அவன் 19
பறவையின் ஓசைக்கு ஈடாய் போட்டி போடும் குழந்தைகளின் சிரிப்பு சத்தமும் அந்த சிரிப்பை வருடி செல்லும் பூங்காற்றும் அந்த பூங்காவின் இயற்கையும் அவனின் மனதை சற்று ஆசுவாசப்படுத்தி இருந்தது... ஆனாலும் மனதின் ஓரத்தில் ரிஷி பேசிய வார்த்தைகளை அசைப்போட்டப்படியே அமர்ந்திருந்தான்.
"இங்க பாரு மகேஷ் நீ சொல்றது எனக்கு புரியாமல் இல்லை... ஆனா இதெல்லாம் வைச்சு அவனை கண்டுப்பிடிக்கிறது ரொம்ப கஷ்டம்..."என ரிஷி சொல்ல..
"எப்படி சொல்றீங்க மாமா..."
"ஆமா மகேஷ்.. ஒரு ஊருக்கு நாலு ஹேக்கர்ஸ் இருக்காங்க.. எப்படி கண்டுபிடிப்ப சொல்லு.. இவன் தான் ஒருத்தனை பிடிப்ப ஆனா இன்னோருத்தன் நீ நினைச்சே பார்க்காத வேலையை பண்ணி இருப்பான். நீ இப்போ சைபர் கிரைம்ல இருக்கறதுனால இதெல்லாம் கண்டுப்பிடிக்கலாம் ஆனா எத்தனை நாளைக்கு சொல்லு.. வெட்ட வெட்ட வந்துட்டே இருக்க ஒன்னும் இது செடி இல்ல மகேஷ் ஆலமரம் வேர் மாதிரி ஒன்னுல இருந்து ஒன்னு உருவாகிட்டே இருக்கும்.. எனக்கு தெரிஞ்சு உன் கேஸ் ரொம்ப சின்னது மகேஸ்... ஈசியா உன் போன்ல, என் நம்பர்ல இருந்து வேற ஒருத்தருக்கு கால் போக வைக்க முடியும்..
"புரில மாமா.."
"எப்படி சொல்றது இப்போ உனக்கு வந்த கேஸ் என்னது.. சம்பந்தப்பட்ட இரண்டு பேருல பாதிக்கப்பட்டவங்க போன்ல இவங்க தான் பண்ணாங்கன்னு ஒரு டீடெயில்ஸ் இருக்கும். இன்னொரு போன்ல போயி பாத்தா அது இருந்து இருக்காது... இது தானே இப்போ பிரச்சினை..'
"ஆமா'
"அந்த போன் இரண்டைலையும் நீ செக் பண்ணது போட்டோஸ் இருக்கா.. கால் இருக்க பார்த்து இருப்ப.. அதுக்கும் ஒரு சில app ஆஹ் டவுன்லோட் பண்ணி தான் பாத்து இருப்ப கரெக்ட் ஆஹ்.."
"ஆ..ம்..ஆமா.. மாமா.."
"ஓரு போன்ல இவங்க தான் பண்ணி இருப்பாங்கன்னு தெரிஞ்சு இருக்கும். இன்னொரு போன்ல எதுவும் தெரிஞ்சு இருக்காது. ஏன்னா அவங்க அதெல்லாம் பண்ணி இருக்க மாட்டாங்க மகேஷ் ... ஹேக்கர்ஸ் இது மாதிரி நிறையா ஆப் யூஸ் பண்ணி இருப்பாங்க. இதுக்குன்னு நிறையா சைட் இருக்கு... அதுல இதுவும் ஒன்னு.ஹேக் பண்ணி பொண்ணுங்களோட போட்டோஸ் எடுத்து அதை எப்படி வேணா மாத்தி எடிட் பண்ண முடியும். இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான் ஆனால் அதெல்லாம் இப்போ சுத்தமா பண்றது இல்ல. அதை விட கேவலமா பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா. ஜூஸ்ட் நீ ஒரு வீடியோ கால் பேசனா போது உன்னை நீயூடா காட்ட முடியும்.. அதே மாதிரி உன் போன்ல இருக்கற கேமராவை உனக்கு தெரியமை ஆன் பண்ண முடியும். அதை வெச்சு தான் இப்போ பொண்ணுங்களோட எல்லாம் போட்டோஸ், அவங்களோட பர்சனல், டீடெயில்ஸ் எல்லாம் எடுக்க முடியும்... காலையில உள்ளங்கையில கண் விழிச்ச நாள் போயி மொபைல கண் விழிக்கற நாள் வந்துருச்சு.. இதெல்லாம் எப்போ மறுமோ அப்போ கண்டிப்பா ஹேக் பண்ற விஷயம் குறையும்..."
"மாமா... அடுத்த கதையோட ஹீரோ நீ தான். அதுக்குன்னு இந்தளவுக்கு டையலாக் பேசணுமா.. நீ.. தண்ணி குடிச்சுட்டு வா போ மாமா' என மகேஷ் சொல்லவும் கிளுக்கி சிரித்தாள் வாணி..
"ஏன் டி எவ்ளோ சீரியாஸா பேசிட்டு இருக்கேன் இவன் என்னை கிண்டல் பண்ணிட்டு சுத்திட்டு இருக்கா. நீயும் சிரிக்கற.. சொல்லிவை நம்மலை பத்தி" என ரிஷி தன் காலரை தூக்கி சொல்ல
முறைத்தவள் அங்கிருந்து நகர்ந்தாள்..
"மாமா.. மாமா..' என மகேஷின் குரல் கேட்க...
"சொல்லு டா இருக்கேன்.. அப்போ என் கேஸ்ல சம்பந்தப்பட்ட அந்த ஹேக்கர்
யாருன்னு கண்டுபிடிக்க முடியாதா.!!"
"என்ன டா யோசிச்சு யோசிச்சு பேசற.. இப்போ தானே சொன்ன...என கேட்க
"நீங்க பேசனது என் மண்டைக்கு ஏற இரண்டு நிமிஷம் தேவை பட்டுச்சு அதான் உங்களை டைவேர்ட் பண்ணற மாதிரி பேசன" என மகேஷ் கூற
"நல்லா பண்ற..டா டைவேர்ட்.."என ரிஷி சொல்ல சிரித்தான் மகேஷ்..
"என் கேஸ் முதல்ல கண்டு பிடிக்கணும் மாமா.. மண்டை காய்து அதுக்கு என்ன பண்ணலாம்னு சொல்லுங்க.."என மகேஷ் கேட்க..
"உனக்கு வந்த கேஸ்க்கு ஒண்ணே ஒன்னு பண்ண போதும் ஈசியா அந்த ஹேக்கரை கண்டு பிடிக்க முடியும்.."
"எப்படி மாமா.. சிம்பில் டா யார் நம்பர்ல இருந்து கால் போயி இருக்கோ அவங்க போனை வாங்கி நார்மல் மேஜேஜ் இருக்கா பாரு.. அதுல ஏதாவது ஒரு ஆப்ல இருந்து ஓடிபி வந்து இருக்கா பாரு.. அடுத்து நார்மல் கால் வந்து இருக்கான்னு பாரு ஓடிபி வந்ததுக்கும் அடுத்து அவன் கால் பண்ணி இருப்பான்.. அதுவும் ஒரு சில நிமிஷம் தான் இருக்கும் அப்போ அதுல இருந்து அவனை கண்டு பிடிக்க முடியும்.."
"இவ்வளவு சாதாரணமா பண்ண முடியமா மாமா.. நான் போட்டோ இருக்கான்னு தான் பாத்தேன்.. வாட்ஸ் ஆப் செக் பண்ண"
"அதுதான் தப்பு மகேஷ்.. ஒரு சாதாரணமா நினச்சு நம்ம விடற ஒரு விஷயம் தான்.. மிக பெரிய ஆபத்தா அமையும்.. இவங்க ஓடிபி நம்பர் கொடுக்கமா இவங்கனால ஒரு ஆணியும் புடுங்க முடியாது.. நம்மால அறியாம செய்யற விஷயம் தான் பெரிய பிரச்சனையா வரும்.. ஓகே டா நான் சொன்னது போலவே இருந்தா கண்டிப்பா அவன் ஆப் தான் யூஸ் பண்ணி இருப்பான்.. அப்போ அவனை கண்டு பிடிக்க முடியும்.."
"இப்போ தான் கொஞ்சம் ரீலீப் ஆனா மாதிரி இருக்கு மாமா.. இதுக்கு தான் ஒரு ஹேக்கரை கூடயே வெச்சகனும்னு சொல்றது..!" ஆம் ரிஷியும் ஒரு ஹேக்கர் தான் அதனால் தான் மகேஷ் அவரிடம் விசாரித்தது.. ஒரு ஹேக்கரின் வண்டவாளம் இன்னொரு ஹேக்கர் மூலமாக தானே வெளி வரும்... முள்ளை முள்ளாள் தானே எடுக்க முடியும் என்பது இவனது கணிப்பு..! இவனின் கணிப்பு கூட பொய்யாக போகிறது என அறியாமல் இருந்தான் இது இவனின் தப்போ..
ரிஷி கூறியபடி தற்கொலை செய்யப்பட்ட அனைத்து பெண்களின் உறவினர்களின் மொபைலை செக் செய்து பார்த்தவனுக்கு கிடைத்தது என்னவோ பூஜ்ஜியம் தான் ஆம்.. ரிஷி கூறியது போல் அனைவருக்கும் கால் வந்தது உண்மை ஓடிபி நம்பர் கேட்டதும் உண்மை... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதைகளை கூறி ஓடிபி நம்பர்களை வாங்கி இருக்கிறார்கள்.. வங்கி, காலேஜ், எல்.ஐ.சியிலிருந்து பேசுகிறேன் என கூறித்தான் ஓடிபி நம்பர்களை வாங்கி இருக்கிறார்கள்..ஆனால் அவர்களின் கை நின்றால் தானே அனைத்தும் டெலிட் செய்து இருக்க ஒரு சிலர் போனை மாற்றி விட்டதாக கூற கடுப்பாகிவிட்டான் மகேஷ்..!!
இதில் மகேஸிற்கு புரியாத விஷயம் ஒன்றே ஒன்று தான் பெண்கள் தேவை என்றால் அந்த பெண்களை முதலில் டார்கெட் செய்யாமல் ஏன் அவர்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஓடிபி நம்பர்களை வாங்க வேண்டும் அவர்களை வைத்து பெண்களை மிரட்ட வேண்டும் அது மட்டுமல்ல ஹேக் செய்பவனுக்கு அவர்களின் உறவுகள் எப்படி தெரியும் என்பது மிக பெரிய கேள்வியாய் அமைய.. அந்த பெண்களின் ஈமெயிலை செக் செய்யலாம் என மகேஷ் யோசிக்க அவர்களின் ஈமெயில் கான்டெக்டிலிருந்து நம்பர்களை எடுக்க முடியுமென ரிஷி சொன்னதாக நினைவு வர ஈமெயிலிருந்து நம்பர்களை எடுத்ததாக தெரியவில்லை
சோர்ந்து போனான் மகேஷ்..!!
மீண்டும் அதே இடைத்தை வந்ததாக நினைத்தான்... ஆனால் என்ன இது ஒரு ஆப் மூலம் தான் செய்கிறார்கள்... என தெள்ளத்தெளிவாக தெரிய அந்த ஆப் என்னவென்று கண்டுபிடிக்க முடிவு செய்தவன் அந்த ஆப்பையும் கண்டறிந்து கொண்டான்..அதற்கான ஆப்பை தடை செய்ய கூறியவன் இருபத்தி நான்கு மணி நேரத்தில் அதை முழுவதும் முடங்கினான்.. அந்த ஆப்பின் கிறீயேட் நேம் பார்க்க
281-18-20-1-8-9 என இருக்க அதை குறித்து கொண்டான் மகேஷ்.. ஆனால் ஒரு ஆப்பை முடக்கினால் ஹேக் முழுவதும் நின்றுவிடும் என்றால் அனைத்து ஆப்களையும் முடக்கும் நிலை தான் வரும்..
**********
"பிருந்தா.. உன்னை இந்த நிலைக்கு மாத்தன யாரையும் நான் விட மாட்டேன் .. கண்டிப்பா அவனை நான் கொல்லுவேன். அது வரைக்கும் நான் நம்ம வீட்டுக்கு வர மாட்டேன் மா.." என தன் தொலைபேசியின் திரையில் தெரியும் நபரிடம் பேசி கொண்டிருந்தது ஓர் காயப்பட்ட இதயம்..
****
"நம்ம ஆப்பை முடக்கிடாங்க சார்.."
"தெரியும்"
"இப்போ என்ன பண்றது சார்.."
"அதான் சைட் இருக்குல்ல, நம்ம டார்கெட் பொண்ணுங்க... அவங்களோட போட்டோஸ் அதுவும் நீயூடா இருக்கற போட்டோஸ் அதை எப்படி வேணா எடுக்கலாம்.. ஏதாவது dare குடு... அது மூலமா கண்டிப்பா ஏதாவது சிக்கும்.. நீ இந்த ஆப் விஷயத்தை விடு நான் பாத்துக்கிறேன்.." என போனை வைத்தவன்.. அதிலிருந்த போட்டவை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்
"உன்னை கண்டிப்பா அடைஞ்சே தீருவேன் இழையினி.."
கண்களில் வன்மத்தை வைத்து இருக்கும் ஈரமில்லா இதயம்...!!
****
'நீ எங்க இருந்தாலும் கண்டிப்பா உன்னை கண்டு பிடிச்சுடுவேன் டா.. என்னை இந்தளவுக்கு அலைய யாரும் விட்டது இல்லை... இரு உனக்கு இருக்கு... நீ பண்ண எல்லாத்துக்கும் என் கையில தான் டி உனக்கு சாவு..." என கண்களில்
கண்டுபிடிக்கும் வெறியுடன் மகேஷின் இதயம்..
இவை மூணும் இணையும் புள்ளி இழையினி தான் என மகேஷ் அறியாமல் இருந்தது விதியின் செயலோ..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro