Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அவன் 17


வாகனங்களின் இரைச்சலில் கண்விழித்தவள் போர்வையை போர்த்தியப்படியே எழுந்தமர்ந்தாள்..  முதலில் எங்கு இருக்கிறோம் என விழிகள் விரிய பார்த்தவளின் நினைவில் நேற்றுத் தங்களின் வீட்டிற்கு வந்தது நினைவு வர.... "முதல்ல இங்க இருந்து போகணும் இவன் கூட இருந்தோம் ஒரு மணி நேரத்தில அவன் மேல நான் வைச்சக் கோபம் எல்லாத்தையும் சில்லுசில்லா ஓடச்சுடுவான்..!!இந்நேரம் நம்ப கண்ணுக்கு தெரிஞ்சு இருப்பானே எங்க ஆளையே காணோம்.. எனக்கு வேற டைம் ஆயிருச்சு..! ஹாஸ்பிடல் வேற போகணும்..!!" என தன் மனதில் நினைத்தவள் அறைமுழுவதும் தன்னவனை கண்களால் தேட  அதற்கு பயன் என்னவோ பூஜ்ஜியம் தான்.. "காலங்காத்தால எங்க போயி இருப்பான் இவ..வ.ன்.." என நினைக்கும்  முன்னரே அவள் போர்த்தி இருந்த போர்வையின் மறுபக்கத்தை பலம் கொண்டு இழுக்க போர்வையுடன் அவளும் சரிந்தாள் அவன் மேல்....

"என்னது இழுக்கவே முடிலை..." என தூக்கத்தில் பேசியப்படியேப் போர்வையை இழுக்க போர்வையுடன் சேர்ந்து அவளும் அவன் மேல் விழ

"காப்பாத்துங்க.. காப்பாத்துங்க... பூகம்பம்... ஐயோ நிலநடுக்கம் வந்துருச்சு.. எல்லாம் என் மேல இடிஞ்சு விழுது.. யாராவது காப்பா...த்து..ங்..க..." என கண்ணை மூடிக்கொண்டே  அலறியடித்து எழ முயற்சிக்க செய்ய அது முடியாமல் போனது...

போர்வையை இழுத்ததும் அவன் மேல் விழுந்தவள் "இவனும் நம்ம கூட தான் தூங்கிட்டு இருந்தானா"..? என இழை யோசிக்கவும்  அவன் எழவும் சரியாக இருந்தது...!!

எழ முடியாமல் போனதும் தூக்கத்தில் இருந்தப்படியே "என் கால் போச்சு.. என் இடுப்பு போச்சு.. மொத்தமா எல்லாம் போச்சு... இவ்வளவு பெரிய பூகம்பம் வந்தும் எல்லாம் என்ன டா  பண்ணிட்டு இருக்கீங்க..!! என்னை வந்து காப்பாத்துங்க டா பாவிங்களா..!! ஐயோ இவனுங்களுக்கு தமிழ் தெரியாதே..!! ஐயோ மேரா தமிழன் கரோ... மேரா ஊரு கரோ ஈரோடு  கரோ ... ஹெல்ப் மீ கரோ.." என மீண்டும் மகேஷ் பயத்துடன் தூக்கத்தில் கண்ணை மூடிக்கொண்டேக் கத்த இம்முறை அவனின் கத்தலை கேட்டவள் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டாள்..

"என்னது பூகம்பமா...?? எல்லாம் இடிஞ்சு விழுந்துருச்சா..?? எல்லாம் போச்சா...??? டேய் உன்னை என்ன பண்றன்னு பாருடா...!! முதல்ல கத்தனதுக் கூட ஏதோ தூக்கத்தில கத்தனன்னு ஒத்துக்கலாம்.. ஆனா இப்போ கத்தறப் பாரு அது தான் டா என்னால ஜீரணிக்க முடியல.உன்னை என்ன பண்றன்னு பாரு டா.." என நினைத்தவள் எழப் பார்க்க முடியாமல் போனது... போர்வையின் மொத்தமும் அவனின் முதிகிற்கு அடியில் இருக்க..  "ஐயோ இது வேற கடவுளே.. இப்போ எப்படி எழ முடியும்..!!  இவனோட  அலாரமை(கத்தறது) முதல்ல நிறுத்தனும்.." என யோசித்தவள்  அவனின் இடுப்பை கிள்ளி வைக்க...

அவள் கிள்ளி வைத்ததில் தூக்கத்திலிருந்து மீண்டவன்  கீழே குனிந்து பார்க்க இழையினி இருக்க "ஐயோ இவ எப்போ இங்க வந்தா.. ஐயோ சமாளிக்க வேணுமே... யோசி மகேஷ் யோசி... தூக்கத்தில பேசற  மாதிரியே பேசி ஏதாவது சொல்லி வைப்போம்..." என மனதில் நினைத்தவன்  "இந்த எறும்பு வேற தொல்லைக் கடிக்குது..." எனக் கூறி கடித்த இடத்தை வரக்கு வரக்கு என கீறிக்கொண்டே "ஹிம்ம்ம்..ஞ்ம் ம்ம்..." என தன் வாயை சப்பி கொண்டு திரும்பி படுத்துக் கொண்டான்... "தூங்கிட்டு தான் இருக்கன்னு நம்பி தொலை டி..." என மனதில் நினைக்க.. அவள் இழையினி அல்லவா... நம்புவாளா என்ன...??

"என்ன எறும்பு கடிக்குதா.. டேய் இப்போ தான் டா அந்த கத்துக்  கத்தனா... அதுக்குள்ளே எறும்பு கடிக்குதுனு சொல்ற.. பொறுக்கி ஓவரா நடிக்கிறான்.. இவனை...!!' என நினைத்தவள் மெல்ல நகர்ந்து அவனின் மார்ப்பில் தஞ்சமடைந்தாள்.. "இன்னைக்கு உன்னை என்ன பண்றன்னு பாரு டா..என்னை என்ன..? சொன்ன பூகம்பம்னா சொல்ற..?? இரு டா..." என மேலும் நகர்ந்தவள்..., அவனின் மேல்  முழுப்பாதியாக  படர்ந்து இருந்தாள்...

"ஐயோ இவ வேற பாம்பு ஊர்ந்து வர மாதிரி வரளே.... மனசனோட அவஸ்த்தை புரியாம..!! ஐயோ கூச்சமா இருக்கு டி இறங்கி தொலை...! நெளியக் கூட முடியமா பண்ணிட்டாளே...!! நான் மட்டும் இப்போ முழிச்சது இவளுக்கு தெரிஞ்சது செத்தேன்.. மூடிட்டு வேற ரூம்ல தூங்கி இருந்தா..இப்போ இந்த பிரச்சினை வந்து இருக்குமா டா. இந்த லட்சணத்தில  அவ என்மேல விழுந்து கிடக்கறா..! தூக்கத்தில என்ன பண்ணி  தொலைச்சனோ தெரியல.! கடவுளே நீ தான் இந்த அப்பாவி ஜீவனை காப்பாத்தனும்.." என மனதில் பல கடவுள்களை வேண்டிக் கொண்டான்.

அவளின் மூச்சு காற்று அவனின் முகத்தில் பட... கூசி போனான்... அவனின் கருவிழிகளை  பார்த்தவள் அது அங்குமிங்குமா உருண்டு ஓட..
"தூங்காமயா இருக்க.. உன்னை என்ன பண்றன்னு பாரு டா...' என நினத்தவளின் கன்னத்தில் அவனின் தாடி குத்தவும் "இது வேற சும்மா குத்திட்டு இருக்கு... ஒரு இடத்தில கம்மியா ஒரு இடத்தில அதிகமா இருக்கு.... கொஞ்சமா வளந்து இருந்தா நல்லா இருக்கும்.. நாலு நாள் வளந்த தாடில இருக்கான்... இந்த மீசை எப்போ வைச்சான்னு தெரியலையே.." என வாய்விட்டு பேசிக் கொண்டிருக்க
"இதையா நீ பண்ண வந்த கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம சைட் அடிச்சிட்டு இருக்க.. ஒழுங்க அவனை ஏதாவது பண்ணு டி..." என மூளை கட்டளை இடவும் சட்டென்று ரசிக்கும் மனதை சற்றே தூரம் தள்ளியவள்.. அவனின் தாடையில் இருந்த தாடியை பார்க்க அதுவோ கொத்தாக வளர்ந்திருக்க அதை பிடித்து இழுக்க முடிவு செய்தவள் நெண்டி நெண்டி ஒரு கையை போர்வையிலிருந்து வெளியில் எடுத்து அவனின் தாடையை கொத்தாக பிடித்து இழுக்க... "ஐயோ.." எனக் கத்திகொண்டே எழ பார்க்க அவனால் முடியாது போனது...

"அடியே குந்தாணி எதுக்கு டி இப்படி என்மேல ஏறி இருக்க இறங்கு டி ... குண்டுகோஸ்..."

"என்ன நான் குண்டுகோஸ் ஆஹ்..." நீ தான் டா  மாங்கா..."

"எதுக்கு டா என் கூட வந்து படுத்த..."

"ஹலோ.. ஹலோ... மைண்ட் யூர் வர்ட்ஸ்.. நான் ஒன்னும் உன்மேல படுத்து இருக்கல... நீ தான் வெ.மா..நா.. இதெல்லாம் இல்லாம இருக்க... பட் எனக்கு இதெல்லாம் இருக்கு தயவுசெஞ்சு எழு.."

"என்ன வெ.மா.நா.. வா என்னது இதெல்லாம்.."என இழை கேட்க

"அதான உனக்கு எப்படி தெரியும் நீ தான் பொண்ணே இல்லையே... என கூறவும் இழையினி கிள்ளவும் சரியாக இருந்தது..."என்ன டா சொன்னா.. மறுபடியும் சொல்லு.."

"நீ பொண்ணு இல்லை... தேவதை அப்பறம் எப்படி தெரியும்னு சொல்ல வந்த டி.. ஐயோ வலிக்குது வினி.." என சொல்ல

கையை எடுத்தவள்.. அந்த இடத்தில் தேய்த்து விட்டு "சரி சொல்லு அப்படின்னா என்ன..??"

"கிள்ளக் கூடாது அப்போ தான் சொல்லுவேன்.."

"சொல்லுடா முதல்ல.."

"வெட்கம்,மாணம், நாணம், இதெல்லாம் எனக்கு இப்போ எட்டிப் பார்க்குது கொஞ்சம் கீழே இறங்கி படுத்தா புண்ணியமா போகும்..தாயே.." என கூற

சட்டென்று தான் இருக்கும் நிலையை உணர்ந்தவள் "வெய்ட் நானே எழுந்து போறேன்" என கூறியவள் எழு முயற்சிக்க போர்வை தடுத்தது...

"இரு டி.. இரு..ஒரு நிமிஷம்" என கூறியவன் தனக்கு அடியிலிருந்த போர்வையை எடுக்க..

"டேய் நெளியாம எடுடா.."எனக் கூற

"அப்பறம் எடுக்கவே முடியாது இப்படியே நாள் முழுக்க இருக்க வேண்டியது தான்.. இப்படியே இருக்க உனக்கு ஓகேன்னா. எனக்கு ஓகே தான்" என மகேஷ் அவளை சீண்ட..

"ச்சி.. ஒழுங்கா எடுத்து தொலை டா.. மாங்கா.."

"இருந்துத் தொலை டி குந்தாணி..." சிலபல போராட்டங்களுக்கு பிறகு போர்வையை எடுத்தவன் அவள் சுதாரிக்கும் முன்னமே அவளின் மேல் போட்டவன் ஒரே எட்டில் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்...

போர்வையை விலக்கி இழைப் பார்க்க அவன் இல்லாமல் இருந்தான்..

"பூதி நாயே வெளிய வாடா உனக்கு இருக்கு..." என கத்தியவள்  மற்றோரு அறைக்குள் நுழைந்து கொண்டாள்...

*****

"என்ன இது இவ்ளோ சேகஃயூரிட்டி கேட்குது கொடுமை.! நம்மளோட மெயில் ஐடி (முகவரி) கொடுக்க வேண்டாம்.. என்ன பண்ணலாம்.. புதுசா மெயில் ஐடி ஆஹ் கிரேட் (create) பண்ணுவோம்.
பண்ணியச்சு... அடுத்து என்ன கேட்கறாங்க..." என பார்த்தவன்.. என்னமோ நம்பர் கேட்டுக்குதே.. "ஓடிபி நம்பர் வேறயா..!! மெயில வந்துருக்கும்  அடுத்து.. கொடுமை.. என்ன இது ச்சே ... இந்த ஒரு ஆஃப் (app) ஓபன் பண்ண எவ்ளோ திருட்டு வேலை பார்க்க வேண்டியதா இருக்கு..." என நொந்துகொண்டவன்.

"ஐ..யா... ஜாலி... ஓபன் ஆயிருச்சு... செம ... டேய் மித்ரா நீ ரொம்ப கிரேட் டா... அடுத்து இதை வெச்சு டெஸ்ட் பண்ணிட வேண்டியது தான்..." என தனக்குத்தானே சபாஷ் போட்டு கொண்டிருந்தான் மித்திரன்...

"யாரை வெச்சு டெஸ்ட் பண்ணலாம்.. இருக்கே இருக்கு இந்த குட்டை(இழை) அவளோட நம்பரை ஹக் பண்ணி பார்ப்போம்.." என தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கவும்....

"டேய்ய்ய்.. சொட்டை.. நீ எங்க டா இங்க..." என ஒரு பெண்ணின் குரல் கேட்கவும் சரியாக இருந்தது...

தீடிரென யாரோ கத்தும் சத்தத்தில் தன் மொபைலை தவரவிட்டவன் சத்தம் வந்த திசையில் பார்க்க இழையினி நின்றுகொண்டிருந்தாள்...

"ச்சே..நீ யா..."

"என்னது நானா.. நீ எங்கே இங்க இருக்க..."என இழை கேட்க பதில் வெளியில் இருந்து வந்தது..

" இவரு உன்னோட அண்ணா தானமா... நமக்கு கல்யாணமானது கூட சொன்னியாம்... ஆனா நானு தான் மகேஷ்னு சொல்லலையா.. அன்னைக்கு மால்ல பார்த்து பேசும் போது சொன்னாரு.. சரி நானும் தனியா தானே இருக்கேன் அதான் என்கூட இருக்க சொன்னே.." என மகேஷ் கூற...

மித்திரனிற்கு மூச்சே வந்தது...

"நீ எப்படி இங்க வந்த..."என கேட்டாள்..

"நீ கத்தன சத்தம் கேட்டு வந்தேன்." என மகேஷ் சொல்ல..

"சரி சொட்ட எனக்கு டைம் ஆயிருச்சு நான் கிளம்பனும்.. யாரோ பேசற சத்தம் கேட்டுச்சு அதான்  என்ன இருக்குன்னு பார்க்க வந்தேன்.. பார்த்தா சப்பை நீ இருக்க... நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்" என இழை கூற அவளை முறைத்தான் மித்தரன்...

" சரி டா டாட்டா.." என மித்திரனிடம் கூறியவள் "ஏங்க கொஞ்சம் கீழ வாங்க" என மகேஷிடம் கூறியவள் கீழே சென்றாள்...

"உன் தங்கச்சி மரியாதை பலமா தரா டா.. கீழே வைட்டா ஏதோ வைச்சுருப்பா நான் போயிட்டு வரேன்..." என மகேஷ் கூற

தலையில் அடித்து கொண்டே "போய் தொலை..." என கூறியவன் தன் உடைந்து போன மொபைலை பாவமாக பார்த்துக்கொண்டிருந்தான்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro