Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அவன் 9

வணக்கம் நண்பர்களே...😢😢😢

என் கதையின் போக்கிற்காக மட்டுமே ஒரு சில கதாப்பாத்திரங்களை அறிமுக படுத்தினேன்...😕😕😕 அவர்களையும், அவர்களின் காதலையும் கதையின் போக்கில் காணலாம்...😳😳 தயவுசெய்து யாரும் குழப்பி கொள்ள வேண்டாம்.. 😕😕 என் கதை முடியும் தருணமில்லை😖😖😖 அதனால் நான் அறிமுகம் செய்த அனைத்து கதாப்பாத்திரங்களையும் ஏன் செய்தேன் என அதிமுக்கியமான கேள்வியை கேட்கவேண்டாம் மக்களே. 😭😭 சத்தியமா பதில் சொல்ல தெரியலை(மீ பாவம்)  கதையின் போக்கில் அந்த கதாபாத்திரங்களின் முக்கியத்துவம் புரியும்.. அதேபோல் என் கதையில் சிலபல ட்விஸ்ட்களையும் வைத்திருக்கிறேன்...அதையும் ஏன் வைத்தாய் என்று கேட்டால் அதுக்கு பதில் இல்லை ( நான் இன்னும் அதை யோசிக்கவே இல்லை...)) இன்றுடன் என் கதையில் போக்கு வெகுவாக மாறும் குழப்பங்கள் இருந்தாலும் பொறுமையாக படித்தால் மிக்க நல்லது.. ))))) நன்றி வணக்கம்.😍

********

காற்றிலாடும் மூங்கிலின்  ஓசை  சில நிமிடங்களிலே மறைவது போல தன்னவளின் நினைவு அடிக்கடி வந்து மறைந்ததுமுண்டு..அதை அவனும் வெளி காட்டிக் கொண்டதில்லை..!!

அன்று சென்று தன்னவளின் இதழை சுவைத்ததோடு வந்தவன் தான் இதுநாள் வரை அவளைக் காணக்கூட இல்லை.. உரிமையுள்ளவன்  தான் ஆனாலும் தன்னவள்  நினைவில்லாமல் அன்று தன் கோபத்தில் செய்தது தவறென எண்ணியவன் கூசிப்போனான்..!! அன்று முதலே தன்னவளை காணவும் முடியாமல், காணாமல் இருக்கவும் முடியாமல், தவிக்கிறான் அவளின் மாயவன்.. ஆனாலும்  இன்றுவரை தவறாமல்  தன்னவளை பற்றி அவளின்  தோழி மூலம்  விசாரித்து தெரிந்துகொண்டான்...

**

எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்குமிடம்.. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெறும் கட்டிடங்களே..

பல அடுக்கு மாடி வீடுகள் இல்லையென்றாலும் அந்த ஏரியா முழுவதும் கான்கிரீடிலான ஒரு அடிக்கு மாடி வீடுகளே..மாலை வேளை என்பதால் சிறுவர்களின் கலகலப்பு அங்கிருந்த மொட்டை மாடிகளில் தெளிவாக கேட்டது...!!! அதையெல்லாம் தன் பால்கனியிலிருந்து பார்த்து கொண்டிருந்தவனின் நினைவில் தன்னவள் சொல்லாமல் கொள்ளாமல் வந்தாள்.. 

"டேய் மகேஸ் .. பூதி .. எனக்கு இந்த பட்டத்தை மட்டும் செஞ்சு கொடு..நான் உன்னை மாமான்னு கூப்பிடறேன்" என  மழலைக்குரலில் கேட்டாள்..

"போ டி நீ ஒன்னும் என்னை மாமான்னு கூப்பிட வேண்டாம். தீபா மிஸ் என்னை மாமான்னு கூப்பிடுவாங்க.." என அதே மழலைக்குரலில் அவனும் கூற

அவனை முறைத்தவள் அவனை கிள்ளி வைத்துவிட்டு 'போ டா" என கூறி கொண்டே ஓடியவளின் மழலைக்குரல்  இப்போதும் கூட அவனின் காதில் கேட்டுக்கொண்டே தான் இருந்தது..ஏன் மெல்லியதாக சிரிப்புக் கூட வந்தது அவனுக்கு.. எத்தனை ஆண்டுகளானால்  என்ன.... தன்னவளை சிறு வயதில் சிண்டியது இன்றும் நினைவிலாடியது அவனுக்கு...

"ஹாய் மகேஷ் .." என்ற குரலில்  தன் நினைவிலிருந்து வந்தவன் நிமிர்ந்து பார்த்தான்... வந்தவரை பார்த்து மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று சல்யூட் அடித்தான்....

"வாவ் யௌங் மேன் யூர்ஸ் லூக்கிங்  சோ ஸ்மார்ட்  மை பாய்.. "என கூறிக்கொண்டே அவனின் அருகில் வந்தவர்

"எப்படி இருக்க மை பாய்"என கேட்டவரை

"ஐ ம் குட் சார்.. வாட் அபௌட் யூ சார் என கேட்க ... ஐ ம் ஆல்வேஸ் குட் அண்ட் ஐம் அல்சோ யௌங்.. ஸீ" என தன்னை சுற்றி காட்டினார் அவர் ...

சின்னதாக புன்முறுவல் உதித்தான் மகேஷ்...

"தென் உன் வேலையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு அண்ட் அல்சோ யூர்ஸ் ஸ்டடி" என கேட்க

மெல்லியதாக சிரித்தவன்  "வெரி இன்டெர்ஸ்டிங் சார் தென் என் ஸ்டடி யாஹ் குட் சார் .. "

"இவ்வளவு சின்ன வயசுலயே க்ரைம் இன்ஸ்பெக்டரா இருக்கறது மிக பெரிய விஷயம் மகேஷ்.. தென் நீங்க வந்து இவ்வளவு பெரிய பெரிய கேஷ் எல்லாம் சாதாரணமாக முடிச்சு தரது ரொம்ப பெரிய விஷ்யம் வெரி வெள் ..

தென் நெஸ்ட் க்ரைம் ரொம்ப ரொம்ப க்ரிடிக்கள்.... மத்த க்ரைமெல்லாம்  யாரு என்னன்னு ஒரு சின்ன இன்போர்மஷன் நமக்கு கிடைக்கும்  ஆனால் இந்த க்ரைம்ல அது மாதிரியான எந்த இன்போர்மஷனும் நமக்கு கிடைக்கல...இந்த கேஷ் விஷயம் சொல்லும் போது சாதாரணமாக தெரியலாம் ஆனால் இதோட பின் விளைவுகள் ரொம்ப அதிகம் மகேஷ் நம்ம கலெக்டர் சார்க்கு வந்த நியூஸ்...(கலெக்டர் சார் யாருன்னு சொல்லுங்க மக்களே..) டிரெக்டா என்கிட்ட சொன்னாரு நான் உன்கிட்ட சொல்றேன்.. வேற யாருகிட்டையும் எனக்கு இந்த கேஷ்ஸை ஒப்படைக்க விருப்பமில்லை மகேஷ்.. என்ன எல்லா கேஸ்  தென் அதோட டீடெயில்ஸ்யும் அனுப்பி வைக்கறேன் நீங்க கூட கம்ப்யூட்டர் ஸ்டடெண்ட் தானே.." என கேட்க ஆம் என தலையாடினான்... தென் நீங்க  மும்பையில ஒர்க் பண்றது யாருக்கும் தெரியாது தானே மகேஷ்..."என கேட்க

"எஸ் சார் யாருக்கும் நான் இங்க இருக்கிறது தெரியாது சார் .."

"ஓகே மை பாய்.. நான் என்ன பண்ணனும் எப்படின்னு உங்களுக்கு நார்மல் மேசேஜ் பண்ற....  தென் நம்ம கேஸ் விஷயம் முழுக்க முழுக்க போன்  தான். சோ அதனால நீங்க  கீபோர்டு மொபைல் யூஸ் பண்றது.... ரொம்ப நல்லது நம்ம கேஸ்க்கு கொஞ்சம் ஈசியா இருக்கும்.." என மகேஷின் மேல் அதிகாரி சொல்லவும் அவனின் குரும்பு தனம் வெளியே எட்டி பார்த்தது..

மெல்லியதாக சிரித்துக்கொண்டே "இரும்பு திரை படத்தில வர மாதிரியா சார்"என கேட்க..

சிரித்தவர் "ரியாலிட்டில நடக்கிறது தானே மகேஷ் படத்தில சொல்றாங்க.. ஆனா இதுவும் ஒரு செப்ட்டிக்கு தான் மகேஷ்... நம்ம கேஸ் முழுக்க முழுக்க தொலைபேசி தான் ஆனால் இது வேற  இஸ்ஸுசு(issues) சோ வைட்டிங் பார்  நெஸ்ட் மூவ்...!" என கூறி அங்கிருந்து நகர்ந்தார்..

****

நாட்கள் அதன் போக்கில் நகர தன்னவனின் நினைவுகடலில் மூழ்கி போனாள் பேதையவள்...ஆம் இன்றுடன் ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது அவனை கண்ணில் கண்டு. எத்தனை நாளாகிவிட்டது என்று எண்ணியவளின் கண்களில் குளம் கட்டியது.. ஆம் அவன் மேல் எவ்வளவு கோபத்தில் இருக்கிறாளோ..  அவ்வளவு காதலில் இருந்தவள் அல்லவா..எவ்வளவு தான் அவனின் மேல் கோபமும் வெறுப்பும் இருந்தாலும் ஒரு நொடி கூட அவனைவிட்டு பிரிந்து இருந்ததில்லை அந்த பேதை.. வெறுப்பு ஒரு கண்ணிலும்  காதல் ஒரு கண்ணிலும் மாறி மாறி வெளி வர தன்னவனை ஆயிரம் முறையாக மறக்க நினைத்தாலும் தோற்று தான் போனாள் மங்கையவள்..

அவனை நினைக்க நினைக்க கண்களில் சிறு துளி நீருடனும் இதழில் சிறு சிரிப்புடனும்  தன் சிறு வயது காதலே நினைவு வந்தது அந்த மாயவனின் தூயவளுக்கு...

"ஏய் தலையினி"  என அழைத்தவனை முறைத்தவள் சட்டென்று  அவனை அடித்துவிட்டு இவள் அழுதுகொண்டே ஓடியது தான் இன்று வரை ஞாபகம் வந்தது இழையினிக்கு... 

தன்னையும் மீறி சிரித்தவளின் சிரிப்பு வெளியே கேட்க  சிரிப்பு வெளியில் கேட்காமல் இருக்க  தன் வாயை கை வைத்து அடைத்துக் கொண்டாள் இழையினி..

'மகேஷ் பூதி"(பூபதி) எனக்கு இந்த பட்டம் செஞ்சு கொடு... இல்லைனா  கூட்டாஞ்சோறு ஆக்கி சாப்பிடலாம் வா" என அழைக்க

"எங்க "என கேட்க

"அதோ அங்க தென்னை மரத்தோட்டத்தில" என எங்கோ தெரியும் தென்னத்தோப்பை காட்டிட

"போ டி அங்க பெரிய பெரிய நல்லபாம்பு இருக்குன்னு அம்மா சொன்னாங்க..நான் வர மாட்டேன்  என கூற  "அப்போ நம்ம பூசங்காட்டுல செய்யலாம்" என கூற

"சி ச்சி.. அங்க எல்லாம் ஆய் இருக்கும் நான் வரல..." என கூறியவனை முறைத்தவள் "அப்போ நீ வர மாட்டாயா" என கேட்டுக்கொண்டே அவனின் கையில் கடித்து வைத்து சிட்டென பறந்து விட்டாள்..

சிறு வயதில் இருந்தே இருவருக்கும் ஏகப்பொருத்தம்... அவள் செய் என்றால்.....இவன் மாட்டேன் என கூறுவான்.. இவள் வேண்டாம் என எதை சொன்னாலும்... அதை வேணும் என்று அடம் பிடிப்பான்..இவன் கிள்ளி வைத்தால் இவள் கடித்து வைப்பாள்.. அவளை வம்பிழுக்க எந்த எல்லைக்கும் செல்வான்.. அவளை வெறுப்பேற்றி பார்ப்பதில் அவ்வளவு ஆசை அவனுக்கு.. 

சிறு வயதில் அவனிடம் பிடித்தமான சில விஷயங்கள் தான் .. ஆனால் அவன் வளர்ந்த பிறகு எல்லாம் மாறிவிட்டது.. அவனின் குணம் முதற்கொண்டு அனைத்தும்  மாறி இருந்தது...!!! இவன் தானா எனும் அளவிற்கு மாறி இருந்தான்...

எது அவனிடம் பிடித்ததோ..  எது அவனிடம் தன்னை ஈர்த்ததோ.. அவை அனைத்தும் பிடிக்காமல் போனது அவளுக்கு... அந்த ஒரு நாள் வராமல் இருந்திருந்தால் இன்று அவனிடம் தன் காதலை சொல்லி இருப்பனே என நினைத்தவளிற்கு அவனின் மேல்  வெறுப்பு தான் தோன்றியது... !!!

சில நிமிடம் சிரிக்கவும் ..

சில நிமிடம் அழுகவும்...

சில நிமிடம் ரசிக்கவும்...

சில நிமிடம் வெறுக்கவும்...

வைத்தாயடா.....

"இழை "என பிரியா அழைக்கவும் சட்டென்று திரும்பி என்னவென கேட்க

"டையத்தை பாரு டி .. வா சோறு திங்களாம் ரொம்ப பசிக்குது.. கருவாட்டு குழம்பு வைச்சு இருக்கேன் ஒரு ப்புடி ப்புடி பிடிக்கணும் வா டி  "என அழைக்க

"ஒரு டாக்டர் மாதிரி பேசுதான்னு பாரு  கடவுளே" தலையில் அடித்து கொண்டவள் சாப்பிட கிளம்பினாள்..

"இழை ஒரு குட் நியூஸ் டி' என ப்ரியா சொல்ல

"அப்படி என்ன குட் நியூஸ்" என கேட்க..

"நம்ம கூடிய சீக்கரம் வெளிய ஹாஸ்பிடலுக்கு ட்ரைனிங் போக போறோம் டி... அதுவும் இங்க இல்லை நார்த் சைட்ல தான் போவோம்.." என மகிழ்ச்சியாக கூற

ஏதோ வேண்டா வெறுப்பாக தலையை ஆட்டினாள் இழையினி...

"என்ன டி  உனக்கு  பிடிக்கலையா' என கேட்க

"ச்சே இல்லை டி போகலாம்... அதுக்கு முன்னாடி அம்மாக்கு கால் பண்ணி சொல்லிடனும்.. அதான் யோசிச்சேன்" என கூறி கை கழுவி விட்டு நகர்ந்தாள்

"

இவ எதுக்கு இப்படி மூஞ்சியை வைச்சிட்டு இருக்கான்னு தெரியலையே..இவளை புரிஞ்சுக்கவே முடியலை... ஒரு சில சமயம் சிரிக்கறா...ஒரு சில சமயம் அண்ணா போட்டோ எடுத்து வைச்சுட்டு உருகி பாக்கறா... இவ அவனை வெறுத்து ஒதுக்கறாளா..இல்லை லவ் பண்றாளா.." என தனக்கு தானே கேள்வி கேட்டுக் கொண்டாள்  ப்ரியா...

****

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro