அவன் 45
எதையோ நினைத்து அசைப்போட்டப்படியே அமர்ந்திருந்தவனின் போன் சத்தம் போட அதை எடுத்தவனின் கண்கள் மின்னியது.
"சொல்லு குக்கு.."
"....."
"வெரி குட்... டா அவனை அப்படியே வைச்சுடு...டூ டேஸ்ல அவனுக்கு ஒரு முடிவை பண்ணுவோம்..." என கூறியவனின் குரலில் ஒரு சந்தோசம் இருக்க
"......."
"இல்லை வேண்டாம்.. ஹேமா பொண்ணுகிட்ட கம்ப்லைன்ட் வாங்கியாச்சு அப்படி தானே, அப்பறம் அந்த பொண்ணை தொந்தரவு செய்ய வேண்டாம் குக்கு.. அவ நமக்கு பெரிய உதவி செஞ்சு இருக்கா.. இதுக்கு அப்பறம் வேண்டாம். நம்ம பார்த்துக்கலாம்...." என மகேஸ் சொல்லவும்
"......"
"ஓகே டா... பை..." என வைத்தவன் கண்மூடி அமர காலடி சத்தத்தில் கண் திறந்தான்.
இழையினி தான் வந்திருந்தாள் மதிய வேளை என்பதால் அவனை பரிசோதிக்க வந்திருந்தாள். அவனின் அருகில் வர அவனை பார்த்தவள் பதில் கூறாமல் அவனை பரிசோதித்து விட்டு வலியின் தாக்கம் சற்றே மட்டுப்பட்டு இருக்க வேண்டும் என தனக்குத்தானே யூகித்தவள் எழுந்து செல்ல அவளின் கையை பிடித்து நிறுத்த அவனை பார்த்து முறைத்தாள் இழையினி.
"ஏன் டி. ஏன் இப்படி உன்னை நீயே வருத்திக்கிற.. ப்ளஸ் குந்தாணி இப்படி இருக்காத டி. என்னால உன்கிட்ட பேசமா இரண்டு நாளைக்கு மேல இருக்க முடியல டி. நான் இப்படியெல்லாம் நடக்கும்னு யோசிக்கல டி. என பேசியவனை கண்டு மேலும் முறைத்தவள் கண் ஜாடையில் அவனின் கையை காட்டி எடுக்க சொல்ல அதில் கடுப்பான மகேஷோ
அவளின் விரல்களைப் பிரித்து தன் விரல்களுடன் கோர்த்துக் கொண்டவன்
"ஓவரா பண்ணாத டி.. நான் ஒன்னும் உன் கையை பிடிச்சு கில்மா பண்ண கூப்பிடல,..." என அவளிடம் சத்தமாக கூறியவன் "எனக்கு என்ன அறிவா இல்லை எங்க எப்படி இருக்கணும்னு எனக்கு தெரியாத நானும் நல்ல இடைத்தில தான் இருக்கேன். எனக்கும் இங்கிதம் தெரியும் என்ன நினைச்சுட்டா என்னை.. கையைப் பிடிச்சுதுக்கு இந்த முறை முறைக்கிறா..." என முனகியப்படியே அவளைப் பார்த்தவன் (சத்தமா சொல்லி தான் பாரேன்.. )))
"இதோ பாரு டி இது ஹாஸ்பிட்டல் புனிதமான இடம்னு எங்களுக்கும் தெரியும், உயிருக்கே ஆபத்தான நிலைமையில் இருந்தாலும் ஹாஸ்பிட்டல்ல கண்ணியமா இருப்போம் தெரிஞ்சுக்கோ..." என தன் ஷர்ட் காலரை தூக்கிவிட மேலும் முறைத்த இலையினி அவனின் தலையில் நங்கேனக் கொட்டிவிட்டு தன்னைப் பிடித்த கரங்களை விடுவித்து அவனின் கையில் மாலை போல் கயிறை கட்டியவள் அவனிற்கு வலிக்காத அளவிற்க்கு பார்த்துப் பார்த்து கையை மடக்கி அதில் வைக்க, தொட்டிலில் மிதப்பது போல் இருந்த தன் கையை பார்த்தவன் "அவரசத்துல தப்பா அடிபட்ட கையில பிடிச்சதுக்கா இப்படி மொறச்சுட்டே நின்னா... ஒரு நிமிசம் தப்பா நினைச்சுட்டேன் சாரி டி குந்தாணி..." என கூறியவன் நிமிர அவள் சென்றிருந்தாள்.
"போயிட்டாளா... எப்போ டி பேசுவ.. ரொம்ப படுத்தற டி நீ..." என தனக்கு தானே முனகியவனைப் பார்த்து கிளிக்கி சிரித்தாள் பூவிழி..
"வாங்க சின்ன பொண்டாட்டி.. இந்த அத்தானை பார்க்க இவ்வளவு நாள் ஆயிருச்சா..'என கேட்டவனின் அருகில் சென்றவள் அவனிற்கு கொண்டுவந்த சாப்பாட்டு பையை அருகிலிருந்த மேசையில் வைத்தவள் நாற்காலியை இழுத்துப் போட்டு அவனின் அருகில் அமர்ந்தாள்.
"இப்போ எப்படி. மாமா.. இருக்கு.." என்றவளின் கண்கள் கலங்க
"அடி ஆத்தி... பூமா என்ன இது சின்ன புள்ள தனமா அழுதுட்டு இருக்க.. இங்க பாரு எனக்கு ஒன்னுமில்லை நல்லா இருக்கேன். இன்னும் ஒரு வாரத்தில சரியா போயிடும்.." என ஆறுதல் கூற
"இல்லை மாமா.. எப்பவும் நீ தான் ஆக்ட்டிவ்வா இருப்பீயா ஏதாவது பேசிட்டே ஜாலியா வம்பு பண்ணிட்டே இருப்பீயா நீ இப்படி இருக்கறத பாக்க முடியல மாமா.. பெரிய அத்தான் கூட நம்ம பூவான் இருக்கான். ஆனா நீ தனியா இருக்க. நாங்க வறோம்னு சொன்னதுக்கு அக்கா வேண்டாம் நானே பாத்துக்கிறேன்னு சொல்லிட்டா... இப்போ நீ நல்லா இருக்க தானே மாமா.. கை வலி எப்படி இருக்கு.." என கேட்டவளை பார்த்து சிரித்தவன்
"நான் நல்லா இருக்கேன்.. சாப்பிட்டியா." என கேட்க
"ஹிம்ம் சாப்பிட்டேன்.. அக்கா எங்க போனா காணோம்.." என கேட்க
"ம்ப்ச்ச்.. தெரியல.. ரௌண்ட்ஸ் போயிருப்பா.." என கூறியவனிடம்
தயங்கியவாறே "மாமா. தீரன் சார். இரண்டு நாளா இங்க இருக்கிறத பார்த்தேன்.. அவரு மேல எந்த தப்பும் இல்ல தானே.." என கேட்டவளை பார்த்தவன்
"அவன் தான் இத்தனைக்கும் காரணம் இரண்டு நாளா என்னோட கஸ்டடில இருந்தான் இப்போ வேலூர் ஜெயிலுக்கு அனுப்பியாச்சு.. என்னோட கேஸ் ஓவர்.." சற்றே நக்கல் தோனியில் கூறியவனின் நக்கலை கவனிக்காதவளின் கண்களில் கண்ணீர் கீழே விழும் நிலையில் இருக்க அதை பார்த்தவனிற்கு சிரிப்பு வர.. "ஏய்.. பூமா.. கூல்.. கூல்.. உன் சார் ரொம்ப நல்லவரு.. நான் சும்மா சொன்னேன்.. நீ தாராளமா அவருக்கிட்ட உன்னோட லவ்வை சொல்லலாம். நான் உனக்கு எப்பவும் துணைக்கு இருப்பேன்..." என சிரித்த முகமாக கூறியவனை அதிர்ச்சியுடன் பார்க்க
அவளின் அதிர்ச்சியில் மேலும் சிரித்தவன் "அன்னைக்கு இவரை பத்தி நான் சொல்லும் போதே உன் கண்ணுல தண்ணி எப்போ கீழே விழுவேன்னு இருந்துச்சு. அப்பவே கண்டு பிடிச்சுட்டேன், நீ அவரை லவ் பண்றன்னு. கொஞ்சநாள் போகட்டும் எல்லா உண்மையும் சொல்றேன்.." என சிரிப்புடன் கூறியவனைப் பார்த்து
"போ மாமா.. எனக்கு எந்த உண்மையும் சொல்ல வேண்டாம். அவரு நல்லவரு எனக்கு தெரியும்.. இருந்தாலும் ஒரு சின்ன பயம் அவ்ளோதான்..."என நாணப் புன்னகையுடன் கூறியவளை பார்த்தவன் மேலும் சீண்ட நினைத்து
"அடேங்கப்பா என்னமா வெட்க படற கொஞ்சம் உன் அக்காக்கு சொல்லி கொடு, கல்யாணம் பண்ணி நாலு வருஷம் ஆகுது ஒரு நாள் கூட வெட்கப்பட்டு நான் பார்த்ததே இல்லை.." என என கூற அவனின் மேல் பேனா வந்து விழ திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க அறைவாயிலில் தன்னவள் கை கட்டி அவனை ஏற இறங்க பார்த்தாள்.
"ஐயோ.. வந்துட்டா.. என் ராட்சஸி" என மனதில் நினைப்பது போல் வெளியில் கூறிவிட குபீரென சிரித்து விட்டாள் பூவிழி..
"ஐயோ பூவிழி ஒன்னு சொல்ல மறந்துட்டேன் உன் ஆளு இன்னைக்கு ஊருக்கு போக போறாரு. இந்த நேரம் நம்ம ஊரு பஸ் ஸ்டாப்ல இருப்பாரு.. சீக்கரம் போ.." என அவசரமாக கூற
"யோவ்.. வேண்டாத பேச்சு எல்லாம் பேசிட்டு முக்கியமான விஷயத்தை இப்போ சொல்றயா..." எனக் கூறியவள் அவனின் தலையில் நான்கு குட்டுகளை வைத்தவள் தன் அக்காவின் சந்தேக பார்வையை மதிக்காமல் அவளை இடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினாள்.
'ஐயோ வராளே.. ஏதாவது அடிக்கறதுக்கு முன்னாடி பசிக்குதுனு சொல்லிடு மகேஷ்..' என மனதில் நினைத்தவன் "வா டி ரொம்ப பசிக்குது..." என முகத்தை பாவமாக வைத்து கூற
தன்னைத் தானே திட்டி கொண்டவள் அவனின் அருகில் இருந்த சாப்பாட்டு பையை எடுத்து தட்டில் சாதத்தை போட்டவள் சாம்பார் , ரசம் இரண்டையும் பாதி கலந்து அவனிற்கு ஊட்டிவிட நல்ல பிள்ளைப் போல் வாங்கி கொண்டான்..
(ஆம் மகேஸிற்கு சாம்பார், ரசம் இரண்டும் கலந்து சாப்பிட்டால் தான் பிடிக்கும்..)) ((அப்படி சாப்பிட்டா என்ன டேஸ்ட் வருமோ சாப்பிட்டா தான் தெரியும்.. ட்ரை பண்ணி பாருங்க.. ))
*************
தன் பின் முதுகை பாதி மறைத்து இருந்த பேக்கை சரி செய்தவன் தன் கையில் இருந்த லக்கேஜ்ஜை தரையில் வைத்தவாறே தனக்கு நேர் எதிரே தெரிந்த நெல்வயலை பார்த்து கொண்டிருந்தான்
"என்னங்க தம்பி.. ஊருக்கு கிளம்பிடீங்க போல.." என கேட்ட அந்த ஊர் பெரியவரிடம்
"ஆமாங்க பா.. கிளம்பிட்டேன்.." என கூறியவன் மீண்டும் வேடிக்கையை பார்க்க தொடங்கிவிட்டான்..
மூன்று ஊருப் பிரியும் இடத்தில் அனைத்திற்கும் பொதுவான பேருந்து நிறுத்தம் அது தான்,தீரன் பக்கத்து ஊரில் தான் தங்கி இருந்தான். கிராமத்தில் இருப்பது இவனிற்கு அதிக பிடித்தம் என்பதால் காலேஜ் தொலைவில் இருந்தாலும் பரவாயில்லை காலேஜ் பஸ்ஸில் சென்று விடலாம் என நினைத்து கிராமத்தில் தங்கி இருந்தான்.
"தீரா... தீ..ரா.. என மூச்சு வாங்கியபடி வந்தவளை அதிர்ச்சியில் பார்த்தான் தீரன்
'இவளுக்கு தெரிய கூடாதுன்னு நினைச்சு தான் சீக்கரம் கிளம்பற.. இப்போ எப்படி சமாளிக்கறது..'என நினைத்தவன் அவளை பார்க்க
"எங்க..எ.."என நெஞ்சை பிடித்துக் கொண்டு மூச்சு வாங்கியவளிடன் தண்ணீர் பாட்டிலை நீட்ட வாங்கி மடமடவேன குடித்தவள்
"எங்க போறீங்க.. செம் லீவ்க்கு போறீங்களா.. ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போறீங்க.. எப்போ ரீட்டேன்.." என சிரிப்புடன் கேட்டவளை பார்த்து பெருமூச்சுடன்
"இல்லை விழி.. இனிமே வர மாட்டேன்.. நான் வேலையை விட்டுட்டேன்.. நான் வந்த வேலை முடிஞ்சுது.. மகேஷ் எல்லாத்தையும் பார்த்துப்பான்னு நம்பிக்கையில இங்க இருந்து போறேன். மறுபடியும் பழைய லைஃப். ஸிஸ்டெம், ரோபோ வாழ்க்கை. பட் எப்படி இருந்தாலும் நான் போக வேணும். நீயும் நல்லா படி.. இன்னும் ஒரு வருஷம் இருக்கு. நல்ல படிச்சு நல்ல வேலைக்கு போ... அப்பறம் உன் கல்யாணத்திக்கு கண்டிப்பா கூப்பிடு வருவேன்..." என பாடம் ஒப்பிப்பது போல் கூறியவனை முறைத்தவள் கண்களில் கண்ணீரை தேக்கி வைத்துக்கொண்டே..
"கண்டிப்பா சார்.. உங்களை கூப்பிடாம இருப்பேனா சொல்லுங்க..." என வெட்டுக்கென கூறியவள் அவனை பாராமல் அங்கிருந்து நடந்தாள். அவளின் கை அவளின் முகத்தை அடிக்கடி தீண்டுவது பின்னால் இருந்து பார்த்தவனிற்கு நன்றாகவே தெரிந்தது அவள் அழுகிறாள் என, இருந்தாலும் கையை கட்டுப் படுத்தியவன் இயலாமையுடன் அவளை பார்த்தான்.
"என்னை மனிச்சுடு செல்லமா.. உனக்கு இன்னும் படிப்பு இருக்கு, அதே மாதிரி நான் ஒரு அனாதை குடும்பம் இருந்தும் அனாதையா இருக்கற ஒருத்தன்.. இந்த நிலைமையில் நீ வந்தா அந்த குடும்பம் உன்னை ஏதாவது சொல்லும் அந்த வார்த்தையை தாங்கிற சக்தி என்னால முடியாது டி..." என நினைத்தவனின் கண்களிலும் கண்ணீர் கோடுகள்..
***
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro