அவன் 14
இருவரும் ஹாஸ்பிடலின் உள் நுழையவும் "இங்க இருந்து போ" எனப் பிரியா கத்தவும் சரியாக இருந்தது..!! டிபன் கேரியரை தன்னவனிடம் கொடுத்தவள் முன்னால் ஓடினாள்...
அவள் அறையில் இருந்து வந்த நர்ஸிடம் என்ன நடந்தது என இழை கேட்க.."யாரோ வந்து இருக்காங்க.. அவரை பார்த்ததும் இந்த பொண்ணு கத்துச்சு.. என் வைப் தான் நீங்க போங்கன்னு சொன்னாரு நானும் வந்துட்டேன்.."என கூறிய நர்ஸிடம் நன்றி கூறியவள் அறையை நோக்கி நடந்தாள்..
"இங்க இருந்து போ... என் முகத்திலயே முழிக்காத ... இங்க இருந்து போ...' என கூறி தன் அருகில் இருந்த தலையணை, மருந்துப்பாட்டில் என அனைத்தும் அவனின் மீது தூக்கி எறிய... "ஏதோ சரியில்லை..."என நினைத்தவன் எதுவும் பேசாமல் அமைதியாக அவள் தரும் அடிகளை வாங்கிக் கொண்டான்..!!
கண்களில் கண்ணீருடன் தன்னையே பார்த்தவாறு நின்றவனைப் பார்க்க பார்க்க இவளிற்கு ஆத்திரம் அதிகமாக ட்ரிப்ஸ்ஸை பிடுங்க முயற்சி செய்தவளை ஓடி வந்து தடுத்தாள் இழையினி...
'பாப்பா ரேலெக்ஸ் டி..பாப்பா.. பிலீஸ்..' என அவளை சமாதானம் செய்ய முயல... முடியாமல் போனது இழையினாள்...
"என்னை விடு பாப்பா. நான் சாகனும். என்னை விடு என்னை ஏன் காப்பத்தன. இ..வ...னை.. இவனை நான் லவ் பண்ணதுக்கு நான் செத்து போயிருக்கலாம்.. என்னை விடு..."என எழுந்து ஓடியவளின் கன்னத்தில் மகேஷின் ஐந்து விரல்களும் பதிந்து இருந்தது....
அவளை அடித்த அடுத்த நிமிடம் மகேஷின் சட்டையை இறுக பற்றி இருந்தான் சபரி...
தன் சட்டையிலிருந்து அவனின் கையை எடுத்து விட்டவன் அவனை பார்த்து மெல்ல சிரித்து கொண்டே "இப்ப போயி அவகிட்ட பேசுங்க போங்க..." என மகேஷ் கூற
முறைத்தவன் "அவ மேல கையை வைக்கறத நிறுத்திக்கோ.. இப்படி பார்த்துட்டு நிக்க மாட்டேன்..." என கூறி பிரியாவிடம் சென்றான் சபரி. தன்னை மிரட்டியவனைப் பார்த்து சிரித்தவன் அங்கிருந்து வெளியேறினான்..!
பிரியா இருக்கும் மருத்துவமனை சிறியது என்பதால் அதிகம் நடமாட்டம் இல்லாமல் இருந்தது..
வேலைக்கு வருபவர்கள் ஷிஃப்ட் கணக்கில் வேலை செய்ய மதிய நேரம் அதிகம் யாருமில்லை.. டாக்டர் கூட உணவிற்கு சென்று விட்டார் என கூறி இருந்தார்கள் அதனால் பிரியாவின் கத்தலை அதிகம் யாரையும் பாதிக்கவில்லை..
மருத்துவ மனையின் வராண்டாவில் வந்து நின்றவனின் அருகில் வந்தவாறே "மகேஷ் ஏன் டா வெளிய வந்துட்ட..." என கேட்க
"நீ ஏன் வெளியில வந்த..."என கேட்டவனை முறைத்தவள் "அண்ணா இருக்கும் போது நான் எப்படி உள்ளே இருப்பேன்...' என இழைக்கூற..
"அதுக்காக தான் நானும் வெளியே வந்துட்டேன்..!! ஆமா அவருக்கு எப்படி தெரியும் பிரியா ஹாஸ்பிடல இருக்கிறது.." என கேட்ட மகேஷிடம்
"நேத்து நைட் உனக்கு கால் பண்ணி சொல்லிட்டு அண்ணாக்கு இன்போர்ம் பண்ண... ஜஸ்ட் ப்ரியாக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி வர சொன்னேன்..." என கூறியவளைப் பார்த்து சிரித்தான் மகேஷ்..
"எதுக்கு இப்படி சிரிக்கற.. என்னை பார்த்தா சிரிப்பா இருக்கா.." என கேட்டவளைப் பார்த்து சிரித்தவன்
"நீ மாறிட்ட டி.." என சொல்ல..
" புரில..."
" நீ ரொம்ப மாறிட்ட" என மகேஷ் அழுத்தி சொல்லவும் அவனை விழி விரித்து இமைக்காமல் பார்க்க
தன்னையே இமைக்காது பார்த்தவளை ஒற்றை கண் சிமிட்டி "போதும் ரொம்ப சைட் அடிக்காத" என கூறியவனின் குரலில் தன்னிலைக்கு வந்தவள்
"ஆமா இவரு பெரிய ஆனழகன்..!!நாங்க இவரை சைட் அடிக்கிறோம்...!! போடா.. நான் உன்னை ஒன்னும் சைட் அடிக்கல நான் என் புரு...." என கூற வந்தவளின் குரல் பிரியாவின் "நீ தான் பேசனா.." என்ற கத்தலில் பாதியில் நின்றது...
"ஐயோ என்னாச்சு.." என இழை பதற..
"அதெல்லாம் ஒன்னு இல்லை.. அவரு இருக்காருல்ல பாத்துக்குவாரு... நீ என்னமோ சொல்லிட்டு இருந்தையே அதை சொல்லு..." எனக் கூறியவனின் குரலில் மென்மையிலும் மென்மை இருந்தது... "அ..து...அது.." என தடுமாறியவளின் குரல் அவளிற்கே கேட்கவில்லை...
"ஐயோ என்ன டி இதெல்லாம்.." என கேட்டவாறே அவளின் மூக்கை தொட..
" என்ன.. அங்க என்ன இருக்கு.."
எனக்கேட்டு கொண்டே தன் தொலைபேசியை கையில் எடுத்து பார்த்தவளின் மூக்கில் ஒன்றும் இல்லாமல் போக மீண்டும் அவனை முறைத்தாள்...!!
"உன் வெட்கத்தை சொன்ன" என கூறி சிரிக்க
அவளும் தன் முகத்தை மூடிக் கொண்டவள் இடது கையின் ஆள்காட்டி விரலை தன் இமையிலிருந்து மெல்ல பிரித்து அவனை பார்க்க
அவளின் செய்கையைப்பார்த்து சிரித்தவன் "இங்க வா..."என கூறி தன் கையை விரித்து காட்ட...
"யாராவது இருக்காங்களா" என முனகியவாறே சுற்றும் முற்றும் பார்த்தவளிடம்.. "இங்க யாரும் இல்லை.."என நமட்டு சிரிப்புடன் கூற
மெல்ல சிரித்தவள் அவனை நோக்கி மெல்ல அடியெடுத்து வைக்கவும் இம்முறை " நிறுத்து ப்ரியா.." என சபரி கத்தவும் சரியாக இருந்தது. சபரியின் குரலை கேட்டவள் அப்படியே நின்றுகொண்டாள்...
"கொய்யால எவன் டா அவன்.." என நன்றாகவே முணுமுணுத்தான் மகேஷ்
முனகல் சத்தம் கேட்டதும் சத்தமாக சிரித்து அவனின் கன்னத்தில் முத்தமிட்டு ஓடியவள் பின்னால் திரும்பி "மாமா உன் தாடி ரொம்ப குத்துது கொஞ்சம் ட்ரிம் பண்ணிக்கோ..." என கூறியவள் அவனை பார்க்காமல் ஓடினாள்..
அவளின் தீடீர் முத்தத்தில் தடுமாறி நின்றவன் அடுத்து அவள் சொன்னதில் மெல்ல சிரித்து
"ஏய் வினி உனக்கு நான் தாடி வைச்சா தானே பிடிக்கும்" எனக் கேட்டவனிடம் "பிடிக்கும் தான் ஆனா கரடிக்கு இருக்கற மாதிரி இருந்தா பிடிக்காது டா.." என கூறி ஓடியவளின் பின்னால் இவனும் சென்றான்...!!
மெல்லிய சிரிப்புடன் இருவரும் பிரியா இருக்கும் அறைக்குள் நுழைய அங்கோ மயான அமைதி நிலவியது...
பிரியாவோ இரண்டு கன்னத்திலும் கை வைத்தவாறே கண்களில் கண்ணீர் வழிய தன்னவனையேப் பார்த்து கொண்டிருந்தாள்..
சபரியோ தன் கோபத்தை அடக்க முயன்றவாறு தன் கை முஷ்டிகளை மடக்கி தன் தொடையில் பலமாக அடித்துக்கொண்டிருந்தான்..
பிரியாவின் அருகில் சென்றவள் அவளின் தோளைத்தொட்டு
"என்ன ஆச்சு ப்ரியா..." என கேட்டவளை சட்டென்று அவளை அணைத்தவள் தேம்பி அழுதாள்..
"பாப்பா..இ..வன் இ..வன் தானே என்னை தப்பா போட்டோ எடுத்தான்.. இவன் தானே எங்கிட்ட தப்பா பேசனா.. இ..இ.. ப்ப்.போ நா சொன்னதுக்கு என்னை என்னை.. அடிக்கிறா." எனக் கூறி தேம்பியவளை
"நானும் இல்ல இல்லைன்னு சொல்றேன். கேட்க மாட்டயா டி நீ" என கூறியவாறே மீண்டும் அடிக்க கை ஓங்கினான் சபரி
சற்றே அதிர்ச்சியுடன் "அ.ண்ணா.." என இழை அழைக்க தன் கையை கீழிருக்கி கொண்டவன் "சாரி மா" எனக்கூறி பின்னால் திரும்பி நின்றான்
"அண்ணா...இவ என்ன சொல்றா எனக்கு ஒன்னும் புரியல.." என கேட்டவளிடம்
"எனக்கும் அதான்ன் மா புரியல.. ஏன் டி இப்படி பண்ணன்னு கேட்டா. நீ தான் காரணம் என் மூஞ்சியில முழிக்காத அப்படி இப்படி கத்தறா.. நானும் பொறுத்து பொறுத்து பார்த்தேன் முடியல.. அப்ப இருந்து இப்ப வரைக்கும் நான் அவகிட்ட தப்பா பேசன.. தப்பா போட்டோ எடுத்து அனுப்பன..அப்படின்னு ஏதோ ஏதோ சொல்றா மா..."என கோபக்குரலில் கூறியவனின் அருகில் சென்ற மகேஷ் சபரியிடம் "உ..ங்க.. உங்க.. போன்..எங்க..!!
உங்க போனை காமிங்க.." எனக் கேட்டவனை முறைத்தான் சபரி..
(சபரி சொல்ல சொல்ல தன் பழைய நினைவுகள் அனைத்தும் இழையின் கண்களுக்கு தான் இதேபோல் அழுதது அனைத்தும் கண் முன்னே தோன்றியது..! இவர்களின் பிரச்சினையில் இழையின் முக மாறுதலை எவரும் கவனிக்கவில்லை..))
"இல்லை நான் உங்களை சந்தேக படலை... ஒரு க்கிளறிபிகேஷன்கு தான் கொடுங்க.."என கூறியவனை முறைத்துக்கொண்டே தன் போனை அவனின் கையில் வைத்தான்...
"பாஸ்வேர்ட்" என மகேஷ் கேட்க..
"சபரிஸ்ரீ"என கூறினான்...
ஒரு 10 நிமிடம் போனிலிருந்து ஏதோ ஏதோ செய்தவன் பின் மொபைலை சபரியின் கையில் கொடுத்து விட்டு பிரியாவிடம் திரும்பியவன் "பிரியா உன் மொபைல் எங்க." என கேட்க "அது அண்ணா.. என் ரூம்ல தான் இருக்கும்.." என கூற
"இழை உங்க ஹோட்டல்கு இங்க இருந்து ஐஞ்சு நிமிஷம் தானே.."என கேட்க மௌனமாக தலையாடினாள்
தன் வேலையில் கவனம் செலுத்துவதில் குறியாக இருந்தவன் அவளின் அமைதியை பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் " சரி நீயும் என்கூட வா" என அவளின் பதிலைக் கூடக் கேட்காமல் முன்னால் நடந்தான்..
ஐந்து நிமிடத்தில் ஹோட்டலிற்கு சென்றவன் நேராக பிரியாவின் அறையில் நுழைந்தவன் அவளின் மொபைலை தேடியவனின் கண்களில் உடனே சிக்கியது பிரியாவின் மொபைல்...
ஒரு பெருமூச்சுடன் "அப்பாடி எப்படியோ கிடைச்சிருச்சு... வா வினி போலாம்.." என கூறி அவளின் கையை பற்ற.. அவனின் கையை எடுத்து விட்டவள் முன்னாள் நடந்தாள்.. அவளின் விலகலை சாதரணமாக எடுத்துக்கொண்டவன் அவளிடம் பேசாமல் காரை ஸ்டார்ட் செய்தான். அவளின் அளவுகடந்த மௌனம் அவனை ஏதோ செய்ய " இப்போ உனக்கு என்ன டி ஆச்சு..." என கேட்டவனை முறைத்தவள்
" நீயும் இப்படி தானே எங்கிட்ட தப்பா நடந்துகிட்ட" என கூற "வாட்" என கூறியவன் தன் காரின் விசையை சட்டென்று அழுத்தி நிறுத்தி அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான்...
******
வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுபூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள் இன்பம்)
(பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுபூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள் )
என்ற இசையுடன் ஒலிக்கும் தன் மொபைலை எடுத்தவன் கண்களில் கேள்வியை தேக்கி கொண்டே ஆன் செய்தான்..
ஹலோ.. ஹலோ.. என இரண்டு முறை அழைத்தும் பதில் தராமல் அமைதியாக காதில் வைத்திருந்தான்...
ஹலோ மித்திரா என்று அழைத்ததும் தன் அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறி
"ஹிம்ம்" என்றான்.. மித்திரன்...
" எத்தனை நாளைக்கு இப்படி எங்கிட்ட பேசாம இருப்ப.."
" நீ கல்யாணம் பண்ற வரைக்கும்"
" அப்போ இப்பவே வா கல்யாணம் பண்ணிக்கலாம்.."
" என்ன விளையாட்டு இது நித்தியா.. நான் தான் அன்னைக்கே சொன்னனே உன் மேல எனக்கு எந்த விதமான ஈர்ப்பும் இல்லைன்னு.."
"பொய் சொல்ற மித்ரா..."
"எந்த பொய்யும் சொல்லல போனை வை" எனக் கூறியவன் அவளின் பதிலை கூட எதிர் பார்க்காமல் போனை கட் செய்தான்..
" என்ன டி ஆச்சு ஏன் மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு..." என கேட்டவளிடம்
"ஈஈ ஒன்னும் இல்ல.."
"நிஜமா" என பூவிழி கேட்க
"வா டி வா.. இதுக்கே சோர்ந்து போயிட மாட்டேன்.. இன்னும் பார்க்க எவ்ளோ இருக்கு... உன் அண்ணனை மடக்க விடாம முயற்சி செய்வேன்... " என கூறியவள் கேன்டீனை நோக்கி நடந்தாள்...
அவள் கூறியதை பாதியில் விட்டவள் அவள் செல்லும் திசையைப் பார்க்க.. " "ஐயோ எனக்கு இரண்டு முட்டை போண்டா டி.." என கத்தி கொண்டே அவளின் பின்னால் ஓடினாள்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro