♦️19♦️
இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.
______________________________________
"பட்டயப்படிப்பு முடியும் தருவாயில் இறுதி பரீட்சையில் அரியர் விழுந்ததால் மிகவும் சினம் கொண்ட அப்பா, என்னை பேசாத வார்த்தையில்லை. ஏன்டா விளையாட்டை வைத்து வேலை வாங்கி விடுவேன் என்றெல்லாம் பெரிய இவனாட்டம் என்னிடம் கதை அளந்தாயே, இப்பொழுது எப்படி? சரியாகப் படிக்காமல் கிரிக்கெட் விளையாடி பரிட்சையில் தோற்றுப் போனால் கூட ஏதாவது தனிப்பட்ட பிரிவில் வேலை ஒதுக்கி தருவார்கள் என்று எதுவும் அடுத்து கதை விடப்போகிறாயா? உன்னை பார்க்க பார்க்க கோபம் தான்டா வருகிறது. எப்படியோ போய் தொலை, என்னவோ செய்துக் கொள் இனி உன்னிடம் எதையும் நான் சொல்வதாக இல்லை. உன் வாழ்க்கை, உன் பிரச்சினை... நன்றாகப் படித்து நல்ல வேலையில் அமர்ந்தாய் என்றால் உனக்கு கௌரவம், இல்லையென்றால் கிடைக்கும் ஏதாவது சாதாரண வேலையில் அமர்ந்து மேலிருப்பவனுக்கு கும்பிடு போட்டுக் கொண்டே காலத்தை ஓட்டு என கண்டபடி பேசி என் மனதை மிகவும் துவண்டுப் போக செய்து விட்டார். சற்றும் எதிர்பாராத விதமாக பாடத்தில் தோற்றுப் போனதே எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி என்றால் இவர் வேறு தொணதொணவென்று பார்க்கும் நேரமெல்லாம் கடுகடுவென்று முகத்தை காண்பிக்கவும் எனக்கும் சற்றே எரிச்சல் கிளம்பியது. இருந்தும் அதை அவரிடம் காட்டாமல் என் உணர்வுகளை கட்டுப்படுத்தி, அவரின் வார்த்தைகள் என்னுள் கிளப்பிய வைராக்கியத்தால் சில முடிவுகளை அதிரடியாக எடுத்தேன். எந்த விளையாட்டை கேவலமாக நினைத்து எந்நேரமும் என்னை கரித்துக் கொட்டுகிறாரே அதை வைத்தே என் வாழ்வில் நான் தொட முடியாத உயரம் என அவர் விமர்சித்த உயரத்தை தொட்டுவிட வேண்டும் என்கிற வெறி என்னுள் அதிகமாக எழுந்தது. அதற்காக மீண்டும் தீவிரப் பயிற்சிகள் மேற்கொண்டு ஒரு வாய்ப்பை கூட விடாமல் எங்கள் கிளப் அணி சார்பில் வெளியூரில் நடக்கும் அத்தனை போட்டிகளிலும் கலந்துக் கொண்டேன். அவ்வாறு விளையாட செல்லும் நேரம் பயண செலவிற்கு என ஒற்றை பைசா தரமாட்டேன் நீ எப்படி விளையாடப் போகிறாய் என நானும் பார்க்கிறேன் என்று தனக்கு கிடைத்த வாய்ப்பாக எண்ணி என்னை தடுக்க முயன்றார். எப்பொழுது என் பேச்சை கேட்காமல் படிப்பை விட்டு விளையாட்டை தேடிப் போனாயோ இனி என்னிடம் பணம் எதையும் எதிர்ப்பார்க்காதே, உன் விளையாட்டின் மூலமாகவே பயண செலவிற்கு தேவையானதையும் சம்பாதித்துக் கொள் என்று ஏளனமாகவும் பேசினார். அதைமீறி அவரிடம் கெஞ்ச அந்த வயதிலேயே என் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அந்நேரத்தில் செய்வதறியாது வழி தேடி தவித்து நின்றப்பொழுது தான் என் அம்மா வழி பாட்டியின் ஞாபகம் வந்தது. அவர்களுடைய அன்பாலும், உதவியாலும் தான் நான் அடுத்து என்னுடைய லட்சியத்தை சரியாக அடைய முடிந்தது. ரொம்பவும் வெகுளியானவர்கள், படிப்பறிவு இல்லை என்றாலும் தைரியமும், விவேகமும் அவர்களுக்கு அதிகம். இப்பொழுது அவர்கள் உயிருடன் இல்லை, இந்நேரம் பாட்டி மட்டும் இருந்திருந்தால் என்னை இப்படி தனியே விட்டிருக்க மாட்டார்கள்!" என்றான் பரத் வருத்தமாக.
- part to be continued on www.deepababuforum.com
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro