♦️15♦️
இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.
______________________________________
"என்ன... உங்களுக்கு எல்லாம் தெரியுமா? அப்பொழுது உங்களின் அனுமதியோடு தான் இருவரும் இங்கே இந்த அளவிற்கு துணிந்து பழகுகிறார்கள் என்று சொல்லுங்கள்!" என்றார் சுப்பிரமணியம் கோபமாக.
தன் தந்தையின் அநியாயமான குற்றச்சாட்டுகளால் ரித்திகாவின் இரத்த அழுத்தம் எகிறிக் கொண்டிருக்க, தான் எதுவும் தனியாக எதிர்க்க தேவையில்லாமல் தன்னுடைய தாத்தாவே அந்த வேலையை செவ்வனே செய்யவும் வெறும் உள்ளக்குமுறலுடன் அவரை பார்த்திருந்தாள் அவள்.
"ஆமாம்... தப்பு செய்பவர்களுக்கு தான் வீட்டுப் பெரியவர்களிடம் எதையும் மறைக்க தோன்றும். என் பேத்தியிடம் அதுபோன்ற கீழான குணங்கள் எதுவுமில்லாததால் அவள் என்னிடம் அனைத்தையும் சொல்லி விட்டாள். அதேபோல் நீ கற்பனை செய்து தூற்றுகிற அளவிற்கு அந்தப் பையனும் மோசமானவனில்லை. அதுவுமில்லாமல் அவனைப் பற்றிய விவரங்களை முழுவதுமாக கேட்டறிந்து இரண்டு வருடங்களுக்கு முன் பக்கத்து வீட்டில் குடிவைத்ததே நான் தான்!"
"என்ன பக்கத்து வீட்டில் தான் இருக்கிறானா? ரொம்பவும் சந்தோசம்... அப்படியென்ன பெரியதாக விசாரித்து விட்டீர்கள் நீங்கள்? அதுதான் பார்த்தாலே தெரிகிறதே, போதை மருந்து பயன்படுத்துகிறவன் எல்லாம் உங்களுக்கு உத்தமனாகி விட்டான்!" என்றார் இகழ்ச்சியாக.
"என்னவோ அவன் போதைக்கு அடிமையாகி அறையினுள் விழுந்து கிடப்பது போல் பேசுகிறாயே, அவன் அதை தினமும் பயன்படுத்துவதை நீ கண்ணால் பார்த்தாயா? மனிதனின் வாழ்வில் ஏதாவது ஒரு இடத்தில் சறுக்கல் ஏற்படுவதென்பது மிகவும் சகஜமான ஒன்று தான். அதையே பிடித்து தொங்கிக் கொண்டு போலி வர்ணம் பூசி எந்நேரமும் தூற்றிக் கொண்டேயிருக்க கூடாது. ஏன் இவ்வளவு பேசுகிற நீ மட்டும் போன வருடம் என்ன செய்தாய்?"
"ஏன் நான் என்ன செய்தேன்? எதிலும் ஒழுக்கத்தோடு வாழ்ந்து வருபவன் நான். எங்கே சென்றாலும் எது படித்தாலும் மெரிட்லேயே தேர்வாகி இவ்வளவு தூரம் பெரிய ஆராய்ச்சியாளராக வளர்ந்து இருக்கிறேன் என்றால் அதற்கெல்லாம் என் நேர்மை தான் காரணம். இவனை போல் கிடைத்த வாய்ப்பை ஒழுங்காக பயன்படுத்த தவறி நாட்டிற்கும், வீட்டிற்கும் அவப்பெயர் தேடித் தரவில்லை நான்!" என்றார் நிமிர்வுடன்.
"இந்த ஆணவம் தான்டா உனக்கு மனித மனங்களை சரிவர எடைபோட தெரியாமல் தடுத்து நிறுத்துகிறது. எந்த நேரமும், எப்பொழுதும் பக்காவாக நெறி தவறாமல் நேர்கோட்டில் செல்வதென்பது அனைவராலும் முடியாது. ஏதோ ஒரு காரணத்தால் சூழ்நிலையின் தாக்கத்தால் ஒருவன் தவறு செய்து விட்டான் என்றால் அவனை தொடர்ந்து குற்றவாளியாக்கி ஒதுக்கி வைக்க கூடாது. நானும், என் பேத்தியும் அவனுடன் பேசிப் பழகுவது மிகப்பெரிய தவறு என்று நீ கண்டிக்கும் அளவிற்கு அவன் ஒன்றும் கொலை குற்றவாளி இல்லை. நீயே ஒரு கொலைகாரனோடு கை குலுக்கி புகைப்படம் எடுத்துக் கொள்கிறவன், நீ எங்களை சொல்கிறாயா?" என்று சிவலிங்கம் தாக்க அதிர்ந்து விழித்தார் சுப்பு.
"வாட்? நான்... நான்... கொலைக்காரனோடு கை குலுக்கினேனா?" என்று பதறி தன் மனைவி, மக்களிடம் ஆதரவு திரட்ட பார்த்தார்.
அவர்களோ அவரை சற்றும் கண்டுக்கொள்ளாமல் அவரின் பதற்றத்தை உள்ளுக்குள் பரிகசித்தபடி ரசித்திருந்தனர்.
பின்னே... இவர் கடுமையாக படித்து, உழைத்து முன்னேறி விட்டார் என்பதற்காக எந்நேரமும் அதை தன் வீட்டிலும், குடும்பத்தினர் மீதும் திணித்துக் கொண்டே இருந்தால் அவர்களுக்கும் கடுப்பு வரத்தானே செய்யும்? இல்லாள் முதற்கொண்டு வாரிசுகள் வரை அனைவரும் அவர் கருத்துகளுக்கு எதிராக தான் இருந்தனர். ஆனால் எதையும் வெளிப்படையாக செய்வதில்லை, இல்லையென்றால் அதற்கும் ஒரு பிரசங்கம், தண்டனை என்று எதையாவது அவர் இழுத்து விடுவார் என்பதால் சற்று அடக்கிதான் வாசித்தனர். தண்டனை என்றால் எப்படி? இவர்களுக்கு ஒரு தேவை என்று அவரிடம் சென்று நிற்க நேரிடும் பொழுது வேண்டுமென்றே பழையதை சொல்லி அதற்கு சம்மதம் தர மறுத்து விடுவார் அவர். உதாரணத்திற்கு எங்காவது வெளியூர் செல்ல வேண்டுமா அல்லது ஏதாவது வாங்க வேண்டுமா என்று அவர்களின் தேவை புரிந்து எதிலாவது லாக் பண்ணி விடுவார். குடும்பத் தலைவர் என்பதால் ஒரு கட்டத்திற்கு மேல் அவரை அவர்கள் எதிர்ப்பதும் இல்லை. நம் சமூக கட்டமைப்பு, பாரம்பர்யம் என ஒழுக்கத்திற்கு உட்பட்ட இதுபோன்ற ஒருசில விஷயங்களில் தன் பிள்ளைகளை தெளிவாக வளர்த்திருந்தார் காஞ்சனா.
"என்னப்பா சொல்கிறீர்கள்?" என்று மீண்டும் தந்தையிடமே வினவினார் சுப்பிரமணியம்.
"அப்புறம்... உங்கள் துறையை சார்ந்த மத்திய அமைச்சர் மீது வெளிப்படையாகவே கொலைக்குற்றம் சாட்டப்பட்டு, வழக்கும் நடந்து தீர்ப்பும் ஆண்டாண்டு காலமாக இழுத்தடிக்கப்பட்டு கொண்டிருக்கிறதே, அவர் உன் நிறுவனத்திற்கு வந்தப் பொழுது மட்டும் அவரிடம் ஈயென்று பல்லைக் காட்டி, கைகுலுக்கி, புகைப்படம் எடுத்து என்றெல்லாம் டிவியில் காண்பித்தார்களே... அப்பொழுது எல்லாம் உன் கொள்கைகள் எங்கேடா சென்றது? வாடகைக்கு விட்டு விட்டாயா? அந்த நேரத்தில் அவனிடம் இதேபோல் சூளுரைத்திருக்க வேண்டியது தானே... நீ ஒரு கொலைக்காரன் உன் கூட எல்லாம் நான் கைக்குலுக்க மாட்டேன் என்று விரட்டியிருக்க வேண்டியது தானே... அதெல்லாம் செய்ய மாட்டீர்கள், ஏன் தெரியுமா? அவன் பணக்காரன், பதவியில் இருப்பவன், தனக்கு கீழ் ஒரு ரவுடி கும்பலையே வைத்துக் கொண்டு திமிராக நாட்டை சுற்றி வருபவன். அவனை மாதிரி ஆட்களிடம் என்றால் மரியாதை கொடுத்து பணிந்துப் போவீர்கள், ஆனால் வயதின் காரணமாக என்றோ ஏதோ ஒரு தவறு செய்துவிட்ட ஆதரவில்லாத சாதாரண வாலிபன் என்றால் மட்டும் உங்களை மாதிரி ஆட்கள் பெரிதாக ஒழுக்கத்தை பற்றி பேசிப் பொங்குவீர்கள் அப்படித்தானே... இதைவிட பயங்கரவாத செயலில் ஈடுபட்ட அவனிடம் அங்கே பொங்கி உங்கள் நீதியை நிலைநாட்ட வேண்டியது தானேடா... செய்ய மாட்டீர்களே... ஏனெனில் அங்கே அவனவனுக்கு அவனவன் சுயநலம் தான் பெரிது!" என்று காட்டமாக முடித்தார்.
- part to be continued on www.deepababuforum.com
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro