மாயவன் 26
"சொல்லு மகேஸ்.. என்ன டா ஆச்சு.. ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு..." எனக் கேட்ட ரிஷியிடம்..
"அது ஒன்னு இல்லை மாமா.. இந்த கேஸ் இன்னும் இழுத்துட்டே இருக்கு மாமா. அதான் கடுப்பா இருக்கு.." என மகேஷ் கூற
"சின்ன பையன் நீ.. சும்மா பருந்து மாதிரி இருக்க வேண்டாமா. இதுக்கே சோர்ந்து போகலாமா டா நீ. இது ஒன்னும் அவ்ளோ பெரிய விஷயம் இல்ல சின்ன விஷயம் தான். என்ன கொஞ்சம் லேட் ஆகுது.. அவ்ளோதான்..." என ரிஷி அவனை சமாதானம் செய்ய முயற்சித்தான்...
"அன்னைக்கு அந்த ஆப்பை லாக் பண்ணும் போது பார்த்தேன் மாமா அந்த ஆப்போட நிர்வாகி யாருன்னு.. ஒரு நம்பர் மட்டும் இருந்துச்சு. அதே மாதிரி அந்த ஆப் வந்து கூட எனக்கு கல்யாணம் பேசின அந்த மாசத்துல தான் நியூவா கிரீயேட் பண்ணி இருக்காங்க. நியூவா கிரீயேட் பண்ணி கொஞ்ச நாள்லயே இழையினிக்கு கால் பண்ணி நான் தப்பு தப்பாக பேசற மாதிரியும்.. நான் தப்பா இருக்கற மாதிரியும் காட்டி இருக்காங்க..!! இது தான் எனக்கு இடிக்குது மாமா. கண்டிப்பா சொல்லுவேன் அவங்க அந்த ஆப் யூஸ் பண்ணி தான் இழைக்கிட்ட பேசி இருக்காங்க. அதுக்கு முன்னாடி இப்படி எல்லா வசதியும் இருக்கற மாதிரி ஆப் இருந்தது இல்லை..! அது மட்டுமில்லை மாமா இரண்டு ஆஃப் இருக்கு, ஒன்னு நம்பரை ஹேக் பண்ற மாதிரி அதாவது இப்போ பண்ணிட்டு இருக்காங்களே அது மாதிரி இன்னொன்னு வந்து பாரீன்ல நம்பர் மாதிரி.. +1,+0 ல இருந்து ஆரம்பிக்கும்.. நம்ம இந்தியால எப்படி +91 ல இருந்து ஆரம்பிக்குமோ அப்படி ஆர்பிக்கும்.. ஆனா இதுல கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தான் எல்லாமே இருக்கும் அவங்க கால் பண்ற நம்பர் கூட பாரீன் கால்னு தான் காட்டும் தென் வாட்ஸாப் நம்பரா கூட யூஸ் பண்ணலாம் அதாவது இரண்டு வாட்ஸாப் கூட இதுல யூஸ் பண்ண முடியும். டெக்னாலஜி வளர வளர இது மாதிரி கேவலமான செயல் நடந்துட்டு தான் இருக்கு.. ஒன்னு கிலோஸ் பண்ணா இன்னொன்னு வருது மாமா.. இந்த ஆப் பிரச்சினை முடியல அதுக்குள்ள இன்னோரு விஷயம் வந்துருச்சு வேற நல்ல யூஸ்காக கிரீயேட் பண்ற சின்ன சின்ன ஆப் கூட இப்போ இப்படி கேவலமா யூஸ் பண்ணிட்டு இருக்காங்க.. நூத்துக்கு எண்பது சதவீதப் பொண்ணுங்களோட போன் அவங்களுக்கு தெரியாம ஹேக் பண்றாங்க... ஓ மை காட்...!என்னால முடில மாமா.. இப்படியும் இருப்பங்களா மாமா இதுல அவங்களுக்கு என்ன வருது..ஜஸ்ட் ஒரு போட்டோக்கு இவ்வளவு பண்ணனுமா மாமா..!! எனக்கு தலை வலியே வந்திருச்சு.." என ஆதங்கத்தில் மகேஷ் கிட்டத்தட்ட கத்தவே செய்தான்...
"டேய் டேய்.. கூல் டா.. போலீஸ் டா நீ... கொஞ்சம் போல்டா இரு டா.. இந்தளவுக்கு ஏன் யோசிக்கற.. சிம்பிளா யோசி.. இந்த ஹேக் பண்ற எல்லாரும் பெரிய விஷயத்தில கவனமா இருப்பாங்க.. ஆனா சின்ன விஷயத்த விட்ருவாங்க.. கண்டிப்பா சொல்றேன் அவன் அடுத்த கிரைம்கு மாட்டுவான் வேணும்னா பாரேன்.. அடுத்த கிரைம்ல உனக்கு ஒரு ஐடியா கிடைக்கும்.."என ரிஷி கூறியவுடன்
"அட போங்க மாமா.. எனக்கு நம்பிக்கையே இல்லை..எனக்கு இன்னும் புரில.. இந்த பொண்ணுங்க போட்டோவை வைச்சு அப்படி என்ன பண்ணுவாங்க..." என மகேஷ் தன் சந்தேகத்தை சொல்ல
"ஏன் இல்லை.. இதெல்லாம் காசு கொடுத்து பாக்கவே சில பேர் இருக்காங்க.. அதுவும் இல்லாமல் அந்த பொண்ணுங்கள மிரட்டிக் கூட அவங்களுக்கு தகுந்த மாதிரி யூஸ் பண்ணி அதையும் விக்கலாம்...' என ரிஷி கூற
"ச்சே.. வெறும் காசுக்காக இப்படியும் பண்ணுவங்களா மாமா..எனக்கு இதெல்லாம் நினைக்க நினைக்க வெறி வருது மாமா. ஆனா கையாலாகாதவனா இருக்கேன் மாமா.. நான் இங்க வந்த.இரண்டு, மூணு வருஷத்துல இந்த கிரைம் தான் ரொம்ப கழுத்தை அருக்குது.. இது எப்படி இந்தளவுக்கு ஆச்சு. அந்த ஹேக்கர் ஸ்டுப்பிட் மட்டும் கையில கிடைக்கட்டும் குருமா தான்.. ஆனா அவனை நான் கண்டு பிடிக்கிறதுக்குள்ள அகதீரன் பட கார்த்திக் மாதிரி ஆனாலும் சொல்லறதுக்கு ஒன்னு இல்லை..." என மகேஷ் சொல்லவும் சிரித்த ரிஷி சிறிது நேரம் யோசனைக்கு பின்
"அந்த ஹேக்கர் கிடைக்க இன்னொரு வாய்ப்பு இருக்கு டா மகேஸ்.. உன் இழையினி பழைய போனை செக் பண்ணா அந்த வாய்ப்பு இருக்கு. அப்பறம் அந்த ஆப் நிர்வாகி பேருக்கு பதிலா என்னமோ நம்பர் இருக்குன்னு சொன்னல்ல அந்த நம்பர்ல ஏதாவது ஐடியா கிடைக்கும். அப்பறம் மூணு வருஷத்துக்கு முன்னாடி நீ யூஸ் பண்ண போனை எடுத்தா அதுல ஏதாவது ஓடிபி நம்பர் வந்து இருக்கான்னு பாக்க முடியும்.. அப்படியும் இல்லன்னா.. உன் ஈமெயில் செக் பண்ணி பாரு.. எல்லா மேஜேசையும் ரெக்கவர் பண்ணி பாரு.. அப்பறம் அந்த இறந்து போன பொண்ணுகளோட ரீலேஷன் போன் எல்லா உங்கிட்ட தானே இருக்கு.. அதுலயும் ரெக்கவர் பண்ணு.. கண்டிப்பா ஏதாவதுல ஒண்ணுல மாட்டுவான். அவன் மாட்டனதும் எனக்கு கால் பண்ணு அந்த நம்பர் வைச்சு அவன் எங்க இருந்து கால் பண்ணி இருக்கான்னு கண்டுபிடிச்சறலாம். இப்போ புதுசா ஒரு நாள் இழையினி பிரன்ட் யாருக்கோ இது மாதிரி நடந்து அந்த பொண்ணுக் கூட சூசைட் பண்ண ட்ரை பண்ணி கடைசியா இழை காப்பத்தனதா சொன்னல்ல அந்த பொண்னோட போன் இல்லைன்னா அந்த பையன் போன் எனக்கு வேணும் இங்க தானே இருக்காங்க.. கொஞ்சம் கால் பண்ணி சொல்லி எங்கிட்ட கொடுக்க சொல்லு...." என தனக்கு தெரிந்த வழிகளை எல்லாம் கூறினான் ரிஷி... (ரிஷி என் மற்றொரு நாவலின் நாயகன்)
"சரி மாமா இப்பவே நீங்க சொன்னது எல்லாத்தையும் பண்ண பாக்கறேன். சபரியையும் உங்களை மீட் பண்ண சொல்றேன்.. நானும் மறுபடியும் அதெல்லம் ரேக்கவர் ஆகுதான்னு பாக்கறேன்.." என கூறியனின் குரலே கூறியது அவன் இன்னும் குழப்பத்தில் தான் இருக்கிறான் என...!!
*******************
"என்ன சின்ன மாமா.. எங்க இந்தப்பக்கம்.." என கேட்ட தன்னவளை முறைத்தான் மகேஷ்..
"என்ன சின்ன அத்தான் இப்படி பாக்கிறீங்க.. எனக்கும் உங்களை மாதிரி பாக்க வரும்.. அப்பறம் நான் உங்களை கடிப்பேன்.. நீங்களும் பதிலுக்கு அடிச்சு எதுக்கு இந்த விளையாட்டு..." எனக் கூறியவளை பார்த்தவன்
"அடியே குந்தாணி. வேணாம். சொல்லிட்டேன்..அப்பறம் எக்கு தப்பா ஏதாவது செஞ்சுட்டா என்னை சொல்லாக்கூடாது..." என கூறியவனை இடைமறித்தது இழையினியின் குரல்
"அதெல்லாம் தப்பு இல்லை சின்ன அத்தான்.. நமக்கும் கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகுது.. இன்னும் வயிறு காலியா இருந்தா நல்லவா இருக்கும்...!' எனக் கூறியவளை பார்த்தவன் எதுவும் பேசாமல் கிச்சனிற்கு சென்று உணவை எடுத்து வந்தவன் "இந்தா வெறும் வயித்துல இருக்காம நல்லா சாப்பிடு.." என கூறி தட்டை அவளிடம் தர..
"எனக்கு வேண்டாம்.."
"ஏன் வேண்டாம்.."
"என் கை இன்னைக்கு வேலை செய்யாதுன்னு சபதம் போட்டு இருக்கு,சோ சாப்பிட மாட்டேன்..." என இழையினி அடம்பிடிக்கும் குழந்தையின் குரலில் கூற
"நானும் இந்த இரண்டு நாளா பாத்துட்டு தான் இருக்கேன். ஏதோ மார்க்கமாக தான் டி நீயும் இருக்க. இப்போ என்ன தான் வேணும் உனக்கு..." என கூறியவனின் குரலில் எரிச்சல் இருந்தது
"ஊட்டி விடு..."என அசால்ட்டாக குண்டை தூக்கிப் போட்டாள்..
"எப்போதும் போல் இருக்கும் மகேஷ் என்றால் இந்நேரம் தன்னவளின் பேச்சில் குதித்து ஆடி இருப்பான். ஆனால் இன்று அவன் இருக்கும் நிலையில் அவளின் பேச்சு எரிச்சலைக் கூட்டினாலும் அவள் சொல்வதைப் போல் செய்தான் அவளின் மாயவன்..
அவனையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த இழையோ சட்டென்று அவனை இழுத்து தன் மடிமேல் அமர்த்திக் கொண்டவள் அவன் சுதாரிக்கும் முன்பே அவனின் கையில் இருந்த தட்டை தன் கையிற்கு மாற்றி இருந்தாள்..!!
"என்ன முழிக்கற..ஒழுங்கா தின்னு.." என மிரட்டியவளைப் பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது.. தன் சிரிப்பை அடக்கியவன் "எனக்கு எதுவும் வேணா விடு.. நான் போகணும்..." என கூறி எழ முயற்சி செய்ய அவனின் சட்டையை பின்னாடியிருந்து கொத்தாக பற்றியவள் எழ விடாமல் செய்து பின்னால் இருந்தபடியே அவனிற்கு ஊட்டிவிட அவனின் வாயை தவிர மீசை, தாடி, மூக்கு, கன்னம் என அனைத்திற்கும் உணவை வாரி வழங்க கன்னத்தில் பாதி, மூக்கில் பாதி எல்லாம் ஒட்டியது போக மீதி அவனின் சட்டை பாக்கிட்டிலும் விழுந்து வாரியது...!!
"பொறுத்தது போதும் பொங்கி எழு மகேஸா" என தனக்குத்தானே கூறி கொண்டவன் சட்டென்று எழுந்து அவளை முறைத்துப் பார்க்க
"அடி ஆத்தி.... ஒரே ஒரு வாய் தானே ஊட்டி விட முயற்சி பண்ணேன்... இப்படி தப்பா போயிருச்சே..'என மனதில் நினைத்தவள்
"சாரி டா பூதி முன்னபின்ன ஊட்டிவிட்டு இருந்தா தெரிஞ்சு இருக்கும்.. நானே பாவம்" என சிரிக்காமல் இழை கூற..
"நீயா டி பாவம்.. நான் தான் டி பாவம்..வேலைக்கு போயிட்டு வந்தவனை கூப்பிட்டு உட்கார வைச்சு.. சாப்பாடு ஊட்டி விடறன்னு சொல்லி என் மூஞ்சிக்கு சோத்துல அலங்கார பண்ணதும் இல்லாம சாரி மாமான்னு ராகம் வேற படற... உன்னை இன்னைக்கு என்ன பண்றன்னு பாரு டி" என கூறியவன் தன் கைசட்டையை மடக்க அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடினாள் இழையினி... ஒடியவளை புன்முறுவலுடன் பார்த்து கொண்டிருந்தான் அவளின் தூயவன்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro