அவன் 4
தன் அறையினுள் யாரோ வரும் சத்தம் கேட்டுத் திரும்பியவள் புன்முறுவலுடன் அவளின் மாயவன் நின்றான்!!! அவனின் இதழ் மட்டுமல்ல விழியும் சேர்ந்து சிரிக்க!! இமைக்க மறந்தாள் பெண்ணவள்!! அவளை மீறியும் மாயவனின் விழி சிறையில் அடைப்பட்டு நின்றாள்...
"ஐயோ மகேஷ் என்ன டா ஆச்சு இந்த குந்தானிக்கு!!என்ன இப்படி நிக்கிறா!! கிட்ட போலமா வேணாமா!!"என யோசித்து கொண்டே அவளை பார்க்க!! அந்த பார்வை அவனுக்கும் புதிதாக தான் தெரிந்தது..
மாயவனின் விழி சிறையில்!!!
விழுந்தவள் மீள முடியாமல் சொக்கித்தான் போனாள்! அவனின் விழியசைவில்...!
மனதை மயக்கும் கண்னின் மொழி பெண்களுக்கு மட்டும் உண்டு என படித்து தெரிந்து இருக்கிறேன்!! ஏன் பல காவியங்களை படைத்த வள்ளுவன் கூட அதே தானே கூறுகிறான்!! ஆனால் அதெல்லாம் பொய் என்று சொல்லும் அளவிற்கு அல்லவா அவன் விழியின் ஈர்ப்பு இருக்கிறது!!...
ஒற்றை புருவத்தை தூக்கி ஒரு கண்ணை சிமிட்டி "என்னவென்று" அவன் கேட்க
என்ன பார்வையடா இது..!!! மங்கையை நொடியில் கவர்ந்து இழுக்கும் காந்த பார்வையோ..!!! இல்லை பெண்ணவளை மயக்கும் மாயப்பார்வையோ!!! உன் கண் விளிம்பில் சிக்கி தவிக்கும் மாயை தான் என்னவோ...!!!
"பேய் ஏதாவது அடிச்சுருச்சா.. என்ன டா இவ இப்படியே நிக்கற.. கல்யாணமான பொண்ணுங்களை மோகினி பேய் அடிக்கும்னு கேள்வி பட்டு இருக்கேன்!! ஆனால் அதுவும் இதுவும் ஒரே இனம் தானே!! அதுக்கு வாய்ப்பு கொஞ்சம் கம்மி தான்!!! பிசாசு ஏதாவது பார்த்து பயந்துட்டாளோ!!!.. இல்லையே அதுக்கு வாய்ப்பு இல்லை.. முட்டைக்கன்னி முழியை நாலு பக்கம் உருட்டி பார்த்தா போதும் அதுவும் இவளைப் பார்த்து பயந்து போயிடும்!! அப்பறம் வேற என்னவா இருக்கும்!" என யோசித்து கொண்டே அவளை நெருங்கினான்..
அவனின் விழியில் மயங்கியவள் அவன் முன்னேறி வருவதை அறியாமல் இருந்தாள்..
அரையடி தூரத்தில் நின்றவன் "அடியே இந்தாடி..!! அடியே என்னை பாரு டி!" கன்னத்தில் தட்டிகொண்டே அவளை கேட்க... அவன் அடித்ததில் தன்னிலை வந்தவள் மழுங்க மழுங்க விழித்தாள்..
"இப்போ என்னத்துக்கு இப்படி நிக்கறவ..! இந்தாடி என்ன ஆச்சு!!" மீண்டும் கன்னத்தில் தட்ட போக அவளின் முறைப்பில் கீழ் இறக்கி கொண்டான்
"பார் மகேஷா பார் உன் வினி முழு இழையினியாய் மாறி நிற்பதை பார்!! இன்னும் சிறிது நேரத்தில் முழு மோகினியையும் நீ காண்பாய்...!"என கூறிய மனதை அடக்கியவன் அவளிடம் "என்ன டி மொரச்சா நாங்க பயந்து ஓடி போயிடுவோமா நான் யாருன்னு தெரியும்ல்ல..!!"என கெத்தாக கேட்க
"யாரு.." சற்றே அழுத்தத்துடன் கேட்டாள்..
"யாருன்னா.. எ..ன்ன.... டி .அர்த்தம் நான் உன் புருஷன் டி..."
"ஓஒ... அப்ப...டி......யா.."
"அடி ஆத்தி ராகம்,போடறாளே..!!மகேஷா உசாரு டா உசாரு..! நம்ம தலைல தாளம் போடறதுக்குள்ள அவகிட்ட சட்டுப்புட்டுன்னு பேசிட்டு போயிட்டே இருக்கணும்!" என நினைத்தவன் மெல்லிய குரலில் "ஹக்கும்.. என்னை ஒரு நிமிஷம் மட்டும் ஒரே ஒரு நிமிஷம் பாரு வினிமா" என கூற அவனின் வினி என்ற பெயரில் சற்று அதிர்ந்தவள் அவனைப் பார்க்க..."வினி நான்.. நா..ன் உங்கிட்ட கொ..ஞ்ச..ம் பேசணும்.."
பேச வேண்டாம் என கை நீட்டி தடுத்தவள் ..." ஒன்னும் பேச வேணாம் நான் செம கோபத்தில இருக்கேன் இதுக்கு மேல நீ இங்க நின்ன அவ்ளோதான்!! பொறுக்கி.." பொறுக்கியை சற்று அழுத்தமாக சொல்ல
பொறுக்கி என கூறியதில் கோபப்பட்டவன் "என்ன பொறுக்கியா!! பொறுக்கி என்னல்லாம் பண்ணுவான்னு தெரியுமா டி உனக்கு..!! என்ன பண்ணுவான்னு சொல்லட்டுமா இல்லை செஞ்சு காமிக்கட்டுமா!! உனக்கு தீயாரியா சொன்ன புரியாது பிரக்டிக்களா செஞ்சு காமிக்கட்டுமா" என கூறிகொண்டே அவளை நெருங்கினான்..!!
"இங்க பாரு எனக்கு காராத்தே தெரியும்..அப்..ப..றம்..எனக்கு அடிக்க நல்ல வரும்"தடுமாறி குரல் வர அவனும் சிரிப்புடன்
"எனக்கு நல்லா தடுக்க வரும்.."
"ஏய்ய.....நீ ரொம்ப அட்வாண்டேஜ் எடு...த்து"என்றவளின் பேச்சு பாதியில் நின்றது அவளின் இதழில் விரலை வைத்தவன் விரலில் தன் இதழை பதித்தான்!!
"ரொம்ப பேசனா இந்த விரல் கூட நமக்கு நடுவில இருக்காது!!! "இனி பொறுக்கின்னு சொல்லி பாரு டி அப்போ இருக்கு உனக்கு...!!! என நக்கல் தோனியில் சிரித்து கொண்டே கூறினான்...
அவனின் செய்கையில் அதிகப்படியான கோபம் வெளிவர அவனை அடிக்க கை ஓங்க.. ஓங்கிய கையைப் பிடித்தவன் அவளின் கையை பிடித்து கொண்டே "இங்க பாரு எனக்கு அடிக்க தெரியும்!! ஆனால் நான் அடிக்க மாட்டேன் நான் அப்படிப்பட்டவன் இல்லை !!...ஆனால் நீ என்னை ரொம்ப சோதிக்கிற..! என் கோபத்தை ரொம்ப தூண்டி விடற!! அப்பறம் ஏதாவது எடக்கு மடக்கா நடந்தா நான் பொறுப்பில்லை! சொல்லிட்டேன்.." என கோபத்தில்ஆரம்பித்து குறும்பு சிரிப்புடன் சொல்ல
"ரவுடி..420,நீ பண்ண கேடி தனம் எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறயா எல்லாம் தெரியும்!! என்னமோ ரொம்ப யோக்கியன் மாதிரி பேசறா..." என அவனிடம் எகிற
"ஆமா டி நான் யோக்கியன் இல்லை தான்.!அதுக்கு என்ன டி இப்போ..! அதே மாதிரி நா ஒன்னும் மகான் கிடையாது..!! நீ சொல்றதை எல்லாத்தையும் டேக் இட் ஈசின்னு எடுத்துட்டு போக..!!! எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு.." எனக்கூறி அங்கிருந்து நகர்ந்தான் அவனின் முகமாறுத்தலே கூறியது அவனின் எல்லையில்லா கோபத்தை..!!
அவனின் கோபம் இவளை ஏதோ செய்ய அதனை யோசித்தவாறே படுக்கையில் அமர்ந்தாள்...!!!
இவர்களின் பேச்சை மட்டும் கேட்டு சந்தோஷ சிரிப்பை உதிர்த்தது ஓர் உருவம்...!
வாசல் வரை சென்றவன் போகும் வழியில்லேயே கோபத்தை விட்டு இருந்தான்...!! அவனின் கோபம் அவளிடம் மட்டும் இரண்டு நிமிடம் கூட நீடிக்காது என்பது அவன் அறிந்த உண்மை!!!
சிறிது நேரம் வெளியில் நிலவினை ரசித்தவன் மீண்டும் அவளின் அறைக்கு செல்ல கதவு பூட்டாமல் சாத்தி மட்டும் இருந்தது..அவள் உறங்கிக் கொண்டு இருக்க!! மெல்ல நடந்து சென்றவன்!! அவள் அருகில் மண்டியிட்டு அமர்ந்தான்!! அவளின் தலையை வருடிவிட்டவன்!! அவளின் பிறை நெற்றியில் தன் முத்திரையை பதித்தான்..!!!
"அப்படி என்ன டி பண்ணேன் நான்..!!நீ ஏன் டி இப்படி என்னை வெறுத்து ஒதுங்கி போற..!! நீ எப்போ என்னை வெறுக்கிறன்னு சொன்னயோ அப்ப இருந்து உன்னை நான் உயிரா விரும்ப ஆரம்பிச்சுட்டேன் டி... எப்போ டி நீ நீயா இருப்ப..."என ஏதோ ஏதோ பேசியவன் அவள் அருகில் அமர்ந்து கொண்டான்..!!!!
************
காலையில் அவளுக்கு முன் கண் விழித்தவன் அவளைப் பார்க்க குழந்தை போல் தூங்கி கொண்டிருந்தாள் வாயில் ஜொள்ளு ஒழுக்கி கொண்டு.!! சிறிது முறுவலுடன் அதனை துடைத்து விட்டவன்
"லூசு இன்னும் பால் குடிக்கிறோம்ன்னு நினைப்பு.. ராட்சசி எழறதுக்குள்ள இங்கிருந்து போயிடனும்!! இல்லைன்னா சாமி ஆடுவா..."என நினைத்தவன் அங்கிருந்து மெல்ல நகர்ந்தான்..!!!
அறையிலிருந்து வெளியில் வந்தவனை பழனி பார்க்க..
"அடப்பாவி என்ன டா இப்போதான் வர.. "
"அது...து.... அக்கா அப்படியே சுத்தி பார்த்துவிட்டு வந்தேன் அக்கா..நம்புக்கா.."எனக் கூறியவனிடம்
"இல்லையே உன் முழியே சரியில்லையே.. என்ன டா பண்ண என் புள்ளையை.."
"ஏக்கா.. அப்படியெல்லாம் ஒன்னும் நடக்கல சும்மா அப்படி பார்க்காத!!!"
மீண்டும் நம்பாத பார்வை பார்க்க
"அக்கா நம்பு உன் புள்ளை செம கேடி தெரியும் தானே அவ எப்படி என்னை உள்ளே இருக்க விடுவா சொல்லு!! அவளுக்கு தெரியாம அவளை பார்க்க போன அவ்ளோதான் வேற ஒன்னும் இல்லைக்கா..!"
"ஓஒ..... அப்படியா... " என இழுக்க
"
எதுக்கு இப்போ ராகம், பல்லவி ன்னு எல்லாரையும் கூப்பிடற..!! போ கா போ போயி வேலையை பாரு எனக்கு இன்னைக்கு நைட் பிலைட் அதுக்குள்ள எல்லாம் சாங்கியமும் பண்ணிடுங்க!" என மகேஷ் கூற
"ஹான் சரி சரி!!! தண்ணி எடுத்து வைக்கிறேன் போ குளி" என கூற தலையை ஆட்டி சென்றான்..!!
சூரியனின் கதிர் கண்ணில் பட்டு கூச இரண்டு கண்களையும் மெல்ல திறந்தவள் மணியை பார்க்க அதுவோ ஏழு என காட்டியது!! நீட்டி நெளித்து எழுந்து சென்றவள் தன் காலைக்கடன்களை முடித்து குளித்து வந்தவள் தன் மேல் புது வாசம் வருவது போல் உணர்ந்தாள்!! தன் தோளை நுகர்ந்து பார்க்க புது தாலியின் மஞ்சள் வாசமும்!! மல்லியின் வாசமும் அவளை ஏதோ செய்ய!!! சில நிமிடம் கண் மூடி அதை அனுபவித்தாள்...!!!!
***
"என்ன அக்கா புள்ளையைப் பெத்து வைச்சு இருக்க!! இன்னும் தூங்கிட்டு இருக்கா ... உயிரை காப்பாத்தற டாக்டரே இப்படி தூங்கிட்டு இருந்தால்!! கோரோனோ வைரஸ் எல்லாம் வராம என்ன பண்ணும் சொல்லு" என கேட்டவனை கீழிருந்து மேலாக பார்த்தார் பழனி.
"என்னமோ சரியில்லையே இரு டி அவளை கூட்டிட்டு வரேன் " என கூறி பழனி நகரவும் இழையின் அறை திறக்கவும் சரியாக இருந்தது!! அறையிலிருந்து வெளியில் வந்தவளை சற்றே அதிர்ச்சியுடன் பார்த்தனர் அனைவரும்..!!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro