அவன் 35
"என்ன மாமா... நேத்து. செமயத்தையா வாங்கன போல. கேள்விப் பட்டேன்.. என்றவாறேத் தோட்டத்தில் அமர்ந்திருந்தவனின் அருகில் அமர்ந்தவாறே கூறியவளை முறைத்தான் மகேஷ்..
"என்ன .. நக்கலெல்லாம் நடு கடல தாண்டிப் போகுது..." என அவளைப் பார்த்து முறைத்தவாறே கேட்டான் அவன்.
"என்ன பூபதி.. நான் போயி உன்னை நக்கலெல்லாம் பண்ணுவேணா சொல்லு."என பூமா சொல்லவும்.
"அக்கா புருசன்னு கொஞ்சம் கூட மரியாதயே இல்லை.. பேரு சொல்லி கூப்பிட்டுகிட்டு இருக்க..." என கூறியவாறே அவளின் தலையை தட்ட..
"போ மாமா.. உன் கல்யாணத்துக்கு முன்னாடி நான் உன்னை , வா , போ ன்னு தானே பேசுவேன்.. இப்ப என் அக்காவை கல்யாணம் பண்ணிட்டு ஓவரா பண்ற நீ..." என பூமா கோபித்து கொள்வது போல் சொல்லவும்.
"அவளின் தலையில் கை வைத்த மகேஷ்.. அப்போ நீ ரொம்ப சின்னவ.. அதான் கூப்பிட்டாலும் விட்டுட்டேன். இப்பவும் அதே குட்டி பொண்ணு இருந்தாலும் வெளிய பாக்கறவங்க என்ன சொல்லுவாங்க சொல்லு..." என மகேஷ் அவளின் தலையை தடவியபடியே கூற
"எப்பவும் நீ இப்படியெல்லாம் பேச மாட்டேயே மாமா.. என்ன ஆச்சு உனக்கு..." என அவனை சந்தேகப்பார்வை பார்த்துக் கொண்டே கேட்க
"ச்சை அப்படி பார்க்காத.. ஏதோ நம்மளும் சீரியஸா பேசனா நல்லா இருக்கானு பார்த்தேன்.. பரவால்லை எனக்கு எமோசனல் ஸீன் கொஞ்சம் நல்லா தான் இருக்கு...' என மகேஸ் நக்கல் தினிஸில் கூற
"த்து.. அதான பாத்தேன் மோசப் புடிக்கற நாயி மூஞ்சியை பார்த்தா தெரியாது..."என பூமா அவனை மேலிருந்து கீழாகப் பார்த்தவாறேக் கூற
"அடிங்க... பன்னிக்குட்டி...!" என அவளை துரத்தப் போக இழையின் அப்பா வர சட்டென நின்றவன்.. "இங்க பாருங்க மாம்மா.. உங்க புள்ளைங்க இரண்டும் சுத்தமா சரியில்லை சொல்லிட்டேன்... ஒரு போலீஸ்காரன் என்னையே ஓட்டறா. இதெல்லாம் நல்லத்துக்கு இல்லை சொல்லிட்டேன்..." என மகேஷ் குற்றம் சாட்டியப் படி அவரை பார்த்து சொல்லவும் அருகில் வந்த குருவோ
"நீங்களாச்சு.. என் பொண்ணுகளாச்சு மாப்பிள்ளை..." என குரு கூற அவரை முறைத்தான் மகேஷ்..
"என்ன மாமா ரொம்ப மரியாதையா பேசற.. நல்லத்துக்கு இல்லையே.. நீ எப்பவும் போல பேசு மாமா.." என மகேஷ் முறைத்துக் கொண்டே கூற
அவனைப் பார்த்து சிரித்தவர்.. "கொஞ்சம் மரியாதை தர விட மாட்டற டா நீ.. என்னோட மாப்பிள்ளை நீ.. நானே மரியாதை இல்லாம பேசனா உலகம் என்னை தப்பா சொல்லாது.." எனக் குற்றம் சாட்டிவிட்டு வெற்றிலை தோட்டத்திற்குள் நுழைந்துக் கொண்டாரைப் பார்த்து சிரித்தான் மகேஷ்.
"யோவ்வ் மாமா... " என பூமா அழைக்க
"யார் அது டாக் வாய்ஸ்..." எனக் கேட்டவாறே பூமாவைப் பார்க்க
"ஒஹ் டாக் வாய்ஸ் மாதிரி இருக்கா மாமா.. சரி விடு நான் டாக் தான் ஆனா இந்த டாக் கூட ஒரு விஷயம் சொல்ல தான் வந்துச்சு.. இப்போ என்னை நீ டாக்னு சொல்லிட்டல்ல நான் சொல்ல மாட்டேன்.. நீயும் உன் பொண்டாட்டியும் சிங்களாவே சுத்திட்டு இருங்க..." எனக் கூறி முன்னால் சென்றவளின் பின்னாலே சென்றவன்
"அவ என்ன சொன்னா.. பஞ்சாயத்துல நடந்தது எல்லாம் சொன்னீங்களா.. அவ இன்னும் நாங்க இரண்டு பேரும் பிரிஞ்சுட்டதா நினைக்கறளா...
என்னை தான் பேசவே விடலை உங்களையாவது பேச விட்டாளா..." என ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டே போனவனிடம்
"மாமா.. பேசமா நீ என்னை கல்யாணம் பண்ணி இருக்கலாம் மாமா.. உன் பொண்டாட்டி ஓவரா ஸீன் போடறா.. எங்க யார்கிட்டயும் ஒரு வார்த்தைப் பேசல. அம்மா அவளை திட்டியும் பார்த்துடாங்க, முறைச்சும் பார்த்துடாங்க, அழுதும் பார்த்துடாங்க, ஒரு வார்த்தை யார்கிட்டயும் பேசல.. அப்பாகிட்ட கூட பேசல.. வாயில பச்சைத் தண்ணி படலை.. அழுதுட்டே இருக்கா..." என பூவிழி கூறவும்.
"அடிப்பாவி.. முதல்லயே இதை வந்து சொல்லமாட்டயா நீ.. உன்னையெல்லாம் என் அக்கா பெத்த நேரத்துக்கு நாப்பது அரிசி மூட்டையை பெத்து போட்டு இருக்கலாம்.. உன்னை அப்பறம் வந்து பார்க்கிறேன்.." எனக் கூறியவாறே தன் பைக்கை எடுத்தவனிடம்
"இப்படியெல்லா சொல்ல எனக்கும் ஆசை தான் மாமா.. ஆனா பாருங்க, அவ எங்க யார்கிட்டயும் பேசலையோ தவிர, நல்லா மூக்கு முட்ட மீன் குழம்பா சாப்பிட்டு படுத்துத் தூங்கிட்டு இருக்கா..." என பூவிழி கூறுவதை கேட்க அவன் இருந்தால் தானே, தன்னவளைப் பார்க்க இது தான் சாக்கு என நினைத்துக் கொண்டானோ என்னவோ..! அவள் கூறுவது கேட்டும் கேட்காதவன் போல் தன்னவளை தேடி பறந்துவிட்டான்...
"அடப்பாவி இப்படி கத்தி சொல்றேன்.. நீ பாட்டுக்கு இந்த வேகம் போற. பொண்டாட்டியப் பார்க்க அவளோ ஆர்வம்..." எனத் தனக்குத்தானே முனகிக் கொண்டவள் தன் அப்பாவிடம் கூறிவிட்டு எப்போதும் செல்லும் நெல்வயலுக்கு புறப்பட்டாள்.
நெல்வயல் என்றாலே உள்ளுக்குள் இருக்கும் சோகம் மறந்து அவளின் மனம் குழந்தையாய் மாறி வயலில் துள்ளி குதிக்கும், அவளின் அவனை மறக்கவே இங்கு அடிக்கடி வருவதுண்டு ஆனாலும் காதல் மனம் அவளைக் கேட்காமல் அவனை நினைத்துப் பார்க்க தான் செய்யும். இருந்தாலும் அவனை நினைக்கவேக் கூடாது என்ற எண்ணமும் வரத்தான் செய்யும்.. (அவனை நினைக்கக் கூடாது கூடாதுன்னு பயபுள்ள ஒரு நாள் பியுள்ள(full) அவனையே நினைக்கறது தெரில போல..))
கண்டதும் காதல் என்பது போல் தீரனை கண்டதும் அவளின் மனத்தில் ஒரு ஈர்ப்புத் தோன்றி. அது காதலாக மாறி ஒரு மரமாக வளர்ந்து நின்ற சமயம் பார்த்து அதை அவனே வெட்டி எறிய, சொல்லாமல் வந்த காதல் சொல்லாமலே போனது என்று அவள் நினைத்து கொண்டிருந்தாள். காதல் தோல்வியில் வந்த வலிகளை மறைக்க வெற்றிலை தோட்டம், நெல்வயல் என தனியாக சுற்ற ஆரம்பித்தாள் பூவிழி.. அவளிற்கு தெரியவில்லை அவளின் அவனவன் தூயவன் தானேன.. நாட்கள் கடந்து அவன் தூயவன் தான் என அறிந்து என்ன பயன்...!!
ஏதோ ஏதோ நினைவில் இருந்தவளுக்கு பம்பு செட்டில் தண்ணீர் ஓடும் சத்தம் கேட்க தொட்டியின் அருகில் சென்றவளின் விழிகள் அகல விரிந்து "ஆஆஆஆ..." என கத்த தண்ணீர் தொட்டியில் இருந்த அவனும் கத்திக் கொண்டே தண்ணீருக்குள் தன் உடலை மறைத்தவாறே
"ஏய்.. நீ எங்கே டி இங்க வந்த..." என திக்கியவாறே கேட்டவனிடம்
"ஹலோ மிஸ்டர் தீரன்.. இது எங்க தோட்டம்... நீங்க இங்க என்ன பண்றீங்க.." எனக் கேட்க
"பாத்தா தெரில.. குளிச்சிட்டு இருக்கேன்..!! இப்போ தான் மூச்சே வந்துச்சு.. இப்போ நிம்மதியா குளிக்கலாம். நான் வேற ரொம்ப பயந்தேன்.. காட்டுக்காரன் வந்து திட்டறதுக்குள்ள குளிக்கலாம்னு பிளேன் பண்ணேன். இப்போ கொஞ்சம் ஈஸியாப் போச்சு. நிம்மதியா குளிக்கலாம்..." என்றவாறே தொட்டியில் நன்றாக மூழ்கிக் கொண்டவனை முறைத்துப் பார்த்தாள் பூவிழி..
"கொழுபொம்மை .. என்னையே பார்த்துட்டு நிக்காத டி.. எனக்கு கொஞ்சம் வெட்கமா வருது..." எனக் கூறியவனின் உரிமை அழைப்பை கவனிக்காது விட்டது இவளின் கெட்ட நேரமோ என்னவோ..
"இவரு பெரிய மன்மதன் போயா.." எனக் கூறியவள் வயலின் வரப்பில் அமர்ந்து கொண்டாள்.
சிறிது நேரத்தில் வெளி வந்தவன்.
"ஏன் கொழுபொம்மை. ஆத்து தண்ணி எல்லாம் இருக்காத இங்க.. கிணத்து தண்ணில டெஸ்ட் இல்லை.. சப்புன்னு இருக்கு..." என தீரன் நாக்கை வெளியே நீட்டி "யாக்கு..." என கூறவும் பட்டென்று சிரித்தவள்
"எங்க சார் என்ன ரியாக்ஷன் இது..." என பூவிழி கேட்க
அவளின் அருகில் சென்று "ஏன் டி இப்போ தான் நான் உனக்கு சார்னு தெரிஞ்சுதா. இப்போ நீ சார்னே தாராளமா சொல்லு. ஆனா கண்டிப்பா ஒரு நாள் இந்த சார்க்கு பியுள் ஸ்டாப் வைப்பேன்..." எனக் கூறியவனின் அருகாமையை கண்மூடி ரசித்தவள் தன் கண்களை திறக்க அவன் இல்லாமல் இருந்தான். மெல்ல சிரித்து கொண்டவள் தண்ணீரில் கால் நனைத்தப் படியே கனவுலகில் மிதக்க தொடங்கினாள்.
"என்ன தீரா.. பண்ண பார்த்த நீ.. அவ சின்ன பொண்ணு.. அதுவு அவனுக்கு சொந்தமான பொண்ணு.. இனிமே இப்படி நடந்துக்காம பார்த்துக்கோ என தன் மனத்திடம் கட்டளையிட்டவாறே அங்கிருந்து நகர்ந்தான்.
********
"ஏக்கா... ஏக்கா.. எங்க என் பொண்டாட்டி..." என்றவாறே வீட்டின் உள்ளே நுழைந்த தன் தம்பியிடம்
"வாங்க வாங்க மாப்பிள்ளை. உட்காருங்க..." என்ற பழனியை முறைத்தவன் அவளின் மண்டையில் நாலு கொட்டு கொட்டி.. "ரொம்ப பண்றக்கா நீ. அம்மாகிட்ட எதுக்கு வாயெல்லாம் கொடுக்கற...அப்பறம் இதெல்லாம் சின்ன சண்டை சரியா.. இதுக்கு இரண்டு பேரும் மூணு வருசமா பேசமா இருந்து இருக்கீங்க.. இதை என்கிட்டயும் சொல்லல... என்னமோ போ உனக்கும் ,அம்மாக்கு இருக்கறத நீங்களே முடிச்சுக்கோங்க. என்னையும் , என் பொண்டாட்டியையும் விட்ருங்க. உங்க பிரச்சினையில எங்களை பிரிக்க நினைக்க வேண்டாம்..." என அழுத்தத்துடன் கூறியவனை பார்த்தவரின் கண்கள் கூட பனித்தது. தன் சித்தியின் பேச்சைக் கேட்டு பஞ்சாயத்து வரைக்கும் வந்தவனின் மேல் அளவில்லா கோபம் வந்தது பழனிக்கு.. ஆனால் அடுத்து அவன் கூறிய வார்த்தைகளில் அவரின் கோபம் சட்டென்று தனிய தன் தம்பியை பெருமையாக பார்த்தாள்.
உள்ளே சென்றவன் தன்னவள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்க அவளையே பார்த்தவன் மீண்டும் அறைக்கு வெளியே வந்து "அக்கா என் பொண்டாட்டிக் கூட நான் தூங்க போறேன் எழுப்பி விட்டறத..." என கூறி அவளின் அருகில் படுத்தவன் அவளின் மீது கையைப் போட்டுக் கொள்ள அவளும் அவனின் கையைப் பிடித்தவாறே திரும்பியவள் அவனின் மேல் ஒற்றைக் கால் போட்டுக் கொள்ள "குந்தாணி.. அடியே குந்தாணி.." என ஹஸ்கி குரலில் இரண்டு முறை அழைக்க. நன்றாக உறங்கி கொண்டிருந்த அவளோ தன்னவனின் அருகாமையில் மேலும் அவனுள் மேலும் முகம் புதைத்துக் கொள்ள 'நல்லா தூங்கறா போல' என நினைத்தவன் அவளின் இடையில் கையிட்டு அவனும் உறங்கிப் போனான். இரண்டு நாட்களாக தன்னவளின் அருகாமை இல்லாமல் தூக்கமின்றி தவித்த மகேஷ் இன்று அவளின் அருகாமையில் நன்றாக உறக்கம் வர அவளை அணைத்தபடியே உறங்கி போனான்..
**************
"டேய் மாமமா ... கூப்பிட்டு இருந்தியா சாரி சாரி டா.. மாமா.. மனிச்சுறு..." எனக் கூறியவனை வெற்றுப் பார்வைப் பார்த்தான் பார்த்தி..
உடனே அவனின் மொபைலை ஆப் செய்தவன் அவன் உடம்பில் மிளிர்ந்த நிலையில் அந்த இடத்தை கண்டுகொள்ளாமல் "சாரி டா மாமா... சாரி டா. என்னை மனிச்சுடு மாமா.. என அவன் கெஞ்ச.. அவனை அணைத்துக் கொண்டு அழுதான் பார்த்தி.. "என்னால முடிலை டா சபரி.. எப்போட சாவோம்னு இருக்கு டா.. பயந்து வாழ்ற வாழ்க்கை எனக்கு பிடிக்கல டா.. இன்னொருத்தன் என்னை ரோபா மாதிரி யூஸ் பண்றது எனக்கு பிடிக்கல டா..நேத்து அவன் அவன் இன்னைக்கு ஒரு நாள் உனக்கு விடுதலைன்னு சொல்றான் டா.. என் வாழ்க்கை அவங்கிட்டா இருக்கறத நினைச்சா..!! எனக்கு வாழவேப் பிடிக்கல டா..." என அழுதுக் கொண்டேக் கூறியவனை இயலாதப் பார்வை பார்த்தான் சபரி.
"பார்த்தி... நீ இப்படி இருக்கற ஆளா டா.. பிலீஸ் கொஞ்சம் அமைதியா இரு டா.. எல்லாம் நல்லதுக்கு தான் டா.. நான் இருக்கேன் டா உனக்கு... உன்கூடயே நான் இருப்பேன்.." எனக் கூற ஆறடி ஆண்மகன் குழந்தையாய் மாறி தன் நண்பனின் தோளில் சாய்ந்துக் கொண்டான்..
***
Haii hello vanakkam nane tha😅😅😅 ennada solla varanu ninakarathu purithu onnu illa valakkam pola ketkara comments and votes tha.. neenga kudukura comments and votes tha enaku boost mathiri athuve illana epdi ud podarathu😑😑😑😑 inimeum ippdiye iruntha naa story ah hold la potruven drss😶😶😶😶 okay story epdi irukunu sollunga tatta
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro