அவன் 36
"என்ன பார்த்தி. ரொம்ப சந்தோஷமா இருக்க. போல.. பரவல்லை இரு.. ஆனா இதுவும் இன்னையோட கடைசியா இருக்கணும். இனிமே அவன் கூட நீ பேச வேண்டாம்..." என மிரட்டியவனிடம்
"என் அம்மா, அப்பாகிட்ட, என் தம்பிக் கிட்ட. என் அக்கா பொண்ணுங்க கிட்ட... ஏன் என் ஊருக்காரங்ககிட்ட கூட இரண்டு நிமிஷத்துக்கு மேல பேச விட்டது இல்லை நீ. நான் அதிகம் பேசறது இப்ப எனக்குன்னு இருக்கற சபரிக்கிட்ட மட்டும் தான். அதையும் இப்படி சொன்னா நான் என்ன பண்ணுவேன் கவி, என்னை எதுவென பண்ணிக்கோ, அவனை எதுவும் பண்ணிடாத ..." என தன் இயலாமையை வெளிப்படுத்தியது பார்த்தியின் குரல்
"அதான் நானும் சொல்றேன் மச்சா.. அந்த ஒரு பிரன்ட் நானா மட்டும் தான் இருக்கணும். முதல்ல இருந்து எனக்கு பிரன்ட் நீ மட்டும் தான். நீ எப்படி டா அவனை பிரன்ட் நினைக்கலா.. நானும் உனக்கு உண்மையான பிரன்ட்டா தானே இருக்கே. ஏன் டா புரிஞ்சுக்க மாட்டேன்னு சொல்ற.. என்னை விட அவன் உனக்கு முக்கியமானவனா போயிட்டான்னா.. அப்போ நான் யாரு டா உனக்கு. நீ ஏன் டா எப்பவும் போல என்கூட பேச மட்ற..." எனப் போனில் கேட்டவனின் குரலைக் கூடக் கேட்க பிடிக்காதவன் போல் முகத்தை வைத்திருந்தான் பூபதி பார்த்திபன்.
அவனின் கெஞ்சல் எல்லாம் சில நிமிடங்களுக்கு மட்டுமே மீண்டும் அவனின் அரக்க குரலில் "இப்படி பண்ண உனக்கு தண்டனை தர வேண்டாமா. கண்டிப்பா கொடுக்கணும்...." என்றவன் சிறிது அமைதிக்கு பின் "எனக்கு இன்னோரு ஆப் வேணும் அதுவும் ஒரு மணி நேரத்தில வேணும். நீ அதை பண்ணலைன்னா நான் சொல்ற பொண்ண நீயுட்டா மாத்தி கொடு..." என மூர்க்கத்தனமாக கூற
"சத்தியமா இன்னொரு ஆப், ரெடி பண்ணி தர முடியாது. அது ரொம்ப ரிஸ்க் புரிஞ்ச்சுக்கோ.. கண்டிப்பா முடியாது..." என பூபதி அவரசமாகக் கூற அதெல்லாம் காதில் வாங்கி கொள்ளதவன்
"ஒஹ் அப்படியா.. உன்கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேன் பூபதி, நம்ம பிருந்தாவைப் பார்த்து ரொம்ப நாள் ஆகுது. நான் வேணாப் போயி பார்த்துட்டு அவளுக்கு பண்றத பண்ணிட்டு வரட்டுமா..." என அவன் மிரட்டும் தோனியில் கூற
"இல்லை வேண்டாம்.. வேண்டாம்... அவ பாவம்.. வேண்டாம்..என் பிருந்தா பாவம்... என் பிருந்தாக் கிட்ட ஒன்னும் சொல்லாத.. அவ பாவம். அவ பாவம்.." எனக் கூறியதை நான்கு முறைக்கு மேல் கூறியவன் "நான் என்னால முடிஞ்சதை பண்ற..." என பயந்த குரலில் கூற
"இப்ப பண்ணு..."
"நான் ஆப் ரெடி பண்ணி தரேன்..." எனக் கூறியவன் அடுத்து அவன் செய்ய வேண்டிய வேலைகளை அவன் கூறிய நேரத்திற்கு செய்து முடித்தான்.
ஆனால் அதில் ஒரு சில மாற்றங்களையும் கொண்டு வந்திருந்தான். அது பெண்களின் மொபைலை கவனிப்பது. அதாவது இதுவும் ஒரு ஹேக்கிங் முறை தான். கண்ணாடி என்று வைத்துக் கொள்ளலாம். மொபைல் செயலிகள் அனைத்தும் சேமிக்கப்படும். ஒவ்வொன்றும் சேமித்து வைக்கப்படும். இதுவரை நூற்றுக்கு எண்பது சதவிகிதம் பெண்களின் மொபைலை மட்டுமே கவனித்து வருகிறது என்பதே உண்மை..
வழக்கம் போல் தன் மூளையை
அலசி வைத்தவன் அதை தகர்க்கும் தீர்வையும் வைத்து இருந்தான். ஒன்றை உருவாக்கும் அவனே அதை தடுக்கும் வழியையும் வைத்து இருந்தான். இது கவி அறியாமல் போனது பூபதியின் நன்மை என்பதை உண்மை. இன்று பூபதி உருவாக்கி இருக்கும் ஆப்& லிங்க்கும் அப்படி தான். ஒரு ஆன்ராய்ட் போனை முழுவதும் கவனித்து வந்தாலும் அதில் சில மாற்றங்களை அதாவது அதனை தடுப்பதற்கு. சில சின்ன சின்ன கோர்ட் வைத்து இருந்தான்.
அதை கவினிற்க்கு தெரியாது தன் தங்கை நிதித்யாவின் போனில் அனைவருக்கும் தெரியும் படி செய்தான்.
அவனிற்கு தெரிந்தது நித்தியாவும், பார்த்தியும் அதிகம் பேசிக் கொள்வது இல்லை என்பது ஆனால் மகேஸை விட பார்த்தியிடம் தான் அவள் அதிகம் ஒட்டிக்கொண்டு இருப்பாள் என அவன் அறிந்திருக்கவில்லை.
அதுமட்டுமின்றி தன் தங்கையின் போனில் அனைத்து பாதுகாப்புகளையும் செய்து அவள் மொபைல் மூலமாக அந்த ஆப்பிற்கு எதிராக சில விஷயங்களையும் செய்து வைத்தது மட்டுமல்லாமல் தன் நண்பன் ஒருவனின் மூலமாக அவள் பயிலும் காலேஜிற்கு சென்று அங்குள்ள பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறான் என்பது யாரும் அறியா உண்மை. தன்னை முழுவதும் ஆண்டு கொண்டிருக்கும் அந்த அரக்கனுக்கு தெரியாதும் பார்த்துக் கொண்டான்.
ஆனாலும் தன் நண்பனின் மொபைல் கடையில் வேலை செய்யும் இளைஞனை அழைத்து யாரோ (தீரன்) விசாரித்தது கூறவும் உள்ளூர பயம் எட்டிப் பார்த்தது பார்த்திக்கு. அதன்பிறகு அந்த காலேஜ்ஜில் எப்படி விழிப்புணர்வு ஏற்படுத்த என்பதை யோசிக்கலாகும் போது தான் அடுத்து நடந்த கொலை. ஆம் கொலை தான் அவன் உருவாக்கிய லிங்க் மற்றும் ஆப்பின் மூலம் பெண்களை வேறு விதமாக மாற்றி அதை அவர்களுக்கு அனுப்ப ஒரு குழு இருந்தால், அந்த பெண்களின் மொபைலில் வரும் ஒ டி.பி.அடுத்து அந்த பெண்களின் உறவினர்களுக்கு வரும் ஒ.டி.பி. நம்பர்களை வைத்து அண்ணன், தம்பி, பேசுவது போல் செய்து அவர்களை தங்களை நாடி வரவைப்பது, லிங்க் மட்டுமே டச் செய்தால் அது ஓபன் ஆகி மொபைலில் உள்ள கேமரா ஆன் செய்வது என மற்றொரு குழு. இப்படி இருக்க அவர்களை வைத்து பணம் பார்க்கவும் செய்தனர் ஆனால் சில சமயம் அதற்கு நேர்மாறாக நடப்பது தான் அந்த பெண்களின் தற்கொலைகள்.
தன்னால் இத்தனை பெண்களின் சாவு என்பதே அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, நான் இருந்தால் தானே நடக்கும் என நினைத்து மூன்றாவது முறையாக தற்கொலைக்கு முயன்றும் இருக்கிறான் பார்த்தி. குற்ற உணர்வில் தவித்துக் கொண்டிருக்கும் பார்த்திக்கு இன்று வரை தெரியவில்லை அவனையும் கண்கொத்தி பாம்பாக அந்த அரக்கன் இல்லாமல் மற்ற இருவர்கள் கூட இவனைக் கவனித்து கொண்டிருக்கிறார்கள் என்று.
*****************
இரு இரும்பு கரங்களுக்கு இடையில் ஒரு குருவி குஞ்சு போல அவனின் மார்ப்பில் தலை வைத்து உறங்கி கொண்டிருந்தாள் அவள். இரண்டு நாட்களாக தன்னவனின் அருகாமை இல்லாமல் தூக்கம் வருவேணா என்றது. இரண்டு நாட்களாக உறக்கம் இல்லாதவளுக்கு பகலில் உறக்கம் வர கண்மூடி படுத்தவள் சில நிமிடங்களில் உறக்கம் தழுவ தன்னவன் அணைப்பது போல் உணர்வு தோன்றியது.அடுத்த நிமிடமே கனவில் அவனை அணைத்து உறங்குவது போல் நிஜத்திலும் தன்னவனின் மேல் இரு கால்களை போட்டவாறே உறங்கியவளை தன் இருக்கைகளுக்குள் அணைத்து படுத்து கொண்டான் மகேஷ்.
மகேஷின் இறுகியப் பிடிப்பில் தூக்கத்திலிருந்து விழித்தவள் எழப் பார்க்க அவனோ கைகளால் அணைக் கட்டி இருந்தான்.
சற்றே எம்பி..எம்பி.. திரும்பி படுக்க தன்னவனின் இதழிற்கு நூல் இடைவெளியில் இவளின் இதழ் இருக்க அதிர்ச்சியடைந்தாள் இழையினி. "விழியை விரித்து அவனின் சிவந்த இதழைப் பார்த்தவளுக்கு உள்ளூர வெட்கம் வந்தது. அவனின் முத்ததில் திளைத்து நின்ற தருணமும் நினைவில் வர அவளின் முகம் செம்மை பூசியது.
தன் வெட்கத்தை மறைக்க தன்னவனிடமே அடைக்கலம் ஆக நினைத்தவள் அவனின் மார்ப்பில் தலை புதைத்துக் கொள்ள நினைத்த நொடி மீண்டும் என்ன நினைத்தாளோ அவனின் இதழில் பட்டும் படாமல் முத்தமொன்றை வைத்தவளுக்கு வெட்கம் பிடுங்கி தள்ள அவனின் மார்போடு ஒன்றி போனாள். இதையறியா அப்பாவி மகேஷோ நல்ல உறக்கத்தில் இருந்தான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro