
7- அருள்மொழி காதலி
அத்தியாயம் 7
அருள்மொழி காதலி.
அன்னம்மாள் கூறியதை கேட்டதும்
அதிர்ச்சி அடைந்தனர் பொன்னுத்தாயும் அந்த பாயும்.
"என்னம்மா பேசுறீங்க. புரிஞ்சு தான் பேசுறீங்களா. வேற எதாச்சும் வழி இருக்கானு யோசிக்க மாட்டீங்களா. "
"எனக்கு எங்க புள்ளைங்க ரொம்ப முக்கியம். அதுவுமில்லாம ஒரு பெண்ணோட சாபத்தை வாங்கிட்டு எங்கபோய் ஒளிஞ்சாலும் அந்த சாபம் விடாம துரத்தும் அதுதான் இப்பவும் நடந்திருக்கு. அவனுங்களால எங்க புள்ளைங்களையும் பழிவாங்க துடிக்குது அந்த மிருதன். "
"என்னம்மா பேசுற நீ.. எங்களை கொன்னிடு எங்க புள்ளைங்க விட்டுடு சொன்னா கேட்குறதுக்கு அது என்ன மனுசனா.. மிருதன்மா.... நினைக்கவே முடியாத வாழ்க்கை வாழுறவங்க.. அவங்ககிட்ட மனுஷங்களுக்கான எந்த குணத்தையும் எதிர்பார்க்க முடியாது.. "
"பாய்... நீங்க என்ன பண்ணுவீங்கனு எனக்கு தெரியல... ஆனா எங்க புள்ளைங்களாவது நல்லாயிருக்கணும் சாமி.. அதுக்கு ஏதாச்சும் வழி பண்ணுங்க" என்றவள் கையெடுத்து கேட்டிட
"என்னமா பண்ணுற... சாமிக்கோ பிசாசுக்கோ ஏதாவது பண்ணனும்னா நான் பண்ணுவேன். ஆனா நீ உருவமா இருக்க மிருதனை அடக்க கேட்குறியே.. ஒரே ஒரு வழி தான் இருக்கு.. உம்புள்ளைங்கள நாட்டைவிட்டு கடல்தாண்டி அனுப்புங்க... அவங்க இனி இந்தநாட்டுக்கே வராத மாதிரி பண்ணுங்க..." என்றிட,
பொன்னுத்தாயோ "அப்படி பண்ணிட்டா எங்க புள்ளைங்கள அந்த மிருதன் எதுவும் பண்ணாத" என வினவினார்.
"கட்டாயம் உங்க வழிமுறைகளை(வாரிசு) பழிவாங்கும்... அவங்க இந்த ஊருக்கு வரும்போது.. ஒரு கட்டத்துக்கு மேல அவங்களே வரக்கூடாது நினைத்தாலும் அந்த மிருதன் வரவைக்கும் இந்த சாபம்நிறைந்த நிலத்தில். "என்றிட தாய்மார்களுக்கோ கிலி கூடியது.
இருவரும் அப்போதைக்கு நினைத்தது தற்போது பிள்ளைகள் காப்பாற்றபட்டால் போதுமென்பதே... கடல்தாண்டி சென்றுவிட்டால் காலனும் காணாமல் போய்விடுவான் என நினைத்தனர். ஆனால் காலன் அவர்களையே தொடர்வான் என்பதை அவர்கள் அறியவில்லை.
"பாய்... எங்க புள்ளைங்க கூட நாங்களும் வேற நாட்டுக்கு போயிட்டா எதாச்சும் பிரச்சனையாகுமா "என அன்னம்மாள் பிள்ளைகள் தாயின்றி தனியே தவிக்குமே எனும் எண்ணத்தில் கேட்க பாயோ,
" என்ன பொண்ணு பேசுற நீ... சித்தம் கலங்கிவிட்டதா... உன் பரம்பரையே வேரறுக்க காத்திருக்கிறது அந்த மிருதன். மிருதனின் பழிவெறியை மேலும் ஏற்ற போகிறாயா நீ." என்றிட
அதற்கு பதில் கூறும் தைரியம் பெண்ணவளுக்கு இல்லை.
பெண்கள் அமைதியாகிட அவரே தொடர்ந்தார்.
"நீ ஈன்றெடுத்த மகவுகளை
நீலங்கள் தாண்டி
நீண்ட தூரம் அனுப்பிவிடு.
நிறைவான மனதுடன் திரும்பிடு
நின் குலம் காக்க வழியமைக்கிறேன்
திழைத்திடும் உன் குலம்
உன்வழியே" என்று வாக்குரைக்க தான் உயிர்விட்டாலும் தன் மக்கள் உயிரோடு இருந்திடுவர் எனும் நம்பிக்கையில் தோழிகள் இருவரும் தங்கள் வீட்டிற்கு வந்தனர்.
ஸ்ரீதர் முன்னமே அமெரிக்கா சென்றிருக்க அமராவதி மாதவி இருவரையும் கிறிஸ்தவ பாதிரியாரின் உதவியுடன் வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டி நின்றனர். இவர்களின் நிலை அறிந்த பாதிரியாரும் பிள்ளைகளின் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். இருவரும் தங்கள் கணவர்களிடம் எதுவும் கூறவில்லை.
கணவன்மார்களுக்கு அனுப்பும் கடிதத்தில் யாவரும் நலம் என கூறி அவர்களை நம்பவைத்தனர்.
அமராவதி, மாதவி இருவரும் இத்தாலி சென்றனர்.
சிதறிப்போனது சின்னகுடும்பம் அது.
பிள்ளைகள் வெளிநாட்டிற்கு சென்ற மறுநாளே தோழிகள் இருவரும்
ஆசாத் கபிர்பாயிடம் வந்தனர். அவரும் ஏதேதோ கூறி இருவரையும்
ஒரு காட்டுபகுதியினுள் அழைத்து வந்தார்.
அங்கு பூஜைக்கு
தேவையான அனைத்தும் இருக்க
அன்னம்மாள் பொன்னுத்தாயி இருவருக்கும் புரிந்தது தங்களுக்கான இறுதிசடங்குக்கான வேலைகளே இதுவென்று. மனதை கல்லாக்கிகொண்டு பிள்ளைகளின் வாழ்வுசிறக்க வேண்டி வந்தவர்கள் நிறைவாகவே உயிர்விட துணிந்தனர். ஆனால் இங்கு தான் நேர்ந்தது அந்த தவறு. காலத்துக்கும் தொடர்ந்த தவறு.
பொன்னுத்தாயின் கழுத்தை அறுத்து கொன்றவர் அவளின் ரத்தத்தை எடுத்து ஒரு சிறு குடுவையில் அடைத்தார். இதை கண்டதுமே
அன்னம்மாளின் சகலமும் நிலைகுலைந்து போனது. இருந்தும் தைரியமாய் உயிர்தியாகம் செய்யவந்தவளை திகைத்து தான் பார்த்தார் அந்த பாய்.
ஒரு பெண்ணுக்குள் இத்தகைய தைரியமா என்று. அன்னம்மாளின் கரத்தினில் கீறலை ஏற்படுத்தி அவளின் இரத்தத்தை அங்கு எரிந்து கொண்டிருந்த தீயில் சொட்டு சொட்டாக ஊற்றினார்.
இரண்டு மூன்று சொட்டாக ஊற்றும் போதே அந்த மிருதன் அங்கு பெருங்குரலெடுத்து ஊளையிட்டு கொண்டே வந்தது.
அதன் வருகையை உணர்ந்தவர் பொன்னுத்தாயின் இரத்தத்துடன் அன்னம்மாளின் இரத்தத்தையும் கலந்து குடுவையை இரும்பு பெட்டியினுள் அடைத்து எவ்வித தீயசக்தியாலும் திறக்கமுடியாத படி மந்திரங்கள் ஓதி அடைத்தார்.
அப்பெட்டியை பாறையின் இடுக்கினில் மறைத்தவர்
அன்னம்மாளையும் கழுத்தில் இரும்பு கம்பியால் குத்தி குற்றுயிராய் விட்டுவிட்டு வந்தார்.
குற்றுயிராய் கிடந்த அன்னம்மாளின் கண்களோ பீதியில் நிறைய வந்த மிருதனின் விழிகளில் இரத்தம் வழிய கிடந்த இரு உடல்களையும் பார்த்து நிறைவானது போல் ஒருமகிழ்ச்சி. அன்னம்மாளின் அருகே சென்று அவளின் கண்களை பார்க்க அக்கண்களில் பயம் அப்பட்டமாக தெரிய அதை கண்டு காடே எதிரொலிக்கும் வண்ணம் சிரித்தது.
குற்றுயிராய் கிடந்தவளும் கைகளை கூப்ப
உன் எண்ணம் நான் அறிவேன்.
நீ உயிர்விட்டால் உன்மகவுகள் பிழைக்குமோ என கேட்டிட அன்னம்மாளின் கண்களோ கண்ணீர் சிந்தியது. உன் மகவுகளுக்காக தானே இந்த தியாக மரணம். உன்மகவுகள் பிழைத்து கொள்ளும். ஆனால் உன்மகவுகளின் மகவிற்கும் எனக்கும் பெரும்போராட்டம் நடக்கும்.
என்னவென்றும் அறியாது ஏதும் புரியாது என்னிடம் அவர்கள் தவிப்பர்.
தவிக்க செய்வேன். அதை உன்கண்கொண்டு காணச்செய்வேன். அதுவரை உங்கள் குருதி இருந்திடும் இரும்பினூடே. என சபதமிட்டு மிருதன் சொல்ல பெருமூச்செடுத்து பிரிந்தது அன்னம்மாளின் இறுதிமூச்சு.
மறுநாளைய செய்தியில் மலைப்பிரதேசங்களில் கடும்பனி.
குளிர் தாங்கா நிலையில் தமிழக வீரர்கள் இருவர் உயிரிழப்பு எனும் செய்தி வந்தது. காட்டில் இருவர் உடலும் சிதைந்திட மலையிலிருந்து கொண்டுவரப்பட்ட நண்பர்கள் இருவரின் உடல்களும் தீக்கிரையாக்கப்பட்டது மலையினிலே... மிருதனின் கோட்டையான மலையினில்.
மிருதனின் வாக்குபடி ஸ்ரீதர் மாதவி அமராவதி நீண்டாயுசுடன் வாழ்ந்து தங்கள் வாழ்வை முடித்தனர்.
ஆனால் மூவருக்கும் கிடைக்காத பாக்கியம் தங்கள் பிள்ளைகளின் உடனிருப்பு. மூவரும் ஏதேதோ முறையில் தங்கள் பிள்ளைகளை உயிருடன் பறிகொடுத்திருந்தனர்.
அமெரிக்காவில் இருந்த இருபத்தி எட்டு வயதான ஸ்ரீதர் தங்கையை தேடி சென்னை வர பாதிரியார் அமராவதி மாதவி இருவரின் இத்தாலி முகவரியை கொடுத்து அனுப்பினார்.
அவனும் சந்தோஷமாக இருவரையும் தேடி வர அங்கோ அமராவதி மட்டுமே குடும்பத்துடன் இருந்தார். மாதவி ஒரு இந்தியரையே காதலித்து அவரையே திருமணம் செய்ததாகவும் அவருடன் இந்தியா சென்றதாகவும் கூற ஸ்ரீதரும் அமராவதியையும் குடும்பத்துடன் அழைத்து கொண்டு தங்கையை காணவந்தான்.
ஸ்ரீதர் அமெரிக்கா பெண்மணியை மணந்து அழகான ஆண்குழந்தையுடன் தன் வாழ்வை வாழ்ந்து வந்தான்.
அமராவதிக்கு ஒரு மகனும் மகளும்.
மாதவிக்கு ஒருமகள்.
டெல்லி வந்த ஸ்ரீதர் அமராவதி குடும்பத்தினர் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கினர். அங்கு நடந்த மதகலவரத்தில் தப்பிக்க நினைத்து வெளியே வந்த குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளையும் தவறவிட்டவர்கள் வாழ்க்கை துணைகளையும் இழந்தார்கள். அனைவரும் ஆளுக்கொரு திசையில் சிதறடிக்கபட அமராவதியும் ஸ்ரீதரும் அங்கனமே பிரிந்தனர்.
இந்தியா வந்தவடனேயே ஏன் இப்படி நடந்தது என்று யோசிக்கவுமில்லை இருவரும். அதன்பிறகு அமராவதி ஸ்ரீதர் இருவரும் என்னவாகினர் என்பதை இருவரும் அறியவில்லை.
அவர்கள் எங்கோ வாழ்கிறார்கள் எனும் நம்பிக்கையில் காலத்தை நகர்த்தினர்.
மாதவி தன் கணவரின் வீட்டிற்கு செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டு கணவன் பலியாகிட இவளது காலும் இழந்து மனபாரம் கூடி பித்துபிடித்தவளாகிட அவளது குழந்தை அனாதை இல்லத்தில் ஒப்படைக்கபட்டது.
ஆகமொத்தம் மிருதனின் வாக்குபடி
அன்னம்மாள் பொன்னுத்தாயின் மகவுகள் மூவரின் உயிரும் இயற்கையாய் பிரந்ததே அன்றி மிருதனால் எவ்வித பாதிப்பும்ஏற்படவில்லை. அவர்களின் உடனிருந்தவர்களே பாதிக்கபட்டு உயிரையும் விட்டிருந்தனர். இவையாவும் காலத்தின்சூழ்ச்சியா மிருதனின் சூழ்ச்சியா என்பது தான்அறியப்படவில்லை.
மதகலவரத்தில் காணாமல் போன குழந்தைகள் அனாதை ஆசிரமத்தில் சேர்க்கபட நால்வரும் இணைந்தனர் அனாதைகளாய் அனாதை இல்லத்தில் மகேஷ்,விக்ரம், அமிர்தா, அனு என்னும் பெயரில். அங்கும் பிரிக்க பட்டனர். அனுவும் விக்ரமும் அனாதைகளாகவே இருந்திட மகேஷூம் அமிர்தாவும் தத்தெடுக்கபட்டனர் இரு குடும்பங்களால்.
வருடங்கள் கடந்திட
காலங்கள் நகர்ந்திட
படிப்பும் பதவிகளும் பெற்றிட
இதோ மீண்டும் எமனின் முன்னால்
அன்னம்மாள் பொன்னுதாயின் வாரிசுகள்.
காப்பாற்றுவார்களா தோழிகள் தங்கள்வாரிசுகளை???
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
அமிர்தாவின் இரத்தம் புசிக்க ஆசைகொண்ட அந்த கோர உருவம் தான் விக்ரம் மகேஷின் தாயின் சந்திப்பினையும் ஏற்படுத்தியது. கடைசி விதிவிளையாட்டின் ஆரம்பமும் இங்கே துவங்கியது.
நண்பர்களுடன் இணைந்தே சென்னை வரலாம் என நினைத்திருந்த விக்ரம் திடீரெனஏதோ தோன்ற பணம் அதிகமாக செலுத்தி டிக்கெட் பெற்று அன்றுமாலையே இந்தியா நோக்கி புறப்பட்டான்.
காலையில் வந்து சேர்ந்தவனுக்கு கூகுள் மேப் தவறானவழிகாட்ட வந்து சேர்ந்தான் மகேஷ் அனு அமிர்தா சென்ற கோவிலுக்கு. அங்கே கோவிலின் பின்புறத்தில் மயங்கிய நிலையில் இருந்த மகேஷின் தாயை கண்டவன் முதலுதவி செய்து அவரை அவரின் வழிகாட்டுதல் படி வீட்டிற்கு அழைத்துவந்தான்.
கார் டிரைவருக்கு காசு கொடுத்து அனுப்பியவன் மகேஷின் வீட்டிற்குள் நுழைந்தான். ஹாலில் முறைத்து கொண்டு நின்றிருந்தாள் அனு.
மகேஷிடம் தன்னை அறிமுகபடுத்தியவனை கண்ட மகேஷின் மனமோ அப்போ அந்த கடைசியானவன் நீதானாடா
ஏன்டா நீங்களா வந்து வந்து வலைல சிக்குறீங்க என கேட்டிட அதனை அப்போதைக்கு தள்ளி வைத்தவன்
அவர்களுடன் ஒன்றிபோனான்.
அதிலும் விக்ரமின் பார்வை அனுவிடம் படிவதையும்
அனு விக்ரமை முறைப்பதையும் கண்டவன் என்னமோ இருக்கு. இவங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்குமோ எனும் யோசனையடனே இருந்தான்.
அந்நேரம் கிச்சனில் கண்ணாடி உடையும் சத்தம் கேட்க அங்குசென்று பார்க்க
அமிர்தா விரல்களில் கீறலுடன் கண்ணாடிதுகள்களை எடுத்து கொண்டிருந்தாள்.
அதை கண்டு பதறிய மகேஷ் அவளின் கரம் பிடித்திட அவளோ கையை உதற இரத்தமோ சொட்டு சொட்டாய் அங்குமிங்கும் சிதறியது. சிதறிய இரத்தத்தை கண்டு சிரித்தது அந்த கோர உருவம்.
சிதறிய இரத்தத்தை கண்டதும்
பயங்கொண்ட மகேஷின் தாய்
" கண்ணா மகேஷ்... அமிர்தா இரத்தம் இருக்கும் இடத்தில் எல்லாம் தண்ணீர்தெளி. அவ இரத்தம் தனிஇரத்தமா எங்கேயும் இருக்ககூடாது என்றிட,
அவனுக்கு மர்மங்கள் நடப்பது தெரிந்து இருந்ததால் தாயின் கூற்றை மறுக்காமல் உடனே பக்கெட்டில் தண்ணீர் கிச்சன் முழுவதையும் தண்ணீரால் நிறைத்தான். அமிர்தாவின் இரத்தம் நீருடன் கலந்தது.
அதை கண்டதும் வெகுண்டெழுந்த கோர உருவம் தன் சத்தத்தை உரக்க எழுப்பியது.
வௌவால் கூட்டமாய் சத்தமெழுப்புவதை போன்று வீட்டிலிருந்தவர்களுக்கு கேட்க
மகேஷின் தாய் தான் பதறினார். ஒரு கணம் கவனம் தவறினால் மரணம் நிச்சயம்.
"எல்லாரும் நான் சொல்றதை கேளுங்க... நாலு பேரும் ஒரு காரணத்துக்காக இங்கே சேர்க்கபட்டிருக்கீங்க... இப்போ யாருக்கும் நான் எந்த விளக்கமும் சொல்ல போறதில்லை. நீங்க நாலுபேருமே ஆபத்தில இருக்கீங்க. உங்க நாலு பேரையும் சேர்க்கிறதுக்காக தான் உங்களை சுற்றி உங்களை அறியாமலே பல அமானுஷ்யங்கள் நிறைவேறியது."
"இப்போ நீங்க நாலு பேரும் சேர்ந்துட்டீங்க. என்ன ஏதுனு யோசிக்காம போய் படுங்க. பயப்படாம இருங்க. இந்த வீட்டுக்குள்ள இருக்கிற வரைக்கும் உங்களுக்கு எதுவும் நடக்காது.
ஆனா நாளை காலையிலே வீட்டை விட்டு வெளியே போகணும். நீங்க செய்ய வேண்டியமிகப்பெரிய காரியம் இனி தான் இருக்கு" என்றிட,
யாருக்கும் எதுவும் புரியவில்லை. தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் ஏதேதோ அவர்கூறிட
மகேஷை தவிர மற்ற மூவருக்கும் பயமானது. மகேஷிற்கோ சந்தேகமே வந்தது.
அதுவுமில்லாமல் தாயையும் இதில் உபயோகபடுத்துதா அந்த கோர உருவம் எனயோசித்திட
அவன் அறியவில்லை கோவில் கருவறையில் இருந்த தாயே அவனின் தாய் வடிவில் வசந்தம் வீச காத்திருக்கிறாள் என்பதனை.... வசந்தத்திற்கு முன் வரும் வாடை கொண்ட காற்றை (துன்பம்) தாங்கும் சக்தி தருபவளும் அவளே...
மகேஷ் தன் தாயிடம்" அம்மா என்னம்மா சொல்லுறீங்க.. நாங்க நாலு பேரு எதுக்கு சேரணும்.எங்களை சுற்றி என்ன நடக்குது? அது எப்படி உங்களுக்கு தெரியுது என கேட்க மௌனமே சாதித்தார் அத்தாய்.
ஆனால் நினைவுகளோ கோவிவில் தான் மயங்கிவிழும் முன் நடந்த நிகழ்வு நினைவிற்கு வந்தது.
மகேஷ் தோழிகள் இருவரையும் தேடிச்செல்ல
அங்கிருந்த கருவறையில் ஒருவித ஒளி தோன்றியது. ஏதோவொரு உந்துதலில் அந்தபுறம் திரும்பிய
தாயின் கண்களில் ஒளிபட
ஒளியை நோக்கி தன்நடையை துவங்கினார் அவர்.
ஒளியோ நீண்டு கொண்டேயிருக்க இவருக்கோ இவ்வுலகம் மறந்துபோனது. ஏதோவொரு உலகத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தார்.
பல பல நிகழ்வுகள் நொடிபொழுதில் நினைவுகளில் கடந்துசெல்ல
சாபமும் பகையும் பழிவெறியும்
தெரிந்திட தோழிகளின் தியாகமும் தோன்றிட அது நிலைத்து போனது அவரின் நினைவுகளில்.
அந்த தியாகத்திற்காகவே அவர்களின் வாரிசுகளை காப்பாற்ற தன்னாலான வழிகளை செய்ய வேண்டுமென்று நினைத்தவர் தீடீரென விழிப்பு தட்ட யாரோ முகத்தில் நீர் தெளிப்பது உணர்ந்ததும் கண்களை திறக்க கோவிலின் பின்புற வாசலில் விக்ரம் தான் அவரை எழுப்பி கொண்டிருந்தான்.
இனி அடுத்த அத்தியாயத்தில் ...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro