மாயவன் 25
சாலையின் இருபக்கமும் மரங்கள் அதற்கு அடுத்து சிறு வாய்க்கால் அதற்கு அடுத்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இருக்கும் நெல்வயலை களை எடுக்கும் பணியாளர்கள் என அந்த இடமே ரம்மியமாக இருக்க.. அதை ரசித்தவாறே நடந்து சென்றவளை எட்டு ஜோடி கண்கள் குரோதமாக பின் தொடர்ந்தது..
தன்னை யாரோ பின் தொடர்வது போல் உணர்ந்தவள் முதலில் தற்செயலாக நடந்து வருகிறார்கள் என நினைத்தாலும் ஊரின் எல்லை வரை இவள் பின்னாடியே வர பயந்துப் போனாள் பாவை...
சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தவள் முதலில் தன் தந்தைக்கு அழைக்க எடுக்காமல் போக பார்த்திக்கு அழைத்தாள். அவனின் காலும் ரிங் போனதே தவிர போன் காலை எடுக்காமல் போக சரியாக தவறான முடிவை எடுத்தாள்..!!!
"ஹலோ மாமா..." என பயந்த குரலில் பேச..
"பூமா.. என்ன டா ஆச்சு.. ஏன் இப்படி ஒரு மாதிரி பேசற..." என எதிர்புறம் கேள்வி வர.
"மாமா எனக்கு பயமா இருக்கு மாமா.. நம்ம வயல் காட்டுக்கு போனேன் மாமா, அங்க இருந்தே என்னை பாலோ பண்ணிட்டே வராங்க மாமா.. எனக்கு பயமா இருக்கு மாமா"என திக்கி திக்கி பயந்த குரலில் கூற.
"என்ன சொல்ற.. நீ இப்போ எங்க இருக்க.." தெளிவாக கேட்டான் மகேஷ்..
"நம்ப ஊருக்கு போற வழியில தான் போயிட்டு இருக்கேன்.. நம்ம வாயல்ல இருந்தே பின்னாடி வராங்க மாமா..." கொஞ்சம் பதட்டத்துடன் வந்தது அவளின் வார்த்தைகள்
"சரி சரி தைரியமா இரு.. கொஞ்சம் தூரம் போனதும் பக்கத்தில டீ கடை இருக்குல்ல அங்க போ...."
"எனக்கு பயமா இருக்கு மாமா.."
"இங்க பாரு..கூட்டமா இருக்கற இடத்தில ஏதும் பண்ண மாட்டாங்க.."என அழுத்தமாக சொன்னான்..
"யோவ் மாமா விளையாடத.. நான் எத்தனை படத்தில பார்த்து இருக்கேன் கூட்டமா இருந்தாலும், இல்லைனாலும் கடத்திட்டு போயிருக்காங்க.." அவளின் வார்த்தையில் கேலி இருக்கும் போதே அவன் அறிந்துக் கொண்டான் டீ கடைக்கு சென்று விட்டாள் என்று
"கடத்திட்டு போகற அளவுக்கு நீ ஓன்னும் ஒர்த் இல்லை. ஒழுங்கா நான் சொன்னதை செய்.." என கூறியவனின் வார்த்தையிலும் கேலி இருந்தது
டீ கடை பெஞ்சில் அமர்ந்தவள் சுற்றும் முற்றும் வேடிக்கைப்பார்த்துக்கொண்டே
"மாமா... அவங்க அங்கயே தான் இருக்காங்க.. இங்க வரலை மாமா." என கூறியவளின் குரலில் நிதானம் இருக்க
"சரி பயத்தை வெளியக் காட்டிக்காத எழுந்து போயி டீ வாங்கி கூடி" என மகேஷ் சொன்னதும்
"யோவ் டீ குடிக்கர நேரமா டா இது.எனக்கு ஏதாவது ஆச்சு அப்பறம் இருக்கு உனக்கு.."என திட்டினாலும் அவன் சொல்வதை செய்தாள்..
"நல்ல இடமா பார்த்து உட்கார்ந்து குடி..அதை குடிச்சு முடிச்சது சொல்லு.."
என மகேஷ் சொல்லவும் பயத்தில் இருந்தாலும் வாங்கி குடித்தவள் மகேஷின் போன் கால் இரண்டு நிமிடம் ஹோல்டில் சென்றதை கவனிக்க மறந்தாள்...
"பாஸ்..!! நீங்க சொன்னப் பொண்ணுக் கிட்ட தான் இருக்கோம்..நீங்க சரின்னு சொன்னா தூக்கிடாலம்..." என அடியாள்களில் ஒருவன் தன் போனில் கேட்க
"அந்த பொண்ணுல்லை. எல்லாம் கிளம்புங்க.." என போனில் இருந்தவன் கூற "வாங்க டா நம்ம தேடி வந்த பொண்ணு இது இல்லையாம்.." என தன் அருகில் இருந்தவர்களிடம் கூறியவன் அவர்களை அழைத்து சென்றான்..
மெல்லியதாக சிரித்த பூவிழி.."மாமா எல்லாம் போயிட்டாங்க.." எனக் கூறி சிரிக்க
"நான் சொன்னேன்ல ஒரு ஐஞ்சு நிமிஷம் விடாம உன்னை பார்த்தா போதும் ஓரே ஓட்டமா ஓடிடுவாங்கன்னு சொன்னேன்ல.. இனிமே உன் பக்கம் கூட வர மாட்டாங்க..."என மகேஷ் கூற
"யோவ் மாமா. என் அக்கா புருசன்னு பாக்கற இல்லை. அவ்ளோதான் போனை வை..." எனக் கோபமாக பேசுவது
போல் பேச
"உனக்கு நடிக்க வரல பூமா.." எனக் கூறி சிரித்தான் மாகேஸ்
சிரித்தவள்.. "தங்க்ஸ் மாமா" என பூவிழி நன்றி சொல்ல
"உன் தங்க்ஸை அப்பறம் சொல்லிக்கோ.. நான் சொல்ற இந்த விஷயத்தை மட்டும் உன் மாங்கா மண்டையில ஏத்தி வைச்சுக்கோ.. இன்னைக்கு நடந்த மாதிரி இனிமே நடந்தா உடனே பக்கத்தில இருக்கற யாராவதுக்கு கால் பண்ணு.. அப்படி இல்லையா.. உன்னோட ஜி.பி.எஸ். ஆன் பண்ணிட்டு காவலன் செயலி உன் போன்ல இருக்கு தானே உடனே அதுக்கு தயங்காம கால் பண்ணு.. பக்கத்தில எந்த போலீஸ் இருந்தாலும் உடனே வந்துடுவாங்க.. அதை விட்டுட்டு எங்கயோ இருக்கிற எனக்கு கால் பண்ணா என்னால அங்க வர முடியுமா சொல்லு.. எனக்கு கால் பண்ண வேண்டாம்னு சொல்லல ஆனால் இனிமே கொஞ்சம் யோசிச்சு பண்ணு சரியா.. உன் ப்ரைன் எப்பவும் யூஸ் பண்ணாத ப்ரைன்னு எனக்கு தெரியும். இருந்தாலும் சொல்றேன். இனிமே கொஞ்சம் பக்கத்தில இருக்கற டக்குன்னு வர ஆளுக்கு முதல்ல கால் பண்ணு.. அப்படியும் இல்லையா எத்தனை பேர் இருந்தா என்ன எதிர்த்து நில்லு.. தைரியம் ரொம்ப முக்கியம்.. சோ செப்ட்டிக்கு கராத்தேயும், சிலம்பமும் கத்துக்கோ சரியா.. இன்னைக்கே மாமாக்கிட்ட இதைப்பத்தி பேசற நீ கிளாஸ் போக ரெடியா இரு.." என எடுத்து பொறுமையாக கூறியவனிடம்
"மாமா ஏதாவது ஜூஸ், இல்லைனா ஐஸ் வாட்டர் இருந்தா குடிச்சுட்டு வா... எவ்ளோ நேரம் விடாம பேசுவ ஹீரோன்னா பக்கம் பக்கமாக பேசனும்னு இல்லை, புரிதா மாமா சோ கொஞ்சம் கம்மி பண்ணிக்கோ.. தென் உனக்கு கால் பண்றதுக்கு முன்னாடி அப்பாக்கும், பார்த்தி மாமாக்கும் கால் பண்ணேன். ஆனா யாரும் எடுக்கல அதான் உனக்கு கூப்பிட்டேன்.. அப்பறம் எங்கிட்ட காவலன் செயலி இருக்கு ஆனால் பயத்துல அது எனக்கு ஞாபகம் வரல மாமா." என பூமா சொல்ல
"பாருடா என் சின்ன பொண்டாட்டிக்கு கூட அறிவு இருக்குப் போல.. பரவால்லயே" என மகேஷ் கேலி செய்ய
"ஒருத்தனுக்கு எழுந்து நிக்கவே வக்கு இல்லையாம். ஆனா ஒன்பது பொண்டாட்டி வேணுமா.. போயா.. போ போயி உன் பொண்டாட்டிக்கிட்ட லவ்ஸ் பண்ற வேலையை பாரு.. ஒருத்தி கிடைச்சா போதுமே பிரீயா அட்வைஸ் பண்ணி அறுவை போட வேண்டியது நம்ம கொக்கி அக்கா மாதிரி...(என் மற்றோரு நாவலின் நாயகி)" என கூறி கொண்டே சுற்றி முற்றி வேடிக்கை பார்த்தவள் 'மாமா அப்பா வராரு..' என குதூகலமாக கூற..
"அப்போ கிளம்பு.. கிளம்பு காத்து வரட்டும்" என கூறியவன் தன் போனை கட் செய்யாமலே வைத்து இருந்தான்..
"அப்பா..நீங்க.. இங்க.. உங்க போன் என்னப்பா ஆச்சு..நான் கால் பண்ணேன் உங்களுக்கு கால் போகலை" என பூவிழி கூற
"சார்ஜ் இல்லைன்னு போட்டு விட்டேன் கண்ணு ஆப் ஆயிருச்சு போல.. நீ அம்மாக்கு கால் பண்ணி இருக்கலாம்ல நேர உன் மாமாக்கு கால் பண்ணி சொல்லிட்டு இருந்தியாமே, உன் மாமன் தான் அம்மாக்கு கால் பண்ணி சொன்னான்னு உன் அம்மா சொன்னா அதான் என்னவோ ஏதோன்னு வந்தேன்.' என குரு கூற
"அதெல்லாம் ஒன்னும் பயப்படற மாதிரி இல்லப்பா.. கால் தடுக்கி விட்டருச்சு நடக்க முடிலன்னு மாமா கிட்ட சொல்லிட்டு இருந்தேன், மாமா உங்க கிட்ட சொல்லிட்டாரு போல." என கூறிய தன் மகளையே பார்த்தவர்
"இந்த மாமா எப்போ இதை பண்ணாங்க.. சரி வீட்டுக்கு போய் கேட்டுக்கலாம்.."என நினைத்துக் கொண்டவள் தன் தந்தையுடன் புறப்பட்டாள்
"சரி வா மா போகலாம்" என கூறியவர் தன் மகளை அழைத்து சென்றாள்..
பூவிழி பத்திரமாக வீட்டிற்கு சென்று விட்டாள் என உறுதிப்படுத்திக் கொண்டே தன் மொபைலை வைத்தவனிற்கு மீண்டும் தலையில் பாரம் ஏறிக் கொண்டது..
அன்று தன்னவள் கூறியது அவனின் காதில் விழுந்துக் கொண்டே இருந்தது.. தன்னவளை அவன் அவளின் போட்டவை வைத்து மிரட்டவில்லை பதிலிற்கு தன் போட்டா வை வைத்து தான் கூறி இருக்கிறான். அதுவும் தங்களின் கல்யாணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் கூறி என்மேல் வெறுப்பை ஏற்படுத்தி கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்து இருக்கிறான்.. அப்படியென்றால் அவன் எனக்கும் தெரிந்தவனாக இருக்கலாமோ.. "யாரா இருக்கு நாளைக்கே இது சம்பந்தமா அலசி பாக்கணும்.. அப்பறம் அந்த ஆப்ல இருந்த நிர்வாகி பேரு இருக்கிற எடுத்தில இருந்த அந்த நம்பர்.. இதுக்கு ஏதாவது சம்பந்தம் இருக்கான்னு பாக்கணும்...' என நினைத்தவன் தன் வேலைகளில் முழிக்கினான்..
****
"யூ இடியட்.. என்ன தைரியம் இருந்தா என் வீட்டு பொண்ணு மேலயே கை வைப்ப.. இதோ பாரு கவி.. நம்ம பிஸ்னஸ் எல்லாம் வெளியே இருக்கிற பொண்ணுங்க கிட்ட மட்டும். இனிமே என் வீட்டு பொண்ணுங்கள குறி வைச்ச என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது." என இவன் கத்திய கத்தில் ஒரு நிமிடம் தன் காதிலிருந்த போனை எடுத்து மீண்டும் தன் காதில் வைத்தவன் "
கூல் பூபதி நான் எதுவும் பண்ணல.. உன் வீட்டு பொண்ணுங்களை நான் பாத்ததே இல்லை.. அப்படி இருக்கும் போது நான் எப்படி அந்த பொண்ணை தூக்க சொல்லி இருப்ப. அதுவும் இல்லாமல் நம்ம இதுநாள் வரைக்கும் எந்த பொண்ணுங்களையும் தூக்கனது இல்லையே நம்ம ப்ளாக்மைல் தானே பண்ணுவோம். தீடீர்ன்னு எனக்கு கால் பண்ணி இப்படி சொன்னா நான் என்ன பண்ணுவேன் பூபதி.. நமக்குள்ள சண்டை ஏற்படுத்த பாக்கறாங்கன்னு எனக்கு தோணுது...." என கொஞ்சும் தமிழில் பேசி கம்பிர தமிழை கொலை செய்தபடியே கவி கூற.. எதுவும் பேசாமல் போனை கட் செய்தான் பூபதி...
****
Views niraiya pokuthu but comments and votes varave illa😑😑ippadiye pona naa next poda maattaen pongappa bhuvana soham
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro