள்
" ஆனா அவங்க அந்த கிருஷ மாமானு சொன்னாங்களே. அப்போ ஏன் அமைதியா இருந்த " என்று கேட்கவும்,
"அது அவங்களோட ஆசை.. ஆனா என் மனசில அப்படியொரு எண்ணம் இல்லவே இல்ல.. அது உனக்கும் தெரியும்.. ஆனா நீ என்ன சந்தேகமா பார்க்குறது ரொம்ப கஷ்டமா இருக்குடா " என்றாள் தேநீர் வைத்தபடி,
" அப்படிலாம் இல்லக்கா.. என் அக்கா எப்பவும் தப்பு பண்ண மாட்டா " என்று அவன்கூறும் போதே கீதா வந்துவிட, இருவரும் அமைதியாகினர்.
சிறிது நேரத்திற்கு பிறகு, " மீரா இங்க நாங்க வந்ததே உன்னைப் பார்த்துட்டு வர கிருஷ்ண ஜெயந்திக்கு கூப்பிடலாமனு தான் .. மறக்காம தம்பி தங்கையோட வந்திடுமா " என்றார்..
" ஆன்டி நாங்க வரமுடியாது " என்று மீரா சொன்னதும் முகம்வாடிப் போனது கீதாவிற்கு..
" என்னம்மா கண்டிப்பா நீ வந்துதான் ஆகனும்.. அவனுக்காக பார்க்காத.. அங்க உனக்காக ஒரு குடும்பம் எப்போதும் இருக்கும்.. உன் தம்பி தங்கைக்கும் சொந்த பந்தங்களோட அரவணைப்பு கிடைச்ச மாறி இருக்கும்.. நீ வந்த அந்த மூணு வருசமும் எவ்ளோ சந்தோசமா இருந்துச்சு தெரியுமா.. என் அப்பாவும் உன் பாட்டுக்காக எவ்ளோ ஏங்கறாரு தெரியுமா.. வாடா அந்த வயசானவங்களுக்காவாது.. " என்றார் ராஜன் கவலையோடு..
அவளுக்குமே அவர்களை பார்க்க வேண்டும் என்று ஆசைதான்.. ஆனால் அவளது தன்மானம் அவளைத் தடுத்தது.. " ஆன்டி அங்க டான்ஸ்லா ஆடுவாங்க தான.. குட்டிப் பசங்களா நிறையா இருப்பாங்க தான " என்று ஆவலாக கேட்டுக் கொண்டிருந்த நிலாவினைப் பார்த்தவள் அவர் கூறியது போல ஒரு மாற்றம் தேவை என்பதை உணர்ந்து சரி என்றாள்.
" ரொம்ப சந்தோசம்மா.. இதுல டிரெஸ் இருக்கு.. நீங்க மூனு பேரும் வரப்ப இதத்தான் போட்டு வரணும்.. அதான் எங்களுக்கு சந்தோசத்த கொடுக்கும் " என்று பைகளை மேசையின்மீது எடுத்து வைத்தார் கீதா.. எங்கே அவள் கைகளில் கொடுத்தாள் வாங்க மறுத்துவிடுவாளோ என்று..
அவர்கள் சென்றதும் யோசனையாக இருந்த மீராவிடம் " மீரா அந்த ஆன்டி கியூட்டா பேசறாங்கள " என்றாள் நிலா..
அதுஎதுவும் காதில் விழாமல் தனது கடந்த காலத்திற்குச் சென்றாள் மீரா
5 வருடங்களுக்கு முன்பு,
கல்லூரிக்கு வந்து 6 மாதங்கள் ஆகியும் வீட்டிற்குச் செல்லாமல் விடுதியில் இருந்த மீராவை அவளது அன்னை கோவிலுக்கு செல்லச் சொன்னதால் வேண்டாவெறுப்புடன் அருகிலிருந்த அம்மன் கோவிலுக்கு சென்றபோதுதான் கிருஷின் பாட்டியை சந்தித்தாள் மீரா..பெண்களை துதிப்பாட்டு பாடச் சொல்ல ,சிலர் பாடத் தொடங்கினர். அங்கே மீராவின் பாட்டைக் கேட்டு மெய்மறந்து போனவர் அவளிடம் நட்புபாராட்டி அவளை தனது வீட்டு கிருஷ்ண பூஜைக்கு பாட அழைத்தார்..
அங்கே சென்றதும்தான் தெரிந்தது கிருஷ் வீடு என்று.
மீரா கிருஷிடம் இதுவரை ஒரு வார்த்தை பேசியதில்லை. ஆனால் காலேஜ் ஸ்டூடண்ட் சேர்மன் என்ற வகையில் தெரியும்..அவ்வளவுதான்..
மீரா அங்கே கிருஷ்ணன் ராதை வேடமிட்டு ஆடிக் கொண்டிருந்த குழந்தைகளின் ஆட்டத்தினை ரசித்துக் கொண்டிருக்க, அவளை ரசித்தவாரே அவளருகே வந்து நின்றான் கிருஷ்..
அவனைப் பார்த்ததும் கேவலமான சிரிப்பை உதிர்த்தவளிடம் " நீ எங்க காலேஜ் தான.. உம் பேரு என்ன " என்ற கேள்விக்கு முறைப்பை பரிசாக அளித்தாள்.
சொதப்பாத கிருஷ் எனத் தனக்குள் சொல்லிக் கொண்டவன் " சாரி உன் பேரு மீரா.. எனக்கு ஞாபகம் வந்திடுச்சு.. என் பேர் உனக்குத் தெரியுமா.. கிருஷ்ணா. நீ செல்லமா கிருஷ்னு சொன்னா போதும் " என்றான் அழகாக புன்னகைத்துக் கொண்டு..
அவள் அதற்கும் அமைதியாக இருக்க
அவனே பேச ஆரம்பித்தான்.. " நீ எங்க வீட்டுக்கு வருவனு தெரியும்.. ஆனா இவ்ளோ சீக்கிரமா நடக்கும்னு தெரியல.. அதும் இன்னைக்கு என்னோட டே.. அதான் கிருஷ்ண ஜெயந்தி..மீரா ரொம்ப ஹேப்பியா இருக்கு " என்றான் கிருஷ்
அவன் பேசியதின் உள்ளர்த்தம் புரிந்தவள் " ரொம்ப சந்தோசப்பட்டுக்கோங்க கிருஷ். ஏன்னா அது ரொம்ப நாள் நிலைக்கப் போறது இல்ல " என்றாள் அவளும் சிரித்துக் கொண்டே
" இப்போலாம் கிருஷ்ணனுக்காக எந்த மீராவும் காத்திருக்கிறது இல்ல " என்றாள் கூடுதல் தகவலாக,
"அதே தான் மீரா நானும் சொல்றேன். இப்போலாம் கிருஷ்ணனே மீராவ தூக்கிட்டுப் போயிடராங்க " என்றான் அதற்கு பதிலாக,
" அதே கிருஷ்ணனுக்குத் தான் ராதையும் ஆயிரம் கோபியர்களும் இருக்காங்களே இன்னும் பத்தலியா " என்றாள் நக்கலாக,
" அந்தக் கிருஷ்ணனுக்கு வேணா அவ்ளோ இருக்கலாம்.. எனக்கு நீ மட்டும் தான் " என்றான் உறுதியாக.
அவன் கண்களில் அவனது காதல் அப்பட்டமாக தெரிந்தது..
அவர்களது முதல் உரையாடலிலே காதலை சொல்லுவான் என்பதை எதிர்பார்க்காதவள் ஊமையாகிப் போனாள்.
அங்கே இருவரும் சந்தோசமாக பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த உடனேயே மீராவினைப் பிடித்துவிட்டது கீதாவிற்கு..
அவளை அருகே அழைத்து தன்னருகே அமர்த்திக் கொண்டார்.. பின்பு பூஜை ஆரம்பிக்க அவளுடன் இரண்டு தாய்மார்களும் பாட ஆரம்பித்தனர். அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷை அவனது மொத்தக் குடும்பமும் கண்டுகொண்டது.. ஆனால் அது மீராவிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது..அந்த இடத்தை விட்டு விட்டால் போதுமென்று தப்பித்து வந்தவள் நாளை அவனைக் கல்லூரியில் சந்திப்போம் என்பதை மறந்திருந்தாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro