Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

48

பரிமாற்றம்

அவன் எழுந்தது தெரியாமல் யோசனையில் ஆழ்ந்திருந்தாள் மஹிமா.

விஷ்வா விழித்து அவளது கவலை படர்ந்த முகம் கண்டு வருத்தத்தோடு, "I'm sorry, Mahima" என்றான்.

அவனது குரல்கேட்டு யோசனை கலைந்து அவனைப் பார்த்தாள் அவள்.

"என்ன விஷ்வா?"

"என்னால தான இதெல்லாம்..? நான் மட்டும் அன்னைக்கு கம்ப்ளெய்ண்ட் குடுக்காம இருந்திருந்தா இப்போ அவனுங்க நம்ம வீட்டு வரைக்கும் வந்திருக்க மாட்டாங்கல்ல"

"விஷ்வா... என்னால தானே பிரச்சனை ஆரம்பிச்சது. நான் மேனேஜ்மெண்ட்ல புகார் குடுத்திருக்கக் கூடாது"

"உங்க காலேஜ் பிரச்சனைல நான் வீணா தலையிட்டிருக்கக் கூடாது"

"நான் அவங்க கூட தகராறே செஞ்சிருக்கக் கூடாது"

மாறிமாறி அவர்கள் தங்களைத் தாங்களே குறை சொல்லிக்கொண்டனர். இருவரின் முகத்திலும் வேதனைக் கோலமிட்டது.

"முன்னெல்லாம், என்ன ஆனாலும் பாத்துக்கலாம்னு ஒரு திமிரா, தெனாவட்டா இருந்துட்டேன்.. ஆனா என்னால உனக்கு எதாவது ஆகிடுமோன்னு இப்பல்லாம் ஒருதடவைக்கு ஆயிரம் தடவை யோசிக்கறேன்.."

அவன் மனம்விட்டுப் பேசினான். கண்ணில் கரிசனம் கலந்த பயம் தெரிந்தது.

அவள் புன்னகையுடன் அவன் கன்னத்தை வருடினாள்.

"நீ மெச்சூர்டா மாறிட்டு இருக்க விஷ்வா... முன்னாடில்லாம் உன்னைப் பத்தி மட்டுமே யோசிச்சதால பயம் வரல, இப்போ என்னைப் பத்தியும் உன் மனசு அக்கறைப்பட ஆரம்பிச்சிடுச்சு. அதான்"

அவளது பதிலில் ஆர்வமானவன் அவளை நோக்கித் திரும்பினான். தலை கட்டிலில் இடித்து வலித்தது. அவள் பதறிப்போய் எழுந்து அவன் தலையைத் தேய்த்துவிட்டாள்.

"அடி பலமா பட்டுடுச்சா விஷ்வா? வலிக்குதா?" எனக் கேட்டுக் கொண்டே அவனது காயத்தையும் ஆராய்ந்தாள்.

"நீயும் ரொம்ப மெர்ச்சூர்ட் பொண்ணா மாறிட்ட போல!" வலியிலும் சிரித்தான் அவன். அவன் சிரிப்பு அவளையும் தொற்றிக் கொண்டது.

இருந்தாலும் மீண்டும் சோகமானாள் அவள்.

"உ.. உனக்கு எதாச்சும் ஆகியிருந்தா.. நினைக்கவே பயமா இருக்கு விஷ்வா.."

"எனக்கு உன்னை நினைச்சுதான் பயமா இருந்தது மஹி.. உன்னைக் காப்பாத்த முடியாம போயிருந்தா.. என்னையே நான் மன்னிச்சிருக்க மாட்டேன்.."

இருவருமே கண்ணீருடன் கட்டிக்கொண்டனர்.

"விஷ்வா.."

"ம்ம்..?"

"Let's get married"

"என்னது?"

"நம்ம நாளைக்கே ஊருக்குக் கிளம்பலாம். எங்கேயாச்சும் ஒரு கோவில்லயோ, இல்ல ரெஜிஸ்ட்ரார் ஆபிஸ்லயோ கல்யாணம் பண்ணிக்கலாம். ஒன்னா போய் ரெண்டு வீட்லயும் பேசலாம். அப்றம்--"

அவள் படபடவெனப் பேச, விஷ்வா அவள் தோளைப் பிடித்து அவளை சமன்படுத்தினான்.

"பொறுமை பொறுமை! மஹிமா.. நீ ஷாக்ல இருக்க இப்போ. அதான் இவ்ளோ யோசிக்கற. நான் கல்யாணம் வேணாம்னு சொல்லலை. கொஞ்சம் பொறுமையா இருப்போம். உனக்கு இன்னும் ரிசல்ட், சர்ட்டிபிகேட், எல்லாம் வரணும். அப்றம் ஊருக்குப் போய் எனக்கு ஒரு வேலை வாங்கணும், அதுக்கப்றம் கல்யாணம் பண்ணனும்... ஆர்டர் மாத்தக் கூடாது"

"விஷ்வா...எனக்கு இங்க இருக்கப் பிடிக்கல. நாம வீட்டுக்குப் போலாம்" அவன் சட்டை அவளது கண்ணீரால் நனைந்தது.

அவள் கன்னத்தை இரு கைகளாலும் பற்றினான் அவன். இருவர் கண்களும் சந்தித்தன.

"இத்தனை நாள் கஷ்டப்பட்டு இங்க இருந்தது எல்லாம் எதுக்காக? உன்னோட படிப்புக்காகத் தானே? அதுக்கான அடையாளம்தான் அந்த சர்ட்டிபிகேட். அத வாங்காமப் போனா, நாம பட்ட கஷ்டமெல்லாம் வீணாப் போயிடாதா மஹி?"

"விஷ்வா..."

"இன்னும் ரெண்டு வாரம் தானே... கொஞ்சம் பொறுத்துக்கோ. அதுக்கப்றம் நீயே இங்க இருக்கேன்னு சொன்னாலும் நான் விடமாட்டேன். உன்னை அப்டியே அள்ளிட்டு இண்டியா போயிடுவேன். போதுமா?"

அவள் நெற்றியில் முத்தமிட்டு அணைத்துக் கொண்டான் அவன். அவனது அணைப்பிலேயே உறங்கிப் போனாள் அவள். அவன் ஏனோ விழித்திருந்தான்.

***

இரண்டு வாரங்கள் எப்படா நகரும் என்றிருந்தது அவளுக்கு. அவன் என்னதான் உற்சாகப்படுத்தினாலும் அவள் ஏதோ சோகத்திலேயே இருந்தாள். எங்கும் போகாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாள்.

அவன் மட்டும், தான் வேலைபார்க்கும் பூக்கடைக்குச் சென்று வந்தான். காலை அவனுக்கு சமைத்துத் தருவதும், மாலை அவன் வந்ததும் காபி போட்டுத் தருவதும் மட்டும் அவளது வேலையாக இருந்தது. இரவு அவளுக்கும் சேர்ந்து அவனே சமைத்துப் பரிமாறுவான்.

தாங்கள் புறப்படுவதற்குத் தேவையான ஏற்பாடுகளை அவள் மும்முரமாகச் செய்தாள். வீட்டு சொந்தக்காரருக்கு தகவல் சொல்லி வாடகைப் பணத்தை செட்டில் பண்ணிவிட்டு, ட்ராவல் கார்டை திருப்பியளித்துவிட்டு, நாராயணனிடம் விமான பயணச்சீட்டுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னாள்.

எப்போதும் தேர்வுகளையும் தேர்வு முடிவுகளையும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கும் மஹிமா இப்போது அவை எதிலும் ஆர்வமின்றி இருந்தது அவனை வருத்தியது.

இரண்டு வாரங்களில் முடிவுகள் வந்தது.

வெற்றிகரமாக அனைத்துப் பாடங்களையும் பாஸ் பண்ணியிருந்தாள். அடுத்த நாளே சிறிய விழா ஒன்றில் அவளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில் அவள் வகுப்புத் தோழர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விஷ்வா உடன்வந்திருந்ததால் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டே உணவருந்தினர். விஷ்வாவின் அருகில் இருந்த நவ்நீத் அவனிடம், "When are you gonna get married?" என வினவ, அவன் சிரித்தபடி, "Soon, you all are invited. Thanks for taking care of her in college" என்றான்.

"Do you think your marriage is gonna be that easy?"
(அவ்ளோ சுலபமா உங்க கல்யாணம் நடந்துடுமா?)

புரியாமல் அவனைப் பார்த்தான் விஷ்வா.

"I mean, how are you both gonna convince your families? We Indians care a lot about compatibility in marriage. You see, caste, color, height, status, education... I think you are underqualified in every aspect"
(நம்ம ஆளுங்க சும்மாவே ஜாதி, பணம், அந்தஸ்துன்னு ஆயிரம் பாப்பாங்க. எல்லாத்துலயுமே அவளை விட நீ குறைவு தானே?)

அவன் பேசுவது மற்றவர்களுக்குக் கேட்காததால் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். விஷ்வா கோபத்தில் கையை முறுக்கத் தொடங்கினான்.

"See, you may get angry bro. But you can't deny it. Face the facts yar! She's too good for you"
(நீ கோபப் படலாம். ஆனா மறுக்க முடியாது. அதுதான் உண்மை)

சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே அவன் சென்றுவிட, உண்மை உரைப்பதுபோல் இருந்தது விஷ்வாவுக்கு.

அவன் எழுந்து அவளிடம் வந்து 'போகலாம்' எனக் கண்ணால் ஜாடை காட்டினான். அவனுக்கு ஏதோ அவசரம் எனப் புரிந்தது அவளுக்கு. நண்பர்களிடம் விடைபெற்று இருவரும் வீட்டுக்கு வந்தனர்.

"விஷ்வா...என்னாச்சு? உன் முகமே சரியில்ல... நல்லா தான இருந்த?"

"ஒ.. ஒன்னும் இல்ல. நீ போய் ரெஸ்ட் எடு. நாம நாளைக்கு மதியம் கிளம்பறோம்ல?"

சரியென்று தலையசைத்துவிட்டு அவள் சென்றாள். எனினும் மனதில் சிறு சஞ்சலம்.

'என்னவாயிற்று இவனுக்கு?'

----------------

"இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தங்களை வரவேற்கிறது" என ஆங்கிலத்திலும் இந்தியிலும் வரவேற்றது ஒரு இயந்திரக் குரல். முழுதாக ஒரு வருடம் கழித்து தாய்நாட்டை வந்தடைந்த மகிழ்ச்சியில் அவளது கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது. அவனது கைகளை ஆனந்தத்தில் பற்றிக்கொண்டாள் மஹிமா.

அவனது முகத்திலும் வீடுசேர்ந்த நிம்மதி தெரிந்தது. ஆனாலும் விழிகளில் வேறு ஏதோ கவலையும் தெரிந்தது.

'இத்தனை நாள் அங்க ஜாலியா இருந்தே பழகிட்டு, இப்ப திடீர்னு பழையபடி ஆனதும் வருத்தம் போல'

அவனது வருத்தத்துக்கு வேறு ஏதோ அர்த்தம் கற்பித்துக்கொண்டு அமைதியானாள் அவள்.

தங்கள் பைகள் அனைத்தையும் பார்த்து எடுத்துக்கொண்டு விமான நிலையத்தின் 'domestic flights' பகுதிக்கு விரைந்தனர்.

"நம்ம சென்னை ஃப்ளைட் இன்னும் ஒரு மணி நேரத்தில கிளம்புது. சீக்கிரம் வா விஷ்வா.. செக்கிங்ல லேட்டாயிடப் போகுது"

அவள் கையை விட்டான் அவன்.

"நான் வரல மஹிமா"

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro