42
பனிப்போர்
மஹிமாவின் கண்ணில் அந்த கத்தி தென்பட்டது. சப்தநாடியும் ஒடுங்கிப்போனது அவளுக்கு.
"Hey...what's that knife for? You know i don't mean any harm, right?"
அவனோடு சமாதானம் பேச முயன்றாள் அவள்.
அந்த இளைஞனின் முகமோ கல்லாக இருந்தது. அவன் கண்களில் துளி ஈரம் கூட இல்லை.
"You b***h! You dare speak against us?"
கத்திக்கொண்டே இரண்டடி முன்னால் வந்தான் அவன்.
அவள் பயந்துபோய் தரையில் விழுந்தாள்.
"ஹெல்ப்! ஹெல்ப்!"
ம்ஹூம். அங்கிருந்த ஓரிரண்டு மாணவர்களும் அவனது கத்தியைக் கண்டதும் ஓடிவிட்டனர். அந்த பூங்கா வளாகத்தில் அவள் மட்டும் தனியாக மாட்டியிருந்தாள். பயத்தில் அழுகை வந்தது. அவள் அழுவதைக் கண்டவன், ஒருவித குரூரச் சிரிப்போடு அவளை நோக்கி வந்தான்.
டமால்!
சட்டென்று ஏதோ இடிதாக்கியது போல் உறைந்தான் அவன். அடுத்தநொடி தலையைப் பிடித்துக்கொண்டு தரையில் மண்டியிட்டான்.
மஹிமா அவனை அதிர்ச்சியோடு பார்த்துவிட்டு, அவனை யார் அடித்தது என்று நிமிர்ந்து பார்த்தாள். ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்க மாணவன் அங்கே நின்றிருந்தான்.
"Run! Run away!" என்று கத்தினான் அவன். மஹிமாவும் எழுந்து ஒட முயன்றாள். அந்த மாணவனும் கையிலிருந்த கட்டையை கீழே போட்டுவிட்டு எதிர்த்திசையில் ஓடினான். ஆனால் அவள் இரண்டடி எடுத்து வைப்பதற்குள் கீழே விழுந்திருந்தவன் சட்டென்று பாய்ந்து அவள் கையைப் பிடித்தான். கத்தியை வைத்திருந்த கையால் பிடித்ததால் அது அவளது தோலைக் கிழித்து உள்ளே இறங்கியது.
மஹிமா வலியில் அலறினாள். எப்படியோ முயன்று அவனிடமிருந்து தப்பித்தாள். அவனுக்குத் தலையில் அடிபட்டிருந்ததால் நேராக நடக்கவோ, ஓடவோ முடியாமல் மயங்கிச் சரிந்தான்.
ஓடிவந்து பேருந்து நிறுத்தத்தில் நின்றாள் அவள். அவள் உடையில் இருந்த அழுக்கு, மற்றும் கையில் வழிந்த இரத்தம் அனைத்தையும் பார்த்து அங்கே நின்றிருந்தவர்கள் அலறினர். ஒரேயொரு வயதான கிழவர் மட்டும் அவளுக்கு முதலுதவி அளித்து, குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீரும் தந்தார்.
விசும்பிக் கொண்டே இருந்தாள் மஹிமா.
இந்நேரம் வீட்டில் இருந்திருந்தால்... இந்நேரம் அப்பா அருகில் இருந்திருந்தால் ... இந்நேரம் விஷ்வா இருந்திருந்தால்...
விஷ்வா இருந்தான்... அருகில்தான், ஆனால் மிகத் தொலைவாக...
சிரமப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள் அவள். வீட்டிற்கு வந்ததும் அடக்கி வைத்த அழுகை பீறிட்டது. கையும் உயிர்போவதுபோல் வலித்தது. கட்டியிருந்த துணியில் இரத்தம் ஊறியிருந்தது. அதைக் கழற்றிவிட்டு வேறு கட்டுப் போடலாம் என்று அதைப் பிரித்தாள் அவள். பிரித்ததும் இரத்தம் கொட்ட, பயத்தில் மயங்கினாள் அவள்.
சில மணி நேரம் கழித்து வீடுதிரும்பிய விஷ்வா வாசல் கதவு திறந்திருப்பதைப் பார்த்து யோசித்தவாறு உள்ளே வந்தான். கூடத்தில் கையில் இரத்தம் வழிய மயங்கிக் கிடந்தவளைக் கண்டு அதிர்ந்தான். அவளைத் தொட்டுப் பார்த்தான் - உடம்பு சில்லிட்டது.
"மஹிமா!! மஹிமா! என்னாச்சு மஹி? எழுந்திரு!"
உடனே அவசர உதவி 911க்கு அழைத்தான்.
"Hello. We have a medical emergency here!"
"Calm down, sir. Please mention the address with zipcode"
"Coniston st, Muswell hills, 20656. Hurry, please. She's unconscious and bleeding"
"Help is on the way, sir. We'll contact you soon"
கைபேசியை வைத்துவிட்டு, அவள் முகத்தில் தண்ணீர் தெளித்துப் பார்த்தான் அவன். லேசான அசைவு தெரிந்தது.
"மஹிமா...எழுந்திரு ப்ளீஸ்...என்ன ஆச்சு? மஹிமா என்னை பாரு"
"அ... அவன்... விஷ்.."
"என்ன மஹிமா? என்ன ஆச்சு?"
பயத்தில் அவனுக்கு அழுகை வந்தது. சட்டையில் கண்களைத் துடைத்துக் கொண்டு அவளை தூக்கி, வெளியே ஓடினான். சரியாக அப்போது ஆம்புலன்ஸ் வர, அவளை அதில் ஏற்றினான்.
வண்டியில் இருந்த மருத்துவர் மஹிமாவின் காயத்தைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு,
"It's a weapon injury. Did she cut herself?" என்று வினவினார்.
"No, doctor. I didn't find any knives near her"
"It could be a burglary. You must contact the police"
"Sure doctor. But treat her, please"
அவளுக்கு மயக்கம் தெளியும் வரை அவளுடனே அமர்ந்திருந்தான் அவன். இரத்தம் நிறைய வீணாகிவிட்டதால் இரத்த அழுத்தத் தாழ்வினால் மயங்கியதாகக் கூறினர் மருத்துவர்கள். அன்றிரவு அந்த மருத்துவமனையிலேயே தங்க நேரிட்டது.
காலை வெளிச்சம் முகத்தில் பட்டதும் விழித்தாள் அவள். தன் கால்மாட்டில் தலைவைத்துத் தூங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தாள். அவனை எழுப்ப மனமின்றி அப்படியே அவன் முகத்தைப் பார்த்தவாறு படுத்திருந்தாள்.
செவிலியர் ஒருவர் உள்ளே நுழைந்து,
"So you are awake" என்று அவளைப் பார்த்து புன்னகைத்தார்.
பதிலுக்குப் புன்னகைத்துவிட்டு,
"Thanks for helping" என்றாள் அவள்.
"No no, you must thank your boyfriend for that. He refused to leave your side the whole night. He never ate anything. He pestered every single worker whether you were fine"
சிரித்துக் கொண்டே அவர் சொல்ல, மஹிமாவின் கண்கள் குளமானது.
சத்தத்தில் விழித்தெழுந்த விஷ்வா அவள் மயக்கம் தெளிந்து அமர்ந்திருந்ததைக் கண்டதும் முகம் மலர்ந்தான். எழுந்து வந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு அணைத்துக்கொண்டான்.
"Okay..now I must call the police for investigating. And a check up, and you're free to go" என அவர்களுக்கு தனிமை தந்து அந்த செவிலியர் நாசூக்காக நகர்ந்தார்.
"என்ன ஆச்சு மஹிமா? நான் வீட்டுக்கு வந்தப்போ தரையில மயங்கிக் கிடந்த. எழுப்பினா எழுந்திருக்கல. அதான் பயந்துபோய் ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தேன்"
பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அவள். கண்களில் நீர் வழிவது நிற்கவில்லை.
"என்மேல என்ன கோபம் வேணாலும் இருக்கட்டும். அதுக்காக என்ன நடந்ததுன்னு கூட சொல்ல மாட்டயா?"
அவன் கேட்கும்போதே கதவைத் திறந்து நீலநிறச் சீருடையில் இரண்டு காவல் அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர்.
"Excuse us, is this Miss Mahima from Muswell hill?"
"Yes please."
"We are from the police. Could you tell us what happened?"
நடந்ததை நினைவுபடுத்திச் சொல்லத் தொடங்கினாள் அவள். பயத்தில் லேசாக குரல் தடுமாறியது.
"It may have been an accident, miss. Do you wanna lodge a complaint?"
"No, please. I don't want any trouble hereafter"
அவசரமாக அவள் புகாரளிக்க மறுத்தாள். ஆனால் பின்னாலிருந்து, "Yes. We want to file the complaint" என்று கர்ஜனை போல அவன் குரல் ஒலித்தது.
திரும்பி அவனைக் கெஞ்சும் பார்வையில் பார்த்தாள் அவள். அவன் முகம் கோபத்தில் வெளிறியிருந்தது. கண்கள் சிவந்திருந்தன.
அவன் சொன்ன பதிலை ஏற்றுக்கொண்டு காவலர்கள் சென்றுவிட, தவிப்புடன் அவனை நோக்கினாள் அவள்.
"விஷ்வா... கம்ப்ளெய்ண்ட் வேணாம் ப்ளீஸ்.. இதை நான் பாத்துக்கறேன்... ப்ளீஸ்"
அவன் சினம் குறையாமல் அவளைப் பார்த்து, "முதல்நாள் உன்னைத் திட்டுனவன்தானே அது?" என்று கேட்டான்.
"விஷ்வா..."
"ஏ! என்ன நெனைச்சிட்டு இருக்க உன் மனசுல? ஊர்ல யார்மேல கோபம் இருந்தாலும் எங்கிட்ட காட்ட வேண்டியது. ஆனா கோபப்பட வேண்டிய இடத்துல நழுவறது! உனக்கென்ன பைத்தியமா? காரணமே இல்லாம சண்டை போட்டுட்டு, பேசாம, எதையும் ஷேர் பண்ணாம இருக்கறது எந்த விதத்துல நியாயம்.. நான் என்ன தப்பு செஞ்சேன்? ஏன் என்மேல உனக்கு கோபம்?"
"..."
"நீ என்ன கோபத்தை வேணாலும் வச்சுக்கோ. ஆனா நான் ஸாரி கேட்கமாட்டேன். எனக்குத் தெரிஞ்சவரை நான் எந்தத் தப்பும் பண்ணல. உன்மேல எனக்கு எந்தக் கோபமும் இல்ல. நீ பேசறதும் பேசாம இருக்கறதும் உன்னோட இஷ்டம். ஆனா இந்த பிரச்சினையை நான் சும்மா விடப் போறதில்ல"
"நீ தப்பே பண்ணல?"
"ஆமா. நான் என்ன பண்ணேன்?"
"விஷ்வா! அன்னிக்கு flower shopல நான் உன்னை பார்த்தேன்!"
"இன்னும் எத்தனை தடவை அதையே சொல்லுவ? அதான் கத்திக் கத்தி உனக்கு விளக்கம் குடுத்தனே, நான் அங்கே ஏன் வேலைக்கு சேர்ந்தேன்னு!"
"எனக்கு எதுவுமே கேக்கலையே விஷ்வா"
விஷ்வா முகம் தெளிந்து சிரிப்பு வந்தது. தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்தான் அவன்.
"உனக்கு எதுவுமே கேக்கலையா?"
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro