♦️17♦️
இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.
______________________________________
"குட்மார்னிங் தத்து!" என்ற பேத்தியின் உற்சாக குரலில் பூஜைக்கு வேண்டி தோட்டத்தில் செவ்வரளி பூக்களை பறித்துக் கொண்டிருந்த சிவலிங்கம் மலர்ந்து திரும்பினார்.
"குட்மார்னிங்டா!" என பதிலுக்கு முறுவலித்தவரிடம், "நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன். இதே பூவை பறிக்கட்டுமா அல்லது வேறு செம்பருத்தி, ரோஜா போல் ஏதும் பறிக்கட்டுமா?" என்று அக்கறையாக வினவும் பேத்தியை கண்கள் இடுங்க நோக்கினார் பெரியவர்.
"ஒய் திஸ் பேட் லுக் தத்து?" என்றாள் இவள் சிணுக்கத்துடன்.
"ஆமாம்... பூஜைக்கு பறித்து தருகிறேன் என்று பல்லிளித்துக் கொண்டு வந்து நிற்கிறாயே... முதலில் நீ குளித்து விட்டாயா?" என்று நக்கலாக வினவினார்.
'ஐயய்யோ... ஆமாம் இல்லை?' என மைன்ட் வாய்சில் அலறியவள் வெளியே அவரைப் பார்த்து ஈயென்று அசடு வழிந்தாள்.
"அடிங்க..." என்றவர் உதட்டை மடிக்க, "ஹும்... போங்க தத்து... வர வர நீங்கள் என்னை ரொம்பவும் தான் மிரட்டுகிறீர்கள்?" என்று தரையை உதைத்தபடி முகத்தை சுருக்கி கொண்டு வீட்டிற்குள் சென்றாள் ரித்திகா.
"ஏய்... குட்டிம்மா!" என்று நகைத்தபடி பெரியவர் அழைக்க திரும்பி அவரை ஒரு முறை முறைத்துவிட்டு நில்லாமல் ஓடியே விட்டாள் அவள்.
"தத்து... உங்களிடம் இதை சொல்ல மறந்து விட்டேன் பாருங்கள். இரண்டு நாட்களாக நேரமும் இல்லை அப்பாவால் தேவையில்லாத பிரச்சினை வேறு!" என்றபடி முகத்தை சுளித்தாள்.
"ப்ச்... அதை விட்டுத் தள்ளு பழையதை மீண்டும் கிளறாதே. நீ என்ன சொல்ல வந்தாயோ அதை மட்டும் சொல்!" என்றார் அவர் அழுத்தமாக.
ம்க்கும்... என்று முனகி விட்டே தன் பதிலை சொன்னாள் ரித்து.
"நேற்று முன் தினம் நாம் வெளியே சென்றிருந்தப் பொழுது அப்பா பேசியதை தவறாக நினைத்து பரத் எதுவும் வருந்திக் கொண்டிருக்க கூடாதே என அவருக்கு போன் செய்தேன். அப்பொழுது..." என்றவள் அவனிடம் பேசிய விவரத்தை கூறிவிட்டு, "ஆனால்... ஒரே முறை தான் சொன்னார், நான் மறுபடியும் கேட்கவும் ஒன்றுமில்லை என வைத்துவிட்டார்!" என்றாள் யோசனையோடு.
ஓ... என்று தானும் சிந்தனையில் ஆழ்ந்தப் பெரியவர், "அடக்கடவுளே... அப்பொழுது இந்தப் பையனின் வளர்ச்சிப் பிடிக்காத யாரோ இவன் மீது வேண்டுமென்றே பழியை தூக்கிப் போட்டு விட்டார்களா?" என்றார் திகைப்புடன்.
"ம்... அப்படித்தான் போலிருக்கிறது, ப்ச்... ரொம்பவே பாவம். தப்பே செய்யாமல் அனைவர் முன்னும் எப்படி அவமானப்பட்டுக் கொண்டு நிற்கிறார். ஆனால்... இவர் ஏன் மீடியாவிடமும் இதை சொல்லவில்லை வாரியத்தின் மீதும் வழக்குப் போடவில்லை?" என்று புலம்பியவள், "அவரை நினைத்தால் எனக்கு அப்படியே கோபம் தான் வருகிறது. தன் நியாயத்திற்காக எதையும் போராடாமல் அதென்ன ஊரைவிட்டு பிரிந்து வந்து இப்படி கோழைத்தனமாக ஒதுங்கி வாழ்வது?" என்றாள் எரிச்சலுடன்.
சிவலிங்கம் பதில் ஏதும் கூறாமல் மௌனமாக பரத்தின் நிலையில் இருந்து அது என்ன காரணமாக இருக்க கூடும் என்று அவற்றிற்கான விடைக்காண முயன்றார்.
- part to be continued on www.deepababuforum.com
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro