♦️5♦️
இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.
______________________________________
இரவு உணவு உண்ணும் வேளையில் வீட்டிற்கு வெளியே பைக்கை உதைத்து கிளப்புகின்ற ஓசை கேட்கவும் அது பரத்தாக இருக்குமோ, கம்பெனிக்கு கிளம்புகிறானா என வாயில் இருந்த உணவோடு எண்ணத்திலும் அசைப்போட்டாள் ரித்திகா.
இதை பேச்சுவாக்கில் கூட தாத்தாவிடம் கேட்க முடியாது இங்கிருக்கும் கலாச்சாரம் அப்படி. இதுவே நான் ஒரு ஆணாக இருந்திருந்தால் இந்தளவிற்கு எல்லாம் தயங்க தேவையில்லாமல் அவன் பின்னோடு மாலையே அவனுடைய வீட்டிற்கு சென்றிருப்பேன் என பெருமூச்சு விட்டாள்.
"என்னம்மா இது சாப்பிடாமல் இப்படி உணவை அளைந்துக் கொண்டிருக்கிறாய்?" என்று வினவினார் சிவலிங்கம்.
"ப்ச்... பசிக்கவில்லை தத்து, ஈவ்னிங் சாப்பிட்ட டிபனே அப்படியே வயிற்றில் டொம்மென்று இருக்கிறது!" என்று எழுந்துக் கொண்டாள்.
"ஏய்... கொஞ்சமாவது சாப்பிடலாம் அல்லவா?"
"பாதி சாப்பிட்டு விட்டேன்!" என கிச்சனுள் சென்று மறைந்தாள்.
பெரியவர் நெற்றியை சுருக்கியபடி யோசனையில் ஆழ்ந்தார்.
எதிரே வந்த பேத்தியின் முகத்தை கூர்ந்து பார்த்தபடி, "எதுவும் பிரச்சினையா குட்டிம்மா? நீ காலையில் அருவியில் இருந்து திரும்பி வந்ததிலிருந்தே உன் முகமே சரியில்லையே... மனதில் எதைப் போட்டு அப்படி உளப்பிக் கொண்டிருக்கிறாய்?" என்று விசாரித்தார்.
'ஆஹா... தத்து... சரி ஷார்ப்பாக இருக்கிறாரே, இனி கவனமாக இருக்க வேண்டும்!' என உள்ளுக்குள் நேர்ந்த திடுக்கிடலை மறைத்து வெளியில் சிரித்து வைத்தாள் பேத்தி.
"அப்படியா தெரிகிறது? அதெல்லாம் எதுவுமில்லை நான் சாதாரணமாக தான் இருக்கிறேன்!" என்று அவர் அருகில் அமர்ந்தாள்.
"உண்மையாக தான் சொல்கிறாயா?"
"ஆமாம் தத்து... இந்த வயதான காலத்தில் ரொம்பவும் பொறுப்பை தூக்கி தலையில் வைத்துக் கொள்ளாதீர்கள். ஐ ஆம் பர்பெக்ட்லி ஆல்ரைட், ஓகே?" என அழகாக முறுவலித்தாள்.
அதில் லேசாக சமாதானம் அடைந்தவர், "சரி அப்படியே ஏதாவது என்றாலும் அம்மாவிடமாவது மனதில் இருப்பதை பகிர்ந்துக் கொள். உனக்கு கொஞ்சம் தெளிவு கிடைக்கும்!" என்று அறிவுரை வழங்கினார்.
"சரிங்க தலைவரே... அப்படியே செய்து விடுகிறேன்!" என்று கண்சிமிட்டியவளை கண்டு நிறைவாய் புன்னகைத்தார்.
படுக்கையில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவளுக்கு எண்ணம் முழுவதும் பரத்தே நிறைந்திருந்தான்.
அவனை அப்படியே விட்டுவிடவும் மனம் வரவில்லை அவளுக்கு. அவன் மனதில் என்ன திட்டமிட்டிருக்கிறான் என்றும் ஒன்றும் புரியவில்லை. இத்தனை வருடங்களில் அவன் ஏன் ஒருமுறை கூட தன் துறைக்கு திரும்ப ஆர்வம் காட்டாமல் இருக்கிறான்? எதிர்காலத்திலாவது உள்ளே நுழையும் எண்ணமிருக்கிறதா அல்லது இப்படியே இருந்து விட தீர்மானித்து விட்டானா? நோ... அதற்கு நான் விட மாட்டேன், அவனுடைய திறமையும், ஆற்றலும் அப்படியே மங்கிப் புதைந்து போக விடக்கூடாது. அவன் என்மீது எவ்வளவு ஆத்திரம் கொண்டாலும் சரி, அவனை மீண்டும் பழைய நிலைக்கு இழுத்து வர வேண்டும்.
'ஒரு ரசிகன் என்பவன் தன் தலைவனின் வெற்றியை மட்டும் ஆர்ப்பரித்து கொண்டாடுபவனாக இருக்க கூடாது. அவன் தோல்வியை கண்டு துவளும் நேரம் தோள்கொடுத்து பழைய வெற்றிப்பாதைக்கு மீட்பவனாகவும் இருக்க வேண்டும். அவனே உண்மையான ரசிகன்!'
ஆம்... அதுதான் சரி, இனி அவனிடம் நேருக்கு நேர் பேச வழி தேட வேண்டும்.
- part to be continued on www.deepababuforum.com
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro