♦️31♦️
இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.
______________________________________
எம். ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானம், சென்னை.
பரத் சீனிவாசன், உச்சக்கட்ட பதற்றத்தோடு பெவிலியனில் அமர்ந்திருந்தான்.
அன்று நடைப்பெற்றுக் கொண்டிருந்த ஐ.பி.எல் தொடரில் அவனுடைய சென்னை அணி மும்பைக்கு எதிராக பேட்டிங் செய்துக் கொண்டிருந்தது.
தற்பொழுதைய நிலவரப்படி எட்டு ஓவரில் இரண்டு விக்கெட்கள் இழப்பிற்கு நாற்பத்தைந்து ரன்களை அணி எடுத்திருந்தது.
இவன் ஐந்தாம் வரிசை ஆட்டக்காரனாக களம் காண வேண்டும். கடந்த மூன்று மாதங்களாக தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டு இருந்தாலும் நீண்ட நெடிய நான்கு வருடங்கள் கழித்து களம் காண்பதால் உள்ளூர எழும் சிறு படபடப்பை அவனால் கட்டுப்படுத்தவே இயலவில்லை.
உள்ளிருந்த அழுத்தத்தை வேகமான பெருமூச்சொன்றால் வெளியேற்ற முயன்றவனின் விழிகள் மெல்ல அவன் பார்வை வட்டத்தில் சற்று தள்ளி பார்வையாளர்கள் இடத்தில் அமர்ந்திருந்த தன் குடும்பத்தினரிடம் சென்றது.
அப்பா, அம்மா, ஆர்த்தி, கிஷோர் இவர்களுடன் சிவலிங்கம், ரித்திகா, சாய்கிருஷ், சுவாஹனா, வைதேகி, தேவா என ஒரு கூட்டமே அவனுடைய ஆட்டத்தை காணவும் அவனை உற்சாகப்படுத்தவும் என அணி திரண்டு வந்து அமர்ந்திருந்தது.
அதைக்காணும் பொழுதே நெஞ்சில் புதிய உரம் பிறக்க, ரித்திகாவின் விழிகள் அவனையே அளவெடுத்துக் கொண்டிருந்ததை கவனித்தான் பரத். மற்றவரின் கவனம் மைதானத்தில் இருக்க, அவள் தன்னை பார்க்கவும் மெல்ல முறுவலை வெளிப்படுத்தினான்.
பதிலுக்கு நம் அம்மணியோ அவனை உறுத்து விழித்து ஆட்காட்டி விரலை ஆட்டி பத்திரம் என எச்சரித்தாள். இவன் புரியாமல் புருவம் சுருக்கவும், தனது வலது கட்டை விரலால் நெற்றியின் குறுக்காக கோடு இழுத்து இதெல்லாம் என்ன என்பது போல் சைகையில் கேள்வி எழுப்பினாள்.
தன் பதற்றத்தை தான் அவள் குறிப்பிடுகிறாள் என்பதை உணர்ந்தவன் மறுப்பாக தலையசைக்க, இரண்டு உள்ளங்கைகளையும் விரித்து படிப்பது போன்ற பாவனையை வெளிப்படுத்தி வலதுகை விரல்கள் அனைத்தையும் ஒன்றாக மூடி கையை மடக்கி இதயத்தில் வைத்து விழிகளை மூடியவள் எதையோ முணுமுணுத்து விட்டு அவனுக்கு சமிக்ஞை செய்தாள்.
அவளின் மொழியை புரிந்தவனும் ஆமோதிப்பாக தலையசைத்து விட்டு மைதானத்தின் புறம் பார்வையை திருப்பினாலும் அவனின் மனமும், எண்ணமும் அவள் தனக்கு ஆரம்பத்தில் அனுப்பி வைத்திருந்த குறுந்தகவல்களின் வரிகளை மெதுவாக உருப்போட ஆரம்பித்தன.
- part to be continued on www.deepababuforum.com
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro