Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயவன் 3

அனைத்து சடங்குகளுடன் கூடிய ஆர்பாட்டங்களும்,சண்டைகளும்,

முடிய!!! நேரமும் யாருக்கும் நிற்காமல் பனித்துளி போல் கரைய இரவு நேரமும் வந்தது!! அனைவரும் அறக்கப்பறக்க ஏதோ வேலையில் மூழ்கி இருக்க.  அனைவரையும் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு இருந்தவன் தன் அருகில் வந்த பழனியிடம்(இழையின் தாய்)) "மணமக்கள் இருவரையும் கவனிக்காமல் தாங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் அத்தையே!!!..." என தூய செந்தமிழை தனக்கு தெரிந்த பாஷையில் கேட்டவனை ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்து நமட்டு சிரிப்புடன் "தங்களுக்கு பதிலளிக்கும் நிலையில் நான் இப்போது இல்லை மருமகனே!! சிறுது நேரம் என்னை தொந்தரவு செய்யாமல் உங்கள் வேலையில் முழு கவனத்தையும் செலுத்துங்கள்.."

"எனது வேலையா??? அது என்னது அத்தையே???"

"என் புள்ளையைப் பார்த்து வழியறதை சொன்னேன்!! சும்மா சும்மா என்னை கூப்பிட்டுகிட்டு இருக்கறத நிறுத்திட்டு! அவகிட்ட போய் பேசு போ!!" என பழனி சொல்ல...

"அப்படியே அந்த குந்தாணி என்கிட்ட பேசிட்டு தான் வேற வேலை செய்வா பாரு" என மனதில் நினைத்து "அதை விட்டால் வேறு வழி இல்லை!! தமைக்கையே தெரிந்தே பாலங்கிணற்றில் விழுந்துவிட்டேன்!! இப்போது உன் மகளின் மூஞ்சியை மட்டும் தான் பார்க்கவும் வேண்டும் பேசவும் வேண்டும்..! வேறு வழியே இல்லை." என சோக கீதம் வாசிக்க

"எம்மா இந்த ஆல் இண்டியா ரேடியோவை ஆப் பண்ணுமா எப்ப பார்த்தாலும் தூய தமிழில பேசறேன்னு நம்ம கழுத்தை அறுத்துக்கிட்டு கிடைக்கு" ((இப்ப பேசற தமிழுக்கே அர்த்தம் புரிய ஒருவருசம் ஆகும் இதுல செந்தமிழ் வேறயா))) என கத்தினாள் விழி...

"என்ன கொழுந்தியா?? கொழுப்பா?? மாமன்னு கொஞ்சமாவது மரியாதை இருக்கா உனக்கு...ஒழுங்கா மாமன்னு கூப்பிடு"என மிரட்டல் போல் சொல்ல

"என்னது  மாமாவா!!! பாருடா  அப்படியெல்லாம் மரியாதையும் தர முடியாது மாமான்னு கூப்பிட முடியாது! ஓடியே போயிரு!!  மாமான்னு கூப்பிட்ட வேணுமாம்ல மாமானு"

"ஏன் மாமான்னு கூப்பிட்டா அரைக்கிலோ!! இல்லைனா முக்கால் கிலோ!!! குறைஞ்சு போயிட போறயா" என கேட்டவனின் அருகில் வந்து நின்றவள்

"ஓஒ உனக்கு மரியாதை தான வேணும்!!  ஹிம்ம்ம்ம்.....மாமான்னு கூப்பிட்டா ஏதோ மசமசன்னு இருக்கு... நான் வேணும்னா மச்சான்னு  கூப்டறேன்!! என கூறிகொண்டே அவனின் அருகில் சென்றவள் அவனின் இரு கன்னங்களையும் கிள்ளிக்கொண்டே "என் ஆசை மச்சான்ன்!! என் அழுக்கு மச்சான்.. என் கருவா மச்சான்"என விழி கொஞ்ச கொஞ்ச

சிரித்து கொண்டே அவளின் கையைத்  தட்டி விட்டவன் " என்ன கொழுந்தியா நக்கலா!! என் கலரையே பழிக்கறியா!! நாங்களெல்லாம் அஜித் கலரு இல்லைன்னாலும்!!! விஜய் கலருலயாவது இருக்கோம்!! ஆனால் நீ மைதா மாவு கலருல வெள்ளை வெள்ளையென்னு இருக்க!! ஏதோ தோல் நோய் வந்த புள்ளைன்னு எவனும் கட்டிக்க மாட்டான்னு சொல்லீற போறான்!! அப்பறம் நான் தான் போன போகுது நினைச்சு உன்னையும் கட்டிக்கிடனும்..." என காலரை தூக்கிக்கொத்தாக   கூற

"ங்.....ங்கே....ஒன்னே வைச்சே சமாளிக்க முடியுமான்னு தெரியலை!! இதுல இந்த மூஞ்சிக்கு இரண்டு கேட்குதாம்!! போ மச்சான் காமெடி பண்ணாமல்.."

"நாங்கெல்லாம் ஒன்னு இல்ல இரண்டு இல்லை!! ஏழு வைச்சு பேசியே சமாளிப்போம்"

"இதோடா..உன்கிட்ட பேசி என்னால சமாளிக்க முடியாது. எனக்கு வெகு வேலை கிடைக்கு..!! நான் இப்ப மலையேறங்குறேன். இப்போதைக்கு என்னை தேட வேண்டாம் மச்சான்" என்றவளிடம்

"இதோ பாரு கொழுந்தியா!!!மச்சான் துணையில்லாமல் மலையேற முடியாது தெரியும்ல!!" என காலரை தூக்கி சொல்ல..

"யோவ் டயலொக்கை மாத்தி சொல்ற"

"அடி ஆத்தி என்ன போசுக்குன்னு யோவ்ன்னு சொல்லிட்டா..."என மனதில் நினைத்தவன் வெளியில்

"அக்கா  மகளே அருக்காணி!! அங்க பாரு...உன் அக்கா குந்தாணி கூப்டறா! போ போயி என்னனு கேளு போ மா போ!"

"என்ன அருக்கானியா!!! யோவ் இரு டி என்னன்னு கேட்டுட்டு வந்துட்டு உன்னை பார்த்துக்கிறேன்" என மிரட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் பூவிழி..

"அடேய் மகேஷ் சட்டுன்னுக் கடையை சாத்து!! இல்லை இந்த அருக்கானி  உன்னை ஒரு வழி பண்ணிடுவா கிளம்பு டா..!" என கூறிகொண்டே நகர்ந்தவனை "என்ன மாமா என் தங்கச்சிக்கு பயந்து  கிளம்பி போறீங்க போல.."

"அதெல்லாம் ஒன்னும் இல்லை பூவான்!! இங்கயே எவ்வளவு நேரம் தான் இருக்கறது அதான் அப்படியே காலாற நடந்துட்டு வரலாம்ன்னு தான்...' என சமாளிக்க

"

நம்பிட்டேன் மாமோய்ய்ய்..."

ஈ ஈ ஈ என இழித்தவன் ஒன்னும் இல்லையே பூவான்..." என கூறி அங்கிருந்து விலகி சென்று வயல் காட்டின் வரப்பில் நின்று கொண்டான். அந்த இருட்டிலும் நிலாவின் ஒளியில் பளிச்சென்று மின்னியது அந்த கூக்கிராமம்!! ஏதோ ஏதோ நினைத்து கொண்டு இருந்தவன்  பழனியின் குரலில் தன் நினைவிற்கு திரும்பினான்..

"என்ன க்கா .. சொல்லு" என கேட்டவனை

"டேய் நாளைக்கு பிலைட் ஞாபகம் இருக்குல்ல"

"ஹான் இருக்கு இருக்கு..."

"அப்போ சீக்கரம் போ டா சித்தப்பா கூட படுத்து  தூங்கு டா.."

"என்னது தூங்கறதா.!! அதுவும் அப்பா கூடயா... என்னக்கா விளையாடறயா"

"நான் என்ன டா விளையாடனே.."

"பின்ன எனக்கு கல்யாணம் ஆயிருச்சு! இப்போ எனக்கு ஃபஸ்ட் நைட் வேற!! நீ என்னடானா அசால்ட்டா அப்பா பக்கத்தில போயி தூங்குன்னு சொல்ற"என கூறியவனை தன் வாயில்  கையை வைத்து கொண்டு "அடப்பாவிபயளே விட்டா என்னை முப்பத்தி எட்டு வயசுலயே  பாட்டியாக்கிருவப் போல பிச்சுடுவேன் பிச்சு. போ டா போ!! போயி அப்பா கூட தூங்கு.."

"இப்ப மட்டும் உனக்கு என்ன இளமை ஊஞ்சல் ஆடுதா நீ எப்பவோ கிழவி ஆயிட்ட.." என கூறியவனை

முறைத்துகொண்டே "போ டா என் வேலையை விட்டுட்டு உன்கிட்ட வந்தேன் பாரு என்னை சொல்லணும்"

"அக்கா என் செல்லம்ல்ல!!! என் பட்டு குட்டில்ல!!! என்னை நம்புக்கா!! நான் உன் பொண்ணை எதுவும் பண்ண மாட்டேன்!! நல்ல பையனா இருப்பேன் கா.!! அவ காலையில இருந்தே எங்கிட்ட ஒரு வார்த்தை பேசவேயில்லைக்கா!! இப்பவும் பேசலைனா இன்னும் மூணு வருஷம் பேச முடியாது அக்கா..!! அவளும் பேச மாட்டா.."என கெஞ்சலுடன் கேட்க..

"சரி சரி ரொம்ப கெஞ்சாத!!! போ அவ ரூம்ல தான் இருக்கா!!!"

"அம்மா கேட்டா என்ன சொல்லுவ அக்கா'

"மாமா கூட தான் தூங்கறான்னு  சொல்லிறேன்...!"

"என் செல்ல அக்கா..!!உம்மாமா....." என்றவன் துள்ளலுடன் அங்கிருந்து ஓடினான்

"இந்த மூணு வருஷ இடைவெளியிலாவது இவ அவனை புரிஞ்சுக்க ட்ரை பண்ணனும்னு கருப்பா!!!!... நீ தான் துணை!! என் புள்ளைங்க ரெண்டு பேரையும் சேத்தி வைக்கணும்.. அப்படி சேத்தி வைச்சுட்டா!!! என் புருசனுக்கு மொட்டை அடிக்கிறேன் கருப்பா" என வாய்விட்டு வேண்டிக்கொள்ள

"என்னது எனக்கு மொட்டை  அடிக்கிறயா!! யார கேட்டு டி இப்படியெல்லாம் வேண்டுதல் வைக்கிற நீ"

"ஐயோ ஏங்க மாமா நீங்க எப்போ இங்க வந்தீங்க..நான் சும்மா ஏதோ பேச்சுவாக்குல சொல்லிட்டேங்க..."

"நீ தனியா நின்னு கருப்பனை கூப்பிடும் போதே வந்துட்டேன் டி.."

"ஓ அப்படிங்களா மாமா!! சரீங்க வாங்க மாமா வீட்டுக்குள்ள போலாம்"

"என்னமா மரியாதை தர மாதிரி நடிக்கிறா.... இவளுக்ககிட்ட ஒரு மாசம் ஸ்பெஷல் கிளாஸ் போகணும் குரு... அப்போதான் நம்மலும் இடத்துக்கு தகுந்த மாதிரி பேச முடியும்..!!

"என்னங்க.." சற்று அழுத்தி கூப்பிட

"வந்துட்டேன்டி" என கூறி பழனியின் பின்னாலே நடந்தார்...

******எல்லாம் அவங்க அவங்க  ரூம்க்கு போகட்டும் நாளைக்கு நம்ம மகேஷ் பையபுள்ள எங்க போகுதுன்னு ஒரு எட்டுபோயி பார்த்துட்டு வந்தரலாமா "ஐயோ அது நாளைக்கு தானே போறான்!!! சரி நான் இன்னைக்கு உங்க கிட்ட சொல்றேன்!!*****

நம்ம மகேஷ் ரொம்ப பெரிய படிப்பு படிச்சு இருக்கான்ப்பா...சரி சரி முறைக்க வேணாம் 22 வயசுல அப்படி என்ன பெரிய படிப்பை படிச்சு கிளிச்சு இருக்க போறான்னு நீங்க கேட்கறது எனக்கு கேட்குதுப்பா.. இருந்தாலும் ஹீரோவா போயிட்டான் சோ அதான் கொஞ்சம் அள்ளிவிட்டேன்!! அதாவது என்னன்னா டிகிரி முடிக்கறதுக்கு முன்னாடியே போலீஸ் எக்ஸாம் எழுதி போலீஸ் கான்ஸ்டபுள் ஆயிட்டான் பா!! அதுக்கு அப்பறம் ஒரு வருஷத்துக்குள்ள படிப்பையும் irregularல போட்டுட்டு அப்படியே வேலையும் பார்த்துட்டு சும்மா இருந்தவனை இன்ஸ்பெக்டரா ப்ரோமோட் பண்ணிட்டாங்க....!! இதுல பெரிய கூத்து என்னடானா!! இளம் வயதிலேயே போலீஸ் இன்ஸ்பெக்டரான பெருமை இவனையே சேரும்!!!...அப்பறம் 22 வயசுல இதெல்லாம் முடியமானு கேட்டால் கண்டிப்பா முடியும் பா!!!  நிஜ வாழ்க்கையில கூட இதை நீங்க சாதிக்கலாம்ப்பா நம்புங்க..!!! அப்பறம் என்ன சொல்ல வந்தேன்...ஆஹான் இவன் ஏன் இப்போ ப்லைட் பிடிச்சு எங்க போறான்னு சொல்ல வந்தேன்ல! ஹ்ஹான் ஞாபகம் வந்துருச்சு மூணு வருஷத்துக்கு வெளிநாட்டுக்கு போயி படிக்க போறான் பா (எத்திகல் ஹேக்கர்)) .. படிக்க போறான்னா இல்லை!! எதுக்காக போறான்னு போக போக தெரியும் இப்போதைக்கு வெளிநாடு போறான்.!! நானே எல்லாம் சொன்ன நல்ல இருக்காதுல்ல போக போக எல்லாம் தெரியும்...

இன்னுமா போயிட்டு இருக்காங்க  அவங்க அவங்க ரூம்க்கு!!!  ஹான்ன் நம்ம  ஹீரோ சார் ஹீரோன் ரூம்க்குள்ள போயிட்டாரு என்ன  பேசறாங்கன்னு பார்த்துட்டு வந்தரலாமா...************ஐயோ அடுத்த அப்டேட்ல்ல பார்க்கலாம்!!!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro