அவன் 28
"ஏய்.. ச்சி.. என்ன டா பண்றீங்க இரண்டு பேரும். ஒரு வயசு பையன் உங்க கூடயே இருக்கேன்டா..." என மித்திரன் கூறி திரும்பிக் கொள்ள
அவளின் இறுக்கத்தை குறைத்து விலகி நிற்க முற்பட்டவனை மீண்டும் அணைத்தவள் பின்னால் திரும்பி நின்றுகொண்டிருந்த மித்தரனைப் பார்த்து "கரடி. இப்போ எதுக்கு டா இங்க வந்த... புருஷன், பொண்டாட்டி இருக்கற ரூம் கொஞ்சம் அப்படி,இப்படின்னு தான் இருக்கும். உன்னையாரு இங்க வர சொன்னாங்க, ஒழுங்கா ஓடி போயிடு, என் புருஷன் இன்னைக்கு தான் ஆசையா கட்டிப் பிடிச்சு இருக்கான். அதைக் கூட ஒரு ஐஞ்சு நிமிஷம் விட மாட்டயா நீ.. ஒழுங்கா போ டா... நான் என் மகேஷ் அத்தான் கூட கொஞ்சம்.." என முடிக்கும் முன்பே அவளின் பேச்சு நின்றிக்க...
"சனியனே. அடங்கவே மாட்டயா நீ.
ஒரு அண்ணங்கிட்ட பேசற பேச்சா இது கருமம்.. கருமம்.." என தலையில் அடுத்துக் கொண்டவன் அவளின் பேச்சு வரவில்லை என திரும்பி பார்க்க இரண்டு கால்களையும் எக்கி நின்றவாறே மகேஷின் கழுத்தில் தன் கைகளை மாலையாக போட்டவாறே அவன் கன்னத்தில் இதழ் ஒற்றி
"இப்படி ஒன்னு ஒன்னா தருவேன் நீ எண்ணிக்கோ..." என கூறி அவன் கன்னத்தை எச்சில் செய்ய.
"ஏய்... எருமை..ச்சீ.." என மீண்டும் பின்னால் திரும்பி நின்றவன்
"நான் இங்க தான் இருக்கேன்.. கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம கிஸ் பண்ணிட்டு நிக்கற..." என மித்தரன் கூற
"நீ இன்னும் போகலையா.." எனக் கேட்டுக்கொண்டே மகேஷின் கன்னத்தில் இதழ் பதித்து "
எங்கிட்ட வெட்கம் இல்லை.. உனக்கு வெட்கமா இருந்தா ஒழுங்கா ஓடி போ ஐஞ்சு நிமிஷத்துல என் மகி வருவான்..." என மித்திரனிடம் கூறியவள் மீண்டும் அவனின் கன்னத்தில் இதழ் பதிக்க
"ச்சி.. இயாக்கி த்து.." என கூறியவன் அவர்களின் அறையை விட்டு நகர
"லூசு. அவன் ஏதாவது நினைச்சுக்கப் போறான். தள்ளி நில்லு.." எனக் கூறியவனை முறைத்தவள்
"ஏன் கிஸ் கொடுக்கும் போது சொல்ல வேண்டியது தானே.. ச்ச போ மேக்ஸ் டப்பா.." எனக் கூறி அவனிடமிருந்து விலகியவளை கையைப் பிடித்து தன் பக்கம் இழுத்தவன் அவளின் உயரத்திற்கு குனிந்து அவளின் கன்னத்தில் அழுத்தமாக இதழ் ஒற்ற விக்கித்து நின்றாள் பேதை.
இவ்வளவு நேரம் அவளாக முத்தத்தை வாரி வழங்கும் போது கூட இல்லாத வெட்கம் தன்னவனின் ஒற்றை இதழ் தீண்டலில் வெட்கி நின்றாள். எவ்வளவு நேரம் நின்றாளோ அவளுக்கே வெளிச்சம்.. தன்னிலைக்கு திரும்பி பார்க்கும் போது தன்னவன் இல்லாமல் இருக்க மெல்லியதாக சிரித்துக் கொண்டவள் தன் வேலைகளில் மூழ்கினாள்...
******************
"அப்பா.. ஏன் பா இப்படி நீங்களும் பீல் பண்ணி என்னையும் இங்க இருக்க விடாம பண்ணிட்டு இருக்கீங்க..."என தன் தந்தையை சமாதானம் செய்ய
"இல்ல தீரா நீ வா. நீ அங்க இருக்காத தீரா. அவங்க உன்னை ஏதாவது பண்ணிட்டா எனக்கும், பிருந்தாக்கும் யாரு இருக்கா சொல்லு..."
"அதுக்காக நம்ம பிருந்தாவை இப்படி பண்ணவங்கள இப்படியே விட சொல்றீங்களாப்பா..." என கேட்டவனின் குரலில் கோபம் இருக்க
"இல்லப்பா விலகிப் போயிடாலம்னு சொல்றேன்.." எனக் கூறியவரிடம்
"இப்படி விலகி விலகிப் போனா.. தப்பு பண்றவன் தப்பு பண்ணிட்டே தான் இருப்பான் அப்பா.. முக்காவாசி கிணறு ஏறிட்டேன்.. இன்னும் கொஞ்சம் தான் பிளீஸ் பா.. என்னை என் போக்குல விடுங்க..." என கிட்டத்தட்ட கெஞ்சவே செய்தான் தீரன்
"உனக்கு தான் யாருன்னு தெரிஞ்சு போச்சுல தம்பி, சட்டப்படி எதுவா இருந்தாலும் பண்ணலாம் பா.."
"அடப் போங்கப்பா..." என கூற
"என்னப்பா. நம்ம வீட்டு பொண்ணை அப்படி பண்ணிட்டான்னு நீ அவங்க வீட்டு பொண்ணை கடத்த பார்த்ததே எனக்கு என்னவோ போல இருக்குப்பா வேண்டாம் விட்ரு...அவனை நீ பழி வாங்கன பரவால்லை. ஆனா நீ. வேண்டாம் பா போற வழி தப்புப்பா..." என கூறியவரிடம்
"அப்போ என் பிருந்தா நிலமைப்பா. அப்படியே விட சொல்றீங்களா. நான் அவங்க வீட்டு பொண்ணை ஒன்னும் பண்ண மாட்டேன்ப்பா. எனக்கும் ஒரு பொண்ணோட வேதனையும், வலியும் புரியும் பா..." எனக்கூறியவன் சில நிமிட விசாரிப்புகளுக்கு பின் போனை கட் செய்தவன்
"என்னை மனிச்சுடு பூவிழி.. நீ எப்போ அந்த கேடுகெட்ட பொறிக்கி ரீலேஷன்னு தெரிஞ்சுதோ.. அப்பவே உன்மேல நான் வைச்ச அந்த உணர்ச்சியை அழுச்சிட்டேன் டி..." என மனதில் தன்னவளிடம் மன்னிப்பு கேட்டவன் தன் மொபைலில் தன் முத்து பற்களை அழகாகக் கட்டி சிரித்த பிருந்தாவைப் பார்த்தவனிற்கு அவளின் மிக கொடுமையான நாட்களை எண்ணிப் பார்க்க ஆரம்பித்தான்.
அதே தெத்துப்பல் தெரிய சிரித்து கொண்டிருந்த பிருந்தாவை இன்னொரு ஜீவனும் அவளின் காதல் நினைவில் மூழ்க தொடங்கி இருந்தது..(அந்த ஜீவன் யாருன்னு போக போக தெரியும், புரியும்.. சோ யாரும் குழப்பிக் கொள்ள வேண்டாம்..)
*****************************
"இங்க பாரு .. ஏம்மா பிருந்தா.. ஏங்க கொஞ்சம் திரும்பிப் பாருங்க.. வாங்க நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்..." என தன் காதலை கூறிக்கொண்டே அவளின் பின்னால் செல்ல திரும்பி பார்த்தவள் அவனை கண்களால் எரித்துவிட்டு செல்ல அவளின் கோபத்தில் சிவந்த காதுகளை பார்த்தவனுக்கு கடிக்க தான் தோன்றியது. தன் உதட்டை கடித்து தன்னை சமன் செய்துக் கொண்டவன்
"இங்க பாருமா.. என் பேரு.. பூபதி.. என்னோட முழுப் பேரு கொஞ்சம் பெருசா இருக்கும்.. நீ பூபதின்னு கூப்பிடு எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நான் ஐடி கம்பனில வேலை செய்யற.. அப்பறம் என்னைப்பத்தி இன்னும் சொல்லணும்னா ஃபேசிக்கலி நான் ரொம்ப நல்லவன். அதிகம் பொண்ணுங்கக் கிட்ட பேசனது இல்லை.. அப்பறம் எனக்கு 27 வயசு ஆகுது..உனக்கு 21 இருக்கும் தானே.. 21கு மேல இருந்தாலும் எனக்கு ஓகே தான்.. உன் தெத்தப்பல் ரொம்ப அழகா இருக்கு. அது தான் உன்கிட்ட என்னை அப்படியே கட்டிப்போட்டு இழுக்குது. எனக்கும் கல்யாண வயசு தான் உனக்கும் கல்யாண வயசு தான். சோ எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்..." என விடாமல் பேசியவனை திரும்பி பார்த்தவள் அலட்சியப் பார்வை வீசி சென்றாள்.
"ச்சே... கொஞ்சமாவது இரக்கம் இருக்கா பாரு.. நானும் இந்த இரண்டு வருஷத்துல என்னோட, அவளோட, அவங்க அப்பால இருந்து அவங்க அண்ணா வரைக்கும் இருக்கற எல்லாரோட பிறந்தநாளைக்கும் வந்து கேட்டுட்டேன் இருக்கேன். ஒரு பதிலையும் காணோம் பேசமா கடத்தி கல்யாணம் பண்ணி கசமூச பண்ணிட்டா என்னை எத்துக்குவாளா..." என நினைத்த மனதை காரித்துப்பிக் கொண்டான் அவன்.
வேலை இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி ஸிஸ்டெமில் தலையை உள் நுழைத்து கொண்டவர்களின் மத்தியில் அமர்ந்த பிருந்தாவை பார்த்தவன்
"அப்பாடி.. நைட் ஷிப்ட் வந்தாவே எப்போ டா விடியும்னு இருக்கு.. சரி நீ வேலைய பாரு நான் போயி தூங்கற.." என தீரன் கூற
அதை காதில் கூட வாங்கி கொள்ளாமல் ஏதோ யோசனையில் இருந்த பிருந்தாவை தட்டியவன்
"பிரி மச்சி.. எண்ஜாய் பண்ற போல.." எனக் கேட்ட தீரனை முறைத்தவள்
"கடுப்புல இருக்கேன். ஒழுங்கா ஓடி போயிடு மச்சா.."என கூறியவள் ஸிஸ்டெமில் தலையை நுழைத்துக் கொள்ள..
அவளின் தலையை வருடிவிட்டவன்
"எதுவா இருந்தாலும் சரியா ப
போயிடும் மச்சி.. நீ பீல் பண்றன்னு பேருல மூஞ்சியை இப்படி வைச்சுக்காத சத்தியமா சகிக்கல.." என கூறிய தீரன் அங்கிருந்து ஓடிட்ட பின்னால் திரும்பி முறைத்தவள்
"வீட்டுக்கு வா உனக்கு இருக்கு.." என முனகி கொண்டவள் தன் வேலைகளில் கரைந்தாள்..!!
"என்னாச்சு.. பூபதி அவ சரின்னு சொல்லிட்டாளா.." என அதே கொஞ்சும் தமிழில் கேட்டவனிடம்
"எங்க டா.. எது சொன்னாலும் பதில் இல்லை.. திரும்பிப் பார்த்து முறைச்சுட்டு நிக்கற.." என கூற
"எல்லா பொண்ணுகளும் நேரில அப்படி தான் டா இருபாங்க.. ஆனா போன்ல அப்படி இருக்க மாட்டாங்க.. நீ வேணும்னா அவ இன்ஸ்டாகிராம், எப்.பீ ல இருந்தா பாலோவ் பண்ணி பாறேன். அங்க இருந்து பேசு அவ பேசலாம்..." என கூறிய கவினை பார்த்தவன் அவன் கூறும் இந்த யோசனை சரியெனப் பட பிருந்தாவை முகப்புத்தகத்தில் பிரின்ட் ரெக்குவேஸ்ட் கொடுக்க அதை உடனே அக்ஸ்ப்ட் செய்தாள் பிருந்தா...
அவளின் அக்ஸ்ப்ட் இவனிற்கு எல்லையில்லா மகிழ்ச்சியை கொடுக்க அருகிலிருந்த தன் நண்பனை கட்டியணைத்து கொண்டான் பூபதி.
******
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro