அவன் 37
வாகனங்களின் இரைச்சல் அதிகமாக கேட்காதளவிற்கு தன் வீட்டின் கதவுகளை இறுக சாத்தியவர் வீட்டிற்கு நுழைய தன் மகளின் செய்கையில் அதிர்ந்து
"பிருந்தா மா. எப்போ டா எழுந்த. அப்பா வந்து இருப்பேன்ல நீயே ஏம்மா இதெல்லாம் பண்ற. வீட்டுல காய்கறி இல்லைன்னு வாங்கிட்டு வரதுக்குள்ள நீ எழுந்து கிச்சனுக்கு வந்துட்ட..." என்றவாறே கிச்சனில் இருந்த தன் மகள் பிருந்தாவை பதட்டத்துடன் கேட்க
அவரைப் பார்த்து சிரித்தவள் "அப்பா நீங்க ஒருத்தரா எத்தனை வேலை தான் பாப்பீங்க. இப்போ தான் நான் கொஞ்சம் நல்லா நடக்கிறேன். கை கூட இப்போ நல்லா இருக்கு இனி நீங்க ஏன் பா.. அவசத்தைப் படனும். அதான் பா..கொஞ்சம் கொஞ்சம் உங்களுக்கு ஹெல்ப் பன்றேன்..." எனக் கூறிய மகளை சிரிப்புடன் பார்த்தார் கணேசன்.
((((...பிருந்தாவின் அப்பா.. கணேசன் நேர்மையான தாலுக்கா ஆபீசர். பிருந்தாவின் தற்கொலைக்கு பின் அவளை பார்த்துக் கொள்ள நர்ஸ் வைத்து இருந்தாலும் தன் மகளிற்கு உறுதுணையாக இருந்தார். இதுநாள் வரை தன் மகளின் தற்கொலைக்கு காரணம் அறிந்தும் அவளிடம் ஒரு வார்த்தைக் கேட்டது இல்லை அவர்.
பிருந்தாவின் இருபதாம் வயதில் அவளின் தாய் உடல்நிலை குறைவால் இறந்து விட அவரின் இழப்பால் இருவரும் மனதளவில் சோர்ந்து தான் போனார்கள். அவர்களின் மனநிலையை முழுவதும் மாற்றியவன் தீரன் தான். ஆம் தீரன் தான், பிறப்பால் கூட்டுக் குடும்பத்தில் பிறந்தாலும் அனாதைப் போல் வளர்ந்தவன்,
சிறு வயதிலேயே பாசத்திற்கு ஏங்கி நின்றவனை தாய்ப் போல் பாசம் காட்டியது அவனின் சிறு வயது தோழி பிருந்தா தான். என்னதான் இருவரும் ஒரு வயது வித்தியாசம் இருந்தாலும் அண்ணன் தங்கை உறவு மீறி நடந்துக் கொண்டது இல்லை.. அழைக்கும் விதம் வேறாக இருந்தாலும் இருவரும் பழகியது உடன்பிறந்தவர்கள் போல் தான். அவன் வீடும் இவள் வீடும் எதிர் வீடு என்பதால் அதிகம் இங்கு தான் இருப்பான் தீரனும். அவனின் குடும்பத்தில் இவனை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்பதால் இவன் எங்கு சென்றாலும் அவர்கள் இவனை தேடியது இல்லை. அவர்களின் இந்த ஒதுக்கமே தீரனின் ஆழ்மனதில் பதிந்து போனது அவன் அனாதை என்னும் சொல். அதனால் என்னவோ அடிக்கடி அவன் அனாதை எனக் கூறிக்கொள்வான்.
பிருந்தாவின் நிலைக்கு என்ன காரணம் யாரென்று அறிந்திட ஒரு வருடத்திற்கு மேலும் அவன் சென்னையில் இல்லை இதை அவனின் குடும்பத்தில் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதே அவர்கள் தீரனின் மேல் வைத்த பாசத்தின் அளவை புரிந்து கொள்ளலாம். பிருந்தாவை தற்போது முழுவதும் பார்த்துக் கொள்வது கணேசன் தான் என்றாலும் தன் தோழிக்கு பிசியோதெரபிஸ்ட், நர்ஸ் என அனைத்தும் செய்தது தீரன் தான்.
மருந்தின் வீரியத்தால் ஒரு வாரம் கோமா, அடுத்து கை கால்கள் வராமல் படுத்த படுக்கையாய் மாறியது மட்டுமல்லாமல் தற்கொலைக்கு முன்னாள் நடந்த ஒரு வார நிகழ்வுகளை மறந்து இருந்தாள் பிருந்தா. அவளின் இந்த மறதி யாருக்கு சாதகமாக அமைந்ததோ இல்லையோ தீரனிற்கு நன்றாகவே உபயோகமாக இருந்தது. ஆம் வெளி வேலை எனக் கூறிவிட்டு தன் தோழியின் நிலைக்கு காரணமானவனை கண்டுப் பிடிக்க வந்துவிட்டான் தீரன்.. இரத்த சொந்தங்களுக்கு ஏதாவது என்றால் வர தயங்கும் இவ்வுலகில் எவ்வகையிலும் உறவில்லா இந்த உறவிற்க்காக எங்கோ இருக்கும் ஊரில் தனியாக இருப்பது தீரனின் நட்பை கூறினால் ,அவன் ஊர் விட்டு ஊரு செல்லும் அளவிற்கு பிருந்தாவின் பாசம் இருக்கிறது என்பதும் உண்மையல்லவா..))))
"பா.. இந்த மச்சிக் கிட்ட நீங்க பேசனீங்களா இல்லையா.. நானும் பார்த்துட்டே இருக்கேன். ஒரு நாள் கூட என்னை வந்து பார்க்கணும்னு தோணலை அவனுக்கு. வரட்டும் இருக்கு அவனுக்கு..." என தீரனை அர்ச்சனை செய்ய..
"விடு மா.. அவன் மெதுவா வரட்டும். நீ இல்லாமல் அவன் தான் சோர்ந்து போயிட்டான். உன்னோட இந்த நிலைமையை பார்க்க முடியாமயே அவன் வெளி ஊருக்கு வேலைக்கு போயிட்டான்...' எனக் கணேசன் பாதி உண்மை, பாதிப் பொய் எனக் கணேஷன் கூற
"என்னமோ போங்கப்பா.. ஆனா அவனுக்கு இருக்கு.. அவன் வரும் போது என்னோட சாப்பாடு தான் சாப்பிடணும் இது தான் அவனுக்கு பெரிய தண்டனை..." எனப் பிருந்தா தீவிரமாக கூற "உண்மை தான் மா நீ சமையல் செய்யறதே அவனுக்கு பெரிய தண்டனை தான்...." என கூறி சிரிக்க.."அப்பா..." எனக் கத்தியவள் அவரை முறைத்தாள்.
**************
"அடியே குந்தாணி எழு டி.. என்னை என்ன டி பண்ண..." என அவனின் மார்பில் உறங்கிக் கொண்டிருந்த தன்னவளை எழுப்ப அவனை ஒற்றை கண் திறந்துப் பார்த்தவள்
பதற்றமாக எழுந்து அவனை முறைத்துக் கொண்டே அவனிடம் இருந்து பிரிந்தவள் மகேசிடம் பேசமாலே குளியலறைற்குள் நுழைந்துக் கொண்டாள்.
"என்ன இவ சண்டை போடுவான்னு பார்த்தா எதுவும் பேசமா மொறச்சுட்டே போறா.. வெரி பேட், கூடயே தூங்கனாலும் ஒன்னும் சொல்ல மட்டரா.. எப்படி இவளை பேச வைக்கறது. யோசிப்போம் நம்மை கூடயே இருந்தா கண்டிப்பா குந்தாணி பேசிருவா..." என முணுமுணுத்தவன் அவள் வரும்வரை படுக்கையிலயே காத்திருந்தான்.
குளித்து முடித்து வெளி வந்தவள் அவனை கண்டுகாது அறைக் கதவை திறக்கப் போக ஓடி சென்று அவளின் கையை பிடித்தவன்
"என்ன டி பண்ண என்னை..??" என கண்களில் குறும்பு மின்னக் கேட்டவனை மேலும் முறைத்தாள் இழையினி.
"உண்மையை சொல்லு குந்தாணி என்னை என்ன பண்ண. அதுவும் என் பக்கத்தில வந்து என்ன டி பண்ண..." எனக் மேலும் அவளை சீண்டி பார்க்க
'ஒரு வேளை கிஸ் பண்ணது தெரிஞ்சு போச்சா.. இல்லையே நல்லா தூங்கிட்டு இருந்தானே...' என மனதில் நினைத்தவள் அவனை முறைத்துக் கொண்டே நின்றாள்.
"என்ன டி... இப்படி பார்த்தா நீ என்னை பண்ணன்னு எனக்கு தெரியாத. நீயே உண்மையை சொன்னா பரவால்லை.. ஆனா சொல்லலன்னா கண்டிப்பா நீ பண்ணத நான் பண்ணுவேன்..." என சிரிப்புடன் கிறங்கப் பார்வையில் கூற
முறைத்தவள் அவனின் கையை உதறிவிட்டு அறைகதவை நோக்கி ஓட அவளிற்கு முன்னாள் சென்று நின்றவன் "அப்போ நீ சொல்ல மாட்ட அப்படி தானே.. சரி நீ பண்ணத நானே பண்றேன்.." என கூறியவன் அவளிடம் மேலும் நெருக்கத்தைக் கூட்டி இரு கன்னங்களையும் கையில் ஏந்தியவன் அவளின் குவிந்த இதழை சிறை செய்ய குனிய இழையினி கண்களை இறுக மூடிக் கொள்ள.
"நான் கேட்காமலே என் பொண்டாட்டி முதல் தடவைக் கொடுத்த இதழ் முத்தம் இன்னும் அந்த கிக்கே போகலை. இப்போ நான் முத்தம் கொடுத்தா கிக்கு போயிடும் டி சோ இப்போ நான் தர மாட்டேன்..." என ஹஸ்கி வாய்ஸீல் கூற சட்டென கண்களை திறந்தவள் அவனைத் தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடினாள்.
ஓடியவளை இமைக்காமல் பார்த்தவன் தன் தலை முடியை அழுத்திக் கோதிக் கொண்டே "என் செல்ல ராட்சஸி டி நீ.." எனக் கூறியவனின் இதழ்கள் அழகாக விரிந்தது.
*************
"குட் ஜாப் பார்த்தி சொன்ன உடனே பண்ணி கொடுத்துட்ட... கவலைப் படாம இரு, அடுத்து ஒரு மாதத்துக்கு உன்னை எதுவும் சொல்ல மாட்டேன். ஆனா சைட்ல பிரச்சினை அப்படினா கண்டிப்பா உன்னை கூப்பிடுவேன். தென் நீ கேட்ட மாதிரி உனக்கும், உன் குடும்பத்தில இருக்கறவங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனா ஒன்னு என் இழையினியை அடைய நான் என்ன வேணா பண்ணுவேன். யார் குறுக்க வந்தாலும் பார்க்க மாட்டேன் அது நீயா இருந்தாலும் சரி உன் தம்பியா இருந்தாலும் தான் சரி,.." எனக் கூறியவன் அகோரமாய் சிரிக்க
'அவன் லவ் பண்ணும் போதே அவளை அப்படி பார்த்துகிட்டான். இப்போ பொண்டாட்டி வேற, இழை மேல உன் நிழல் பட்டவே என் தம்பி உன்னை வெட்டு போட்ருவான் டா...' என நினைத்த பார்த்தியின் இதழ்கள் நக்கலாக வலைந்தது.
**************
மகேஸும், இழையும் தங்களின் சொந்த ஊருக்கு வந்து ஒரு வாரம் ஆனா நிலையில் இருவரும் தனித் தனியாக தான் இருக்கிறார்கள். மகேஸ் நெருங்கி சென்றாலும் இழை அவனிடம் பேசுவதில்லை.
அவள் பேசவில்லை என இவனும் விலகி இருக்கவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளிடம் சீண்டி விளையாடுவதும், சில பல முத்தங்களை வழங்குவதும் உண்டு.
தன் அண்ணன் தான் அந்த ஆப் அண்ட் சைட்டை தயார் செய்து அங்கு பெண்களின் ஆபாசப் புகைப்படங்களை உருவாக்கி அதை அவர்களிடம் காட்டி பணம் பறிப்பது, அவர்களை தங்களுக்கு இரையாகுவது என அனைத்தும் செய்வது பார்த்தி தான் என சரியாக தவறாகப் புரிந்துக் கொண்டவன். அடுத்து அவன் உருவாக்கிய ஆப்பை முழுவதுமாக ஹேக் செய்தான். அங்கு என்ன நடந்தாலும் இவனிற்கு தகவல் வரும் அளவிற்கு செய்து வைத்தான் மகேஷ்.
ஆனால் மகேஸிற்கு தெரியவில்லை அவன் ஈசியாக ஹேக் செய்ய உதவியதே பார்த்தி தான் என மகேஷ் அறிந்திருக்க வாய்ப்பில்லை...
******
"ஹாய்ய்.. ஹேமா... தி சீ இஸ்... அர்ஜுன் யூர்ஸ் லூக்கிங் சோ ஸ்வீட்..."
"சாரி.. வ்ஹோஸ் (whos) திஸ்..."
"ஹேய் கூல் பேபி.. உன்னை எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். எந்தளவுக்கு தெரியும்னா. உன் உடம்பில என்னென்ன எங்க எங்க இருக்குன்னு ஒன்னு விடமா தெரியும்..." என அவன் கூற கோபமடைந்த ஹேமா
"ஹௌ டேர் யூ இடியட்...யாரு டா நீ... லூசு மாதிரி பேசிட்டு இருக்க.. என்னை பத்தி என்ன தெரியும் உனக்கு. நான் அந்த மாதிரி பொண்ணு இல்லை. அதே மாதிரி நான் கம்பியூட்டர் ஸ்டடெண்ட் தான். போ என்ன வேணா பண்ணிக்கோ நீ என் போட்டைவை என்னமோ பண்ணு எனக்கு அதில ஒரு. பிரச்சினையும் இல்லை. அதை எப்படி லாக் பண்ணனும்னு எனக்கு தெரியும்.." என படபடவென கத்தியவள் தன் போனை கட் செய்து நம்பரை மாற்றினாள்.
"என்ன ஆச்சு.. ஆதி. ஏன் இப்படி முழிச்சுட்டு இருக்க..." என அருகில் வேலை செய்து கொண்டிருந்த தன் நண்பன் கேட்க
"ஒன்னுமில்லை டா.." எனக் கூறியவன் அந்த ஹேமாவின் வீட்டு விலாசத்திற்கு கோரியார் அனுப்பி வைத்தான்.
******
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro