10
(எனக்கு ஹிந்தி தெரியாது சோ நான் தமிழில் போட்டுட்டேன்😜😜😝😝))
"ஹாய் ..."
"சொல்லுங்க சித்தப்பா..." ( பெண்)
"என்ன பண்ற..."
"சும்மா தான் சித்தப்பா ..."(பெண்)
"சும்மாவா... இருக்க.."
"புரியல சித்தப்பா.. என்ன சொல்றிங்க" புரியாத பாவனையில் (பெண்)
"உனக்கு புரியலையா.."
"ஆமா சித்தப்பா.."
"இரு எப்படின்னு உனக்கு போட்டோவில் தெளிவா சொல்றேன்.." என கூறி முடிக்கும் முன்னரே அவளின் போனில் வாட்ஸாப் சத்தம் கேட்க அதை ஓபன் செய்து பார்த்தாள்.
கையிலிருந்த போனை நழுவ விட்டவளின் கன்னத்தை கண்ணீர் நனைத்தது...
'ஹலோ ஹலோ..' என போனில் சத்தம் போட அதை நடுங்கும் கைகளில் எடுத்தாள்..
"ப்பா...சித்தாப்பா..."நடுங்கி கொண்டே பேச...
சத்தமாக சிரித்தவன் ..."இப்போ நீ அப்படி இருக்கிறயா" என கேட்க
சத்தமா அழுதவள்..எதுவும் பேசாமல்.. போனை கட் செய்த அடித்த நொடி மீண்டும் வாட்ஸாப் மேசேஜ்ஜின் சத்தம் கேட்க நடுங்கும் கைகளில் அதை எடுத்தவள் மீண்டும் ஆபாச போட்டோகள் குவிந்து இருக்க போனை கையில் தொடவேக் கூசிப்போனாள் அந்த சிறு பெண்...
உடனே இன்னொரு செய்தியும் வர அதை ஓபன் செய்தவள்..
"இது எல்லாமே உன் போட்டோ தான்" என இருக்க
"நானும் உங்க பொண்ணு தானே சித்தப்பா எப்படி ...இப்படி உங்களுக்கு தோணுச்சு.."என குமுற
"அதை நான் நினைக்கணும். ஒரே ஒரு நாள் என்கூட இரு...இந்த போட்டோ எல்லாத்தையும் டெலிட் பண்ணிறேன்." என இருக்க..
"தன் தந்தையின் மறு உறுவம் தான் அப்பாவாக நினைத்தவரை தன்னை மஞ்சத்திற்கு அழைப்பது நெஞ்சில் தீயை அள்ளி வைப்பது போல் இருந்தது அந்த பெண்ணிற்கு... வெளியே சொன்னால் தன் சித்தாப்பாவின் பெயரல்லவா கெடும்... ஆம் அவளின் சித்தப்பா ஊரில் மிக பெரிய மனிதன்.. அப்படியே தன் சித்தப்பா இப்படி பேசினார் என தன் தாய் தந்தையரிடம் கூறினால் அதை அவர்கள் கூட நம்ப மாட்டார்கள் .. தன்னை தான் தப்பாக எடுத்து கொள்வார்கள் .. அப்படியே அவர்களிடம் தன் போனை காட்டினாள் சித்தப்பா கூறியதைப் போல் இன்டர்நெட்டில் போட்டு விட்டால் தன் மானம் தானே போகும்" என நினைத்த பெண் மனம் எக்கு தப்பாக முடிவை எடுக்க தூண்டியது...
(இனி தமிழில் )
இதுதான் நடந்து இருக்கு மகேஷ் என முழுவதும் கூறினார் மகேஷின் மேலதிகாரி
இவை அனைத்தும் கேட்டவனின் கண்களில் அனல் தெறிக்க..."என்ன சார் இது இவ்வளவு சாதாரணமாக சொல்லிட்டு இருக்கிங்க.. அந்த பொறுக்கி நாயை பிடிச்சு நாலு தட்டு தட்டனா... இனிமே அப்படி பண்ண நினைக்கக் கூட மாட்டான்..."என மகேஷ் கத்த
"இதெல்லாம் நாங்க பண்ணலைன்னு நினைக்கறையா மகேஷ்..
அந்த பொண்ணு தற்கொலை செய்து கொண்டதும் முதலில் அவளோட வாட்ஸாப் தான் செக் செய்தேன்..
இந்த மெசேஜ் எல்லாத்தையும் பார்த்து அவரை போயி அரேஸ்ட் பண்ணி விசாரிச்சு தான் பார்த்தோம்.... ஆனா அவருடைய போனில் சந்தேக படற மாதிரி எதுவுமில்ல.....
"அப்போ ஹேக் பண்ணி பார்க்க வேண்டியது தானே சார்"என மகேஷ் கேட்க...
"நோ யூஸ் மகேஷ்.. அதை அவரு பண்ணவே இல்லை... அவருடைய போனிலிருந்து ஒரு கால்.. ஒரு மெசேஜ் கூட அவரோட போனிலிருந்து போகலை மகேஷ் ... அதே மாதிரி அந்த பெண் போனில் இவரோட நம்பர் தான் இருக்கு..."
"அது எப்படி சார் முடியும்...
அவரோட போன்ல இருந்து கால் போகலை... மெசேஜ் போகலைன்னா.. அப்போ சித்தப்பான்னு வேற யாராவது போன் நம்பரை சேவ் பண்ணி இருக்கலாம்ல" என மகேஷ் கேட்க
"இல்லை மகேஷ் இவரோட நம்பர் தான்..ஆனா இவரு போன்ல இருந்து அது மாதிரியான கால்லோ இல்ல மெசேஜ்ஜோ போகலை.. யாரும் ஹேக் பண்ணலை..."
"ஏன் சார் அவரு மொபைலை யாருவது எடுத்து அதுல பண்ணி இருக்கலாம்ல" என மகேஷ் கேட்க..
(அவரு தான் சொல்றரு எந்த காலும் போகலைன்னு கேட்டதையே கேட்டுட்டு இருக்க)
"கையில் இருந்த பைலை காமித்து இது அவரோட போன் கால் டீடெயில்ஸ்... இதுல ஒரு கால் கூட போகலை..அதே மாதிரி இது அவரோட வாட்ஸாப் டீடெயில்ஸ் இதுல கூட சந்தேக படற மாதிரி எதுவுமில்லையென" கூறவும் மகேஷ் தான் மிகவும் குழம்பி போனான்..
"அது எப்படி முடியும்.. இவரோட மொபைலில் இருந்து எதுவும் போகாம அந்த பொண்ணோட போனுக்கு எப்படி இது மாதிரியான மெசேஜ் எப்படி அனுப்ப முடியும் எப்படி கால் போகும்... "என யோசித்தவன் அவரிடம்.. "இதுக்கு எந்த வழியும் இல்லையா சார்.."என கேட்க
"நோ மகேஷ்..அது மாதிரி ஏதாவது இருந்தா... நானே இந்த கேஸை முடிச்சு இருப்பேன்.. உங்ககிட்ட கொண்டு வந்துருக்க மாட்டேன்.. தென் நீங்க கம்ப்யூட்டர் ஸ்டூடெண்ட் சோ கண்டிப்பா இதை பத்தின க்ளூ உங்களுக்கு கிடைக்கும்.. எவ்ளோ நாள் ஆனாலும் பரவல்லை நீங்க இந்த கேஸை முடிக்கணும்.. கண்டிப்பா இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகாணும்
இதுமாதிரி ஒரு கேஸ் அப்படினா கூட பரவல்லை நாலு கேஸ் இப்படியே இருக்கு... கூடப் பொறந்த தம்பி, அண்ணா, சித்தப்பா, அப்பா... இப்படின்னு இவங்களோடு நம்பர்ல தான் இப்படி ஒரு கால் அண்ட் மெசேஜ் எல்லாம் போயிருக்கு ஆனால் நம்ம விசாரித்து பார்த்தில அதெல்லாம் பண்ணது அவங்க இல்லைன்னு தெள்ளத்தெளிவா தெரியுது..... ஆனால் பாதிக்கப்பட்ட பொண்ணுங்க போன்ல இவங்க தான். எல்லாம் அனுப்பி இருக்காங்கன்னு தெளிவா காட்டுது... இதுல பெரிய க்ளூ என்னென்னா எல்லாருகிட்டையும் ஒரு மாதிரியா தான் பேசி இருக்காங்க.. மெசேஜ் கால்ஸ் போயி இருக்கு ..." என கூறி மீண்டும் அவரே ஆரம்பித்தார்.
"இதெல்லாம் உங்க வீட்டுலயோ.. இல்ல போன்லையே சொல்லி இருக்கலாம்... ஆனால் இது கொஞ்சம் சீரியஸ் சோ அதான் இங்க வர சொன்னேன்.." என கூறி அவனிடம் சில கோப்புகளை கொடுத்தவர்
"ஆல் தி பெஸ்ட் " என கூறி விட்டு அங்கிருந்து கிளம்பினார்..
சிறிது நேரம் சுற்றி முற்றி வேடிக்கை பார்த்தப்படியே அமர்ந்தவன்.."ஏதாவது இம்பார்தட்டன்ட் மீட்டிங் அப்படின்னா காப்பீ ஷாப் இல்லன்னா...ஒரு நல்ல ஹோட்டல் இதுமாதிரி கூட்டிட்டு போவங்கா.. ஆனா இவரு மட்டும் தான் ஹாஸ்பிடல்ல மீட்டிங் வைக்கராரு.."என தனக்குள்ளேயே பேசிக்கொண்டே அங்கிருந்து எழுந்து போக சட்டென்று விழிகள் விரித்து நின்றான்...!!
********
அழகிய காலை பொழுதில் சூர்ய வெளிச்சம் தன் கண்ணில் பட்டு கூச சிற்பி இமைகளை மெல்ல திறக்க முயற்சிக்கவும் சட்டென்று அவள் இமைகளெனும் சிற்பியில் அவனின் ரோஜா நிற இதழ்களை பதித்தான் மாயவன்...
சிறு புன்முறுவலுடன் தலையணையை நன்றாக கட்டியணைத்துக் கொண்டாள்..!!! அவளையே உரித்து பார்த்தவன் மற்றோரு இமையில் தன் இதழ்களை பதிக்க..
அவனின் இதழின் ஈரத்தில் துயில் களைந்தாலும் மீண்டும் தலையணையை இறுக கட்டி அணைத்து அதன் மேல் நன்கு தலை வைத்து மேலும் உறங்குவதைப் போல் நடித்தாள்...
இம்முறை அவனின் மூச்சு காற்று இவள் மூச்சில் கலக்க சட்டென அவளின் மூக்கு நுனியை மெல்ல கடித்தான் அவளின் கள்வன்..
மேலும் கண்களை இறுக மூடிக்கொண்டவளின் செய்கையே சொன்னது அவனின் இதழ் தீண்டலை இவளும் ரசித்தாலேன.. கண்களை மேலும் இறுக மூடி மீண்டும் தலையணையை கட்டியணைத்து கொள்ள... அவனின் மூச்சு காற்று கன்னம் உரச அவன் இதழ்களோ மென்மையாக அல்ல வன்முறையாக அவளின் இதழை தீண்ட சட்டென்று விழித்து கொண்டாள்..
இவ்வளவு நேரம் அவளின் செய்கையை பார்த்துக்கொண்டு இருந்தவள் இழையினி எழுந்து அமரவும் "என்ன டி ஏன் இப்படி பேய் அடிச்ச மாதிரி பிதுக்கா பிதுக்கா முழிக்கறவ" என கேட்டவளை புரியாமல் பார்த்தாள் இழையினி..
ஈஈஈ என இழித்து கொண்டே "சாரி டி எதுக்கு இப்படி திருத்திருன்னு முழிச்சுட்டு இருக்க"என பிரியா கேட்க
"ஒன்னுமில்லை கனவு அதான்" என கூற..
"என்ன யாராவது கிஸ் அடிக்கிற மாதிரி கனவு வந்துருச்சா.." என பிரியா கேட்க..
"உ..ன...க்கு... உனக்கு எப்படி தெரியும்" என வியந்தவள் போல் இழை கேட்க...
" நீ எப்போ தூங்கி எழுந்தாலும் இதே கதையை தானே சொல்ற.. என கூறியவளிடம் "ஆமா இப்போ டைம் என்னவென்று" இழையினி கேட்க
" பதினோரு மணி இருக்கும் டி "என பிரியா சொல்ல..
"நமக்கு எப்போ டூட்டி டி.."
"இரண்டு மணிக்கு"என சொல்லவும் மீண்டும் இழுத்து போர்த்தி கொண்டாள் இழையினி...
"அடியே என்ன டி பண்ற சாப்பிடலையா" என ப்ரியா கேட்க..
"இல்லை டி எனக்கு தூக்கம் தூக்கமா வருது" என இழை கூற
அவளை உத்து பார்த்தவள் "ஏன் யாராவது கனவுல வரணும்னு எதிர் பார்க்கரையா.." என ப்ரியா கேட்கவும் சட்டென்று எழுந்து அமர்ந்தவள்
"அப்படியெல்லாம் ஒரு மண்ணும் இல்லை.. எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறேன்..." என கோபத்துடன் கூறியவள் மீண்டும் படுத்துக் கொண்டாள்....
"ஒன்றை வருசமா என் நினைப்புக்கூட இல்லாம இருக்கான்.. நான் மட்டும் அவன் கனவுல வரணும்னு நினைப்பேனா... அவன் யாரு எனக்கு..?? தாலி கட்டிட்டா அவனை நான் நினைக்கணுமா..?? இப்போ எவக்கூட இழிச்சு இழிச்சுப் பேசிட்டு இருக்கானோ யாருக்கு தெரியும்..?? ச்சே அவனை இனிமே நினைக்கவே கூடாது...?? போலீஸ் பொறுக்கி .. அக்மார்க் போலீஸ் கேடி .. இனிமே அவனைப் பத்தி நினைக்காத இழையினி...!" என தனக்குத்தானே சபதம் ஏற்றவள் உறங்கி போனாள்...
அவன் மேல் இவள் வைத்த எண்ணம் மாறும் போது அவன் அவள் அருகிலிருக்க மாட்டான்.... என பேதையவள் அறிந்து இருக்க மாட்டாள்....
********
"ஏய்..ஏய்... மதி அப்படி என்னத்தை யோசிட்டு இருக்க...அங்க பாரு அந்த கொரில்லா குரங்கு உன்னை தான் பார்த்துட்டு இருக்கு..." என மெல்லிய குரலில் பூவிழி கூற..
முகத்தை சோகத்தில் வைத்து கொண்டவள் "ஒன்னுமில்லை டி" என்பதை போல் தலையை மட்டும் ஆட்ட...
"இப்போ சொல்ல போறாயா.. இல்லையா டி" என இம்முறை கத்தியே விட்டால் பூவிழி...
அமைதியாக இருந்த அந்த வகுப்பறையில் பூவிழியின் குரல் கீச்சென ஒலிக்கவும் கொரில்லா குரங்கு திரும்பி பார்க்கவும் சரியாக இருந்தது...
வழக்கம் போல் அனைத்து ஆசிரியர்களும் திரும்பி பார்த்து "கெட் அவுட்" என கத்தும் நார்மல் வார்த்தியார் இல்லை நம் கொரில்லா... புன்னகையுடன் திரும்பி பார்த்து நின்றான்.. இருவரையும் ஆராய்ச்சி பார்வை பார்த்தான்..
" கையில புக்கை எடுங்க" என கூற
அதை இருவரும் செய்ய..
"அந்த புக்கை தலைகீழாக வைங்க" என்றான்.. புத்தகத்தின் பக்கத்தை சொன்னவன் "பார்த்து நாலு டைம் இங்கயே எழுதுங்க" என கூறிவிட்டு மீண்டும் திரும்பி கொண்டான்..
அவனை எண்ணையில் போட்டு வறுக்க தோன்றியது பூவிழி என்கிற பூமாவிற்கு....
"கொய்யால இவனை எல்லாம் யாரு டி டீச்சரா போட்டது...!! கொரில்லா குரங்கு இதை சால்வ் பண்ணவே எனக்கு நாலு நாளு ஆகுமே டி... இந்த லட்சணத்தில தலைகீழா வைச்சு எழுத சொல்றான்..
சா
ட்டைப்பட சமுத்திரக்கனின்னு நினைப்பு... கொரில்லா...பெரிய இவ இவன்...சட்டித்தலையன்.."என தன் வாய்க்கு வந்தப்படி அவனை வசைபாடினாள் பூவிழி..
தன் பேச்சிற்கு மறுவார்த்தை எதுவுமில்லாமல் போகவும் சட்டென திரும்பி மதியைப் பார்க்க அவளோ இவளை முறைத்த வண்ணமிருந்தாள்...
அவளின் முறைப்பை புரிந்தவள் மதியை சமாதானம் செய்யும் விதமாக
"என்ன டி அவ்ளோதானா.. இதுக்கு எல்லாமா முறைச்சுப் பார்ப்பை,
விடு டி செல்லம்..கொஞ்சம் நேரம் அப்படியே போஸ் கொடுத்துட்டு நிக்கலாம்.. அப்பறம் கொரில்லா போனதுக்கு அப்பறம் தூக்கி போட்றாலம்.. நீ கவலைப்படாத செல்லம்.." பூமா சொல்லவும் பாவமாக கணித புக்கைப் பார்த்து நின்றாள் மதி...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro