அவன் 11
"இவன் எங்க இங்க வந்தான்..!!" என நினைத்தவன் எழுந்த வேகத்தில் மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்து தன் முகத்தை மறைத்துக்கொண்டான்..
"ஹாய் மகேஷ்பூபதி சார் எப்படி இருகீங்க" எனத் தன் அருகில் கேட்டக்குரலில் திடுக்கிட்டுத் திரும்பி எழுந்து நின்றான்... மகேஷ்
"ஏய்ய்ய்ய் மித்து பையா...வாட் அஹ் சர்ப்ரைஸ் மேன்...ஹௌ ஆர் யூ...
நீ எப்போ இங்க வந்த... ஒரு வார்த்தைக்கூட எங்கிட்டசொல்லலை பார்த்தையா" என ஆச்சரியமாக கேட்டவனிடம் ஒற்றைப்புருவத்தைத் தூக்கி "ஏன் சொல்லி இருந்தா என் கண்ணுக்குப் படாம தப்பிச்சுப்போயி இருப்பயா" என எரிச்சல் குரலில் கேட்டவனைப் பார்த்து என்ன சொல்லி சமாளிப்பது என புரியாமல் முழித்துக்கொண்டு இருந்தான் மகேஷ்..
"பதில் சொல்லு டா.. எப்போ இருந்து இந்த திருட்டுத்தனம் நடக்குது சொல்லு..."என கோபக்குரலில் கேட்டவனை சட்டே செய்யாதவன் போல் மீண்டும் தன் கேள்வியை மட்டுமே கேட்டான்..
"நீ முதல்ல சொல்லு டா...நீ ஏன் இங்க வந்து இருக்க... என் தங்கச்சியை விட்டுட்டு இருக்க மாட்டையே நீ...!!" என்ன ஆச்சு.. ஏதாவது பிரச்சினையா... என கேட்கவும்...
அவனின் முகம் சோகத்தில் மூழ்கியது..
அவன் வெளிறிய முகத்தை கண்டவன்
"அப்பாடி எப்படியோ நம்மளை கேள்வி கேட்கறத மறந்தா சரி தான்.." என மனதில் நினைத்து...வெளியே "அப்போ நான் நினைச்சது கரெக்ட் தான் என்ன டா ஆச்சு... எப்போ மும்பை வந்த" என கேட்டவனை சுற்றும் முற்றும் பார்க்காமல் அணைத்து கொண்டான் மித்திரன்..
"டேய் மித்து .. என்னடா...!! என்ன ஆச்சு.. ஏதாவது ப்ரோப்ளேமா.." என ஆதரவாக அவன் முதுகை தடவிக்கொண்டே கேட்க "எதுவுமில்லை" என தலையை மட்டும் ஆட்டினான்..
"அப்போ என்ன.."எனக்கேட்க..
"அவ எங்கிட்ட பேச வந்தா டா ..(மகேஷின் தங்கச்சி.. நித்யமதி.)
"பாருடா இந்தளவுக்கு வந்துருச்சா அப்பறம் என்ன ஆச்சு.. என்ன சொன்னா நித்யா.."
"அவ எதுவும் சொல்லல.. அதுக்கு முன்னாடியே நான் பேசிட்டேன் டா.." என மித்திரன் கூறவும்..
"அப்படி என்ன டா சொன்ன.. "எனக் கேட்டப்படியே அவனை கதிரையில் அமர வைத்தான்....
எங்கயோ வெறித்து பார்த்த்துக்கொண்டே "ஒன்னுமில்லை விடு"எனக் கூறியவனின் கண்கள் கலங்கி இருந்தது அவனே கூறுவான் என நினைத்தவன் "சரிடா சாப்டியா" என மகேஷ் கேட்க
"ம்ம்..ம் ....." என பதில் தந்தான்..
"எப்போ இங்க வந்த" என மகேஷ் கேட்க
"ஒரு வாரமா இங்க தான் இருக்கேன்..."என மித்திரன் சொல்ல
"அப்பறம் ஏன் எங்கிட்ட சொல்லவே இல்லை" எனக்கேட்டவனை முறைப்புடன் பார்த்தவன்....
"நீ அப்படியே எங்கிட்ட சொல்லிட்டு தான் செஞ்சுட்டு இருக்க... வெளிநாடு போறேன்..!! அதுவும் படிக்க போறன்னு சொல்லிட்டு இப்போ என்னடானா இங்க இருக்க..!! நானும் வந்ததிலிருந்து கேட்கறேன்...! ஒரு பதிலைக்கூட காணோம்.!! ஆனா எங்கிட்ட மட்டும் உருட்டி மிரட்டி கேட்கற.! உன் போலீஸ் புத்தியை என்கிட்ட மட்டும் காட்டு" என தன் போக்கிற்கு திட்டிக்கொண்டே சென்றவனைத் தலையில் ஒரு கையை வைத்து வடிவேல் பாணியில் அமர்ந்து கொண்டவன் "சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்துட்டேன் போலயே..!!! இவ்வளவு நேரம் விடாம பேசறான்....!! இவன் இடத்தில என் பொண்டாட்டி இருந்து இருந்தா...!!! இந்நேரம் நடக்கிறதே வேறயா இருந்து இருக்கும்.." ஏதோ நினைத்தவன் ஹிம்ம்... எனப் பெருமூச்சை வெளியே விட்டவாறு திட்டிக்கொண்டிருப்பவனை பார்த்துக் கொண்டிருந்தான்...மகேஷ்
"உங்க வீட்டுலையும் சரி.. எங்க வீட்டுலையும் சரி.!! என் தங்கச்சியை தான் மாறி மாறி திட்டிட்டு இருக்காங்க..!! ஆனா நீ என்னடானா இங்க சுத்திட்டு இருக்க..!! உன்னை நம்பி என் தங்கச்சியை உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சேன் பாரு என்னை சொல்லணும்..!! கொழு கொழுன்னு இருந்தவ இப்போ அப்படியே ஒல்லியா இருக்கா..!! எல்லாம் உன்னால தான் டா.." என இவன் பேசிக்கொண்டே போக மகேஸோ அவனையும் தன் கைக்கடிகாரத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே.."அரைமணி
நேரமா ஓடைஞ்ச ரேடியோ மாதிரி பேசறானே...!!!! பொறுத்தது போதும் பொங்கியெழு மாகேஸா" என மனதில் நினைத்து கொண்டே...
"டேய் இரு டா.... இ...ரு டா...அட இருங்க டா... போதும் டா.!!! திட்டறத நிறுத்து... கண்டிப்பா நேரம் வரும் போது நானே சொல்றேன்... தயவு செஞ்சு இதுக்கு மேல பேசாத எனக்கு காது வலிக்குது..!!! நான் கேள்விப்பட்ட வரைக்கும் டாக்டர் எல்லாம் அதிகமா பேச மாட்டாங்களாம்! ரொம்ப அமைதியா இருப்பார்களாம்.. ஆனா ஏன் உனக்கும், உன் தங்கச்சிக்கும் வாய் மட்டும் இம்புட்டு தூரம் போகுது... அது மட்டும் ஏன்.." என நக்கலாக கேள்வி கேட்டவனை முறைத்தான் மித்தரன்.. .
இஇஇ என இழித்து கொண்டே "முறைக்காதா மச்சி சும்மா கேட்டேன்.." என கூறியவன் மீண்டும் "சரி இப்போ சொல்லு ..நீ எங்கே தங்கி இருக்க..."
"இங்க தான் ஹாஸ்பிடல் டீன் வீட்டுல இருக்கேன்.." எனக்கூற
"சரி இனிமே என்கூட வந்து இருந்துக்கோ.. இதுதான் நம்ம வீட்டு அட்ரஸ் இனி அங்க வாந்துக்கோ.." என கூறி எழுந்து நின்றவன் "எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு, சோ ஈவினிங் நம்ம வீட்டில பார்க்கலாம்" என கூறியவன் அங்கிருந்து நகர்ந்தான்..
அன்று மாலையே டீன் வீட்டிலிருந்து வந்தவன் மகேஷின் வீட்டிற்கு சென்று விட்டான்... அன்று மாலை மகேஷை பார்த்தவன் அதற்கு பிறகு மகேஸை காண்பது அரிதிலும் அரிதாக தான் இருந்தது மித்திரனிற்கு... வீடு என்னவோ மகேஷின் வீடு தான் இருந்தாலும் அவன் அதிகம் அங்கிருப்பதில்லை..!! மித்தரனின் டூட்டி முடிந்து வரும் நேரமும் மகேஷ் டூட்டி நேரமும் நேர்மாறாக இருக்க.. கிட்டத்தட்ட ஒரு மாதம் கண்ணாமூச்சியாட்டமாக தான் இருந்தது இருவருக்கும்...!!!
இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என நினைத்த மித்திரன் அன்று லீவ் போட்டுவிட்டு வேறெங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்க ஐந்து மணியளவில் சோர்வுடன் வந்து சேர்ந்தான் மகேஷ்..
மித்திரனை கண்டதும் தன் சோர்வை மறைத்தவாரு "டேய் மச்சி என்ன டா இப்படி இந்தியாவுக்கு துரோகம் பண்ற! உன்னை நம்பி எத்தனையோ பேர் இருக்காங்க..!! நீ என்னடா இப்படி ஹாயா ஹால்ல உட்கார்ந்துட்டு அதுவும் காலை ஆடிட்டு இருக்க... ஒரு இந்திய குடிமகனா நடந்துக்க வேண்டாமா.." என கேட்டவனை முறைப்புடன் பார்த்து "நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன் டா.. நான் டீன் வீட்டுக்கே போகலாம்னு இருக்கேன்.. அதான் நீ வந்ததும் சொல்லிட்டு கிளம்பலாம்னு வெய்ட் பண்ணேன்" என மித்திரன் கூறவும்..
"எதுக்கு போற" என சாதாரண குரலில் கேட்க இவனிற்கு தான் கோபம் கோபமாக வந்தது..!!!
"என்ன எதுக்கா டேய்.. என்ன டா நினைச்சுட்டு இருக்க நீ..!! எப்போ போற.. எப்போ வரேன்னு.. எதுவும் தெரியல.!! நான் ஒருத்தேன் இங்க இருக்கன்னுக் கூட உனக்கு ஞாபகமில்லை..!! நீ சாப்பிடறாய இல்லாயான்னு கூட எனக்கு தெரியலை..!! உன்னால தனியா இருக்க முடியும்..ஆனா என்னால முடியாது.. நான் கிளம்பி போறேன்..!! தென் இனிமே உனக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை பிரன்ட்ஷிப் டைவர்ஸ் தறேன் கையெழுத்து போட்டுக் கூடு.." என கூறிக் எழுந்து சென்றவனை பிடித்து கொண்டான்...
டேய் அக்மார்க் பொண்டாட்டி மாதிரி பேசற டா..மச்சி.. உன் தங்கச்சியை வேணா இந்த பொண்டாட்டிங்கர போஸ்டிங்ல இருந்து எடுத்தறலாமா..." என ஒற்றை கண்சிமிட்டி கேட்டவனை கோபம் பொங்க பார்த்தான் மித்தரன்..
"சிரித்துக்கொண்டே "கொஞ்சம் கோபப்படாம இரு மச்சி..!! ஒரு முக்கியமான கேஸ்.. சத்தியமா என்ன பண்றதுண்ணு தெரியாம முழிக்கறேன்..!! அந்த கேஸ் முடியர வரைக்கும் இப்படி தான் இருக்கும்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..!!" என மகேஷ் கூறியும் அவன் முகம் கோபத்தில் மின்னவும்..
"சரி என் மச்சிக்கு கோபம் போகணுனா என்ன பண்ணலாம் சொல்லு" என மகேஷ் கேட்க...
"அது போகணும்னா..கொஞ்சம் செலவு ஆகும்.." என் மித்திரன் கூற
"பரவால்லை சொல்லித் தொலை.."
"எங்காவது கூட்டிட்டுப் போ.. இங்க என்ன ஸ்பெஷலோ அதை வாங்கிக் கொடு... எனக்கு போதும்னு சொல்ற வரைக்கும் வாங்கி கொடுக்கணும் சரியா" என மித்திரன் கூறவும் "சரி வாங்கி தரேன்... வெய்ட் பண்ணு ரெடியாகிட்டு வாறேன் "எனக்கூறி தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டான்...
இருபத்தைந்து தொடக்க நிலையில் இருக்கும் ஒரு ஆண்மகன் இப்படியும் இருப்பானா என்ன..?? தன் குடும்பத்தை மறந்து.. தன் நண்பர்களை மறந்து இருப்பானா என்ன.?? இதில் இருபத்திமூன்றின் தொடக்கத்திலே கல்யாணம்.. அதற்கு இடைப்பட்ட ஒன்டரை வருடம் தனி வாழ்க்கை..!! தனி சமுதாயம்..!! தனியான வீடு என்றல்லவா இருக்கிறான்..!! இதற்கிடையில் அவளிடமும் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை..!! அவளும் மேற்படிப்புகாக அங்கயே இருந்து விட்டாள்.. இவனைப் பற்றி நினைக்கக் கூட மாட்டேன்...!! என்பதைப் போல் இருக்கிறாள்..!! இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் தான் நம் அனைவருக்கும் நல்லது..!!! என நினைத்தவன் தொலைக்காட்சியில் மூழ்கி போனான்..
******
"என்ன இனி மா.. என் செல்லம்ல என் அழகி தானே நீ... ஏன் டி இப்படி கோப படற..." என கெஞ்சிக் கொண்டே நாய்குட்டி போல் அவளின் பின்னாடியே சென்று கொண்டிருந்தாள் ப்ரியாஸ்ரீ...
எதுவும் பேசாமல் புறமுதுகிட்டு அமர்ந்து கொண்டாள் இழையினி...
"ஏய் நான் மட்டும் என்ன டி பண்ணுவேன் ...அந்தாளு போன மாசம் ஒன்னு சொன்னான்...இந்த மாசம் ஒன்னு சொல்றான்..!! அவன் பேச்சைக்கேட்டு அப்போ அப்படி சொன்னேன்..!! அப்பறம் என்ன நினைச்சானோ தெரியல வேண்டாம்னு சொல்லிட்டான்.. இப்ப மறுபடியும் வந்து போங்கன்னு சொல்லும் போது என்ன டி பண்ண முடியும்... அதான் அவசரம் அவசரமா கிளம்ப வேண்டியதா போச்சு..!!! கிளம்பும் போது எதுவும் சொல்லாம அமைதியா தானே இருந்த..இப்போ இங்க வந்து எதுக்கு டி படம் ஒட்டிட்டு இருக்க.." என கூறியவளை முறைத்தாள் இழையினி..
"சரி சரி முறைக்காதா...இப்போ என்ன பண்ணா உன் கோபம் போகும்.." என பிரியா கேட்க...
சற்றே சிரித்த முகத்துடன் "இங்க சமோசா செமயா இருக்குமாமே வாங்கி கொடுக்கணும்...அப்படியே பக்கத்தில ஒரு பெரிய மால் இருக்கு.. அங்க கூட்டிட்டு போகனும் அங்க ஆகற எல்லா செலவும் நீ தான் பாத்துக்கணும்.." என இழை கூற
பாவமாக முகத்தை வைத்துக் கொண்டவள் என்னை பார்த்தா "கொஞ்சம் கூட பாவமா தெரியலையா டி"
"இல்லை" என தலையை ஆட்டிட...
"இப்போ தானே டி வந்தோம்...ஒரு ஆறு மணி பக்கத்தில போலாம்" என கூறியவள் தனக்கென ஒதுக்க பட்ட அறையில் நுழைந்து கொண்டாள்...
ஒரு மாதத்திற்கு முன்பே ஹாஸ்பிடல் ட்ரைனிங்காக வரவேண்டியவர்கள் தான் ஆனால் இப்போத்திற்கு எங்கும் செல்ல வேண்டாம் எனக்கூற அங்கயே இருந்து விட்டார்கள்... கல்லூரியில் சுற்றுலா செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டு கடைசி இரண்டு மணி நேரத்திற்கு முன் சுற்றுலா இரத்து என கூறினால் எப்படி இருக்குமோ அப்படி தான் இருந்தது இருவருக்கும்... !! ஒரு வாரம் சோகத்தில் ஒரு வாரம் டீனை திட்டி ஒரு வாரம் மும்பை செல்லும் கனவை புதைத்து விட்டு அடுத்த அடுத்த வேலைகளில் முழு கவனம் செலுத்தும் நேரம் மீண்டும் வந்து உடனே மும்பை கிளம்பி செல்ல வேண்டும் என டீன் கூறியதாக பிரியா வந்து கூற டீன் மேல் இருக்கும் கோபமனைத்தும் பிரியாவின் மேல் சாய்ந்து கொள்ள மும்பை வரும் வரை அவளிடம் அதிகம் பேசாமல் வந்தவள் இங்கு வந்ததும் கோபப்படுவது போல் கோபப்பட்டு தன் காரியத்தை சாதித்து கொண்டாள்..!!
**********
"ஏய்ய் பிரியா அங்க என்ன டி கூட்டமா.. இருக்கு வா டி போயி பார்க்கலாம்.. என இழையினி கூற..
"சண்டை நடக்குது போல.. வா நம்ம ரூமுக்கு போலாம்" என பிரியா அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டே செல்ல..
"ஏய் ரசனை இல்லாதவளே இதெல்லாம் பாக்க எவ்ளோ ஜாலியா இருக்கும் தெரியுமா..!! போ நீ வேணா இங்கயே இரு.. நான் போயி பார்த்துட்டு வறேன்..." என கூறியவள் பிரியாவின் கையை உதறிவிட்டு சண்டை நடக்கும் இடத்திற்கு சென்றாள்..
கும்பல் கூடி இருக்க அவளின் உயரத்திற்கு யார் யார் சண்டை போட்டு கொள்கிறார்கள் என தெரியாமல் போக உதட்டை பிதுக்கிக் கொண்டே பிரியாவை திரும்பிப் பார்க்க அவளோ வயிற்றை பிடித்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள்...
அவளை பார்த்து அழகு காமித்தவள் மீண்டும் சண்டையிடும் கும்பலை வேடிக்கை பார்க்க தொடங்கி விட்டாள்..
அடிக்கும் சத்தம் மட்டுமே கேட்க அடிப்பவர் யாரென பார்க்க அவளிற்கு ஆர்வமாக இருக்க கும்பலில் தெரியும் இடைவெளியில் யாரென பார்க்க முயற்சி செய்தாள்...
கடைசி வரை பார்க்க முடியாது போக
சோர்வாக முகத்தை வைத்துகொண்டு திரும்பி நடக்க ஆரம்பிக்கவும் கூட்டம் களையவும் சரியாக இருந்தது..
கூட்டத்தில் ஒருவன் "அடிச்சது போலீஸாமப்பா.. ஆனால் எதுக்கு இப்படி அடிச்சான்னு தெரியலையே"
அதற்க்கு மற்றோருவன்; "அவன்
ஒரு பொண்ணை தப்பா தொட்டு இருக்கான் போல அதை இவரு பார்த்துட்டு அடிச்சுட்டாரு..."என கூறி கொண்டே கூட்டம் களைய..
சட்டென்று திரும்பி பார்த்தவளின் முகம் கலர் கலர் லைட்டை போல் மின்னியது..
எவ்வளவு மாற்றம் அவனிற்குள்.. மீசை வைத்து இருந்தான்.. அது அவனிற்கு எடுப்பாக தான் இருந்தது.. தடி கூட வைத்து இருந்தான்.. சட்டென்று பார்த்தாள் ஆள் அடையாளம் காண முடியாது போலவே இருந்தான்..!! ஆனால் இவள் அவனவள் அல்லவா பார்த்ததும் தன்னவன் தான் என கண்டு கொண்டாள்.
சுற்றும் முற்றும் மறந்தாள்... தன்னவனின் முகமே நினைவில் இருக்க... இத்தனை நாள் அடைகாத்து வைத்த கோபமெல்லம் ஒரு நொடியில் மறைந்து போக... ஓடிச்சென்று தன்னவனை அணைத்துக்கொள்ள கைகள் இரண்டும் பரப்பரக்க.. அவனை நோக்கி முன்னேறி சென்றாள்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro