அவன் 18
"உன் தங்கச்சி மரியாதை பலமா தரா டா.. கீழே வைட்டா ஏதோ வெச்சுருப்பா நான் போயிட்டு வரேன்" என மகேஷ் கூற
தலையில் அடித்து கொண்டே "போய் தொலை..." என கூறியவன் தன் உடைந்து போன மொபைலை பாவமாக பார்த்தான்
"டேய்ய்....." என மீண்டும் இழை கத்தவும் அரக்க பறக்க ஓடினான் மகேஷ்.."இவ கிளம்பறதுக்குள்ள என்னை ஒரு வழி ஆக்கிடுவா போல இப்போ என்னன்னு தெரியலயே கடவுளே..." என மனதில் நினைத்தாலும் வெளியில் கெத்தாக தான் நடந்து வந்தான்..
மேல் அறையிலிருந்து வருபவனை கண்களால் அளவிட்டாள் அவனின் வினியாள்...(இழையினியாள்)
ஆறடிக்கு சற்று அதிகம்.. கலைந்த அடர்த்தியான கேசம்.. கூரிய நாசி, அழகிய கண்களின் நிமிர்ந்த பார்வை. மேல் உதட்டை பாதியாக மறைக்கும் அவனின் மீசை.. கடிக்க தோன்றும் செவ்விதழ்கள்.. கன்னத்தில் முழுவதும் பாதியாக வெட்டப்பட்டு தாடையில் கொஞ்சம் அதிகமாக வளர்ந்திருந்த தாடி..!! சற்றே திடமான அகலமான மார்பு..ஆறு பைகள் கூட வைத்து இருந்தான்..அதான் பா சிக்ஸ்பேக்..கம்பீரமான நடை.. மாடியிலிருந்து நடந்து வரும் அழகோ தனி அழகு.. சிறு வயதிலிருந்து கரடி பொம்மை போல் இருந்தவன் இன்று ஒரு கம்பீரமான ஆண்மகனாய் தெரிந்தான் இழையினிக்கு... நம்ம கல்யாணத்தில கூட மீசை இல்லாம, தாடி இல்லாம பார்க்க கொஞ்சம் சின்னவன் மாதிரி தானே இருந்தான்.. ஆனா இந்த இரண்டு வருஷத்துல இவ்வளவு மாறிட்டானா இவன்.. இல்லை எனக்கு தான் அழகா தெரியறனா.. என் அச்சு குட்டி டா நீ, என் அழகு கரடி குட்டி..என் கன்னுக்குட்டி, என் செல்லம்.. எவ்ளோ அழகு .." என அவனை வர்ணிக்க தொடங்கிய மனதையும் அவனை விழுங்கும் பார்வையும் ஒரு நிமிடத்தில் மாற்றினாள்..!! எவ்வளவு தான் அவளின் மனம் அவன்பாள் சாய்ந்தாலும் அவளின் மூளை இன்றும் அவனை குறை கூறிக்கொண்டே இருந்தது... சில சமயம் கண்ணில் காதலுடன் காண்பவள், சில சமயம் வெறுப்பையும் சுமந்தாள் இழையினி...
"ஏய் குந்தாணி எதுக்கு வர சொன்ன.. உயிர் போற மாதிரி எதுக்கு டி இப்படி கத்தற..." என மகேஷ் கேட்டவுடன் தான்! எதற்காக அழைத்தோம் என நினைவு வர "யாரோ வாணியாம் கூப்பிட்டு இருக்காங்க.. பேசு..." என போனைக் காட்டிட "அட நம்ம கொக்கி" எனக் கத்தி குதூகலத்துடன் சொன்னவனை முறைத்தாள் இழையினி..
"அம்மா தாயே.. ஏன் இப்படி முறைக்கற..!! அவங்க எனக்கு அக்கா தான்...! அவங்க கிட்ட கொஞ்சம் முக்கியமான விஷயம் கேட்க கூப்பிட்டு இருந்தேன்..! அதுக்காக இப்போ கூப்பிட்டு இருப்பாங்க..." என கூறியவன்.. தன் கீபோர்டு போனை எடுத்துக்கொண்டு வெளியில் வராண்டாவில் நின்றவனின் பின்னால் இவளும் நின்றாள்.
"என்ன கொக்கி அக்கா எண்ஜாய் பண்ற போல..." என கேட்டவனிடம் எதிர்ப்புறம் என்ன பதில் வந்ததோ சட்டென்று சிரித்தவன் (வேற என்னவா இருக்கும் பிஞ்சுரும்னு சொல்லி இருப்பா..)
"என்ன கொக்கி அக்கா அவ்ளோதானா" எனக் கேட்க.
"கடவுளே இப்போ என்ன டா சொல்லு எதுக்காக என்னை கூப்பிட்ட.."என கேட்ட வாணியிடம்...
"என்ன கொக்கி அக்கா... அவ்ளோதானா.."
"ஒழுங்கா அக்கா சொல்றதை நிறுத்திடு இல்லை கொன்றுவேன்.. நான் உனக்கு சின்ன புள்ளை டா ஜஸ்ட் 24 தான் ஆகுது" என கூறிய வாணியிடம்
"அதெல்லாம் எனக்கு தெரியாது,உனக்கு கல்யாணம் ஆயிருச்சுல அப்போ நீ எனக்கு அக்கா தான்.."
"இப்போ நீ என்னை தங்கச்சி சொல்லல... உன்னை பிளாக் பண்ணிருவே பாத்துக்கோ..." என வாணி கூற
"என்ன கொக்கி அக்கா... ஒரே ஒரு வார்த்தையில என் மனசை ஓடச்சுட்ட.."
"அடிங்க எதுக்கு கூப்பிட்ட அதை சொல்லு சும்மா அக்கா,அக்கான்னு கூப்பிட்டு வெறுப்பேத்தி விட்டுட்டு.." என கூறிய வாணியிடம்..
"அது வந்து கொக்கி அக்கா" 'அக்காவில்'அழுத்தத்தை கொடுத்து... "நான் ரிஷி மாமா கிட்ட பேசணும் கொஞ்சம் டீடெயில்ஸ் வாங்கணும் அதான் கூப்பிட்டேன்..." என மகேஷ் சொல்லவும்
"இதுக்கு தான் இவ்வளவு ஸீன் போட்டானா..ச்சே நான் தான் பொய் சொல்றான்னு தப்பா நினைச்சுட்டேன்."என நினைத்தவள் தன் நகத்தை கோரித்தப்படியே அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்..
பேசி முடித்தவன் திரும்ப தன்னவளை இடித்து நின்றவன்... "ஏய் நீ இன்னும் போகலையா. இங்க என்ன டி பண்ற. நான் பேசனதை ஒட்டு கேட்டுட்டு இருந்தியா.. என கேட்டவனை முறைத்தவள் "ஆமா பெரிய கம்ப ரகசியம் போ டா. நான் ஒன்னும் கேட்கலை.." என இழைக் கூற
"அப்படியா... அப்பறம் ஏன் மேடம் என் பின்னாடி வந்து நின்னுட்டு இருக்கீங்க..." என கேட்டவனிடம்
"எனக்கு தெரியாத இந்த கொக்கி அக்கா.. யாருன்னு கேட்க வந்தன்னு மட்டும் நினைச்சுக்காத சரியா. நான் என்ன சமையல் செய்யலாம்னு கேட்க வந்தேன்.. அதுக்குள்ள நீ திரும்பிட்ட நான் என்ன பண்றது. உன் பின்னாடி சுத்தறதை தவிர எனக்கு வேற வேலை இல்லை பாரு.. .." எனக் சிலிப்பிக்கொண்டவளைப் பார்த்து சிரித்தவன்...,
"அவளின் நேற்றியில் லேசாக முட்டி லூசு அவ என் தங்கச்சி மாதிரி..!! தங்கச்சி லிஸ்ட் கொஞ்சம் அதிகமாக இருக்கிறதுனால அக்கான்னு சொல்றேன். அடிக்கடி கொக்கின்னு கூப்பிட்டு வெறுப்பேத்தி பார்ப்பேன் அவ்ளோதான்...!!
அதுக்காக இப்படி நகத்தை கோரிச்சுட்டு என்னையே சைட் அடிச்சுட்டு இருக்கனும்னு இருக்கா என்ன..? நீ இன்னும் மாறவே இல்லை வினிமா.." என கூறியவன் சிரித்தப்படியே அவளைவிட்டு நகர
"என்ன டா பண்றது...உன்கிட்ட இவ்வளவு கிலோஸா யார் பேசினாலும் அது அக்காவ இருந்தா கூட எனக்கு கோபம் வருது.." என தன் மனதில் கூறியவள் அவனைப் பார்த்து அழகு காட்டியவாறே கிச்சனிற்குள் நுழைந்துக்கொண்டாள்..!!
சமையலை முடித்தவுடன் குளிக்க செல்ல இவளிற்கு முன் மகேஷ் ரெடியாகி நின்று இருந்தான்..
"சீக்கரம் குளிச்சுட்டு வா டி, எனக்கும் டைம் ஆயிருச்சு... ஒரு முக்கியமான வேலை..." என கூற..
"ரொம்ப பெரிய வேலை.."என வாயில் முணுமுணுத்தவள் தன் லக்கேஜ்ஜை தேட
"உன் ட்ரெஸ் எல்லாம் காபோர்ட்ல இருக்கு" என கூற
"யாரை கேட்டு இதெல்லாம் பண்ற நான் இங்கே இருக்க மாட்டேன்.. என்னை ஹாஸ்டல்ல கொண்டுப் போயி விடு" என சொல்ல
"ஏன் என்கூட இருந்தா.. என் மேல இருக்கற லவ்வை சொல்லிருவோம்னு பயமா இருக்கா.." என கேட்க
"இல்லை..!! உன்மேல இருக்கிற வெறுப்பைக் காட்டிடுவேன்னு பயமா இருக்கு.."
"ஏன் வெறுப்பை சுமர்ந்துட்டு இருக்க..
இங்க வா மாமா மேல சாஞ்சுக்கோ, இல்லைன்னா இறுக்கமா கட்டிப் பிடிச்சுக்கோ.. என்மேல இருக்கற வெறுப்பு எல்லாம் பறந்து போயிடும்.." என சம்பந்தம் இல்லாமல் பேசி அவளை வம்பிழுக்க
"ச்சி பொறுக்கி உன்கிட்ட போயி பேசன பாரு..."
"யார் பேச சொன்னா.பேசற வாய்க்கு ஒரு உம்மா கொடு அதுவே போதும்.." என அவளை மேலும் சீண்டிட.
"நீ இந்த ஜென்மத்துக்கும் திருந்த மாட்ட.. அன்னைக்கும் இதே மாதிரி தானே கேவலமா பேசன.. கேவலமா மட்டுமா பேசன... எ...ன்னை எ...ன்னை தப்பு தப்பா போட்டோ எடுத்து அனுப்பன ஆளு தானே, உன் மேல நான் வைச்ச காத.(காதல்) என கூற வந்ததை பாதியில் நிறுத்திவிட்டு "ச்சே.... நீ இன்னும் உன்னை நம்பி.. உன்கூட இருக்கேன் பாரு என்னை சொல்லணும்..." என அழுது கொண்டே கூற.!!
மகேஷின் மனதில் இருந்த குழப்பம் விலக..ௐஅவளை மேலும் வெறுப்பேற்றினான் "இங்க பாரு குந்தாணி.. நீ கோபமா இருக்க.. சோ இப்போ நல்லது எல்லாம் உன் கண்ணுக்கு உப்புமா மாதிரி தான் தெரியும்... கோபம் போனதும் மறுபடியும் வந்து பாரு உப்புமா கூட கேசரி மாதிரி தெரியும்.." என தத்துவ வார்த்தைகளை கூறியவனை முறைத்தவள் குளியலறையில் நுழைந்து கொண்டாள்..
அவள் சென்றதை உறுதிப்படுத்தி கொண்டவன் இப்போது வரை அடக்கி வைத்திருந்த கோபத்தை வெளியில் காட்டினான் "ஸீட்" என கூறியவன் தரையில் காலை எட்டி உதைத்தான்..
"பொறுக்கி ராஸ்க்கேல் ஏவன் டா நீ..!! நீ எவ்ளோ பெரிய இவனா இருந்தாலும் என் கையில தான் டா உனக்கு சாவு. நல்ல வேளை என் நம்பரை வைச்சு இவளுக்கு(இழை) கால் பண்ணி இருகாணுங்க.. மத்த பொண்ணுங்களுக்கு அப்பா, அண்ணா, மாதிரி பண்ணி இருந்தா என்ன ஆயிருக்கும்..." என நினைத்தவனிற்கு அந்த ஹேக்கர் மேல் கொலை வெறியே உண்டானது..
குளித்து முடித்து வெளியில் ஈரம் சொட்ட நின்றவளைப் பார்க்க பார்க்க மகேஸிற்கு தேகட்டவில்லை...முதன்முதலில் ஹாஸ்பிடல் செல்வதற்காக செரீ கட்டியிருந்தாள் அவளேயே பார்த்தவனின் கண்கள் அவளின் மெல்லிய இடையில் பதிந்திருந்தது..
சிறிது நேரத்திற்கு முன்னாள் இருந்த அனைத்து கோபத்தையும் பறக்க விட்டவன் தன்னவளின் அருகில் செல்லவும் அவள் தடுமாறி கீழே விழவும் சரியாக இருக்க அவளின் கையை பிடித்தவன் அவளை விழாமல் பார்த்துக்கொண்டவன் அவளின் பிறை நோற்றியில் படர்ந்த அவளின் ஈரக்கூந்தலை சரி செய்யவும்
நேற்று முன்னிரவில் உன்னித்திலவு மடியில் காற்று நுழைவதேனோ....
உயிர் கலந்து களித்திருந்தேன்..
இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பதேனோ
மனம் கலங்கி புலம்புகிறேன்...
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் ...
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி....
மகேஷின் மொபைல் சத்தம் போடவும் சரியாக இருந்தது..!!! (சிஸ்டுவேஷன் சாங் இல்லப்பா... )
"கரடி" என நினைத்தவன் தன் மொபைலை எடுத்துக்கொண்டு பறந்தான்.. அருகிலிருந்தால் அவளிடம் யார் அடி வாங்கி கொள்வது...
"சொல்லு பூமா .. எப்படி இருக்க...பூவான் எப்படி இருக்கான்... அக்கா, மாமா எல்லாம் எப்படி இருக்காங்க... நல்லா இருக்காங்களா.." என மகேஷ் கேட்க
"மாமா..." என பூவிழி அழைக்க
பூவிழியின் மாமா என்ற அழைப்பே கூறியது அவள் ஏதோ சரியில்லை என்று.. "விழி மா என்ன ஆச்சு... ஏன் ஒரு மாதிரி பேசற..எல்லாரும் நல்லா தானே இருக்காங்க.." பதட்டத்துடன் கேட்க..
"அதெல்லாம் ஒன்னும் இல்லை மாமா எல்லாரும் நல்லாதான் இருக்காங்க.."
"அப்பறம் என்ன மா ஆச்சு.. ஏதாவது பிரச்சினையா" என மகேஷ் கேட்க..
நேற்று காலேஜில் தீரன் பேசியது இவள் கேட்டது என அனைத்தும் ஒன்றுவிடாமல் கூறினாள்..
"இதுகா இவ்ளோ பீல் பண்ற.. அங்க என் பிரின்ட் தான் போலிஸா இருக்கான். என்னன்னு விசாரிக்க சொல்றேன் நீ பிரீயா விடு..." என மகேஷ் கூற
"சரியென தலையை ஆட்டினாள்..
"அப்பறம் சின்ன பொண்டாட்டி எண்ஜாய் பண்ற.. காலேஜ் எல்லாம் போற..." என கேட்ட மகேஷிடம்
"ஒரு நிமிஷம் இருங்க மாமா அக்காக்கு கால் பண்ணறேன்..." என கூற
"அம்மா தாயே, உன் அக்கா என்னைக் கொன்னு போட்ருவா ஆளா விடு.. ஆமா யார் இந்த நம்பர் கொடுத்தா" என கேட்க..
"மித்து அண்ணா தான்.. நான் அடம்பிடிச்சு கேட்டேன்..நீங்க கவலை படாம இருங்க. நான் யார்கிட்டையும் நீங்க இங்க இருக்கிறதா சொல்ல மாட்டேன்" என பூமா கூற சிரித்தவன் "உனக்கு இருக்கற அறிவு கூட உன் அக்காவுக்கு இல்லை..." என கூற
"ஏன் மாமா.."
"ஒண்ணும் இல்லை மா சும்மா தான்.." என கூறியவன் சிலபல விசாரிப்புகளுடன்
போனை கட் செய்தான்..
Votes comments pannama poninga inime late ud than poduven
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro