Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயவன் 23

குளியலறையிலிருந்து வெளியில் வரவும் தன் போன் தன் இருப்பிடத்தை காட்டவும் சரியாக இருக்க "யாராக இருக்கும்.." என நினைத்துக் கொண்டே தன் போனை எடுத்தவளின் முகத்தில் ஆயிரம் மின்னுவிளக்குள் ஒரே நேரத்தில் எரிய அழைப்பை ஏற்றாள்..!!

'ஹலோ மகேஷ்..மகேஷ்..எப்படி டா இருக்க.. என் நம்பர் உங்கிட்ட இருக்கா..
அப்பறம் ஏன் டா இத்தனை வருசமா எங்கிட்ட பேசவே இல்லை.. நீ கால் பண்ணுவேன்னு ரொம்ப ஆசைப்பட்டு இருக்கேன் டா, இப்போ தான் நீ கால் பண்ற. சரி அதெல்லாம் விடு போலீஸ் எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணிட்டியாம்.. வேலைக்கு எல்லாம் போறதா கேள்வி பட்டேன்.. பெரிய ஆளா ஆயிட்டே என்னை எல்லாம் உன் கண்ணுக்கு தெரியுமா.." என வரிசையாக அவனை பேசவிடாமல் பேசியவளின் பேச்சு அவனின் ஒற்றை சொல்லில் தடைப்பட்டு நின்றது..

"கண்டிப்பா என் கண்ணுக்கு நீ வேற மாதிரி தான் தெரியிற இழையினி. நீ எனக்கு வேணும்.ஒரே ஒரு நாள் போதும் உன்னை முழுசா பாத்தா சந்தோஷமும் எனக்கு இருக்கும். நீ எனக்கு முதல்ல கிடைச்ச மாதிரியும் இருக்கும். நான் உன்னை பார்க்கணும் முழுசா பாக்கணும். இப்பவே கால் பண்ணட்டுமா..." என்றவனின் குரல் ஏகத்திற்கும் மாறி இருந்தது..

"மகேஷ்.. இது நீ இல்லை... யாரு பேசறது.. இது என் மகேஷ் இல்ல..." என கூறியவளின் குரல் கரகரத்தது.

"நான் தான் மகேஸ்.. நீ எனக்கு இப்போ வேணும்.. வரையா  உன் நீயுடா ஒரே ஒரு தடவ பார்த்தா போதும்.." என கூற தூக்கி வாறி போட்டது இழையினிக்கு..

'என்ன எ..ன்ன சொல்ற..நான் அந்த மாதிரி பொண்ணு இல்லை..நீ ஏன் மகேஷ் இப்படியெல்லாம் பேசற..நீ சத்தியமா என் மகேஷ் இல்ல.."

"நடிக்காத டி.. கோயம்புத்தூரில இருக்கறவ அதுவும் தனியா ரூம்ல இருக்கறவ இன்னும் வேஜ்ஜின்வா இருப்ப..."என அமில வார்த்தையைத் துப்ப..

தன்னவன் கூறும் வார்த்தைகள் இதயத்தில் பூகம்பத்தை மட்டுமல்ல அவள் இதயத்தையே சின்னாபின்னமாக்கியது.. அவனின் வார்த்தை அவளின் காதல் மனதை கொல்லாமல் கொன்றது.!! தனக்கு வந்த அழுகையை உள் இழுத்துக் கொண்டு.. "யார் நீ..நீ என் மகேஷ் இல்லை.. அவன் போன் எப்படி உன்கிட்ட வந்தது..!!"

"சற்று நேர அமைதிக்கு பின்..என்னை நீ இன்னும் நம்பலையா... ஒரு நிமிஷம்
இரு செல்பீ எடுத்து அனுபறேன்..." என கூறியவன் அரைகுறை ஆடையுடன் இருந்த பெண் கண் மூடி இருப்பது போலும் அவளை வேற்று மேனியுடன் இவன் அணைத்து இருப்பதும்   போல் இருக்க.. அவள் இதயத்தை யாரோ கத்தியால் குத்தி கிழிப்பது போல் இருந்தது..!!

தன் வலியை வெளிக்காட்டிக் கொள்ளாதவள் "நீ எவ கூடயோ படுத்துட்டு இருக்கறத காட்டவா கால் பண்ண..அந்த பொண்ணுக்கு துரோகம் பண்ணாம கல்யாணம் பண்ற வழியப் பாரு பொறுக்கி, ஒழுங்கா போனை வை டா..." என கண்களில் நீர் வழிந்தாலும் கரகரப்பானக் குரலில் கத்தினாள்...

"ஏய் ரொம்ப கத்தாத.. அவ தூங்கிட்டு இருக்கானு நினைக்கறயா இல்லவே இல்லை மயக்கத்தில இருக்கா.. உங்கிட்ட கேட்ட மாதிரி தான் கேட்டேன் பதில் வரல.. ரொம்ப ஸீன் போட்டா.. அதான் தூக்கிட்டேன்.. நீ எனக்கு ஒத்து போனா பரவால்லை..!  இல்லைன்னா இப்போ இவ இருக்கற அதே நிலைமை தான் உனக்கும்.. எனக்கு நீ வேணும்.. இப்பவே.. நான் உங்கூட இருக்கணும்... ஏதாவது பிளேன் பண்ணி எங்கிட்ட இருந்து தப்பிச்சு போலாம்னு நினைச்ச ரொம்ப ரொம்ப வருத்தப்படுவ இழையினி..." என கூற

"ச்சீ... போனை வை.." கூறியவள் தன் போனை தூக்கி எறிய சில்லுசில்லாக உடைந்து போனது..!!

"என் மாகேஸா இப்படியெல்லா பேசுறான்.. என்னவெல்லாமோ கேட்கறா. இவன் என் மகேஷ் தானா இருக்காது. என் மகேஷ் இந்தளவுக்கு கேவலமானவன் இல்லை.."என அவள் காதல் மனம் கூற

"இல்லை அவன் தான் போட்டோ எடுத்து அனுப்பி இருக்கான்.. அதுவும் யார் கூடயோ இருக்கற மாதிரி இருக்கான்..." மற்றொரு மனம் சொல்ல

"ஐயோ.. நான் ஏமாந்து போயிட்டேன்.." என கத்தியது காதல் மனம்..

"சொல்லாத காதல்ல ஏமாந்துப் போனவ நீயா தான் இருப்ப.." என எதிர் மனம் சொல்ல..

"சொல்லாத காதலுக்கும் வலி இருக்குமே.." என இன்னொரு மனம் சொல்ல..

"அப்போ கேவலமான ஒருத்தனுக்காக உன்னை நீயே அழிச்சுக்க போறயா..."

"நான் ஏன் சாகனும். ஒருத்தனை ஒருதலையா  காதலிச்சேன். இப்ப அவன் பொறுக்கின்னு தெரிஞ்சு போச்சு விலகி இருக்க போறேன்.."  என கூறிய மனதை கைதட்டி உற்சாகப் படுத்திக் கொண்டாலும் காதல் மனது சற்றே முரண்டு பிடித்தது..!! அவனின் அச்சுறுத்தலான வார்த்தைகள் அவளின் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்க

இரண்டு நாட்கள் ஒருவித பயத்திலயே இருந்தவளின் அருகில் வந்த பிரியா..

"என்ன டி ஆச்சு.. ஏன் இரண்டு நாளா ஏதோ யோசனையாவே இருக்க..."

"அதெல்லாம் இல்லை டி.. ஹோம் ஸீக்னு நினைக்கற..." என கூறியவளைப் பார்த்து சிரித்தவள்

"என்ன டி சொல்ற.. இத்தனை வருஷமா வராம இப்போ ஹோம் ஸீக்னு சொல்ற.. சரி வேணும்னா வீட்டுக்கு போ..." என பிரியா கூற...

"போனா அவனைப் பார்க்கற நிலைமை வந்தாலும் வரும்" என நினைத்தவள்  "நான் போகலை டி அம்மாவை , அப்பாவை வர சொல்லலாம்னு இருக்கேன்.. என் போன் ஓடைஞ்சு போனதுல சர்வீஸ் கொடுத்து இருக்கேன்.. நியூ போன் ஆர்டர் பண்ணி இருக்கேன்..."என இழை கூறவும் பிரியாவின் போன் அடிக்கவும் சரியாக இருந்தது..

"ஏய் உங்க அம்மா டி..." என கூறியவள் போனை ஏற்று "அம்மா.. சொல்லுங்க மா.. எப்படி இருக்கீங்க..." என ஆரம்பித்து சிலபல விசாரிப்புகளுக்கு பிறகு இழையினியிடம் போனை நீட்டினாள் பிரியா..

"இழை... நாளைக்கு காலையில  வீட்டுல இருக்கற மாதிரி வா டி. நைட் கிளம்பி காலையில வர மாதிரி வா. வரும் போது கொஞ்சம் நல்லா வா டி. ஜிங்கு ஜிங்குன்னு ஜீன்ஸ் போட்டுட்டு ஆடிட்டு வராத சரியா..." என கூறியவர் போனை கட் செய்ய கடுப்பாகி போனாள் இழையினி..

"ஒரு வார்த்தை நல்லா இருக்கியான்னு கேட்டா குறைஞ்சுப் போயிடுமா எங்கம்மா... உங்கிட்ட பேசன நேரம் கூட எங்கிட்ட பேசல... ச்சே"

"என்ன ஆச்சு.. அம்மா என்ன சொன்னாங்க.." என பிரியா கேட்க..

"உடனே ஊருக்கு வர சொல்றாங்க..."

"போ டி.. உனக்கும் ஹோம் சீக்னு சொன்னல்ல போ.. அங்க போனா கொஞ்சம் நல்லா இருக்கும்.. உன் மனசு தெரிஞ்சு அம்மாவே வர சொல்றாங்க.. கிளம்பு முதல்ல.." என கூறிய ப்ரியா அவளின் துணிகளை எல்லாம் எடுத்து வைக்க..

"நல்ல துணியா போட்டுட்டு வர சொன்னாங்க டி.. ஏதாவது எடுத்து வை" என இழை கூற..

"பட்டு பாவாடை தான் இருக்கு எடுத்து வைக்கவா..." என பிரியா கேட்க

"ஏதாவது, இருட்டில தானே போறேன் சோ நோ ப்ரோப்ளம்.. தென் என் போன் வந்தா என் வீட்டு அட்ரெஸ்கு அனுப்பி வை..." என இழை கூற சரியென தலையை ஆட்டினாள் பிரியா..

நான்கு மணி நேரப் பயணித்திற்கு இரவு பன்னிரண்டு மணியளவில் பஸ் ஏறியவள் நான்கரை மணியளவில் வந்து இறங்க..

இறங்கியவுடன் அவளின் ஆடையை தான் அனைவரும் பார்த்தனர்.. அதெல்லாம் கண்டுகொள்ளாத பழனியோ.. "இழை பல்லு விளக்கினயா..." என கேட்க..

"இல்லை மா.." என தூக்க கலக்கத்தில் கூறியவளிடம் ப்ரெஷ்யும்.. பேஸ்டையும் கையில் கொடுத்து பல்ல விளக்கிட்டு வா." என கூற அதன் படியே  செய்தவள் காருக்குள் ஏறி அமர உறங்கி போனாள்... உறங்கியவளை தட்டி எழுப்ப  கண்களை திறந்தவள் மண்டபத்தில் நின்றாள்..

"இங்க எதுக்கு வந்து இருக்கோம்" என
கேட்க

"மகேஷ்கு கல்யாணம் வா..." என கூறியவர் மண்டபத்திற்கு அழைத்து செல்ல அங்கு பட்டு வேஷ்டி சட்டையில் மகேஷ் இருக்க.. ஒரு கணம் காதல் மனம் கலங்கினாலும் அடுத்த நிமிடமே புழுவைப் பார்ப்பது போல் பார்த்தாள் இழையினி..

"ஏய் போ.. அவன் பக்கத்துல உட்காரு." என பழனி கூற.. ஒரு முறை இதயம் நின்று தான் துடித்தது இழையினிக்கு அதற்கு மேல் அவள் விட்ட வார்த்தைகள் அனைவருக்கும் தெரியுமே..((ஞாபகம் இல்லைன்னா முதல் பார்ட்டை படிக்கவும்...))

****

அனைத்தும் கூறி முடித்தவள் அவனை
அனல் பார்வை பார்க்க.. அவனும் சலிக்காமல் அனல் பார்வை வீசினான்..!!

"இன்னொரு பொண்ணுக் கூட இருந்தவனை எந்த இதுக்கு கல்யாணம் பண்ண..." என கோபத்தில் கத்தியவனை மேலும் முறைத்தாள் இழையினி..

"என்ன நானா பண்ண, கத்திய காட்டி மிரட்டி கல்யாணம் பண்ணீங்க  டா, ஞாபகம் இல்லையா உனக்கு.." என கூற அன்று கல்யாணத்தில் இவள் செய்த கூத்தின் அர்த்தத்தை இன்று புரிந்துக் கொண்டான்..!!

"அதான் மேடம் இரண்டு வருசமா என்னை பிரிஞ்சு இருந்தீங்களோ.. சொல்லி இருந்தா உங்க கண்ணு முன்னாடி கூட வந்திருக்க மாட்டேன்.."

அவனை பார்த்து ஏளன சிரிப்புடன் "இப்ப கூட நான் பண்ணலைன்னு சொல்றயா.. டா.. எவ்வளவு தான் அசிங்கப்படுத்திப் பேசினாலும் ஒரு வார்த்தை நான் தப்பு பண்ணலைன்னு உண்மையை சொல்ல மாட்டயா டா" என கேட்டவளை விழி விரித்து பார்த்தான்...

"அது வந்து.."என இழுக்க

"நான் முதல்ல பேசிக்கிறேன் டா.. அப்பறம் நீ பேசு.."

"நம்ம கல்யாணம் முடிஞ்சதும் அடுத்த நாளே நான் ஆர்டர் பண்ண என் போன் என் கைக்கு வந்தது.. அது மட்டும் வரல என் பழைய போனும் வந்தது... ஆனா அதை நான் பாக்கவே இல்லை.. நீ ஊருக்கு போனயே அப்போ பார்த்தேன்.. இதோ இந்த கழுத்துல நான் கடிச்சு வைச்ச இந்த தழும்பு அந்த போட்டோல இல்லை.. என் மனசு அடிச்சுட்டே இருந்துச்சு அந்த போட்டோல இருக்கிறவன் என் மகேஷ் இல்லைன்னு தெளிவா தெரிய.. உன்னைப் பார்க்கணும்  நினைச்சேன் ஆனால் முடியாமே போயிருச்சு.. உன் போட்டோ எல்லாத்தைலையும் தேடி பார்த்துட்டேன். எல்லா போட்டோலையும் இந்த தழும்பு மறைச்சு தான் இருந்தது..!! அப்படியே இரண்டு வருஷம் போயிருச்சு ஆனா என் மனசு குளம்பிட்டே இருந்துச்சு.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு உன் கழுத்தில அந்த தழும்பு இருக்கறது.. நூறு டைம் யோசிச்சு பார்த்து இருக்கேன்.. ஒரு மனசு ஆமா இருக்குன்னு சொல்லும்.. இன்னோரு மனசு இல்லைன்னு சொல்லும்.. ஆனாலும் இதுக்கு நடுவில என் மனசு உன்னை நினைக்காம இருந்தது இல்ல டா...எப்போ உன் கூட ஒன்னா  தூங்க ஆரம்பிச்சானோ அப்போ பார்த்தேன் என் மகேஷ் கழுத்துல இருக்கற தழும்பை..

"ங்ங்ங்க....இப்ப சொல்லு டி.. நான் நல்லவன்னு.. இப்ப  வரைக்கும் கேவலமா திட்டிட்டு இருந்த நீ.. தீடீர்ன்னு  நல்லவன்னு சொல்ற..என்னால நம்ப முடியாது டி,உன்னை நம்பவே முடியாது..!!

"திட்டியவது நீ உண்மையா ஒத்துக்குவன்னு நினைச்சேன் டா.."

"போடிங்க...நல்லா நினைச்சே.. ஓடி போயிடு.. ஒரேடியா அந்தர் பல்டி அடிக்கற.. இத்தனை நாளா கேவலமா திட்டுவாங்கலாம்... அது, இதுன்னு சொல்லுவங்களாம் இப்போ நீ என் மகேஷ் நான் உன்னை சின்ன வயசுல இருந்தே லவ் பண்ணன்னு சொல்லுவாங்களாம் போ டி.." என கூறி நகர்ந்தவனை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டாள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro