அவன் 34
தன்னவளை அணைத்து இருந்தவன் அவளின் அழுகை நின்றதும் அவளை தன்னிடமிருந்துப் பிரித்து அவளைப் பார்க்க அவளோ குனிந்த தலை நிமிராமல் இருந்தாள்.
"வினி..." என மகேஷ் அழைக்க வழிந்த கண்ணீரை அழுத்தி துடைத்தவள் கிணற்றிலிருந்து மேலேறி செல்ல அவனும் அவள் பின்னாடியே அவளை அழைத்தவாறே சென்றான்.
"அடியே குந்தாணி, என் செல்லமே எங்க டி போற..." என இவன் அழைத்துக்கொண்டே அவளின் பின்னால் செல்ல பதில் பேசமாலே சென்றாள் அவனவள்.
"ஐயோ என் செல்லமா.. மறுபடியும் ஏதாவது கிணத்தைப் பார்த்து ஓடறயா டி. அப்படி ஏதாவது தப்பா முடிவெடுத்துக்காத இழை மா..." என அவன் கூற பின்னால் திரும்பி அவனை முறைத்தவள் மேலும் நடக்க..
"கோவாக்கார இழையே என்னை முறைத்துவிட்டு செல்லாதே..." என பாடியவனை பின்னால் திரும்பி முறைத்து பார்த்தவள் மீண்டும் செல்ல
"அடியே இப்படி மூஞ்சியை தூக்கி வைச்சுட்டு போகற அளவுக்கு என்ன ஆச்சு.. ரொம்ப பண்ற டி நீ.." என மகேஷ் கத்தி சொல்ல
கீழே குனிந்து எதையோ தேடியவளிடம்
"குந்தாணி என்ன டி ஆச்சு.. என்ன தேடிட்டு இருக்க..." என அழைத்தவன் அவளின் அருகில் ஓடிவர அவளின் செயலில் சட்டென்று நின்றான் மகேஷ்.
"ஐயோ அடியே. குந்தாணி வேண்டாம் டி.. கல்லை கீழ போடு டி. ப்ளீஸ் டி என் செல்லம்ல கீழ போடு அழகி, என் மயிலு, உன் மாமன் பாவம் டி.. இன்னும் சிங்களா சுத்திட்டு இருக்கேன் டி. படக்கூடாத இடத்தில பட்ரும் டி. கல்லை கீழப் போடு டி..." என இவன் கெஞ்சவும் கை வலி தாங்க முடியாமல் அந்த பெரிய கல்லை கீழேப் போட்டவள் மீண்டும் திரும்பி பார்க்காமல் நடக்க.
'மறுபடியும் எங்க டி போறவ.. நான் உன் புருஷன் டி, கொஞ்சம் கூட மரியாதை இல்லாம நீ பாட்டுக்கு போயிட்டு இருக்க. போறவா அப்படியே போ டி எனக்கு புண்ணியமா போகும். என் மாமா புள்ளை வினிதா இருக்கா. நான் அவளை கல்யாணம் பண்ணிகிறேன்.." எனக் கூறிய உடனே அவனின் தலைக்கு மேல் ஏதோ பறந்து அவனின் பின்னால் விழ திரும்பி பார்த்தவனின் கண்கள் பெரியதாக விரிந்தது.
"அடியே கொலைகாரப் பாவி.. இப்படியா டி இவ்ளோ பெரிய தேங்க மட்டையை தூக்கி போடுவ..." எனக் கூறியவனை கண்டுகொள்ளாமல் முன்னால் நடக்க..
"அடியே குந்தாணி. ஏதாவது பேசு டி. நீ பாட்டுக்கு போனா எனக்கு என்னமோ மாதிரி இருக்கு டி. நீ பேசலன்னா நான் போயி அந்த கிணத்துலயேக் குதிப்பேன், குளிப்பேன்...", என மகேஷ் கூறவும் இழை அருகிலிருந்த அரளி விதை செடியை உடைக்க..
"ஐயோ அரளியை ஏன் டி உடைக்கற .. இங்கபாரு டி எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். அதுக்காக இப்படி அரளி விதை சாப்பிடற அளவுக்கு போகாத புஜ்ஜி மா..." என மகேஷ் பதட்டத்துடன் கூறியவன் அவளை நோக்கி முன்னேறி செல்ல அதெல்லாம் கண்டுக்காத இழையினி அரளியின் கிளைகளை உடைக்கவே குறியாக இருந்தாள்.
நான்கு, ஐந்து, கிளைகளை உடைத்தவள் அதன் கொத்து காயிகளையே பார்த்தவாறு நிற்க அதற்குள் மகேஷ் அவளின் அருகில் சென்றிருக்க "ஏய் என்ன டி பண்ற அரளியை கீழ போடு.. நீ இதை தின்னு செத்து போயிட்டா என்னால உன்னை தூக்கிட்டு போக முடியாது ஓவர் வைய்ட்டா உரலையா இருக்க. இரு ஒரு நிமிஷம் நூத்தியெட்டுக்கு கால் பண்ணி சொல்லுறேன்..." என கூறியவன் தன் மொபைலை கையில் எடுக்கவும் சுள்ளென்ற ஒரு வலியை உணர்ந்தான். அவன் நிமிர்ந்து பார்ப்பதற்குள் மீண்டும் ஒரு வலி வர நிமிர்ந்து அவளை பார்த்தான். அவளோ கண்கள் சிவக்க இவனையே பார்க்க.. "படுபாவி என்னை அடிக்கறதுக்கா குச்சியை ஓடச்சுட்டு இருந்த இது தெரியாத உன்கிட்டயே மாட்டிக்கிட்டேனே..." என வாய்விட்டு புலம்பியவாறே அவளைப் பார்க்க அடுத்த அடிக்கு அவளிடமிருந்து தப்பித்தவன் அங்கிருந்து ஓட இழையினியும் அவனை துரத்த வெற்றிலைத் தோட்டத்திற்குள் நுழைந்துக் கொண்டவன் அந்த கொடிகளுக்கு இடையில் ஒழிந்துக் கொள்ள அவனை தேடி வந்தவள் அவன் காணாமல் போக குச்சியை கீழே போட்டு விட்டு திரும்பி நடந்தவளின் இடையை பற்றி தன் அருகில் இழுத்துக்கொண்டான்.
"என்ன டி புதுசா சாரீ எல்லாம் உடுத்திட்டு இருக்க.. அப்படியே கும்ன்னு இருக்க டி குந்தாணி..." என அவளின் கழுத்தில் முகம் புதைத்து கூற இதுவரை இருந்த கோபம் போயி வெட்கம் குடிக்கொள்ள அவனை பின்னால் இருந்து தள்ளிவிட்டவள் வெற்றிலை தோட்டத்திலிருந்து ஓட அவளை துரத்திக் கொண்டு ஓடினான் மகேஷ். அவனிடம் சிக்காமல் ஓடியவள் தன் இல்லத்தை நோக்கி ஓட அவளையே துரத்திக்கொண்டு வந்தவன் அங்கேயே நின்றது அவள் அறிய வாய்ப்பில்லை.
தன்னவளை துரத்தி சென்றவன் தன் அண்ணனின் குரலில் அங்கையே நின்றான்.
"சார்.. மறுபடியும் அந்த ஆப்பை கவர்மண்ட்கு தெரியாம ஓபன் பண்ண சொன்னாரு சார்..."
"இங்க பாருங்க ஆதி.. மறுபடியும் ஓபன் பண்ணா மாட்டிக்குவோம். நான் மட்டும் இல்லை நீங்களும் மாட்டிக்குவீங்க பரவால்லையா.. என பார்த்தி கேட்க.
"இல்லை சார் ஆப் இருந்தா பாரீன் கால் இல்லன்னா ஓடிபி நம்பர் வைச்சு பண்ண கொஞ்சம் ஈஸியா இருந்துச்சு சார் ஆனா.. "
"ஆனா என்ன ஆதி.. லிங்க்லயும் நீங்க நினைக்கறது பண்ணலாம் ஆதி.. சொல்ல போனா ஆப் விட லிங்க் வைக்கறது நமக்கு ரொம்ப நல்லது தான். ஓடிபி நம்பர் இல்லாமையே சுலபமா நீங்க நினைக்கறது பண்ணலாம் வேற என்ன வேணும்..." என பார்த்தி கேட்க
"இல்லை சார்..சிலபேர் தான்.. இதுல வராங்க.. ஓடிபி இருந்தா ஈஸியா அந்த பொண்ணோட அப்பா, தம்பி, அண்ணா கிட்ட ஓடிபி நம்பர் அனுப்பிவிட்டுட்டு நம்ம பாட்டுக்கும் பேசலாம் இதுல நமக்கு ஒரு பிரச்சினையும் வரதுக்கு வாய்ப்பில்லை ஆனா இப்போ லிங்க்ல எல்லாரும் போக மாட்டாங்க சார்.. அதான் சார் இல்லன்னா.. மறுபடியும் அதே மாதிரி ஓரி ஆப் கிரீயேட் பண்ணலாம் சார்...." என ஆதி கூற
"நீங்க சொன்னதும் பண்ணறதுக்கு இது என்ன ... வேண்டாம் ஆதி எனக்கும் பொறுமை ரொம்ப நேரம் இருக்காது ஆதி...கொஞ்சநாள் பொறுத்துக்க சொல்லுங்க.. அவரு ஏன் எனக்கு கால் பண்ணாம உங்க கிட்ட சொல்ல சொல்லி இருக்காரு. ஓஒ இன்னைக்கு அவரு ரொம்ப சந்தோஷமா இருக்காருல அதான் எனக்கு வேலை சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு உங்க கிட்ட சொல்லி விடறரா உங்க சார்..." என பூபதி கேட்க
"அது வந்து சார்..." என இழுத்தவனிடம்
"என்ன சொல்லுங்க.."
" ****சைட் பொண்ணுகளோட நியூட் போட்டோ இருக்கு சார்.. ஆஃப் & பியூள் சைஸ்ல இருக்கு சார்.. அதெல்லாம் கஸ்ட்மர்கிட்ட காட்டினேன் அதே பொண்ணு வேணும்னு கேட்கறாங்க சார்..." என ஆதி சொல்ல
"என்ன சொல்றீங்க நீங்க.. பொண்ணை கேட்காரங்களா.. யோவ் பொண்ணுங்ககிட்ட பேசி காசு மட்டு தான் வாங்கணும்.. அப்படி இல்லையா போட்டோவை விக்கணும். இது தான் நம்ம வேலை.. அதை விட்டுட்டு வேற எதுவும் பண்ண வேண்டாம் சொல்லிட்டேன்..." என பூபதி கூற
"சார்...."
"யோவ் இதுக்கு மேல சைட்ல ஏதாவது ப்ரோப்ளேம் அண்ட் வேற ஏதாவதுனா மட்டும் சொல்லுங்க.. சரியா.... சும்மா சும்மா கால் பண்ணி உயிரை வாங்கிட்டு இருக்காத..." எனக் கூறியவன் தன் அழைப்பை கட் செய்தான். இதெல்லாம் கேட்டு கொண்டிருந்த மகேஸிற்கு தான் தலைக்கு மேல் கோபம் வந்தது.. முதலில் தன் அண்ணன் மட்டும் தான் இதற்கெல்லாம் காரணம் என நினைத்து இருந்தவன் இப்போது பலபேர் இருப்பார்கள் போன்று தோன்றதான் செய்தது.. அதே போல் பார்த்திபனின் பேச்சும் அமைய சரியாக தவறாக புரிந்து கொண்டான் மகேஷ்..
இனி தன் அண்ணனுடன் இருந்துகொண்டே அவனின் இந்த கேடுகெட்ட செயல்களை கவனிக்க முடிவு செய்தவன் அடுத்தடுத்த வேலைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என முடிவு செய்தவன் மித்தரனிற்கு அழைத்தான்.
"மச்சி.. என்ன டா ஆச்சு.. நம்ம மச்சா இல்லை தானே.. இழைக்கு கால் பண்ணி பேசினது அவரு இல்லை தானே..." என மித்தரன் விடாமல் கேட்க
"இல்லை டா.. அவன் தான் இன்னைக்கு பஞ்சாயத்து வைச்சுட்டாங்கன்னு சொன்னன்ல. அவன் மூஞ்சியில அப்படி ஒரு சந்தோசம் டா.. உன் தங்கச்சி வேண்டாம்னு சொன்னதும் போன் பேசற மாதிரி பேசி அங்கிருந்து போனவன் நான் மறுபடியும் பார்க்கும் போது அவன் மூஞ்சியில அப்படி ஒரு சந்தோஷம். இப்ப கூட எவன் கிட்டயோ பேரம் பேசிட்டு இருக்கான். இவன் இருக்கான்னு பேசமா அமைதியா இருந்தேன்.அதுக்குள்ள உன் தங்கச்சி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டா.. இவன் போனதும் பஞ்சாயத்தை கலைச்சு விட்டுவிட்டு உன் தங்கச்சியைப் பார்த்தா ஆளையே காணோம்.. தூக்கிவாரி போட்டிருச்சு. அதுக்கு அப்பறம் நம்ம தோட்டத்து கிணத்து படியில உட்கார்ந்துட்டு இருந்தவளை சமாதானம் பண்ணிட்டு இருக்கும்போது தான் இவனை பார்த்தேன்... இவன் பேசனதையும் கேட்டேன் நிஜமா முடிலை டா..இவனா இருக்க கூடாது கூடாதுன்னு ஆயிரம் தடவ சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டேன் டா மித்ரா.. பஞ்சாயத்து நடக்கும் போது கூட சும்மா தான் டெஸ்ட் பண்ணி பார்த்தேன். இவன் எங்கிட்ட ஒரு வார்த்தை பேசல டா அத்தனை சந்தோஷமா போறான் டா.. இவன் மனசுல என் வினி இருப்பான்னு தெரிஞ்சு இருந்தா சின்னவயசுலயே என்னோட காதலை வெட்டி எறிஞ்சு இருப்பேன் டா.. ஆனா.. முடிலை டா.. எப்படி டா.. இவனால இப்படி இருக்க முடியுது.. சரி.. என்னையும்.. இழையையும் விடு.. மத்த பொண்ணுங்க எல்லாம் என்ன டா பண்ணாங்க.. அவங்கள ஏன் டா இப்படி பண்ணனும்.. அப்படி என்ன டா பணம் பெருசா போச்சு அவனுக்கு. நல்ல வேலையில தானே டா இருக்கான் அவனும் மாசம் 2 லட்சம் சம்பாதிக்கறான். இதுக்கு மேல என்ன டா வேணும்.. பொண்ணுங்கன்னா கேவலமா போயிடங்களா டா. எனக்கு வர கோபத்துக்கு இப்பவே சுட்டுப் போடலாம்னு கோபம் வருது டா.." என புலம்ப என்ன கூறுவது என்று தெரியாது விழித்தான் மித்தரன்.. மகேஷ் இவனிடம் புலம்பிக் கொண்டு இருக்க அவனின் புலம்பலிற்கு காரணமானவனோ தொலைபேசியில் யாருக்கோ அழைத்துக்கொண்டு இருக்க அந்த அழைப்பு ஏற்காமல் போக கடுப்பானவன் படுக்கையில் விழ அவனின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro