அவன் 38
"டேய் மாமா.. என்ன டா பண்ணிட்டு இருக்க..." எனக் கேட்ட சபரியிடம்
"அது ஒன்னு இல்லை மாமா.. என்னோட நம்பரை வைச்சு என்னையே ஹேக் பண்ணிட்டாங்க... அதான் நினைச்சேன் சிரிச்சேன்..." என பார்த்திக் கூற
"அடேய் என்ன டா சொல்ற.. நீயே பெரிய ஹேக்கர்.. உன்னோடத எவன் டா ஹேக் பண்றது..." என கேட்ட சபரியிடம்
"வேற யாரு என் தம்பி தான்... அவனுக்கு என் மேல டௌப்ட் வந்துருச்சுன்னு அன்னைக்கு சொன்னேன்ல, அப்போ இருந்து என்னை உன்னிப்பா வாட்ச் பண்ணிட்டு இருந்தான். நானும் அதை பெருசா எடுத்துகல. இப்போ தான் எல்லாத்தையும் காலெக்ட் பண்ணி இருக்கான் போல.." என அசைட்டாக கூறியவனை அதிர்ச்சியுடன் பார்த்தான் சபரி.
"என்ன மாமா அப்படி பாக்கற..."
"டேய் நீ ஏன் டா இப்படி இருக்க.. உன் தம்பி எல்லாமே நீ தான் பண்ணன்னு முடிவே பண்ணி இருப்பான் டா. நீ என்ன பண்ண. உன் தம்பி உன்னை தூக்கிட்டா என்ன டா பண்ணுவ..." என அதிர்ச்சி கலந்த குரலில் கூற
"கண்டிப்பா நான் மட்டும் தான் இதெல்லாம் பண்ணதுன்னு அவன் நம்பி இருப்பான்..."
"ஆனா நீ எதுவும் பண்ணலையே. உனக்கு பின்னாடி இருந்து கோழையா எல்லாம் பண்றது அவன் தானே டா.. உன்மேல என்ன டா தப்பு இருக்கு.." என கேட்ட சபரியிடம்
"யாரு டா சொன்னா.. என் மேல தப்பு இல்லைன்னு.. நான் தான் டா எல்லாத்துக்கும் காரணம்... ஆணிவேர் நான் தானே டா.. நான் எதுவும் கிரீயேட் பண்ணாம இருந்தா எவனும் எதுவும் பண்ண முடியாதே டா.." என கண்களில் மிரட்சியுடன் பார்த்தி கூற
"ஆனா இதெல்லாம் நீ வேணும்னு பண்ணலையே டா.. அது மட்டும் இல்லை எல்லாரும் ஆப் கிரீயேட் பண்ணுவாங்க. பிளே ஸ்டோர் இருக்கற எல்லா ஆப்பும் சேக்யூரிட்டி தான்னு உன்னால சொல்ல முடியுமா சொல்லு.. அது மட்டும் இல்லை நமக்கு தெரியாம எத்தனை ஆப் இருக்கு அப்படி பார்த்தா ஒவ்வொரு ஆப் அட்மின்னையும் பிடிக்கணும் டா.. நீ கிரீயேட் பண்ணி இருக்கறது ஹேக் பண்ணறவ மட்டும் தான் யூஸ் பண்ற மாதிரி இருக்கு அவ்ளோதா அவனுங்க என்ன பேசறாங்கன்னு நீ என்ன பாத்துகிட்டா இருக்க. இல்லை நீ விருப்பபட்டு தான் இதெல்லாம் பண்றயா.. எல்லாம் அந்த வீணாப் போனவன் அந்த பிச்சைக்காரப் பரதேசி பண்றது. அவன் மட்டும் கைகைக்கு கிடைக்கட்டும் கைமா பண்ணி விடறேன்..." என கோபப்பட்ட சபரியை பார்த்து விரக்தி சிரிப்பு சிரித்தான் பார்த்தி..
"என்ன டா அப்படி சிரிக்கற...."
"இல்லை மாமா ஒன்னுமில்லை.. என் தம்பி இன்னும் இரண்டு நாள் இல்லன்னா மூணு நாள்ல என்னை தூக்கிட்டுவான் அப்போ ஊருல எல்லாரும் பேசிக்குவாங்க தானே தம்பி போலீஸ், அண்ணங்கரான் பொறுக்கின்னு..." என சொன்னவனின் கண்களில் வலி நிரம்பி இருந்தது.
"இங்க பாரு மாமா. உன்னை உன் தம்பி ஜெயில வைச்சாலும் வைக்கலைனாலும் நான் இருக்கேன் உனக்கு. கண்டிப்பா அந்தளவுக்கு நான் உன்னை கொண்டு போக மாட்டேன் அதே மாதிரி நீ உள்ள போனாலும் அவனுங்க பண்றத யாரும் தடுக்க முடியாது. எனக்கு தெரிஞ்சு சுறாவை பிடிக்கறதா நினைச்சு வெறும் கிணத்து மீனை பிடிக்கப் போறான் உன் தம்பி..." என சபரி கூற
சத்தமாக சிரித்த பார்த்தி. "டேய் அவன் கிரைம் போலீஸ் டா.. எதையும் ஈஸியா விட மாட்டான்.. வெய்ட் பண்ணி பாரு.. அவனோட அதிரடி வேற மாதிரி தான் இருக்கும். மூணு வருசமா மும்பையில கிரைம்ல இருந்த எல்லா கரும்புள்ளிகளையும் ஒன்னு விடாம அழிச்சு இருக்கான். இதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும் ஏன்னா அந்தளவுக்கு செகியூரிட்டி சிஸ்டம் இருக்கு அதுக்கு மேல இந்த வேலையை ஒருத்தன் இரண்டு பேர் பண்ணவே இல்லையே பல பேர் பண்றாங்க. சோ அவனுக்கு இது புதுசா இருக்கு அவ்ளோதான் ஆனா கண்டிப்பா கண்டு பிடிப்பான் மறைமுகமா அவனுக்கு நான் ஹெல்ப் பண்ணுவேன். என் தம்பி நல்லா பண்ணுவான் பாரு..." என பார்த்தி பெருமையாக கூற
"அப்படி பெரிய பெரிய டேஸ் எல்லாரையும் அழிச்சு இருக்கான்னு உனக்கு தெரியும் தானே, அப்போ அவன் அந்த பரதேசி நாயையும் கண்டு பிடிப்பான்னு உனக்கு தெரியும் தானே, அப்போ ஏன் டா மும்பை போலீஸ் ஐடியில உன் தம்பி போட்டவே இல்லாம பண்ண.. தைரியமா விட வேண்டியது தானே. எந்த வெப் மூலமாக் கூட அவனை கண்டு பிடிக்காத மாதிரி ஏன் பண்ணி வைச்ச. நீயேன் அப்படி பண்ண. அந்த கிரைம் போலீஸ் வேற யாரும் இல்லை உன் தம்பின்னு தெரிஞ்சு இருக்கும் தானே..." என சபரி ஏதோ அறிந்து கொள்ளும் வேகத்தில் கேட்க
"அது என் தம்பிக்காக நான் பண்ணவே இல்ல.. என் குட்டிமாக்காக பண்ணேன்..." என பார்த்தி பெருமூச்சுடன் கூற
"இப்போ இழை எங்க இங்க வந்தா. மகேஷ் ஐடியை மறைக்கறதுக்கும், இழைக்கும் என்ன சம்பந்தம்..." என புரியாமல் கேள்வி கேட்டான் சபரி..
"இந்த ஆட்டத்தோட தொடக்கமே என் குட்டிமா தான் டா..."
"என்ன உலறிட்டு இருக்க. எனக்கு புரில.. இழை சின்ன பொண்ணு டா.. அவளால எப்படி. எனக்கு புரில..." என புரியாமல் கேள்வி கேட்டவனிடம்
மெல்லியதாக வருத்த சிரிப்பை உதிர்த்தவன் "உனக்கு புரியாத விஷயங்கள் நிறைய இருக்கு டா... கண்டிப்பா ஒருநாள் தெரிஞ்சுப்ப..."
எனக் கூறியவனிடம்
"சரி என்னமோ... ஆனால் அன்னைக்கு மும்பைக்கு போகறதுகு முன்னாடியே இலை கூட உன் தம்பி இருக்கிறத சொல்லிட்ட இல்லைன்னா நானே உன்னை மாட்டி விட்டு இருப்பேன். நீ சொன்னதுக்கு அப்பறம் தான் என் போன்ல இருந்த அந்த ஓடிபி நம்பரை அழிச்சு விட்டேன். இல்லன்னா அன்னைக்கே நீ மாட்டி இருப்ப..." என சபரி கூறவும் பார்த்தியின் முகம் சுருங்கியது.
"சாரி. டா மாமா. அன்னைக்கு ப்ரியா சிஸ்டர்கு அப்படி ஆனதுக்கு காரணம். அவன் சொன்னத நான் செஞ்சு இருந்தா பிரியாவுக்கு அவன் கால் பண்ணி இருக்க மாட்டா.. என்னை மனிச்சுடு..." எனக் குற்ற உணர்வில் கூறியவனை முறைப்புடன் பார்த்தான் சபரி.
"எத்தனை தடவை சொல்றது. அன்னைக்கு நடந்தது உன் தப்பு எதுவும் இல்லை.. நீ அன்னைக்கு அவங்க சொன்னதுக்கு ஒத்து போயிருந்தா தான் நான் கவலைப்பட்டு இருப்பேன். விடு டா இப்ப தான் பிரியா நல்லா தானே இருக்கா... அப்பறம் என்ன..." என சபரி ஆறுதல் கூறினாலும் அவனின் மனம் தான் கேட்க மறுத்தது...
அவனின் மனநிலையை மாற்ற "ஆமா எப்பவும் உன் உடம்பில என்னமோ மின்னி மின்னி மறையுமே எங்க காணோம்.." என சபரி கேட்க
"ஈ என இளித்துக் கொண்டே அதையும் ஹேக் பண்ணிட்டே..." என பார்த்தி கூற
"நண்பேன்டா..." என அவனை தோளுடன் அணைத்துக் கொண்டான் சபரி...
"எனக்கே செக் வைச்சான்.. பொறுமையா இருந்தேன்.. அவன் அசைஞ்ச நேரம் இதெல்லாம் ஏரர் பண்ணி விட்டுட்டேன்.." என பூபதி பார்த்திபன் கூறி சிரிக்க சபரியும் சத்தமாக சிரித்தான்.
தவறு செயபவர்கள் சிலர் தெரிந்தும் செய்கிறார்கள்.. சிலர் சூழ்நிலையை காரணம் வைத்து செய்கிறார்கள்.. சிலர் தவறு செய்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் அந்த கேவலமான சூழ்நிலைக்கு தள்ள பாடுகிறார்கள். அவர்களில் மூன்றாவது ரகம் தான் பார்த்தி.
***************
உளுந்து வெதக்கையிலே! சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே!
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்....
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்.....
உளுந்து வெதக்கையிலே! சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே!
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்....
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்....
வெக்கப்படப்பில் கவுளி கத்த வலது பக்கம் கருடஞ் சுத்த
தெருவோரம் நெறகுடம் பார்க்கவும் மணிச்சத்தம் கேட்கவுமானதே!
ஒரு பூக்காரி எதுக்க வர பசும் பால்மாடு கடக்கிறதே! இனி என்னாகுமோ? ஏதாகுமோ? இந்தச் சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ?ஓஓஓஹோ
உளுந்து வெதக்கையிலே! சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்....
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்.....
என்ற பாடலின் சத்தத்தில் சுற்றும் முற்றும் பார்க்க நிலக்கடலை காட்டிற்குள் இருந்த போன் சத்தம் என, அங்கிருந்து பார்த்தவன் தூரத்தில் இருந்தே அவனை கண்டு கொண்டான் அவள் பூவிழி என...
அவள் அருகில் செல்ல செல்ல அடுத்த வரி பாடிக்கொண்டு இருந்தது..
ஆண்: அனிச்சு மலரழகே அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே
என் கண்ணுக்குள்ள கூடு கட்டி காதுக்குள்ள கூவுங் குயிலே
நீ எட்டியெட்டிப் போகையில விட்டுவிட்டுப் போகும் உயிரே.....
"ஏய் கரடி பொம்மை...நீ அருகம்புல்லை எல்லாம் சாப்புடுவன்னு சொல்லவே இல்லை..." என கேட்டவாறே பூவிழியின் அருகில் வந்தான் தீரன்.
அவனின் குரல் கேட்டதும் சட்டென்று தன் கையில் இருந்ததை பின்னால் ஒளித்து வைத்தவள் தன் இடுப்பில் சொருகி வைத்த போனை ஆப் செய்து "என்ன சார் சொன்னீங்க.." என முறைப்புடன் கேட்டவளைப் பார்த்து சிரித்தவன்
"நீ அருகம்புல் எல்லாம் சாப்பிடுவியானு கேட்டேன்..." என மீண்டும் கேட்க
"ஏன் சார்.. செம் லீவ் விட்டா உங்க ஊருக்கு நடையை கட்ட மாட்டிங்களா.. இங்கயே தான் இருப்பீங்களா.." என அவன் கேட்டத்திற்கு பதில் கூறாமல் இவள் ஏதோ கேட்க அவனின் முகம் சுருங்கியவாறே
"ஏன் கரடி பொம்மை அப்படி கேட்கற..."
எனக் கேட்ட தீரனை முறைத்தவள்
"பின்ன என்ன.. செம் லீவ் விட்டா ஊருக்கு போகாம தோட்டம் தோட்டமா சுத்த வேண்டியது.. அதும் நான் இருக்கும் போது வர வேண்டியது.. சந்தடி சாக்குல என்னை கலாய்க்க வேண்டியது... என்னை பார்த்தா உங்களுக்கு புல்லு திங்கர மாதிரி இருக்கா.." என கேட்டவளை சிரிப்புடன் பார்த்தவன்
"அப்போ உன் கையில என்ன இருக்கு பொம்மை.. புல்லு தானே.. இருக்கு.. தூரத்தில் இருந்து பார்த்தேன் நீ இந்த புல்லை சாப்பிட்ட. நான் பார்த்தேன் அதான் வந்தேன்..." என கூற
"சார்... இது ஒன்னும் புல்லு இல்லை.. கோரைக்கா..." என புல்லை காட்டினாள்
புல்லின் வேரில் ஏதோ கருப்பாக சற்றே தடிமனான கிழங்கு போன்று இருந்தது.
"என்ன இது..' என ஒற்றை புருவ தூக்கலில் கேட்க.
"இது கோரைக்கா.. செமயா இருக்கும்.. சாப்பிட்டு பாக்கிறீங்களா..." என கேட்டவளிடம்
"ஐயோ வேண்டாம்..." என உடனே பதில் வந்தது..
"ஓவரா பண்ணத.."என கூறி அவள் முறைக்க
"இல்ல என்னமோ கருப்பா இருக்கு..அதான்.." என தீரன் கூற சிரித்தவள்
"சார்.. இப்படியே சாப்பிட வேண்டாம் இருங்க நான் உரிச்சு தரேன்.."என கூறியவள் அந்த கிழங்கின் தோலை உரித்து பேபி பிங்க் நிறத்தில் இருந்த கோரையை கொடுக்க.. முகத்தை சுளித்தவாறே அதை வாங்கி வாயில் போட்டுக் கொண்டவனின் இதழ் விரிந்தது..
"ஹிம்ம்.. நல்லா இருக்கு விழிமா. சூப்பர்.." என கூறிவனை இமைக்காமல் பார்த்தாள்
"என்ன அப்படி பாக்கற..."
"இல்லை இதுக்கு முன்னாடி இதை நீங்க பார்த்தது இல்லையா.." என கேட்டவளிடம் இல்லை என தலையை ஆட்டினான் தீரன்..
"ஆமா நீங்க எந்த ஊரு.."
"கொண்டையம்பளையம்..." என கூற அவனை முறைத்தாள் பூவிழி...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro