
9- ச. சக்திஸ்ரீ
ச.சக்திஸ்ரீ
அத்தியாயம் - 9
பூம்பொழில் கிராமத்தை நெருங்க இன்னு சில வினாடிகளே இருந்தனர்.. அவர்கள் கார் பூம்பொழி எல்லையை நெருங்கவே பலமான சுறவெளி காற்று அடித்தது புழுதிகள் கண்ணாடியை மறைக்க அவ்வூர் எல்லையை தாண்டி கிராமத்திற்கு செல்ல முடியாமல் காரும் முன்னேற மாட்டேன் என்று அடம்பிடித்தது...
"நா போய் பாக்குறே நீங்க ரெண்டு பேரும் எக்காரணம் கொண்டும் கீழே இறங்காதீங்க" என்று கூறினான் மகேஷ்.... மகேஷ் காரின் முன் பகுதியை தூக்கி பழுது பார்க்க காற்று சூடான நெருப்பு போல் சூழல் போன்று அவனை நெருக்கியது.....
"மகேஷ் திரும்பி பாருஉஉஉஉஉ" என்று கத்தினாள் அனு.... "கனநிமிடத்தில் திரும்பி தாயத்து கட்டிய கையை முன்னாடி நீட்டினான் அதுலிருந்து வெளிப்பட சக்தி அந்த நெருப்பு சுழல் காற்றை ஒன்றுமில்லாமல் செய்து அழித்து விட்டது"... அதன் பிறகு மகேஷ் காரில் ஏறி அமர அனு அழுதுகொண்டே மகேஷின் கையை பிடித்து "உனக்கு ஒன்னு ஆகலலே" என்று கேட்டாள்...
"இல்ல டா எனக்கு ஒன்னு ஆகலலே, இன்னும் நிக்க....நிக்க ஆபத்து வந்துட்டே இருக்கும்" என்று கூறினான் மகேஷ்... கார் ஊருக்குள் செல்ல அவர்கள் மூவருக்கும் ஏனோ இனம் புரியாத உணர்வு தோன்றியது... பறவை தன் கூட்டை தேடி வந்த உணர்வு அவளுக்கு ஏற்பட்டது...
"எனக்கு இந்த ஊருக்குள்ள வந்ததும் ஏதோ இனம்புரியாத உணர்வு ஏற்படுது" என்று விக்ரம் கூறினான்...
"எனக்கு தா" என்று மற்ற இருவரும் இணைந்து கூறினார்...
மூன்று பேரும் காரை விட்டு இறங்கி வெளியில் வந்து நின்றனர் அந்த ஊர் பாதி சுடுகாடு போன்று காட்சி அளித்தது.... வயல்வெளிகள் அனைத்தும் வறண்டு போய் கிடந்தனர்... அந்த மக்கள் முகங்களில் புன்னகை இல்லை.... நாளை நான் உயிரோட இருப்பேனா என்று தெரியாது போல் பாதி உயிர் போன மாதிரியான உடல்கள் ஓட்டி பார்க்கவே பாவமாக இருந்தனர்...
ஓர் பஸ் ஊருக்குள் வந்தது அதிலிருந்து அமிர்தா இறங்க இங்கு இவர்கள் மூவரும் அவளை முறைப்பது போல் பார்த்தனர்.... அமிர்தா இவர்களை கண்டு சற்று பயந்தாலும் அதை முகத்தில் காட்டாமல் இவர்கள் அருகில் வந்தாள்...
"எதுக்கு அமிர்தா எங்க கிட்ட சொல்லாம நீ மட்டும் இங்க வந்த" என்று கோவமாக கேட்டாள் அனு..
"இது என்னோட பிரச்சனை, இத நா தான் தனியா பார்த்துக்கன்னும்.. என்னால தா நீங்களும் மாட்டிக்ககூடாதுன்னு தான் உங்க கிட்ட சொல்லாம வந்தே" என்று விளக்கம் கொடுத்தாள்...
"என்ன பேசுறேன்னு புரிஞ்சு தா பேசுறீயா, இது ஒன்னும் உன்னோட பிரச்சனை இல்ல இது நம்மளோட பிரச்சினை.. அதுனால தா கபீர்பாய் எங்களுக்கு தாயத்து தந்து அந்த பெட்டிய தேடி அனுப்புனாரு... அப்போறோம் எத வச்சு இது உன்னோட பிரச்சனைன்னு சொல்லுற" சற்று காட்டமாகவே கேட்டான் மகேஷ்..
"இது! என் பாட்டியோட ஊரு"என்று தயங்கி மெதுவாக கூறினாள்.. "என்ன" என்று ஆச்சரியமாக பார்த்தனர் மற்ற மூவரும்.. விக்ரம் "அதுக்கும் இதுக்கு இந்த பிரச்சினைக்கு என்ன சம்மந்தம்"
அமிர்தா"ஒரு முறை என்னை வளர்த்தவங்க சொல்லி இருந்தாங்க இது என் ஊருனு என் பாட்டியை தேடி வந்தேன். ஒரு பெரியவர்தான் சொன்னங்க என் பாட்டி ஊர் விட்டு ஊர் போயிட்டாங்கனு நானும் அவசர வேலைனால வந்துட்டேன்"
மகேஷ்"சரி விடு இது நம்ம உயிர் போராட்டம் அதனால, ஒன்னாதான் இருக்கணும் சரியா"
விக்ரம்"வாங்க காருல ஏறுங்க"
விக்ரம்"அந்த காட்டுக்கு எப்படி போறது அமிர்தா"
அமிர்தா''தெரியாது விக்ரம்
யாருகிட்டாவது கேட்போம்"
எதிரில் ஒரு பெரியவர் போகிறார்
மகேஷ் "ஹாய் ஹாலோ"
அமிர்தா"டேய் லூசு"
அனு"ஐயா "
பெரியவர்"சொல்லுங்க பா"
அனு"நாங்க இந்த ஊருக்கு புதுசு இங்க ஒரு காடு இருக்குல அங்க போக வழி சொல்லுறீங்களா."
பெரியவர்"அங்கே எதுக்கு பா" கேட்கும் போதே வேர்க்கிறது அவருக்கு
அமிர்தா"என் பாட்டி வீடு அங்க இருக்கு தாத்தா அதுக்கு தான்"
பெரியவர்"ஒ சரிபா அது ஒரு அமானுஷ்யம் நிறைஞ்ச காடு அங்க கெட்ட எண்ணத்தோட யாராவது போன யாரும் உயிரோட இருக்க மாட்டாங்க ஆம்பிளைங்க யாரும் போகக்கூடாது."
விக்ரம்"ஐயா பெரியவரே வழிய மட்டும் சொல்லுங்க "
வழி சொன்னதும்" நன்றி ஐயா" எனக் கூறி காரில் ஏறி காட்டை நோக்கி செல்கிறார்கள்
காரில் போகும் அவர்களை கண்டு பெரியவர் உருவில் இருந்த அகோரியின் இதழில் புன்னகை மலருகிறது. அப்புன்னகையின் அர்த்தம் அவருக்கே வெளிச்சம்
மகேஷ் "பாட்டிய விட முக்கியமான வேலையா?"
அமிர்தா "ஆமாடா"
மகேஷ்"ஏன் நீ போகலைன்னா காற்று கூட அசையாதோ"
விக்ரம்"டேய் எந்த நேரத்துல டா வாய வச்ச வெளில பாரு"
மகேஷ் எட்டி பார்க்கிறான்
ராட்சத மரங்கள். மரங்களிலிருந்து உதிரும் இலைகள் கூட அசையாமல் நிற்கிறது. அமைதியாக இருக்கிறது காடே திடீரென்று காடே அதிரும் படியாக காதைக் கிழிக்கக் கூடிய சத்தம் கேட்கிறது.
திடீரென்று வண்டி ஒரு குலுங்கு குலுங்கி ஒரு பெரும் சத்தத்தோடு நிற்கிறது.
கார் காட்டு பகுதியில் செல்லும் போது பாதியில் நின்று விட்டது.. "அட இந்த கார் எத்தனை வாட்டி தா நிக்கும்... ஏன் மகேஷ் இந்த ஓட்ட காரை எடுத்துட்டு வந்தே" என்று கேட்டான் விக்ரம்...
"அடிங்க! இது என் லக்கி கார் இத போய் குறை சொல்லுற"....... "ஏய் ரெண்டு பேரும் பேசி நேரம் வெஸ்ட் ஆக்காமல் ஒழுங்கா போய் காரை சரி பண்ணுங்க" என்று கூறினாள் அமிர்தா...
இருவரும் இறங்கி கார் பழுது பார்க்க மகேஷ் " விக்ரம் எனக்கு சூச்சு வருது" என்று சுண்டுவிரலை காட்டினான்.. விக்ரம் "ஒரு நேரம் காலம் பார்க்காமல வரும், நாம இருக்க பிரச்சினைக்கு" என்று அழுத்து கொண்டான்...
"ஏன்டா! அதுக்கு எப்படி தெரியும் இது நல்ல நேரம் கெட்ட நேரமன்னு"என்று திட்டி விட்டு ஒரு மரத்தின் அருகே செல்ல.. அப்போது தான் அவன் கனவு ஞாபகம் வந்தது அவனுக்கு.. "ஐயோ! என்று விக்ரம் கத்து முன்னாடி... மகேஷ் கத்த ஆரம்பித்தான்...
அவன் கத்தியதில் பயந்து மூன்று பேரும் அவனை நேக்கி ஓட அனு கடைசியாக வந்ததால் அவள் காலை நிலத்திற்கு அடியிலிருந்து ஒரு வேர் பிடித்து இழுத்து அவளை பூமிகுள் இழுத்து கொண்டே செல்ல... அனு பயத்தில் கத்துவற்குமுன் அந்த வேர் அவள் வாயை முடியது.... அனு தன் மொத்த சக்தியை கொண்டு "விக்...ரம்" என்று காடே அதிர கத்தினாள்...
விக்ரம் திரும்பி அனுவின் நிலையை பார்த்து அதிர்ந்து போய் அவள் அருகில் ஓடிவந்தான்... அவளை பூமிக்குள் இழுத்து செல்லும் வேரின் மேல் தன் தயத்து கட்டிய கயிறு படுமாறு வைக்க அது கரிந்து போனது அவ்வேர்கள்..... அதேபோல் அனுவும் செய்ய அதிலுருந்து தப்பித்து கொண்டாள்...
அங்கே மகேஷ் நிலைமையும் அதுவே அவனின் கால்களை ஒரு ராட்சச பூவின் வாய்க்குள் இருந்து ஒருவேர் வந்து அவனின் காலை இழுத்துக்கொண்டு சென்றது... அந்த பூவின் இதழ்களை பற்கள் போன்று அவனை கடித்து குத்துவதற்கு ஏதுவாக வாய்யை முழுவதுமா பிளந்து வைத்து இருந்தது... அமிர்தா வேகமா ஓடி வந்து தன் கையில் இருந்த தாயத்தை அந்த வேரின் மீதுபடுவது போல் வைக்க அவ்வேரின் அடிப்பகுதியிலிருந்து அப்பூ வரை எரிந்து பஸ்பமாகியது....
அதன் பிறகு நால்வரும் ஒரே இடத்தில் நின்று ... "இங்க பாருங்க இன்னும் நாம கவனமாக இருக்கனும் இன்னும் நமக்கு நிறைய ஆபத்து வந்துட்டே இருக்கும் கவனாமா இருங்க... யாரும் தனித்தனியா பிரிந்து போக கூடாது" என்று கூறினான் மகேஷ்...
நால்வரும் நடந்து ஒன்றாக சென்றனர்.. அமிர்தா "நாம அமானுஷ்ய காட்டுக்குள்ள வந்தாச்சு அடுத்தது மிருதன் ஆபத்துல இருந்து தப்புச்சாச்சு அடுத்து அந்த பாறைய தானே கண்டு பிடிக்கன்னும்"....
விக்ரம் "எனக்கு ஒன்னு நாம மிருதன் கிட்ட தப்பிக்கலன்னு தா தோன்னுது இன்னும் தா நமக்கு ஆபத்து நிறைய இருக்குன்னு தோன்னுது.... எல்லாரும் கவனமா இருங்க... அப்றோம் சீக்கிரம் அந்த பாறை இருக்க இடத்த கண்டுபிடிக்கன்னும்"
மகேஷ் "ஆமா! விக்ரம் சொல்லுறது தா எனக்கு தோன்னுது இது தா தொடக்கமா இருக்கன்னும்"
நால்வரும் சேர்ந்து நடக்க...அவர்களை நோக்கி ஏதோ மிருகம் வருவது போல் காலடி சத்தம் அவ்வளவு அழுத்தமாக இருந்தது... அனு பயத்தில் மகேஷ் கையை படிக்க அது விக்ரமிற்கு கோவம் வந்தது... அவள் கையை பிடித்து தன் அருகில் இழுத்தான்...
அவ்வேளையில் ஒரு கொடிய உருவம் கொண்ட விலங்கு வந்து நின்றது.. சிங்கத்தின் முகத்தையும் எருமையின் உடலமைப்பையும் கொண்ட ஒரு மூன்று தலைமிருகம் வந்து நின்றது...
அது இவர்கள் நால்வரையும் அசைய விடாமல் அந்த விலங்கு அவர்கள் நெருங்கி.... நெருங்கி வந்தது... என்ன செய்வது என்று தெரியாமல் பயத்துடன் நிற்க்க... அனு மயக்கம் போட்டு விழுந்து யாரும் அறியவில்லை.... அவள் உருவத்திற்கு ஒரு அகோரி உருவமாறி அவளை தன் மந்திர சக்தி கொண்டு மறைய வைத்தான்....
அனு ரூபத்தில் இருக்கும் அந்த அகோரி மற்ற மூவர்களையும் பார்த்து "நாம நாலும்பேரும் ஒரே நேரத்தில தாயத்து கட்டிய கையை அந்த விலங்கு முன் காட்டின்னாள்... அந்த விலங்க நாம சாகடிக்க முடியும்.. ஆனா, இதுல ஒரு நிமிஷம் யாராவது முந்துனாலும் சரி பிந்துனாலும் அது நமக்கே ஆபத்து ஆகிடும்.... அதுபோல் நம்ம கைல கட்டி இருக்க தாயத்தோட பலமும் குறைச்சுடும் கால்வாசி" என்று கூறினாள் அனு..
யாருக்குமே இது எப்படி அனுவுக்கு தெரியும் என்று யோசிக்கவில்லை இவர்கள் தப்பித்தால் போதுமென்றே நினைத்தனர்.. அவள் கூறியது போல் செய்ததும் அந்த தயத்தில் இருந்து ஒரே நேரத்தில் சக்தி வெளிப்படு அந்த விலங்கை அழித்தனர்...
அதன் பிறகு அங்கிருந்து கிளம்பி பாறை இருக்கும் இடத்தை கண்டு பிடித்தனர்... அங்கே ஒற்றை கண் கொண்ட பெரிய உருவம் கொண்ட மனித உருவில் மிருகம் அந்த பாறையின் அருகில் நின்று இருந்தான்..
"இப்போ என்ன பண்றது இந்த ஒத்தை கண்ணனே எப்படி இங்கிருந்து விலக்க.... இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்ட வேற போகுது" என்று பயத்தை முகத்தில் காட்டாமல் கூறினாள் அமிர்தா..
அனு "இப்போ அவன திசை திருப்பன்னும் இது விட்ட வேற வழியில்ல... ஏன்னா! ஏற்கனவே நம்ம கைல இருக்க தயத்தோட சக்தி குறைச்சுடு"..... மகேஷ் "உனக்கு எப்படி தெரியும் அனு" என்று கேள்வியோடு பார்த்தான்....
அனு "அதுவா! நம்ம கைல கட்டி இருக்க தாயத்தோட நிறம் வெள்ளி நிறத்துல இருந்தது... ஆனா,இப்போ அது கருப்பு நிறத்துல மாறிட்டு வருது" என்று கூறினாள்...
அவள் கூறுவது உண்மை என்பதை உணர்ந்து கொண்டனர் மற்ற முவரும்... "இப்போ எப்படி அவன திசை திருப்ப" என்று கேட்டான் விக்ரம்..
அமிர்தா "ஒரு ஐடியா இருக்கு... ஆனா, அது வேலை செய்மான்னு தெரியல... ஆனா சொல்லுறே நாம நாலு பேருல ஒருத்தர் இல்ல ரெண்டு பேரு அவன் முன்னாடி போற மாதிரி போலாம்"...
மகேஷ் "அப்படியே அவன் கையால செத்துடலாம்" என்று நக்கலாக கூறினான்... "சொல்லுற பாரு ஐடியா"... என்று இளக்காரமாக நினைத்தான்...
அனு "எதுக்கு அவ சொல்லுறத நாம செயல் படுத்தி பார்க்கலாமே... " "இல்லைன்னா நீயே ஐடியா சொல்லு" என்று கூறினாள் அனு... மகேஷ் "அப்போ யாரு அந்த ஒத்த கண்ணனே திசை இருப்புவாங்க..."
அனுவும் விக்ரம் கையை தூக்க சரி என்று அமிர்தா கூறியது போல் செய்தனர்... அனு ரூபத்தில் இருக்கும் அகோரி தன் மந்திரசக்தியால் அருகில் ஒரு மய நெருப்பு ஏரியை உருவாக்கி அதில் அந்த ஒத்தகண்ணனை தள்ளி விட்டான்...ஆனால் விக்ரம் தான் தள்ளி விட்டது போல் அவனின் கையால் செய்ய வைத்தாள்...
அதன் பிறகு அங்கிருந்து பாறையின் அருகில் வந்தனர் இருவரும்.. "என்ன அந்த பெட்டியை எடுத்திட்டிங்களா" என்று கேட்க...
அமிர்தா "இம்மி அளவு கூட அந்தப் பாறை நகர மாட்டேங்குது என்று கூறினாள்... "அப்போ என்ன பண்றது" என்று கேட்டான் விக்ரம்..
"நம நாலு பேரும் சேர்ந்து ஒரு பாறையை தள்ளுவோம் ஒரு புறமாக தள்ளுவோம் அப்போ பாறை கொஞ்ச நகர்தான்னு பார்ப்போம்" என்றாள் அனு...
"சரி" என்று அனைவரும் தள்ள அனு தன் சக்தி கொண்டு பாறையை தள்ளினாள்.. அதன் பிறகு பெட்டியை எடுத்தனர்..
விக்ரம் "இப்போ பெட்டிய எப்படி திறப்பது" அமிர்தா "இந்த பெட்டிய ஏன் இத்தனை தாயத்தும் கொண்டு கட்டி வச்சு இருக்காங்க அதுக்கானதுன்னு வேல் வச்சு ஒருதலியை பெட்டியோடு கட்டி வச்சு இருக்காங்க.. அது எதுக்கு?" என்று கேட்டாள்...
அனு அந்த பெட்டியின் ரகசிய தெரியும் என்பதால் அதில் ஏதோ பார்ப்பது போல் பாவனை செய்து "எல்லாரும் இங்க பாருங்க! இந்த பெட்டி மேல ஏதோ எழுதி இருக்கு "இப்பெட்டி திறக்க வேண்டுமானால் ஒரு கன்னிப் பையனின் ரத்தம் இவ்வேல் மீது பட்டு அவனின் கன்னி கழியா மனைவியின் நெற்றியில் மீது வைத்து இருவரும் சேர்ந்து திறந்தால் மட்டுமே இப்படி திறக்கும்" என்று எழுதிருக்க....
மற்ற மூவரும் அதிர்ச்சியில் திருதிருவென முழித்தனர்.. "இப்போ கன்னிகழியாத பையனையும் பொண்ணையும் எங்கு போய் தேடுறது" என்று மகேஷ் கேட்டான்...
"இவ்வளவு நேரம் நாம கஷ்டப்பட்டது எல்லாமே வீணா" என்று கூறி காலை தரையில் உதைத்தான் விக்ரம்...
அனு "இல்லவேயில்ல"... "என்ன சொல்லுற அனு" என்று கேட்டான் மகேஷ்... "இங்க யாராவது ரெண்டு பேரும் கல்யாணம் பண்ண இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியும்"... "அப்போ நீயும் விக்ரம் கல்யாணம் பண்ணிக்கோ" என்று கூறினான் மகேஷ்..
அனு அதிர்ச்சி ஆகி "முடியவே... முடியாது" என்று கத்தினாள்.... மகேஷ் "ஏன், முடியாது நீங்க ஏற்கனவே லவ் பண்ணுங்களே, இப்பயே கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்ற"...... அதான் நீயே சொல்லிட்டியே ஏற்கனவே லவ் பண்ணனோம்.... ஆனா, இப்ப லவ் பண்ணல" என்று அழுத்தமாக கூறினாள்....
விக்ரம்"அனு நம்ம சண்டைய அப்பறம் பாத்துக்கலாம் இப்போ நாம மேரேஜ் பண்ண தான் நம்ம உயிர காப்பாத்த முடியும்" என்று கூறினான்....
அனு "அப்படின்னா நா செத்து போறேன்... என்னாலே இவன கல்யாணம் பண்ண முடியாது மகேஷ்.. தயவு செய்து என்ன வற்புறுத்தாதே" என்று அழுத்தமாக கூறினாள்..
இப்போ என்ன பண்றதுன்னு தெரியாமல் நிற்க்க அமிர்தா மகேஷ் பார்த்து "என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்று கேட்டாள்...
மகேஷ் அதிர்ச்சியாய் நின்றான்... "இப்போ இந்த ஒரு வழி மட்டும் தான் இருக்கு அதனால் தான் உன்கிட்ட நான் கேட்கிறேன் என்றாள்..
அவனுக்கு என்ன கசக்கவா செய்யும், ஆழ்மனதில் மறைந்திருந்த அவள் மீது ஏற்பட்ட ஈர்ப்பு மேலெழுந்து சரி என்று கூறினான்... அதில் எழுதி இருந்த முறையிலேயே வேல் மேலிருந்த தாலியை எடுத்து அமிர்தாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான்.. தன் கையை வேல் மீது குதித்தி ரத்தத்தை அமிர்தாவின் நெற்றியில் வைத்துவிட்டு இருவரும் சேர்ந்து பெட்டியைத் திறந்துறந்தனர்... பெட்டிக்குள் இன்னொரு பெட்டி இருந்தது..
அதை கண்டு கோவமான அமிர்தா "இதுக்காகவா இவனை நான் கல்யாணம் பண்ணே 'ச்சே' இத வச்சு என்ன பண்றது" என்றும் அழுத்து கொண்டாள்....
மகேஷ் "ஹலோ மேடம்! உன்ன நானா என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னே, நீயா தானே என் கிட்ட கேட்ட... ரொம்ப ஓவரா பேசுற" என்று கோபப்பட்டு இவனும் கத்தினான்...
அனு "போதும் நிறுத்துங்க உங்க சண்டைய.. ஏற்கனவே இருட்ட ஆரம்பித்து விட்டது... அந்தப் பெட்டியை எடுங்க நாம இங்கிருந்து கிளம்புவோம்... பாதுகாப்பான இடத்தில் தங்கிட்டு நாளைக்கு காலைல நம்ம இந்த காட்டை விட்டு வெளியில் போய் விடுவோம்"
"அனு சொல்லுறது சரி ஏற்கனவே ரொம்ப இருட்டிட்டு இதுக்கப்புறம் வெளியில் போக முடியாது.. நாம ஏதாவது ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்கிப்போ" என்று மகேஷ் கூறினான்..
அனு முன்னாடி நடந்து செல்ல... மகேஷ்யும் அமிர்தாவும் பார்வையில் சண்டையிட்டு அவள் பின்னாடி சென்றனர்.. அவர்கள் பின்னாடி அனு பேசிய வார்த்தைகளில் வருத்தம் கொண்டு விக்ரம் நடந்து வந்தான்... அப்போ மரத்தின் பொந்திலிருந்து கால் ஒன்று வெளியில் தெரிந்தது அதை கவனிக்காமல் கடந்து சென்ற விக்ரம் விழ போனான்...
அது என்னவென்று பார்க்க அது ஏதோ கால் மாதிரி தெரிவது போல் இருக்க, அருகில் சென்று அந்த காலை இழுத்தான் அது அனுவென்று தெரிந்தது அவன் "அனு" என்று கத்தினான்...
விக்ரமு அமிர்தாவும் திரும்ப பார்த்தனர்... அங்கு விக்ரம் மடியில் இருப்பது அனு வென்றால் இது யாரென்று பயந்தனர் இருவரும்....
சடைமுடி காற்றில் பறக்க சூறாவளி காற்றோடு , எரிமலையின் வெப்ப காற்றை மூச்சு காற்றாய் விட்டு, அசுரத்தனத்தோடு கண்களில் மின்னும் கொலைவெறியோடு நடந்து வருகிறாள் மிருதன். காற்றினால் கண்ணை கசக்கிக்கொண்டே எதிரில் இருப்பவர்களை பார்க்கிறார்கள்.
பார்த்தவர்களின் கண்கள் வெளியில் தெறித்துவிடும் அளவு விரிந்து பயத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள விழிக்கிறார்கள்.
அங்கு மிருதனும் அனுரூபத்தில் இருந்த அகோரியும் நிற்கிறார்கள்.
மிருதன் "மகிழா ஏனடா! என்னை ஏமாற்றினாய்?"
அகோரி "நான் ஏமாற்றவில்லையடி கண்ணே. நீ மென்மேலும் தப்பு செய்யாதிருக்க தடுத்தேன்"
மிருதன்" எனக்கு இழைத்தது என்னடா?"
அகோரி "உனக்கு நடந்தது கொடுமை தான். அதற்கு அவர்களை பழிவாங்கிவிட்டாய். இந்த பிஞ்சுகள் எந்த தவறு செய்தது?"
மிருதன்" இவர்களை காப்பாற்ற நினைக்கிறாயா?"
அகோரி "என் உயிரானவள் தவறு செய்யாமல் தடுக்கிறேன்"
மிருதன் "இப்போது நீ இவர்களைக் காப்பாற்றலாம். இவர்களின் மரண ஓலை என் கையில் நினைவில் வைத்துக்கொள்."
அமைதி நிலமைக்கு திரும்பியது காடு
அகோரி "விரைவாக செல்லுங்கள். இவ்வூர் எல்லையை தாண்ட வேண்டும் சீக்கிரம் ."
விக்ரம் "ஐயா. தாங்கள் யார்? எதற்கு எங்களுக்கு உதவுகிறீர்கள்.? எங்களைச் சுற்றி என்ன தான் நடக்கிறது.?"
அகோரி"நடந்துக்கொண்டே பேசலாம் வாருங்கள்"
அதற்குள் அனுவும் மயக்கம் தெளிந்து நடக்கிறாள்.
சிவகாமி"விடுவ டீ விடுவ இன்னைக்கு உண் கால உடைக்கல "....
மயில் விழி"அய்யோ ஆத்தா "
சிவகாமி"இந்தாடி நில்லுடி எங்கேடி வீட்ட சுத்துற"
மயில் விழி"அப்பா பாருப்பா இந்த ஆத்தா என்னை அடிக்குது"...கண்ணை கசக்குகிறாள் மயில் விழி.
"இந்தா அம்மா ஏன் என் அடிக்க துரத்துற"....மயில் விழியின் தந்தை சிவராமன்
சிவகாமி"புள்ளையாட பெத்து வளர்த்து வச்சு இருக்கிற குரங்கு சேட்டை அம்புட்டும்"....
சிவராமன்"போ மா அங்குட்டு என் அழகு குழந்த மா"
சிவகாமி"ஆமாடா குழந்ததா இன்னொருத்தன் கையில் குடுக்குற வயசாச்சு இன்னும் குழந்தையாம் குழந்தை"
சிவராமன்"அப்படி என்னம்மா பண்ணுன இப்டி வையுர "
சிவகாமி"அவ பண்ணாத சேட்டையா ஊர்வாண்டுக கூட சேர்ந்த ஊர் சுத்துது... மரம் மரமா தாவுது... இவள் எல்லா பசங்க கிட்டேயும் வம்பு பண்ணுது இவள கொரங்குனு சொல்லாம என்ன பண்ணுறது"
மயில் விழி"அப்பா நா எதும் பண்ணல" அப்பா
முகத்தை சோகமா வைக்கிறாள்
சிவராமன்"அம்மா! ஊருல இல்லாத சேட்டை அஹ் என் மக பண்ணுற அங்குடு போ மா"
சிவகாமி"நீயாச்சு உன் மகளாச்சு"...
சிவராமன்"விழி மா எண்ட நம்ம கிட்ட அவ்ளோ தோப்பு இருக்கு நீ ஏண்டா மத்தவங்க தோப்புக்கு போற"
மயில் விழி"அப்பா உங்களுக்கு தெரியுமா"...கண்ணை சுருக்கி கொண்டே கேட்கிறாள்
அந்த அழகில் மயங்கி
சிவராமன்"தெரியும் தங்கம். சொல்லு மா நீ சொன்னா தோப்பையே உன் சிநேகிதர்களுக்கு சாப்ட தந்தருவேன்
நீ ஏண்டா மத்தவங்க தோப்புக்கு போற"
மயில் விழி"அப்பா திருடி சாப்டுருதுல ஒரு தனி கிக் பா உனக்கு புரியாது பா...கண்ணடித்து கொண்டே பதில் கூறுகிறாள். அவள் தலைய செல்லமாக கலைத்து கொண்டே "அம்மாடி உனக்கு வேற எதும் தொல்லை இருக்கா "...
மயில் விழி"என் பா அப்படி கேக்குறீங்க"....
சிவராமன்"இல்ல மா சும்மதா
செரித்தா.. போய் காலேசுக்கு கிளம்பு"
மயில் விழி" சரிப்பா"
தன் பூப்பாதங்கள் தரையில் படாமல் இரட்டை சடை முன்னும் பின்னும் அவளின் இடையினை தீண்டிக்கொண்டே மான்போல் துள்ளி குதித்து சென்றாள் பூங்காற்று அவள் மயில் விழி.... அவளின் கண்ணில் மயங்காதோர் யாரும் கிடையாது. சந்தனத்தை குலைத்து எடுத்த நிறம் தன் மகளின் அழகினை ரசித்துக்கொண்டு இருந்தார் சிவராமன்.
சிவராமன்-அழகாம்மாள் தம்பதிக்கு பிறந்த பூங்கோதை இவள். மகளை பெற்றெடுத்து தன் காதல் கணவனிடம் கொடுத்து விட்டு சிவனடியை சேர்த்துவிட்டார் அழகாம்மாள்.அன்றிலிருந்து இன்றுவரை தன் மகளை கையிலும் நெஞ்சிலும் சுமந்து அவளின் மகிழ்வே தன் மகிழ்வு என வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்.அவரின் மகிழ்வு காணாமல் போவது தெரியாமல் தன் மகள் கல்லூரிக்குச் செல்லும் அழகை ரசித்துக்கொண்டு இருந்தார்.
பேருந்தின் படியில் தன் சுருள் சிகை பறந்தாட ஒரு கையில் புத்தகமும் மற்றொரு கையில் கம்பியும் பிடித்து கண்களில் வழியும் காதலுடனும் இதழில் உறைந்த சிரிப்புடனும் தன்னவளை கண்களை உருட்டி பேசும் அழகை ரசித்துக்கொண்டும் பாதுகாத்துக்கொண்டும் இருந்தான். மகிழன்.
"டேய் மச்சா" என்ற தன் உயிர் நண்பன் ராமின் குரலில் கலைந்தான்
மகிழன்"சொல்லுடா மச்சா"
ராம்"டேய் இன்னும் எவ்ளோ நாள் தான்டா தூரத்துல இருந்து காதல வளர்ப்ப போய் சொல்லேண்டா"
மகிழன்"டேய் அங்க பாரேன் என் விழி எவ்ளோ அழகா சிரிச்சுட்டே இருக்கா நான் இத சொன்ன அவ சிரிப்பு போயிரும் டா"
ராம்" நீ அவள அவ்ளோ நல்லா பாத்து பேன்னு தெரியும் அப்புறம் ஏண்டா இப்டி சொல்லுறா?"
மகிழன்"உனக்கே தெரியும் என் அப்பா அம்மா என்னைவிட்டு போனதுக்கு அப்புறம் விழி அப்பாதான் இப்பவரை என்னை பாத்துக்குறாங்க. கஷ்டம்னா என்னன்னே தெரியாம வளர்ந்தவட என் விழி அவள எப்படிடா நா கஷ்ட படுத்துவேன்.என் காதல் தெரிஞ்சா சிவராமன் ஐயா மூஞ்சில எப்படிடா முழிப்பேன் நான் "
ராம்" சரி விடுடா"
"மகிழா" எனக் கத்திக்கொண்டே வந்தாள்.. அவனின் காதலுக்கு சொந்தக்காரி மயில் விழி
மகிழன்" சொல்லு விழிமா"
மயில் விழி" டேய் டேய் இன்னிக்கு எனக்கு ஐஸ்கீரிம் வேணும்டா ப்ளீஸ் வாங்கித்தாடா"
மகிழன்" முடியாது விழிமா உனக்கு காய்ச்சல் வந்தரும் "
மயில் விழி" மகி இன்னிக்கு மட்டும் டா என் செல்லம்ல என் தங்கம் ல "என மகியின் தாடையைப் பிடிச்சு கொஞ்சுகிறாள்
அவளின் விழி அழகில் மயங்கி
மகிழன்" சரி பாப்பா ஒன்னு தான் சரியா?"
மயில் விழி"சூப்பரு நீ தான்டா என் மகி செல்லம்"
மகிழன்" விழி உனக்கு என்னை பிடிக்குமா?"
மயில் விழி சிரித்துக்கொண்டே "லூசு மகி பிறந்ததுல இருந்து உங்கூட தானே இருக்கேன் உனக்கு தெரியாதா. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் டா"
மகிழனுக்கு உலகை கையில் அடக்கிய மகிழ்ச்சி.
இவ்வாறு இவர்கள் நாட்கள் செல்ல மகிழனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து சென்றுவிட்டான்.
2 வருடங்களுங்கு பிறகு
மயில் விழியும் சாமிவேலும் காதல் கொள்கிறார்கள்.
சிவராமன்"அம்மாடி விழி"
மயில் விழி" சொல்லிங்கப்பா"
சிவகாமி "அம்மாடி உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்டா. மாப்பிள்ளை நம்ம மகி தான்டா.அவன் ஒரு வாரத்துலவரானாம் இன்னும் வெளியில் போகவேண்டாம்னு சொல்லிடலாம். இங்கே நாம் நிலம் தோப்ப பாத்துகிட்டா போதும். உன்னை நல்லா பாத்துப்பான். நீயும் என் கூட இருப்ப என்னம்மா சொல்லுற."
தன் தந்தையின் கண்ணில் மின்னும் மகிழ்வைக் கண்டு பேச்சு வர மறுத்தன.. சாமிவேலைத் தவிர வேற ஒருத்தன என்னால நினைச்சுக்கூடாப் பார்க்க முடியாது. நம்ம மகிதானே சொன்னாப் புரிஞ்சுக்குவான் என மனதில் நினைத்து "உங்க விருப்பம்" என்றாள் மயில் விழி.
ஒரு வாரம் கழித்து அந்த கொடூர இரவும் வந்தது. தன் காதல் கைசேர்ந்த சந்தோஷத்தில் மிதந்து வந்து கொண்டு இருந்தான் மகிழன். அப்போது காட்டுக்குள் ஒரு கொடிய சத்தம்
மகிழன்"என்ன சத்தம் இது "
மயில் விழி"வரேன்டா உன்னைக் கொல்ல வரேன்டா"
மகிழன்"என் விழி குரல்போல் உள்ளதே "
சத்தம் கேட்கும் திசைக்கு ஓடுகிறான் .
அவன் கண்கள் பிளந்துவிடும் அளவிற்கு விரிகிறது. அவன் கண்டது ஒரு பெரிய மரத்தின் கீழ் உடைகள் அற்று, எங்கும் எலும்பும் மண்டை ஓடுகளுமாய் காட்சியளிக்க பலவித விலங்குகளின் தலையும் உடலும் தனிதனியாக கிடக்க இரத்தவாடை குலை குமட்ட வட்டமாக அகோரிகள் அமர்ந்து ஏதோ முனுமுனுக்கிறார்கள்.. அவர்களுக்கு நடுவே நெருப்பு வட்டத்தில் கண்களில் குரோதம் வழியே அமர்ந்து இருக்கிறான் அவள் மயில் விழி
மகிழன் "விழிஇ இ இ இ "
அவனின் திடீர் கத்தலில் எல்லாரும் திரும்பி பார்த்தனர்.
மயில் விழி" மகி எல்லாம் போச்சு மகி"
மகிழன்" என்னடி பண்ணுற "அதிர்ச்சி குறையாமல் கேட்டான...
"என்னையும் என் வாழ்க்கையும் இழந்துட்டே"
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியடைந்து இதெல்லாம் வேணா விழிமா நாம போலாம் வா. நான் உன்னை பார்த்துகிறேன் .நா உன்னை காதலிக்கிறேன் விழி மா எப்போ லவ் பண்ண ஆரம்பிச்சேன் தெரியல . ஆனா என் உயிரவிட அதிகமா நேசிக்கிறேன் டி உன்னை."
கண்களில் வழியும் நீரோடு முன்னாடியே ஏண்டா சொல்லல இந்த கெட்டுப்போனவ உனக்கு வேணா.நா அவங்கள பழிவாங்கியே தீருவேன்.
மகிழன்"அப்ப நானும் உன் கூட இருக்கேன்"
விழி" இல்ல மகி உனக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு போ"
மகிழன்" நீ தான் அது விழி இப்பவும் நீதான் எனக்கு முக்கியம் நான் எப்பவும் உன் கூட இருப்பேன் இது என் காதல் மேல் ஆணை."
"இதான் நடந்துச்சு அப்புறம் ஊர்ல மயில் விழி ஓடி போய்ட்டானு எல்லாரும் பேச ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க அப்பா அவமானத்துல தற்கொலை பண்ணிட்டாங்க. தன்னோட மகன், பேத்தி போன துக்கத்துல பாட்டியும் செத்துட்டாங்க. நா வேலை பாக்குற இடத்துலயே இறந்துட்டேனு சொல்ல வச்சுட்டு என் விழிகூட அகோரியா மாறிட்டேன்."
நிமிர்ந்து பார்க்க ஊரின் எல்லை வந்துருச்சு "இனி நான் சொல்லுறத கேளுங்க.. நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்... உங்க முடிவு இன்னும் இரண்டு நாளுல அதுவும் அந்த கோவில்ல தான் இருக்கு, உங்க விடையும் இருக்கு.. நா போறேன்" காத்தோடு காத்தா மறைஞ்சு போயிடாரு...
நால்வரும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இதில் நாங்கள் எங்கு இருந்துவந்தோம் என புரியவில்லை அவர்களுக்கு. மகேஷ்" காதல்னா இப்டி இருக்கனும்." என்று கூறினான்..
அனைவரும் கோவிலுக்கு செல்ல புறப்பட்டனர்...
1. பெட்டியில் என்ன இருக்கிறது?
2. இரண்டு நாளில் என்ன நடக்கும்?
3. கோவிலில் உள்ள அம்மா யார்?
மிருதனா.....? மனிதர்களா.......?
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro