அவன் 8
"ஐயோ......யோ...ஐயோ...."என இழை கத்த
இவளின் கத்தலில் கட்டிலின் மறு புறத்தில் உறங்கிக்கொண்டிருந்த அவளின் தோழி பதட்டத்துடன் எழுந்து தடுமாறி கீழே விழுந்து வலியில் கத்தவும்..
அவளின் கத்தலில் மேலும் பயந்த இழை தன் குரலை உயர்த்தி மீண்டும் கத்த ஆரம்பிக்க அடித்துபிடித்து எழுந்தமற முயற்சி செய்தாள் இழையின் தோழி ப்ரியாஸ்ரீ....!!!!
இழையின் சத்தம் போனிலுள்ள அலாரம் போல் ஓயாமல் கத்திகொண்டே இருக்க ....
அதில் கடுப்பானவள் இடுப்பின் வலியுடனே எழுந்து அவளின் வாயை இருகைகளாலும் அடைத்து
"என்ன டி என்ன ஆச்சு...!! ஏன் இப்படி கத்தற...!!இனிமே கத்தனா சொல்லிட்டு கத்து...என இழையிடம் கூறியவள் "இவளால என் இடுப்பு போச்சே .. ஐயோ கடவுளே வலிக்குதே..!! இடுப்பை சுத்தியும் நாலு ஊசி போடணும் போல இருக்கே..!! இப்படி அர்த்த ராத்திரியில கதற வெச்சுட்டாலே படுபாவி..." என தன் பாட்டிற்கு பேசிக்கொண்டிருந்தவளை கண்களை உருட்டி உருட்டி பார்த்தாள் இழையினி...
"என்ன டி எதுக்கு இப்படி முழிக்கற...என்ன ஆச்சு" என ப்ரியா கீழே விழுந்த கேபத்துடன் கேட்க..
"அது ... அ..து... ஒரு கெட்ட கனவு டி அதான் பயத்துல கத்திட்டேன்" என இழை கூற
"இப்படி கத்திட்டே எழற அளவுக்கு அப்படி என்ன கனவு வந்துச்சு மேடம்" என கேட்டவளிடம் தன் கனவினை கூற ஆரம்பித்தாள்
"அது வந்து டி சபரி அண்ணாவைப்பத்தி சொல்லிட்டு இருந்தாயா!!!..." என இழை ஆரம்பிக்கவும் "ஐய்ய் நம்ம ஆள பத்தி புதுசா என்னமோ சொல்றா" என மனதில் நினைத்து இழை சொல்வதை கேட்டாள் பிரியா...
"நானும் கேட்டுட்டு இருந்தனா அப்போ... அப்போ.. ஒரு உருவம் யாருன்னே தெரியல!! நானும் அண்ணவா இருக்கும்ன்னு நினைச்சுட்டு எழுந்து போனான அப்போ அந்த உருவம் என் கையை பிடிச்சு இழுத்து... இழுத்து....."
"என்ன???? உன் அண்ணனா??? கையை பிடிச்சு இழுத்தான்..." என சற்றே கோபத்துடன் கேட்டவளின் தலையில் நங்கென்று கொட்டினாள் இழையினி
"அடியே அதான் யாருன்னே தெரியல சொன்னனே..!! நான் அண்ணான்னு நினைச்சுட்டு வெளியே போன...!!! ஆனா அண்ணா இல்லை... நீ கவலை படாம இரு...!!" என கூறவும் தேக்கி வைத்த மூச்சை பெரு மூச்சாக வெளியில் விட்டவள் " நீ சொல்லு டி ஏன் பாதிலேயே நிறுத்திட்ட" என மீண்டும் பிரியா கேட்க...
"அந்த உருவம் என் கையை பிடிச்சு இழுத்து ... இழுத்து சொல்ல முடியாமல் மறுபடியும் இழையினி தேம்ப..."
"இழுத்தா....என்ன டி இழுத்து....
சொல்லி தொலை டி இழுத்துட்டே இருக்க..!' என சலிப்புடன் கேட்டவளின் கைகளை பிடித்து கொண்டே....!
"அவன் என் கையை கையை பிடிச்சு இழுத்து... இதோ இங்க... இங்க... அவள் உதட்டை காமித்து...இங்க கிஸ் பண்ணிட்டான் டி" என அழுதுகொண்டே கூற..
"அடி ஆத்தி கிஸ் பண்ணிடான்னு சொல்லறா...
நானும் ஆரம்பத்திலிருந்து சொல்லும் போது வேற கனவு தான் சொல்லுவான்னு பார்த்தேன்...!! இவ என்ன இன்னைக்கு நடந்ததை தான் சொல்றா போல..!!
மயக்கம் போட்டு தெளிஞ்சா.... இப்படித்தான் உண்மையை கனவுன்னு நினைச்சுபாங்களோ....!! இவளுக்கு நிஜமாகவே மறந்து போயிருச்சா.." என மனதில் நினைத்தவள் அவளை சமாதனம் செய்து உறங்க வைத்தவள்.
"அப்போ அந்த அண்ணா சொன்னது உண்மைதான் போலயே"
என நினைத்தவள் இன்று மாலை நடந்ததை நினைத்து பார்த்தாள்!!
தன் முதுகுக்கிற்கு எதிர்த்திசையில் எதையோ வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவளை அழைத்தாள் ப்ரியா....!!!
"ஏய் இனியா (இழை) உனக்கு ஒன்னு தெரியுமா... நேத்து அவன் எனக்கு ப்ரொபோஸ் பண்ண வந்தா....(சபரி)
நான் இக்னோர் பண்ணிட்டு வந்துட்டேன்...!!! இப்போ வருவான்னு நினைக்கிறேன்.." என கூறியவளை மேலிருந்து கீழாக பார்த்தாள்..
"என்ன இவ இப்படி பாக்கிறா.."என மனதில் நினைத்தாலும் அவளிடம் கேட்கவில்லை
மிடுக்கான தோற்றம்... அழகானவள் தான் நவீன மங்கை... பார்த்ததும் அவள் பின்னால் செல்ல தோன்றும் பெண்ணழகி தான் இழையின் தோழி..
அவளை பார்த்து சிரித்தவள்...
அவளின் பேச்சை பாதி கேட்டும் கேட்காமல் எங்கோ வெறித்து பார்த்துக்கொண்டிருந்தவளை அவனின் நிழல் உருவம் தன்னிலைக்கு வர செய்தது...!!!
இழையின் கவனம் தன் பேச்சில் இல்லை என்பதை அறியாத அப்பாவி ஜீவன் தன் காதலை பற்றி கூறிக்கொண்டு இருந்தது..!!! அவளை பார்க்காமல் எதிர்த்திசையில் பிரியா அமர்ந்திருந்ததால் இழையின் மாற்றமும் தெரியவில்லை அவன் வந்ததும் அறியவில்லை...!!! (((....இவள் எதிர்த்திசையில் அமர்ந்து இருந்தால் தான் இழை தன் கனவின் ஆரம்பத்திலிருந்து கூறும் போது ஆவேன கேட்டுக்கொண்டிருந்தால் பிரியா....)))
அவனின் நிழலை பார்த்துக்கொண்திருந்தவள் அவன் அருகில் வரவும் என்னவென்று தெரியாமல் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது... தன் இதயத்தில் கை வைத்து கொண்டே ...,"இனியா கூல் பேபி... அவன் உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணலை... அவன் இதோ இவகிட்ட ப்ரொபோஸ் பண்ண வாரன்.. நீ ஏன் பயப்படற... கூல் டி கூல்" என தனக்குத்தானே தைரியம் சொல்லி கொண்டவள் அவனின் நிழலை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாள்....!!
(ப்ரியா கொஞ்சம் பெரிய வாயாடி சோ இன்னும் அவளோட கதையை தான் சொல்லிட்டு இருக்கா...இழுத்து இழுத்து... சொல்லிட்டு இருக்கா...)))
தன் தோழியை தான் பார்க்க வந்திருக்கிறான் என நினைத்த இழையினி ஆடவனின் முகத்தை கூட பார்க்காமல் நாகரிகம் கருதி அங்கிருந்து நகர நினைத்தவளை அவள் சுதாரிக்கும் முன்பே அவளின் கையை பிடித்திலுத்தவன் அவளை நொருங்கி அவளின் இதழில் தன் இதழை பொறுத்திருந்தான்..!!!
(((((முதலில் கோபம் கொப்பளிக்க தன்னை காத்துக்கொள்ள நினைத்து அவனை அடிக்க கை ஓங்க அதை பற்றி கொண்டவன் தன்னவள் இதழில் முத்தங்களை கணக்கில்லாமல் வழங்கி கொண்டிருந்தான்...
அவனின் இரும்பு பிடியிலிருந்து அறிந்து கொண்டாள் அவன் தன்னவன் தான்னேன... அவனிடமிருந்து விலக முற்பட நினைத்தாலும் .. அவனின் திடீர் அருகாமையில் சொக்கிபோனாள் இழையினி. அவனின் இதழ் தீண்டலின் அதிர்ச்சியே அவளை மேலும் செயலிழக்க வைக்க.... கண்னின் கருவிழிகள் சுருங்கி விரிய கண்கள் இரண்டும் இருட்டிக்கொள்ள அவனின் மேல் முழுவதும் சரிந்தாள்....)))))))
"என்ன இவ நான் பேசிட்டே இருக்கே பதிலே காணோம்.. ஒண்ணுமே பேச மாட்றா..!' என நினைத்த ப்ரியா தன் தோழியை திரும்பி பார்க்க ஸம்பித்து நின்றாள் ப்ரியா......
"அட பாவிங்களா என்ன டா லைவ்வா கிஷ் அடிக்கிறத காட்டிட்டு இருக்கீங்க... ச்சி ச்சி ..." என நினைத்த மறுநொடியே ஐயோ யார் இவன் என நினைத்தவள்
"டேய் டேய் என்னடா பண்ற விட்றா அவளை" என பிரியாவின் கத்தலில் தன்னவளைவிட்டு பிரிந்தவன் அவள் மயக்கமடைந்ததை பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் தன் தோளில் சாய்த்துக்கொண்டே...
"சாரி சிஸ்டர் கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன்..."என கூறியவனை மேலிருந்து கீழாக பார்த்தாள் பிரியா...
"டேய் யாருடா நீ என்ன தைரியம் இருந்தா எங்க வீட்டுக்குக்கே வந்து என் பிரன்ட்க்கு முத்தம் கொடுப்ப ராஸ்க்கேல்" என இவள் கத்திகொண்டே தன் தோழியை தன் தோளில் சாய்த்து கொண்டாள்..
தன்னவளை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே "சாரி பிரியா சிஸ்டர் இன்னைக்கு நான் ஊருக்கு போறேன்...சோ ரீட்டன் எப்போ வருவன்னு எனக்கே தெரியாது.. அதான் இவளை பார்த்துட்டு போலாம்ன்னு நானே இங்க வந்தேனேனக் கூறியவனை நம்பிக்கை இல்லாமல் பார்த்தாள் பிரியா..' அவளின் பார்வையை புரிந்தவன் நேற்று முன்தினம் நடந்த திருமணத்தை பற்றி கூறி தன்னை அறிமுகம் செய்து கொண்டான் மகேஷ் பூபதி.. நம்பிக்கைகாகா மித்திரன்க்கு அழைத்து விவரத்தை கூற சொல்லவும் தான் அவனை முழுவதும் நம்பினாள் பிரியா...
"இவளை இப்போ ஹாஸ்பிடல் கூட்டிக்கொண்டு போகணும்" என்ற பிரியாவிடம்
"நீங்க ஒன்னு பயப்பட வேண்டாம்..சிஸ்டர்... இவ சீக்கரம் எழுந்துடுவா இவ எழுந்ததும் நேரம் காலம் எல்லாம் பார்க்கமா கொஞ்சம் கால் பண்ணி சொல்லுங்க.." என் கூறி அவனின் மொபைல் நம்பரை பிரியாவிடம் கொடுத்துவிட்டு சென்றான் மகேஷ்.....
(((((...கோவையில் தான் ஏர்போர்ட் என்பதால் அனைவருக்கும் முன்பே ஈரோட்டிலிருந்து கிளம்பியவன் தன்னவளை பார்க்க ஹாஸ்டல் போக அங்கு அவள் இல்லாமல் இருக்க நேராக பிரியா தங்கி இருக்கும் வீட்டிற்கு வந்தான்... இழையை பற்றி முழுவதும் அறிந்தவன் அல்லவா... அவள் எங்கிருப்பாலேன அறியாமல் இருப்பானா என்ன....
நேரகா பிரியா தங்கி இருக்கும் வீட்டிற்கு வர... வீட்டின் வெளியிலயே தன்னவள் தரிசனம் கிடைக்க அவளை பார்த்துக்கொண்டே வந்தான்..!!சாரி ரசித்துக்கொண்டே வந்தான்... குளிருக்கு நடுங்கிக்கொண்டிருந்த இதழின் மேல் பார்வை படிய அவளை அள்ளி அணைக்க துடித்த கைகளை கட்டுப்படுத்த முடியாமல் ஒரே எட்டில் நெருங்கியிருந்தான்...
தான் தான் வந்திருக்கிறேனேன அறிந்து தான் தன்னை பார்க்காமல் விலகி செல்கிறாள் என நினைத்தவனின் கோபம் எல்லையை கடக்க...
தன்னவளின் கையை பிடித்து நிறுத்தியன் அவள் நிமிரும் முன் அவளின் இதழில் மென்மையாக முத்தமிட்டான் மகேஷ்....))))))))
(இவனை சின்ன பையன்னு நினைச்சது ரொம்ப தப்பு போல..))
சட்டென்று நினைவு வந்தவளாய் தன் தொலைபேசி எடுத்து அழைப்பு விடுத்தால் அவளின் அழைப்புக்கு காத்திருந்தவன் போல எதிர் முனையில் உடனே அழைப்பு ஏற்கப்பட நடந்ததை கூறினாள் ப்ரியாஸ்ரீ....
"அண்ணா நீங்க சொன்ன மாதிரியே அவளுக்கு எந்த ஞாபகமும் வரலை..!! எப்படி அண்ணா இவ்வளவு சரியா சொன்னிங்க..." என பிரியா கேட்க
"அதுவாம்மா அவளுக்கு இது ஒரு வியாதின்னு... நமக்கு இது பெரிய பெனிபிட்ன்னு கூட சொல்லலாம்..!!! ஏதாவது அதிர்ச்சியா நடந்தா சட்டுன்னு மயக்கம் வந்துரும் அப்பறம் நல்ல தூங்கி எழுந்து கனவுனு நினைச்சுக்குவா...!!" என மகேஷ் கூறவும்
"அப்போ உங்க கல்யாணத்துக்கு இப்படி அதிர்ச்சி ஆகலையா" என அதிமுக்கியமான கேள்வியை கேட்க..
"அதுவா முகூர்த்த நேரம் ஆரம்பிக்கிறதுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடியே சொன்னதுனால... இது மாதிரியான பிரச்சினைல இருந்து கொஞ்சம் தப்பிச்சுட்டோம்.. அதுவுமில்லாமல் அவ என்னை திட்டறதுலேயே கான்செண்ட்ரேட் பண்ணிட்டு இருந்ததுனால இதெல்லாம் ஞாபகம் வரலை போல.." என மகேஷ் சொல்ல மெல்ல தலையை ஆட்டுவிட்டு
"சரிங்க மகேஷ் அண்ணா எனக்கு இன்னும் இவ மேல கோபம் போகவே இல்லை அண்ணா.... இப்ப வரைக்கும் இவளுக்கு கல்யாணம் ஆனதை சொல்லவே இல்லை... பாத்துக்கிறேன் எவ்ளோ நாளைக்கு தான் மறைச்சு வைப்பான்னு..! ஓகே அண்ணா எனக்கு கண்ணை சொக்குது.... நீங்களும் தூங்குங்க குட் நைட்" என கூறி அழைப்பை துண்டித்தாள் பிரியா...
தன்னவளை பார்த்த நொடி பொழுதை நினைத்தவனின் இதழில் மெல்லிய புன்னகை சூடிக்கொள்ள அவன் அறியாமல் "என்னோட அழகி டி நீ.. என் செல்ல சுண்டெலி" என மெல்ல முணுமுணுத்துக்கொண்டே தலையணையில் முகம் புதைத்து கொண்டான்...
மீண்டும் தன்னவளை காணும் நொடி பொழுதில் இதே மெல்லிய புன்னகை இருக்காது என அறியாதவன் நிம்மதியாக துயில் கொள்ள அவனை பார்த்து கேலி சிரிப்புடன் தன் விளையாட்டை ஆட ஆரம்பித்தது விதி எனும் பெயரில் வரும் அந்த ஒருவனின் மூலம்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro