மாயவன் 24
பின்னால் இருந்து அணைத்தவளின் கையை பிரித்து விட்டவன்..
"இங்க பாரு டி இப்படி வந்து கட்டிப் பிடிக்கற வேலையெல்லம் வைச்சுக்காத சொல்லிட்டேன்.. உன்மேல நான் ரொம்ப கோபம்.. ஒழுங்கா போயிடு என் முன்னாடி நிக்காதா.. நல்லவன்னு தெரிஞ்சே திட்டுவாளம். நாங்க சரி டி சொல்லிட்டு ஏத்துக்க வேணுமாம். இந்த லட்சணத்துல சின்ன வயசுல இருந்து லவ் வேற பண்றலாம் ஓடியே போயிடு. அப்படி இருக்கறவ முன்னாடியே நான் தப்பு பண்ணலைன்னு நம்பி இருக்கனும். இது நான் இல்லைன்னு அப்போ நம்பிக்கை இல்லாம இருந்துட்டு இப்போ வந்து தழும்பு உனக்கு இருக்கு.. அவனுக்கு இல்லைனு சொல்லற.. யார்க்கிட்ட போ டி.. இத்தனை நாள் கேட்டவன்னு நினைச்சுட்டு இருந்த மாதிரியே நினைச்சுக்கோ.. ஐ ஹேட் யூ.. பக்கி பயபுல்ல கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி பால்கனியில இருந்து கீழ தள்ளிவிட்டு கொலைப் பண்ண பாத்தாவ தானே நீ .. பெரிசா பேச வந்துட்டா குந்தாணி..! இனிமே மகேஷ், பூதின்னு கூப்பிடு டி உனக்கு இருக்கு..." என கூறி முன்னேறி நடந்தவனை மடக்கி பிடித்தவள்..
"என்ன டா ஓவரா பண்ற.. நான் தான் சொல்றேன்ல எனக்கு முதல்ல தெரியல.. அதுக்கு அப்பறம் தான் அந்த போட்டோவை நல்லா பார்த்தேன்னு.. உண்மை தான் சின்ன வயசுல இருந்தே உன்னை பார்த்துட்டு இருந்ததுனல எனக்கு அந்த தழும்பு இருக்கறது ஞாபகம் வந்துச்சு." என கூறியவளை இடையில் மடக்கியவன்.
"என்ன சின்ன வயசுல இருந்து பார்த்துட்டு இருக்கறவன தான் நம்பிக்கையே இல்லாம நம்ம கல்யாணத்துல கேவலமா பேசனயா.."என கூறியவனை முறைத்தவள்
"ரண்டு நாளைக்கு முன்னாடி எங்கிட்ட கேவலமா பேசி நியூட் போட்டோ கேட்டவனை எப்படி டா கல்யாணம் பண்ண முடியும்..! அதான் அன்னைக்கு அப்படி பேசன..அதுவும் உன்னால ஒரு பொண்ணு வாழ்க்கை பாழாப் போயிடக் கூடாதுன்னு தான் அப்படி உன்னை பேசன..!! ஆனா அன்னைக்கு அம்மவோட பிடிவாதத்துல உன்னை கல்யாணம் பண்ற மாதிரி ஆயிருச்சு.. கல்யாணம் பண்ணா என்ன பிரிஞ்சு போயிடாலம்னு தான் உன்கிட்ட இருந்து விலகிப் போனேன்..!! அது தான் சின்ன விஷயத்துக்கு கூட உங்கிட்ட சண்டைப் போட்டேன்.. ஆனா நீ அடுத்த நாளே ஊருக்கு போயிட்ட..!! நானும் கோவை போயிட்டேன்.. அப்போ தான் டா என் பழையப் போனை கையில எடுத்தேன். அந்த போட்டோவை மறுபடியும் பார்த்தேன்.. நல்லா பார்த்தேன்.. இதோ உன் கழுத்துக்கு கீழ இருக்கற என்னோட பல் தழும்பு இல்லாம இருந்துச்சு.. சின்ன வயசுல உன்னை இங்க தானே ரத்தம் வர அளவுக்கு கடிச்சு வைச்சேன். அந்த தழும்பு மறைஞ்சு போயிருச்சோன்னு முதல்ல யோசிச்சேன்.. ஆனால் அந்த போட்டோவை பாக்க பாக்க தழும்பு இல்ல.... ஆனா இருக்கு அந்த தழும்பு உனக்குள்ள இருக்கும்னு நினைச்சேன்.. கான்பார்ம் பண்ண மறுபடியும் நம்ம வீட்டுக்கு போனேன். உன் போட்டோ எல்லாம் அலசினேன் ஒரு க்ளூ கூட கிடைக்கல.. இதுக்கு மேல என்ன டா பண்ண சொல்ற.. நீ இப்படி தான்னு மூளை பிக்ஸ் பண்ணாலும் மனசு கேட்கவே இல்லை, நீ பண்ணலைன்னு உறுதியா சொல்லுச்சு... கடைசியா நீ வர நாளுக்காக காத்திருக்க ஆரம்பிச்சேன்..!!
"அடேங்கப்பா இரண்டு வருசமா இந்த தழும்பை பார்க்க வையட் பண்ணிட்டு மட்டும் தான் இருந்து இருக்க.. முயற்சி பண்ணலை" என கேட்டவனை மேலும் முறைத்தவள்
"என்னோட டாக்டர் படிப்பை விட்டுட்டு தான் உன்னை பார்க்க வரணும். அந்த அளவுக்கு நீ ஒர்த் இல்லைன்னு வரல." என கூறியவளை முறைத்தான் மகேஷ்..
"ஈஈ சும்மா டா.. உன்னை பார்க்க ட்ரை பண்ண மாமு நம்பு.."
"முத தடவை மாமானு சொல்லி கேட்கற எவ்ளோ நல்லா இருக்கு.. பரவல்லை குந்தாணி மனசுல கூட நம்ம மாமாங்கர இடத்தில இருக்கோம்" என மனதில் நினைத்து கொண்டவன் அவளை முறைத்தவாறே நின்றான்
"அந்த போட்டோ கிராபிக்ஸ்ன்னு கண்டுப் பிடிக்க பார்த்திபன் அத்தான் கிட்ட தான் முதல்ல கொடுத்தேன்.. பார்த்தி அத்தான் பார்த்து சொல்றேன்னு சொன்னாரு.. நானு அடுத்த நாள் போயி கேட்டேன் போன் தண்ணில விழுந்துருச்சுன்னு சொல்லிட்டாரு.. நானும் விடமா ரெடி பண்ணி கொடுங்க அத்தான்னு கேட்டேன்.. ஆனால் இதுக்கு மேல ரெடி பண்ணாலும் யூஸ் இல்லைன்னு சொல்லிட்டாரு.. நான் என்ன பண்ணுவேன்.. சரி உன்னை நேர்ல பார்க்க போறேன் வீஸா ரெடி பண்ணி கொடுக்க சொல்லி மறுபடியும் அத்தான் கிட்ட தான் கேட்டேன்.. ஆனா அத்தான் தான் படிப்பை பாதில விட்டுட்டுப் போக கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அத்தான் பேச்சை மீற முடியல மகேஷ்..தென் வீஸாக்கு நானே ரெடி பண்ண.. ஆனா இன்னும் விசா வரல ஏன்னு தெரில..!!போயி கேட்டா இப்ப வரும் அப்ப வரும்னு தான் சொல்றாங்க ஆனால் இன்னும் வரல...இரண்டு வருஷம் எப்படி போச்சுன்னு தெரியல..ஒரு நாள் கூட உன்னை நினைக்கமா அந்த நாள் போனது இல்லை .. ஒவ்வொரு தடவையும் உன்னை கெட்டவன்னு என் மூளை சொன்னாலும் அடுத்த நிமிஷமே என் மனசு நீ தப்பு பண்ணலைன்னு ஆயிரம் தடவை சொல்லி இருக்கும். உன்னைப் பார்த்து பார்த்து வளர்ந்த எனக்கு, நீ இல்லாத அந்த இரண்டு வருஷம் நரக வேதனை தெரியுமா.. இதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது டா.. என் கஷ்டம் எனக்கு..நீ என்ன என்னை காதலிச்சா கல்யாணம் பண்ணிக் கிட்ட ஏதோ கடைமைக்கு தானே பண்ண..." என கூறியவளின் கண்களில் கண்ணீர் வர தொடைக்க மனமில்லாமல் அவளின் பேச்சைத் தொடர்ந்தாள்..
"படிப்பை முடிச்ச கையோட மும்பையில ட்ரைனிங்னு சொன்னாங்க இங்க வந்தேன்.. அன்னைக்கே உன்னை இங்க பார்த்தேன்.. அவ்ளோ சந்தோசம், ஓடி வந்து கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்கலாம்னு நினைக்கற அளவுக்கு சந்தோசம்.. அதுக்குள்ள அந்த மேனாமினிக்கி வந்து கடுப்ப கிளப்பிட்டா.. அப்பறம் ப்ரியாக்கு அப்படி ஆனதுல மறுபடியும் நீ போன்ல பேசன வார்த்தை எல்லாம் என் மனசுல ஓடிட்டே இருந்துச்சு. உன் நடவடிக்கை எல்லாம் ஏதோ ஒரு மூலையில நீ தப்பு பண்றன்னும் சொல்லுச்சு.. ஒரே ஒரு தடவை உன் வாயாலேயே நான் தப்பு பண்ணலைன்னு சொல்ல மாட்டயான்னு ஏங்கனேன்.. ஆனா நான் எவ்ளோ திட்டினாலும் சரி, சண்டை போட்டாலும் சரி ஒவ்வொரு தடவையும் நீ தான் பேசனை பேசனைன்னு சொல்லும் போது மனசு ரொம்ப வலிச்சுது டா.. இதோ இப்ப கூட நான் தான் நீ தப்பு பண்ணலைன்னு சொல்லிட்டு இருக்கேன். ஆனா நீ ஒரு வார்த்தை கூட சொல்லலயே டா..!! இப்போ சொல்லு டா உண்மைய சொல்லு அன்னைக்கு போன்ல நீ பேசல தானே.. அந்த போட்டோ நீ இல்லைன்னு எனக்கு தெரியும்.. அந்த போன் கால்ல நீ பேசல தானே டா சொல்லு டா.." என அவன் சட்டையை கொத்தாகப் பிடித்து இழுத்தவள் கண்களில் வழியும் கண்ணீரை துடைக்காமல் சிறு பிள்ளைப் போல் தேம்பி அழுதவளை இறுக அணைத்துக் கொண்டான் அவளின் மாயவன்..!!
"இன்னும் நான் தான் பேசனைன்னு நினைக்கறயா குந்தாணி."
அவன் அணைப்பிலிருந்துக்கொண்டே "இல்லை..நீ இல்லை...ஆனா நீ சொல்லு டா.. எனக்கு நீ சொல்லு.. என் மூளை மறுபடியும் என்னை குழப்பி விடும்..நீ சொல்லு டா..." என கூறி அவனின் நெஞ்சு குழியில் முகம் புதைத்து கொள்ள.. அவள் தலையை மெல்ல தடவியவன்
"இல்ல வினி நான் அப்படி பேசல டி நம்பு.. உனக்கு தெளிவா சொல்றேன்.." என கூறியவனை அண்ணார்ந்து பார்த்தவள்
"அப்போ நீ கெட்டவன் இல்லையா.. சுத்த போர் டா நீ.. ச்சே.." என அழுது கொண்டே கூறியவளை பார்த்தவன்
"உன்கிட்ட மட்டும் கெட்டவன் டி" என கூறியவன் அவளின் இதழை நோக்கி குனிய கண்களை இறுக மூடி கொண்டவளிடம்
"குந்தாணி பல்லு விளக்கடீயா டி நீ.." என மகேஷ் கேட்க..
சட்டென்று தன் நிலை அடைந்தவள் அவனின் மார்பில் கை வைத்து தள்ளிவிட்டவாறே
"பொறுக்கி.. போலீஸ் மாடு.. உன்னையெல்லம் ரொமான்ஸ் பண்ண கூப்பிட்டாங்க பாரு.. போ டா தடி மாடு.. கிஸ் பண்ணவே பல்லு விளக்கிடீயான்னு கேட்கற உன்னையெல்லா ச்சே.. இப்பவே இப்படினா மத்தது எல்லாம் எங்க போயி ஹிம்ம்ம்.. ஒழுங்கா நாலு ஐஞ்சு விடியோ பார்த்து எல்லாத்தையும் கத்துக்கற வலிய பாரு டா.." எனக் கூறியவள் ஒரே ஓட்டமாக குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.. அவள் கூறிய அர்த்தம் புரியவே சில நிமிடங்கள் ஆனது மகேஸிற்கு..!!
**************
"நீங்க சொன்ன மாதிரி நம்ம சைட்ல டேர் வைச்சேன்.. எப்படினா பொண்ணுங்கள சாரீ கட்டின போட்டோஸ் போடற மாதிரி. கொஞ்சம் ரெஸ்பான்ஸ் இருக்கு டா.. அந்த பிக் வைச்சு நீயுட் போட்டோ எடுக்க முடியும்னு நினைக்கற.." என கூற..
"நினைக்காத பண்ணு... ஆர்டர் வந்துட்டே இருக்கு.. இதெல்லாம் அனுப்பன மட்டும் தான் நமக்கு பைசா பார்க்க முடியும். எவ்ளோ முடியுமோ அவ்ளோ சீக்கரம் பண்ணனும்.."
"மக்ஸிமம் டேர் யாரும் பண்ண மாட்டாங்க. நம்ம ஆப் இருக்கும் போது கொஞ்சம் ஈசியா இருந்துச்சு,இப்போ அதை ப்ளாக் பண்ணி கடுப்பா இருக்கு."
"விடு...பாத்துக்கலாம்.. நீ மும்பையில இருக்கிற வரைக்கும் பொண்ணுங்க போட்டோ வந்துட்டே இருக்கும், சோ இப்போதைக்கு அதை வைச்சு பைசா பாக்கலாம்.."
"எனக்கு பைசா வேண்டாம் பொண்ணு வேணும் நண்பா... ஹிம்ம் மாது தரும் போதை இருக்கே சொல்ல வார்த்தையே இல்லை.." என மற்றொருவன் சொல்ல
"அங்க மும்பையில இல்லாத பொண்ணா நண்பா.."
"தமிழ் பொண்ணுங்க தான் வேணும் ஏற்பாடு பண்ணு நண்பா.."
"டேய்.. மாட்டிக்குவோம்.. இப்ப மும்பையில மகேஷ்னு ஒருத்தன் வந்து இருக்கான் பாக்க தான் இளங்கன்று.. வேகம் சிங்கம் புலி வேகமா இருக்கு.. நானும் கேள்வி பட்டேன்." என்றவன் குரல் பதட்டம் இருக்க
"வசதியாப் போச்சு.. அப்போ அவனை நான் பாக்கணும் டா..!! நம்ம ஆப்பை ப்ளாக் பண்ணதும் அவன் தான்.. எனக்கு தெரிஞ்சு ரொம்ப தேடினான் டா நம்மளை கண்டுப்பிடிக்க.. நான் நினைக்காத அளவுக்கு கூட போனான்.!! ஆனா அவனால நம்ம ஹேர கூட ***முடிலை.! பாத்துக்கலா எங்க போயிட போறான்" என மற்றோருவன் கூற..
"அதுவும் சரிதான்..!! நம்ம இரண்டு பேரும் ஒன்னா இருக்கற வரை யாரும் நம்மளை ஒன்னும் பண்ண முடியாது கவி.."
"உண்மை தான் பூபதி... நம்ம இரண்டு பேரும் உருவாக்கன நம்ம ராஜ்ஜியம் டா இது.. இந்த மூணு வருசமா நம்ம ஏற்படுத்தின நெட்வொர்க் கோட்டை யார்னாலையும் ஒன்னும் பண்ண முடியாது.." என கூறியவனின் குரலில் அத்தனை அகங்காரம்..!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro