♦️16♦️
இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.
______________________________________
ரித்திகா ஒரு கணம் தன் செவிதிறன் மேல் சந்தேகம் கொண்டு, "என்ன?" என்று புரியாமல் திரும்பி அவனிடம் குழப்பத்துடன் விவரம் கேட்டாள்.
எதிர்முனையில் இருப்பவனுக்கு அதைப் பற்றி மேலும் பேச விருப்பமில்லை போலிருக்கிறது. ஒருமுறை தெரியாமல் வார்த்தைகளை விட்டு விட்டவன் பின் சலிப்போடு ஒன்றுமில்லை என வைத்து விட்டான்.
"ஹேய்... ஒரு நிமிடம்!" என்று இவள் தடுக்கும் முன்னரே இணைப்பு அறுந்து விட, இந்தப் பக்கம் அவள் தங்கையும் கார் வந்து விட்டதாக அவளை அழைக்கவும் சின்னப் புருவச் சுளிப்புடன் அவர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
பின் மாலையில் வீடு திரும்பிய நேரம் அத்தை குடும்பமும் வந்துவிட மறுநாள் முழுவதும் அவனோடு அலைபேசியில் கூட உரையாட இயலாது மிகவும் தவித்துப் போனாள் ரித்து.
நெஞ்சம் முழுவதும் அவன் நினைவுகளில் சுழன்றுக் கொண்டிருக்க வெளியில் மற்றவர்களிடம் இயல்பாக இருக்க மிகவும் சிரமப்பட்டுப் போனாள். தாயும், தங்கையும் ஓரளவு அவளுக்கு துணையாக இருந்து சூழ்நிலையை சமாளித்து அவள் தந்தையிடம் இருந்து அவளின் தடுமாற்றத்தை மறைத்தனர்.
மாமனாரின் அறையில் அவர் கரங்களில் தேநீரை கொடுத்தவாறே சுற்றிலும் பார்வையை செலுத்திய காஞ்சனா, "மாமா... உங்களிடம் ரித்துவை பற்றி ஒன்று கேட்க வேண்டும்!" என்றார் மெல்லிய குரலில் அவசரமாக.
"சொல்லும்மா!" என்றவரும் மற்றவர்கள் வெளி கூடத்தில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பதை உறுதி செய்துவிட்டு மருமகளை நோக்கினார்.
"இல்லை... ரித்துவின் மனதில் பரத் குறித்த நிலை என்ன? அவன் மீது இவளுக்கு ஆர்வம் அதிகம் இருப்பது ஏற்கனவே நாங்கள் அறிந்த ஒன்று தான். ஆனால் இப்பொழுது எப்படி பழகுகிறாள் வேறுமாதிரி எதுவும் உங்கள் மகன் குதிப்பது போல் காதல் அது... இது என்று ஏதாவது உள்ளதா?"
"அது எனக்கும் ஒன்றும் புரியவில்லைம்மா!" என்றார் சிவலிங்கம்.
"ஏன் மாமா?"
"அவள் என்னவோ அதெல்லாம் இல்லை என்று தான் திட்டவட்டமாக சொல்கிறாள். ஆனால் எனக்கு தெரிந்து அவள் ரசனை அவனுடைய விளையாட்டை தாண்டி அவன் மீது உருவாகிவிட்டதா இல்லையா என்பதை விட அவனுடைய நிலையை எண்ணி தான் இவள் ரொம்பவே விசனம் கொள்கிறாள் என்று மட்டும் நன்றாகவே புரிகிறது. இத்தகைய திறமை இருக்கும் தான் ரசித்த ஒரு மனிதன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இப்படி தனிமையில் ஒதுங்கி இருந்து வாழ்வதா? என்பதே அவளுக்குள் பெரும் போராட்டமாக இருக்கிறது. அவனை எப்படியாவது இழந்துவிட்ட உச்சத்திற்கு திரும்ப அழைத்து சென்றுவிட வேண்டும் என்கிற எண்ணம் அவளுக்குள் கிட்டத்தட்ட வெறியாகவே மாறி வருகிறது. இவள் பரத்தை இழுத்து செல்ல நினைக்கும் இந்தப் பயணத்தில் எதையும் அறுதியிட்டு கூற முடியாது, அது காதலாகவும் மாற பெரும் வாய்ப்புள்ளது தான். காரணம்... இத்தனை ஆண்டுகளாக அனைத்தில் இருந்தும் ஒதுங்கி இருந்தவன் இப்பொழுது இவள் துணையால் அவன் வாழ்க்கையில் முன்னேறுகிறான் எனும்பொழுது இருபக்கமுமே அடுத்தவரின் அருகாமையையும், குணநலன்களையும் நேசிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்றே எனக்கு தோன்றுகிறது!" என்றார் தனக்குள் ஆலோசித்தவராக.
"ஓ... இதில் பரத் எப்படி?"
- Part to be continued on www.deepababuforum.com
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro