♦️25♦️
இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.
______________________________________
"ஆர்த்தி..." என தயக்கத்துடன் அழைக்கும் தமையனிடம் பார்வையை திருப்பியவள், "என்னடா?" என்றாள் ஆதரவாக.
மதிய உணவை முடித்துவிட்டு நால்வரும் கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். காலையில் மங்களமும் அவனுடைய இத்தனை ஆண்டுகால தனிமை வாழ்க்கை குறித்து வருந்திப் பேசிச் சென்றதில் அவளுக்குமே அவனை நினைத்து வேதனை தான் எழுந்தது.
"இல்லை... நீ இன்று ஒரு நாள் மட்டும் தான் விடுமுறை எடுத்தாயா? இரவே கிளம்பியாக வேண்டுமோ!"
"ஆமாம்டா... ரித்திகாவிடம் பேசி முடித்ததுமே உடனே உன்னை பார்க்க வேண்டுமென்று விடுமுறைக்கும் சொல்லிவிட்டு டிக்கெட்ஸ்ஸும் புக் செய்து விட்டேன்!"
"ஓ..."
அவன் முகம் தெளிவில்லாமல் இருப்பதை கவனித்தவள், "என்னடா? ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்? நான் வேண்டுமானால் இன்னும் இரண்டு நாட்களுக்கு விடுமுறையை நீட்டிக்கவா?" என்று பரத்தின் கரத்தை அழுத்தினாள்.
"அது... நாம் நம் வீட்டிற்குப் போகலாமா? நீ என்னோடு வருகிறாயா?" என்றான் வேகமாக.
அவன் விழிகளில் வழியும் ஏக்கத்தையும், தடுமாற்றத்தையும் கவனித்தவள், "சரி போகலாம், நான் கோயம்புத்தூர் டிக்கெட்டை கேன்சல் செய்து விட்டு நமக்கு சேலத்திற்கு புக் செய்கிறேன்!" என்று முறுவலித்துவிட்டு அலைபேசியை கையில் எடுக்க அதை தடுத்தவன் தான் கார் கொண்டு வருவதாக கூறினான்.
"என் காரை இங்கே ஒரு கால் டாக்ஸி கம்பெனியோடு தான் அட்டாச் செய்திருக்கிறேன். அதை எடுத்துக் கொள்ளலாம், நான் பேசிவிட்டு வருகிறேன்!" என்று வெளியேறினான் பரத்.
அவன் சென்றிருந்த திசையை பார்த்திருந்த ஆர்த்தியிடம் பேச்சை துவக்கினாள் ரித்து.
"இப்பொழுது தான் உங்கள் அண்ணா முகத்தில் ஒரு தனி ஒளியே தெரிகிறது!" என்றாள் கேலியாக.
"நாங்கள் இவனுக்கு மிகப்பெரிய அநியாயத்தை செய்து விட்டோம்!" என்றாள் அவள் வேதனையுடன்.
"இல்லை... உங்கள் அண்ணனும் கொஞ்சம் கோபத்தை குறைத்துக் கொண்டு இருந்திருக்கலாம். சரி விடுங்கள்... இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்றிருந்து அதற்கு நீங்கள் காரணகர்த்தாவாக ஆகிவிட்டீர்கள்!"
- part to be continued on www.deepababuforum.com
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro