♦️9♦️
இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.
______________________________________
உங்கள் முகத்தை பார்க்காமல் தூங்க முடியவில்லை என்று ரித்திகா மிகவும் இயல்பாக பரத்திடம் கூறிச் செல்ல, சில நிமிடங்களுக்கு அசைவற்று நின்று விட்டான் அவன்.
சொல்லொண்ணா உணர்வு இதயத்தை சிலீரென்று தாக்க, அவள் கூறிய வார்த்தைகள் செவியில் திரும்ப திரும்ப எதிரொலித்து அவன் மனதை சிலிர்க்கச் செய்தது.
முகம் மென்மையுற கனவில் மிதக்கும் விழிகளுடன் ஜன்னலை சாற்றி மெத்தையில் விழுந்தவனுக்கு ஏதேதோ நினைவில் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது.
இதுவரை இது போன்ற உணர்வை அனுபவித்து இராதவனுக்கு தன் மீது அவள் காட்டும் அக்கறையும், நீ ஒதுங்கி இருந்தாலும் நான் உன்னை துரத்தி வந்து பிடிப்பேன் என்று தானாக உரிமை பாராட்டும் நடவடிக்கைகளும் அவனை அவள் பால் கவர்ந்திழுத்தது.
வாழ்க்கையில் தோற்றுப் போனவன் தானே என்று அலட்சியப்படுத்தி விலகிச் செல்லாமல் துடிப்புடன் தன்னை நெருங்கி வருபவளை ரசித்தான். இத்தனை ஆண்டுகளாக அனைவரின் நெருக்கத்தையும் தவிர்த்து தனிமையை விரும்பி ஏற்றவன் தற்பொழுது அவள் அருகாமையை நேசித்து பழைய துள்ளலுடன் வெடித்து வெளிவர விரும்பினான்.
ரித்துவுடனான சந்திப்புகளை தனக்குள் அலசியவனுக்கு தன்னுடைய உதாசீனத்தையும் மீறி அவள் தன்னிடம் நட்பு பாராட்டி வெகு நாட்கள் பழகியவள் போல படுஇயல்பாக தன்னை முறைப்பதும், கேள்வி கேட்பதும், அவளிஷ்டத்திற்கு அவனை வளைக்க முயல்வதும், சண்டைப் போடுவதும், அசடு வழிவதும் என ஒவ்வொன்றும் விழிகளில் உலாப் போனது. எவ்வித எதிர்ப்பும் இன்றி அவளின் நட்பை இவன் மனம் ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டது என்பது தெளிவாக புரிந்தது.
பல நாட்களுக்கு பிறகு மனதில் தோன்றிவிட்ட உவகையோடு இரவெல்லாம் உறக்கமின்றி உருண்டவன் விடியும் நேரம் வேறுவழியின்றி எழுந்து கம்பெனிக்கு தயாராகினான்.
வீட்டின் கதவை பூட்டி விட்டு படியிறங்கியவனின் காதுகளில், "குட்மார்னிங்..." என்கிற குரல் பெரும் துடிப்புடன் காற்றலையில் வந்து மோத படக்கென்று பக்கத்து வீட்டை ஆவலுடன் திரும்பி பார்த்தான் பரத்.
உற்சாகமே வடிவாக பளிச்சென்று மலர்ந்த முகத்துடன் தன்னெதிரே நின்றிருந்தவளை கண்டு இவனுக்குள்ளும் பரவசம் ஊற்றெடுக்க பளீரென்று தன் வழக்கமான புன்னகையை சிந்தினான் அவன்.
"குட்மார்னிங்!" என்ற குரலிலும் துள்ளலுக்கு சற்றும் குறைவில்லை.
"வாவ்..." என வியந்தவள், ம்... என்று விஷமத்துடன் தலையாட்டி, "ஆர் பரத் ஈஸ் பேக்!" என கண்சிமிட்டினாள்.
சட்டென்று புன்னகை உறைய நெற்றி சுருக்கியவன் பைக்கின் அருகில் வந்து சாவியை நுழைத்தபடி, "எஸ்... இட்ஸ் ஒன்லி பை ஹிஸ் நேட்சர் நாட் எனிதிங் எல்ஸ்!" என அவளிடம் ஒரு கூர்ப்பார்வையை வீசிவிட்டு வண்டியில் அமர்ந்து கிக்கரை உதைத்தான்.
ம்... என்று ரித்து புருவம் சுருக்க, "உன் எண்ணம் என்றும் ஈடேறாது!" என்ற வசீகரமான முறுவலிப்போடு கிளம்பி சென்றான் பரத்.
பான்ட் பாக்கெட்டில் கைவிட்டபடி அவன் சென்ற திசையை பார்த்து நின்றவளின் இதழ்களில் மெல்லிய புன்னகை அரும்பியது.
'அதையும் பார்த்து விடலாம் செல்லம்... இத்தனை நாட்களாக தனிமை சிறையில் கூட்டுக்குள் அடைப்பட்டுக் கொண்டவன் இப்பொழுது தானே கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறாய். நீ வருகிற வரை வா, மீதியை நான் வரவழைக்கிறேன்!' என்று தனக்குள் அவனிடம் சவால் விடுத்தாள் ரித்திகா.
- part to be continued on www.deepababuforum.com
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro