♦️34♦️
இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.
______________________________________
சுவாஹனாவின் பார்வையில் பதில் தேடி தவித்த ரித்திகா, "அது... வந்து... எனக்கு அப்படி பிரித்துப் பார்க்க தெரியவில்லைக்கா!" என்று தடுமாறினாள்.
அவளின் முகத்தையே ஆழ்ந்து கவனித்திருந்த பரத், "விடுங்கள் சிஸ்டர்... எடுத்தவுடனேயே ரொம்பவும் அவளை டென்ஷன் பண்ண வேண்டாம். அப்புறம் இயல்பாக பேசுவதை கூட விட்டு விட்டு ஓடி ஒளிந்து கொள்ளப் போகிறாள்!" என்று சீண்டலாய் கேலி செய்தான்.
சட்டென்று அவனிடம் விழிகளை உயர்த்தி பார்வையாலே வெட்டியவள், "நான் ஒன்றும் டீனேஜர் கிடையாது, நீங்கள் காதலிக்கிறேன் என்று சொன்னதும் உங்களை பார்த்து பதறி ஒதுங்கி ஓடுவதற்கு!" என இகழ்ச்சியாக உதட்டை வளைத்தாள்.
"தென் ஓகே... அதை விடு. இப்பொழுது ராகவன் அண்ணாவை சந்திக்க வேண்டிய பிரச்சினைக்கு வா. ஏன் தான் இப்படி என் பேச்சை கேட்காமல் எல்லோரிடமும் என்னை மாட்டிவிட்டு விட்டு வேடிக்கைப் பார்க்கிறாயோ தெரியவில்லை!" என்று வழக்கம் போல அலுத்துக் கொண்டான் பரத்.
மாலையில் ராகவனை நேரில் சந்திக்கும் வரை ஒருவித பதற்றமாகவே இருந்தான் அவன். தவறு தன்னுடையது எனும்பொழுது அவனுக்கு பெரும் தலைக்குனிவாக இருந்தது. இத்தனை வருடங்களாக ஒதுங்கி இருந்து விட்டு தன் சுயலாபத்திற்காக அவரை சந்திக்க அவனுக்கு சுத்தமாக விருப்பமேயில்லை.
பரத், ரித்திகா, சுவாஹனா மூவரும் சாய்கிருஷ்ஷின் காரிலேயே ராகவனின் வீட்டை அடைந்தனர்.
அனைவரையும் ஆவலுடன் சிரித்த முகமாக வரவேற்றவன், பரத்திடம் மட்டும் வாங்க சார் என்றதோடு முகத்தை திருப்பிக் கொண்டான்.
அதில் லேசாக முகம் வாடியவனின் கரம்பற்றி ஆதரவாக அழுத்தினாள் ரித்து. அதையெல்லாம் ராகவனின் விழிகள் கண்காணித்துக் கொண்டிருக்க, அவன் மனைவி சரண்யா அனைவருக்கும் தேநீர் வழங்கினாள்.
சின்னத் தயக்கத்திற்கு பின் அவளிடம் மட்டும் அண்ணி என்று விளித்து குழந்தைகளின் நலம் விசாரித்தான் பரத். அவள் எந்த ஒதுக்கமும் இன்றி எப்பொழுதும் போல் அவனிடம் இயல்பாக உரையாட இவன் மனதில் நிம்மதிப் பூத்தது.
தன் பக்கம் யதேச்சையாகப் பார்வையை திருப்பியவனை பார்த்து ராகவன் முறைத்து வைக்க, வேகமாக இமைகளை தாழ்த்திக் கொண்டவனின் முகம் வாடுவதைக் கண்டு இவன் இதழ்களில் மெல்ல முறுவல் பூத்தது.
அவர்கள் தேநீர் அருந்தி முடிக்கும் வரை மற்றவரிடம் பொதுவாக பேசி இருந்துவிட்டு பட்டென்று எழுந்த ராகவன் பரத்திடம், வா என்ற ஒற்றை சொல்லுடன் உள்நோக்கி நடந்தான்.
வரவேற்பறையில் அமர்ந்திருந்தவர்களின் கண் பார்வையில் இருந்து மறைந்ததும் வேகமாக அவன் கரம்பற்றி இழுத்துக் கொண்டு நடந்தவன் அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டதும் அவனை தீர்க்கமாகப் பார்த்தான்.
தன்னை நேருக்கு நேர் பார்க்க இயலாமல் உணர்ச்சிக் குவியலாக தடுமாறிய பரத்தை நெருங்கிய ராகவன் வாய்சொல் ஏதுமின்றி சட்டென்று அவனை ஆதரவாக அணைத்துக் கொண்டான்.
அவனுடைய அன்பில் விழிகள் நீரைப் பிரசவிக்க, சாரிண்ணா என்று முணுமுணுத்தவனை சமாதானப்படுத்தி அங்கிருந்த சோபாவில் அமர வைத்தவன் அவனைப் பற்றி ரித்திகா அனுப்பியிருந்த தகவல்களை விசாரித்தறிந்துக் கொண்டான்.
பிறகே அவன் கேரியரில் ஏற்பட்ட பிரச்சினையின் மையப்புள்ளிக்கு வந்த ராகவன் அவனிடம் அன்று நடந்த விசாரணைப் பற்றி ஒன்றுவிடாமல் விவரமாக கேட்டறிந்தான். பரத் சொல்லச் சொல்ல அனைத்தையும் தனக்குள் உள்வாங்கி ஆலோசித்துக் கொண்டே தனக்கு தோன்றிய சந்தேகங்களையும் அவனிடம் கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்டவன் சற்று நேரம் அமைதியாக இருந்தான்.
"என்ன அண்ணா இதில் எதையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை தானே... அவ்வளவு தான் விட்டு விடுங்கள். ஏன் மீண்டும் மீண்டும் முடிந்துப் போனதையே கிளறிக் கொண்டு வேதனையை இழுத்துக் கொள்ள வேண்டும்? அவள் தான் அடங்க மாட்டேன் என்கிறாள்!" என்றான் சின்னச் சலிப்போடு.
"யார் ரித்திகாவா?" என்றான் ராகவன் மெல்லிய நகையுடன்.
"ஆமாம்..." என இயல்பாக மொழிந்தவன் எதிரில் இருப்பவனின் குரல் பேதத்தை உணர்ந்து பட்டென்று அவனிடம் விழிகளை உயர்த்த, "என்னடா லவ்வா?" என்று கண்சிமிட்டினான் அவன்.
அவனையும் மீறி முகத்தில் லேசான வெட்கச் சிவப்பு படர ஆமோதிப்பாக தலையசைத்தவன், அவளுக்கும் தனக்கும் ஏற்பட்ட பந்தத்தை விளக்கினான்.
- part to be continued on www.deepababuforum.com
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro