6
மாற்றம்
பொதுத் தேர்வு முடிவு அறிவிப்பு நாள்.
இயல்பாகவே விடிந்தாலும், அந்நாளின் முக்கியத்துவத்தை காற்றில் இருந்த ஒரு கனம் காட்டியது. மஹிமா எழுந்து தயராகி வந்தபோது, அப்பா ராஜகோபால் ஏற்கனவே கணினியோடு அமர்ந்திருந்தார். அவளைப் பார்த்ததும் புன்னகைத்தார்.
"வா மஹி. இன்னும் அரைமணி நேரம் டா. ரிசல்ட் வந்திரும்"
"ஹ்ம்ம்.. சாப்டீங்களாப்பா?"
"ஓ.. ஆச்சுடா. நான் ஆறு மணிக்கே எழுந்துட்டேன். தூக்கம் வரலை. உன்னை எழுப்ப வேணாம்னு பங்கஜம்மா கிட்ட நான்தான் சொன்னேன். ரிலாக்ஸா தானே இருக்க?"
"ம்ம், ஆமாப்பா"
"சரி, நீ போய் சாப்டு. ரிசல்ட் வந்ததும் நான் கூப்டறேன்."
"இல்லப்பா. இங்கயே எடுத்துட்டு வந்தர்றேன்"
பீங்கான் தட்டில் இரண்டு தோசைகளும் சாம்பாரும் எடுத்துக்கொண்டு வந்து அப்பாவின் அருகில் அமர்ந்தாள் அவள். கிச்சனில் பங்கஜம் அம்மாள் ஏதோ ஸ்வீட் செய்துகொண்டு இருப்பதையும் அவள் கவனிக்கத் தவறவில்லை.
"டென்ஷனா இருக்கா மஹிம்மா?"
மகளின் முகத்தை ஆர்வமாக நோக்கினார் ராஜகோபால். அவளோ சாந்தமாக இருந்தாள்.
"இல்லப்பா. ஆர்வமா தான் இருக்கு."
சிரித்துக் கொண்டார் ராஜகோபால்.
அரைமணி நேரக் காத்திருப்பு அரை யுகமாகக் கழிந்தது.
எதிர்பார்த்ததைவிட நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருந்தாள் அவள். 572.
இரண்டு பாடங்களில் சதம். பள்ளியில் மூன்றாமிடம்.
சொல்லிவைத்தாற்போல் அவள் மார்க் பார்த்ததும் அலைபேசி அடித்தது. மஹிமா உற்சாகமாக சென்று அதை எடுத்தாள். விஷ்வா தான். வாழ்த்துத் தெரிவித்த விஷ்வாவிடம் மார்க் கேட்டபோது அவன், "guess?" என்றான். விளையாட்டுப் பிரியன் அவன்.
"கண்டிப்பா நல்ல மார்க்தான். சொல்லு விஷ்வா. "
"520"
"சூப்பர்டா! அடுத்து என்ன?" உண்மையான சந்தோஷத்துடன் அவள் கேட்டாள்.
"யோசிக்கணும்."
"மத்தவங்க?"
"இனிமேல் தான் கேட்கணும்"
"நீ வேணிக்கு கூப்பிடு. நான் ஜோஷி கிட்ட பேசறேன்"
"வேணாம்... நீயே வேணி கிட்ட பேசு. ஜோஷி இங்க லைன்ல வரான், வெய்ட் பண்ணு. கான்ஃபரன்ஸ் கால் போடறேன்.."
விஷ்வாவிடம் கைபேசி இருந்தது. அவன் அண்ணன் செல்லம் என்பதால் அடம்பிடித்து வாங்கிவிட்டான்.
கான்ஃபரன்ஸ் கால் இணைக்கப்பட்டதும் ஜோஷி உற்சாகமாகக் கத்தினான்.
"மஹிமா!!!!! அடிபொளி!!! ஸ்கூல் தேர்ட் அல்லோ! கொங்க்ராஜுலேஷன்ஸ்!!!"
"Thanks da Joshi. சேட்டன்ட மார்க் எத்தர?"
"Enough for a good arts seat. 503"
"ஹே... ஆர்ட்ஸ் தான்னு முடிவே பண்ணிட்டயா நீ?"
"பின்னெந்தா? அங்கனயே. எப்போழும் டென்ஷனில்லாது படிக்கணம். மேத்ஸ் எனிக்கு ஃபேவரிட். அதானு எனிக்கு. விஷ்வா நினக்கெத்தரா டா? வளர மார்க்கு கிட்டியோ?"
"ஹாஹ்ஹா... 520 டா."
"என்ட கர்த்தாவே! இது கண்டோ மஹிமா?! படிக்கில்ல படிக்கில்ல எண்டு பறஞ்ஞு, இவன் இத்தர எட்டி... இவன நம்பண்டா மஹி!"
வாய்விட்டுச் சிரித்தாள் மஹி... நீண்ட நாட்களுக்குப் பின்.
நன்றாக நெடுநேரம் பேசிவிட்டு அலைபேசியை அணைத்ததும் அது மீண்டும் அடித்தது.
இம்முறை வேணி.
"என்ன மேடம். மீடியா எல்லாம் கால் பண்றாங்களா?? அஞ்சு தடவை அடிச்சேன்.. பிஸின்னே வந்தது?"
"இல்ல வேணி, நம்ம விஷ்வா ஜோஷி தான். அவங்க கிட்ட பேசினா டைம் போறதே தெரியல."
"ஹ்ம்ம்... congrats. இப்ப தான் கேள்விப்பட்டேன்."
"Thanks pa. நீ?"
"உன்னளவுக்கு இல்லபா...544"
"இதுமட்டும் என்ன..நல்ல மார்க் தானே?"
"ஆமா தான்... ஆனா வீட்ல உன்ன கம்பேர் பண்ணி தான பேசுவாங்க.."
அவள் சிரித்துக் கொண்டே சொன்னாலும், அதில் இருந்த எரிச்சல் மஹிமாவைத் தாக்கியது. திகைத்தாள்.
லேசாக சிரித்து சமாளித்துவிட்டு ஃபோனை வைத்தாள் அவள். படிப்பில் ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லது தானே.
"சூப்பர் மஹி. அடுத்து என்னடா?"
அப்பா ராஜகோபால் அவரது கைபேசியை வைத்துவிட்டு வந்தார்.
"நீங்க சொல்லுங்கப்பா... என்ன படிக்கலாம்?"
"நீதான்டா முடிவு பண்ணனும்...இது உன்னோட கரியர் மஹிம்மா!"
அதற்குள் மீண்டும் கைபேசி அழைத்திட, அதை எடுத்து பேசிக்கொண்டே சென்றுவிட்டார் அவர்.
மஹிமா யோசனையில் ஆழ்ந்தாள்.
-------------------
இரண்டு நாட்கள் கழித்து...
நண்பகல் பதினோரு மணி.
நால்வரும் ஜோஷியின் வீட்டு பால்கனியில் அமர்ந்திருந்தனர். ஜோஷியின் செல்ல நாய் 'போக்கோ' (poko) அவன் மடியில் தலை வைத்திருந்தது. ஜோஷியின் அம்மா ஷீலா, அவர்களுக்குப் பழரசம் கொடுத்து விட்டுச் சென்றார்.
வேணி தான் முதலில் பேச ஆரம்பித்தாள்.
"CA படிக்கலாம்னு இருக்கேன். வீட்டிலயும் எல்லாரும் சரின்னு சொல்லிட்டாங்க "
"பொளிச்சு மோளே!!! ஒரு சகாப்தம் தொடஞ்ஞி!! ஓடிட்டர்"
"ப்ச், அது ஆடிட்டர் டா!"
அனைவரும் சிரித்தனர்.
"நீ, ஜோஷி? ஆர்ட்ஸ் தானா?" விஷ்வா கேட்டான்.
"ஆ.. ஞான் எது படிக்கான் பரஞ்ஞாலும் என்டச்சன் சரின்னு பரையும். பின்னெந்தா?"
"என்ன கோர்ஸ்?"
"B.Sc. Maths"
"Super! மாறன் சாருக்கு ஒரு வாரிசு!" வேணி சொல்லவும், அனைவரும் சிரித்து ஆமோதித்தனர்.
"மஹிமா, என்ன ஒன்னும் பேசாம இருக்க? நீ என்ன படிக்கப் போற?"
"இல்லப்பா...சின்ன வயசிலிருந்து ஒரே எண்ணம் தான். அப்பாவுக்கு உதவியா இருக்கணும். எங்க கம்பெனிய நல்லா நடத்தணும். நான் தான அடுத்த தலைமுறை..."
"அதுக்கு?"
"Business management படிக்கப் போறேன். "
"சூப்பர் மஹி. பிஸினஸ் வுமன்!"
லேசாகப் புன்னகைத்துவிட்டு விஷ்வாவைப் பார்த்தாள். அவன் ஏதோ யோசனையில்.
"என்ன, விஷ்வா?"
"ம்ம்... எந்தெந்த காலேஜ்ல அப்ளை பண்ணப் போற மஹி?"
"தெரியல... காலைல தான் அப்பா கிட்ட சொன்னேன். சாயங்காலம் போனாத் தெரியும். எப்படியும் நாலஞ்சு காலேஜ் செலக்ட் பண்ணி வச்சிருப்பாரு. அதில நான் சூஸ் பண்ணுனா போதும்."
"ம்ம்.."
"நீ என்னடா பண்ண போற?"
"முடிவு எடுத்துட்டு சொல்றேன்"
--------------------
ஜூலை ஆறு. காலை எட்டு மணி.
முதுவேனில் என்பதால் வெயில் மெலிதாக இருந்தது. வானம் வழக்கத்திற்கு மாறாக அடர்ந்திருந்தது. சூரியன் மேகங்களில் மறைந்திருந்தது. மந்தமான பகல். ஆனால் அதுவும் அழகாகத் தான் தெரிந்தது.
மஹிமாவின் முதல் கல்லூரி நாள். அப்பா ராஜகோபால் அவளுடன் வருகிறேன் என்று சொன்னாலும், "இல்லப்பா.. நான் பாத்துக்கறேன். நீங்க கிளம்புங்க" என்று அவரை அனுப்பி வைத்தாள் அவள். அவரும் ஆயிரம் அறிவுரைகள் சொல்லிவிட்டு நகர்ந்தார்.
மெல்ல நடந்து உள்ளே சென்றவளின் கண்ணில் முதலில் பட்டது.......
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro