அவன் 22
என்றும் சிரிப்புடன் இருப்பவள் சில நாட்களாக களையிழந்து இருப்பதை தீரனும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்..! என்றும் அவளை கண்டாலே மனதிற்கு இதமாக உணர்வான்... சில நேரம் தன் துக்கத்தையும், கொள்கையும் மறந்து அவள் செய்கையில் சிரித்து இருக்கிறான்..
முதன்முதலில் அவளை கண்ட நாள் முதல் இன்று வரை அவளின் குறும்பில் மேய்மறந்து ரசித்து இருக்கிறான்.. ஆனால் அதை அவளிடம் வெளிக்காட்டியதில்லை அவளின் குழந்தைத் தனமான செய்கையை ரசித்தானே தவிர அவளின் மீது எந்த சபலமும் இருந்தது இல்லை.. ஆனால் அவளின் பார்வையில் மாற்றம் இருந்ததை உணர்ந்தவன் அவளிடம் ஒதுங்கி நின்றான்..!! முதலில் அவளின் பார்வையில் காதல் இல்லை ஆனால் சில நாட்களாக அந்த பார்வையில் காதலை கண்டான்..அன்றையில் இருந்து அவளை கண்டாலே முறைப்பது..!! இல்லையென்றால் திட்டுவது..!! சிறு தவறு செய்தாலே தண்டிப்பது என தீரன் இருந்தாலும் அதெல்லாம் அவள் கண்டுகொண்டதே இல்லை. அவனின் விலகலால் இவளின் சேட்டைகள் அதிகரித்ததே தவிர குறையவில்லை..! அவளின் மேல் காதல் இல்லை ஆனால் ஈர்ப்பு இருக்கிறது என்பதை அவனும் உணர்ந்தான்..!!
தன் வகுப்பில் என்றும் தன்னை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் பூவிழி இன்று தன்னை கவனிக்கவே இல்லை.. அதை விட ஏதோ இழந்தது போல் இருந்தாள்..!! முகம் சற்றே வாட்டமாக இருந்தது..
"எப்படி பேசுவது" என சிந்திக்க சட்டென்று மணியை பார்த்தவன் இந்த பீரியட் முடிய ஐந்து நிமிடம் இருக்க இதுவே போதும் என நினைத்தவன் "பூவிழி என்ன பார்த்துட்டு இருக்க.. கவனம் இங்க இருக்கா இல்லை எங்க இருக்கு... தூங்கிட்டு இருக்கியா.. போ பேஸ் வாஸ் பண்ணிட்டு வா...' என கத்தியவனின் குரலில் தன்னிலைக்கு வந்தவள் மழுங்க விழிக்க அவளின் செய்கையில் சிரிப்பு வர அதை அடக்கியவன் "வெளிய போங்க பூவிழி..." என கத்த எதுவும் பேசாமல் அங்கிருந்து எழுந்து சென்றாள்...
'ஓகே காய்ஸ் நெக்ஸ்ட் கிளாஸ்ல பாக்கலாம்." எனக் கூறியவன் நேராக சென்றது மரத்தடியில் அமர்ந்திருந்த பூவிழியின் அருகில் தான்.. "என்ன பூவிழி இங்க இருக்க.. நான் உன்னை (face) பேஸ் வாஸ் தானே பண்ண சொன்னேன் அதை பண்ணாம இங்க இருக்க..." என கேட்டவனை முறைத்தவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க..
"ஒரு ஸ்டாப் கேள்வி கேட்கறேன் பதில் இருக்காப் பாரு.. இங்க பாருங்க மிஸ் குண்டு குரங்கு நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னா.. நல்லா இருக்கும்" என கேட்டவனை பார்த்தவள் தீரா...தீ...ரா..
"நீ இப்படி இருப்பன்னு நினைக்கவே இல்ல தீரா.. நீங்க ஏன் இப்படி மாறி போனீங்க. நான் இந்த ஒரு வருசமா பாக்கற என் தீரன் இப்படி இருந்தது இல்லையே.. இல்ல நான் தான் உங்கள நல்லவன்னு தப்பா நினைச்சுட்டு இருக்கனா.. சொல்லு டா.. எதுக்கு இங்க வந்த.. அந்த மாதிரி அசிங்கமான வேலையெல்லாம் செய்ய வேற இடம் இல்லையா.. இந்த ஊரு தான் கிடைச்சுதா... நீ யாரு டா.. எதுக்கு இங்க வந்த.. சொல்லு தீரா.. நீ தப்பு பண்றன்னு தெரிஞ்சும் உன்னை இன்னும் லவ் பண்ணிட்டு இருக்கனே என்னை என்ன டா பண்றது.. நீ எதுக்காக இங்க வந்திருக்க. இப்படியெல்லாம் உன் சட்டையை பிடிச்சு கேட்கனும்னு தோணு டா முடியல", என குமுறிய மனதை அடக்கியவள் அவனின் கண்களை பார்த்தவாறே "தீ..ரா..தீரா" என திக்கி திக்கி மீண்டும் மீண்டும் அழைத்தவாறே இருக்க..
அவள் செய்கையில் மெல்ல சிரித்தவன்... கையை கட்டி கொண்டு "நான் தான் சொல்லுங்க..இதோட நாலு தடவை என் பெயர சொல்லிட்ட ஏதாவது பேசு.." என சிரித்தவாறே கேட்டவனை இமைக்காமல் பார்த்தவள்.! "உன்னோட இந்த முகம் உண்மையா இல்லை அன்னைக்கு பேசன முகம் உண்மையா..." என நினைத்த மனதை அடக்கியவள் மீண்டும் 'தீரா" என அழைக்க..!!
"மிஸ் குண்டு குரங்கு.. சொல்லுங்க நான் தான் தீரன்." என தீரன் கூற.
அவனின் இந்த பேச்சு புதியதாக தோன்ற..அவனையே விழி விரித்து பார்த்தவள் "ஓ..ஒன்னு... ஒன்னுமில்லை சார்.." எனக் கூறி ஒரே ஓட்டமாக ஓடினாள்...
ஓடியவளைப் பார்த்து சிரித்தவன் "என்ன கேட்டோம் இப்படி ஓடறா..!! என நினைத்தவன் சிரித்தப்படியே அங்கிருந்து நகர்ந்தான். இவளால் தன் வேஷம் கலையப் போகிறது என அறிந்திருந்தால் பின்னால் வரும் பிரச்சினையை சுலபமாக தீர்வு கண்டிருப்பானோ என்னவோ...!!
*******
பல்லாயிரம்
வெண்ணிற
துளிகளுக்கு
இடையில்..
வெண்ணிற
மலர்களை
கையில் ஏந்தி
என்னிடம்
காதல் சொல்லும்
வெள்ளை
ரோஜாவோ என்
கள்வன்..
என அவள் எழுதிய கவிதையை வாசித்தவனை கண் இமைக்காமல் பார்த்தவள் "உங்கிட்ட எப்படி என்னோட கவிதை வந்துச்சு..கொடு டா எருமை.." என கூறி அவனை நோக்கி சென்றவள் இம்மியளவு நெருக்கத்தில் இருந்தவாறே தன் நோட்டை வாங்க முயற்சி செய்ய சில நிமிடம் அவளிடம் விளையாடியவன் இருவருக்கும் இடையே மேலும் நெருக்கத்த ஏற்படுத்த தன் கையை தலைக்கு மேல் தூக்கி அவளிற்கு போக்குக் காட்ட.. நோட்டை எட்டிப் பிடிக்க முயற்சி செய்ய முடியாமல் போனது... "மகேஷ் கொடு டா.. பிளீஸ் டா.." என கெஞ்சியவளிடம்
'சரி சொல்லு யாரு அந்த கள்வன்..' என கேட்க
"அப்படியெல்லாம் சொல்ல முடியாது டா.. ஒழுங்கா கொடு...' என அழகு காட்டியவளிடம்
"அப்போ நானும் தர முடியாது.."
"சரி சொல்றேன்..முதல்ல நோட்டை கொடு.." என கேட்க
"முதல்ல சொல்லு. இல்லன்னா நான் கேட்கறத கொடு. டீலா.. நோ டீலா.." என பேரம் பேசியவனை முறைத்தவள்
"சரி என்ன.. சொல்லித் தொலை என்னால முடிஞ்சத செய்யற.." என அழகு காட்டியவாறேக் கூறியவளை நமட்டு சிரிப்புடன் பார்த்தான் மகேஷ்..
"என்ன டா... எதுக்கு சிரிக்கற..."எனக் கேட்ட இழையினியை ஒரு கையால் தூக்க பதட்டத்துடன் "டேய் என்ன பண்ற.." என்ற கேட்டவளின் கேள்வி அவனின் ஈர உதடுகளில் கரைந்து தான் போனது...!!
"ஐயோ.."எனக் கத்திக் கொண்டே தூக்கத்தில் இருந்து எழுந்தவள் சுற்றி சுற்றி தன் அறையை பார்க்க தன்னவனோ பால்கனியில் போன் பேசி கொண்டிருந்தவாறே பின்னால் திரும்பி "என்ன." என செய்கையால் கேட்க..
"ஒன்றுமில்லை" என இழை தலையை ஆட்டிட பின்னால் திரும்பி நின்றவன் பேசுவதில் முழிக்கினான்..!!
"நீ ரொம்ப சரியில்லை இனியா.. இப்படி எல்லாமா கனவு வரும் உனக்கு. இனிமே இவன் கூட தூங்கக் கூடாது.." என முனகியவாறே எழுந்தவள் மணியைப் பார்க்க அதுவோ ஒன்பதை காட்டியது..!!
"டேய் போலீஸ் பக்கி.. ஏன் டா இவ்வளவு நேரம் தூங்க விட்ட..." என கத்திக்கொண்டே அவனின் அருகில் செல்ல தன்னவனின் பேச்சில் சிலையாய் நின்றாள்..!!
"மகேஷ் நீங்க அந்த பொண்ணுங்களோட நீயூட் போட்டோஸ் பாத்தீங்களா..!"
"பாத்தேன் சார்.."
"எதுக்கும் இன்னொரு தடவை பாருங்க மகேஷ்.. எல்லாம் கிராபிக்ஸ் கூட இருக்கலாம்..அது கிராபிக்ஷா இல்லையான்னு கண்டுபிடிக்க பாருங்க.. அந்த பொண்ணுங்கள ஏமாத்தக் கூட இது மாதிரி கிராபிக்ஸ் பண்ணி இருக்கலாம்.."
"இல்லை சார் எல்லாம் பொண்ணுகளோட ஒரிஜினல் நீயூட் போட்டோ தான்..₹ எதுக்கும் இன்னொரு தடவை பாத்துக்கற சார்.." என மகேஷ் கூறவும் இழையினி வரவும் சரியாக இருந்தது..
அவனின் கூற்றில் சட்டென கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது இழையினிக்கு.. "இன்னும் இவ மாறவே இல்லையா.. நான் தான் தப்பா நினைச்சுட்டு இருக்கனா.." என காதல் மனம் கேள்வி எழுப்ப...
"நான் முதல்ல இருந்தே சொன்னேன் கேட்டயா... இப்போப் பாரு அவனோட முழு சுயரூபமும் தெரியுது. இவன் எப்பவும் மாற மாட்டான். இந்த மூணு வருஷத்தில இன்னும் மாறமா அப்படியே இருக்கான். அன்னைக்கு ஏதோ இவன் மேல இருந்த காதல் போதையில இவன்கிட்ட எதுவும் கேட்காம விட்ட.. ஆனா இவனை இப்படியே விட்டா எல்லா பொண்ணுங்களோட வாழ்க்கையும் வீணா போயிடும்.. போ இனி இப்பவே அவனை கொன்னுறு.." என இன்னொரு மனம் இட்டக் கட்டளையில் அவனை நோக்கி முன்னேறி சென்றவள்
அவனைப் பின்னிருந்து தள்ளிவிட சற்று தடுமாறியவன் கம்மியைப் பிடித்து திடமாக நின்றுக் கொண்டு அவளை முறைத்தவாறே
"ஓகே சார் நான் போட்டோஸ் பாத்துட்டு இன்பார்ம் பண்றேன்.." எனக் கூறியவன் போனை தன் பேண்ட் பாக்கெட்டில் போட்டவாறே "ஏய் லூசு அறிவிருக்கா டி உனக்கு.. எது எதுல விளையாட வேணும்னு இல்லை.. அறிவு கெட்டவளை.. மிஸ் ஆயிருந்தா உன் புருஷன் இன்னைக்கு பரலோகம் தான் போயிருக்கணும்.." என கத்திவனிடன்..
"ஆமா நீ சாகனும் தான் தள்ளிவிட்டேன்.. ஆனால் மிஸ் ஆயிருச்சு.. என இழை கூற
"என்ன உளறிட்டு இருக்கா இவ" என நினைத்தாலும் அவளையே இமைக்காமல் பார்த்தான்
"பொண்ணுங்கள வெறும் போதை பொருளா பார்க்கற உன்னை மாதிரி ஆளுங்க இருக்கறதுனால தான் நாடு விளங்காம போயிட்டு இருக்கு.."
"இது வேறயா..."
"உன்னை பாக்க பாக்க எனக்கு வெறி வருது..உன்னை கொன்னு போட்டாக் கூட எனக்கு மனசு ஆறாது டா..." என கத்தியவளை இமைக்காமல் பார்த்தவன் "எனக்கு வர கோபத்துக்கு
உன்னை" எனக் கூறியவள் அடிக்க வர அவளின் இரண்டு கைகளையும் பிடித்தவன்
"இப்படி சொல்றவ அன்னைக்கு ஏன் டி.. நான் போன்ல பேசும் போது கேட்டுட்டு மட்டும் இருந்த.. அன்னைக்கே நேருல வந்து என்னை கொன்னுப் போட்டுருந்தா இப்போ உனக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்து இருக்குமே..!! அன்னைக்கு நான் பேசனது எல்லாம் ஞாபகம் இருக்கு தானே.." என கேட்டவனை சுட்டெரிக்கும் பார்வை பார்த்தாள்..!!
"என்ன டி சொல்லு ஞாபகம் இருக்கா... இல்ல இன்னொரு தடவை அன்னைக்கு சொன்ன மாதிரி மறுபடியும் சொல்லவா.." என மேலும் அவளைத் தூண்டி விட
"இத்தனை வருசமா ஒரு மூலையில என் மகேஷ் தப்பு பண்ணி இருக்க மாட்டான்னு தோனிட்டே இருந்துச்சு... ஆனா இன்னைக்கு உன் பேச்சுலயே புரிஞ்சுகிட்டேன் டா. நீ அசல் பொறுக்கி தான்னு இப்போ புரிஞ்சுகிட்டேன்
நீ கெட்டவன்.. என் மகேஷ் கெட்டவன்.. நான் தப்பான ஒருத்தன சின்ன வயசுல இருந்து லவ் பண்ணி இருக்க. நீ தப்பு பண்ணல நான் தான் தப்பு பண்ணிட்டேன்.." என கூறி அழுதவளை பார்த்தவனிற்கு அவளை அணைத்து ஆறுதல் கூற வேண்டும் என தோன்றியது... ஆனால் இவள் தனக்கு நடந்ததை கூறினால் ஏதாவது ஐடியா கிடைக்கும் என நினைத்தவன் அவளை பேச வைக்க மேலும் சீண்டினான்... அவளின் ஆழ்மனதில் உள்ள காயங்களை மேலும் கீறி விட்டான். கண்ணீர் தடங்களாய் அவளின் நினைவுகள் பின்னோக்கி சென்றது..
*******
கவுசல்யா ஸ்ப்ரஜா ராம பூர்வாஸ்த்யா... என சுப்பரபாதம் ஒலிக்க அதை "அடியே அந்த சந்தியா(ரேடியோ) வாயை கொஞ்சம் மூட சொல்லு டி.. சும்மா சும்மா கவுசல்யா ராஜாவை இழுத்துட்டு இருக்கா.." என இழையினி கத்த
"ஒன்பது மணி ஆயிருச்சு எழுந்துத் தொலை டி"என பிரியா கத்த..
"ஒன்பது மணிக்கு மேல எவ டி பாட்டை போட்டது" என கத்திக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்தவள் குளியலறையை நோக்கி நடந்தாள்..
"நான் கிளம்பறேன் டி உன் அண்ணாவை பாக்க போகணும்" என கூறியவள் அங்கிருந்து சிட்டென பறந்தவளிடம்
"பிரியா எருமை எனக்கு நாலு முந்திரி கேக் பார்சல்..." என குளியலறையில் இருந்தே கத்த...
"உன்னை திருத்த முடியாது டி...." என கத்தியவள் அங்கிருந்து நகர்ந்தாள்
காலைக்கடன்களை முடித்தவள் வெளியே வரவும் அவளின் போனில் அழைப்பு வரவும் சரியாக இருந்தது..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro