26
கனிமொழியே
மாலை நான்கு மணி.
அந்த ஏர் இந்தியா விமானம் விண்ணில் வெண்ணிறப் புறாவாய்ப் பறந்து வந்து டில்லி மண்ணீல் ஆங்காரமாய் சத்தமிட்டு இறங்கியது. உள்ளிருந்த நூற்றைம்பது பேரையும் பத்திரமாகத் தரையிறக்கி விட்டனர் உள்ளிருந்த பணிப்பெண்கள். இறங்கிய பயணிகள் அனைவரும் அவரவர் சாமான்களை, பைகளைத் தேடி conveyor belt பக்கம் ஓடினர்.
அவர்களுடன் சென்று தன் பைகளை எடுத்துக் கொண்டு தன் பெரியதாத்தா வீட்டிலிருந்து யாராவது வந்திருக்கின்றனரா என்று பார்த்தவாறு வெளியே நடந்தாள் மஹிமா. அவளுக்கு அதிகம் வேலை வைக்காமல் அவளெதிரில் வந்து நின்றார் சங்கரன்.
"மஹி கண்ணா!"
"சங்கர் மாமா!!"
ஓடிச்சென்று அவரையும் அத்தையையும் அணைத்துக் கொண்டாள் மஹி.
"ட்ராவல் எல்லாம் எப்டி இருந்தது கண்ணா?"
"எனக்கென்ன மாமா...பிஸினஸ் க்ளாஸ் டிக்கெட்..வழியெல்லாம் ஜூஸ், சாக்லேட், சாலட்னு குடுத்துகிட்டே இருந்தாங்க!"
"அப்போ வீட்டிற்கு கால் பண்ணி சாப்பாடு செய்யவேணாம்னு சொல்லிடலாமா?"
"அச்சச்சோ!!", மஹி பொய்யாக அலற, சிரித்தனர் இருவரும்.
"சரி...நீதான் வெளிநாட்டு படிப்பெல்லாம் வேணாம்னு எப்போதும் சொல்லுவியே... இப்ப என்ன?"
அவள் அமைதியாக இருக்கவும், அத்தை அவளுக்குப் பரிந்து பேசினார்.
"சும்மா இருங்க, ஒரு தடவை சொன்னா, அதையவே வாழ்க்கை ஃபுல்லா கடைபிடிக்கணுமா? அவளுக்கு ஏதோ ஆசை, படிச்சிட்டுப் போறா."
சரியென்று தலையசைத்துவிட்டு நடந்தார் மாமா.
அவர்களோடு நடந்து காருக்குச் செல்கையில், அவள் கைபேசி அடித்தது.
ஜோஷி.
ஆர்வமாக எடுத்தாள் அவள்.
"ஹலோ ஜோஷி, what a surprise!"
"ஹெலோ மஹிமா! சுகந்தன்னே?"
"ஞான் சுகமே. சேட்டன் எங்கணே உண்டு?"
"ஃபைன். எவிடத்தே?"
"நான் டில்லில இருக்கேன் ஜோஷி. இப்போதான் வந்தேன்."
"ஹாலிடே டூர்...என்ஜோய்!!"
"டூர் இல்லபா, பிட் ஸ்டாப்"
"எந்தா..?"
"Abroad studies... அதான் விசா, அட்மிஷன் எல்லாம் பார்க்க டில்லி வந்திருக்கேன். "
"அப்ரோடோ? எந்தினோ? இவிட நம்பட நாட்டில் வெள்ளிய கோலேஜ் இல்லே?"
"இல்லை ஜோஷி...எனக்கு இது அவசியம். ப்ளீஸ்.. கேள்வி கேட்காத"
"சரி..நீ ஃபாரின் போய்ட்டா விஷ்வாவோட கதி?"
"எதுவும் கேக்காதேன்னு சொல்றேன்ல?"
அவள் கத்தியதில் அத்தை,மாமா,டிரைவர் என அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.
அவர்களின் கண்ணால் மன்னிப்புக் கேட்டுவிட்டு, சன்னமான குரலில் தொடர்ந்தாள்.
"ஜோஷி... அது பெரிய கதை... ஆனா என்னால சொல்ல முடியாது. நான் மறக்கணும்னு போறேன். என்னை ட்ரை பண்ணவாவது விடு"
"மஹி... ஃபீல் ஆகண்டா...ஞான் ஸோரி. நீ ரிலாக்ஸ் ஆகிட்டு திரிச்சி விளி. பைபை!"
கேள்வியோடு மாமாவும் அத்தையும் பார்த்திருக்க, அவர்கள் பார்வையைத் தவிர்த்துவிட்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தாள் அவள்.
———————————————
ஜோஷி விஷ்வாவிடம் நடந்ததைச் சொல்ல, விஷ்வா பதறினான்.
"என்னடா சொல்ற?"
"அத்தரயும் சத்யமே! மஹிமா ஃபாரின் போகான் பரஞ்ஞு. அவள் நின்ன மறக்கான் வேண்டியே போகுன்னது"
"இப்ப என்ன பண்றது?"
"ஒன்னும் இல்ல. வீட்லயே பாத்து வைக்கற பொண்ணெ கல்யாணம் களிக்கு"
"உங்கிட்ட கேட்டேன் பாரு, வேஸ்ட்!"
"அங்கனெயோ... ஞான் இப்பம் மஹிமாவெ விளிச்சு நீ சொன்னதை சொன்னா?"
"டேய் டேய்..."
"ம்...அந்த பயம் இருக்கணம். நான் யோசிச்சு சொல்றேன். வை."
விஷ்வா காத்திருக்கவில்லை. உடனே அண்ணனிடம் போனான்.
———————————————
மஹிமா ஒருநாள்கூட ஓய்வின்றி அலைந்துகொண்டிருந்தாள்.
லண்டன் கல்லூரியிலிருந்து அவளை zoom வீடியோ நேர்காணலுக்கு அழைத்திருந்தனர். அவர்களது time zone நம்மிடமிருந்து மாறுபட்டதால், அதிகாலை மூன்று மணிக்கு நேர்காணல். தன் அறையில் தனியாக அவள் நேர்காணலுக்குத் தயாரானாள்.
நேர்காணல் சிறப்பாக நடந்தது. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தன்னால் இயன்றவரை நன்றாகவே பதிலளித்தாள். நம்மூர் போல பின்னர் அழைக்கிறோம் என்றெல்லாம் அவர்கள் கூறாமல், இரண்டு மணி நேரத்தில் அட்மிஷன் கடிதத்தை மெயிலில் அனுப்பினர்.
அதைப் பார்த்ததும் மஹிமா சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள். உடனே அப்பாவுக்கு அழைத்தாள். அவரும் சந்தோஷப்பட்டார். பெரியதாத்தாவிடம் சென்று விஷயத்தைக் கூறிட, அவரும் பாராட்டினார். மாமா, அத்தை எழுந்தவுடன் இந்தச் செய்திதான் அவர்கள் காதை நிறைத்தது. வாண்டுகளையும் விடாமல் அவர்களையும் சேர்த்துக் கொண்டு குதித்தாள்.
லண்டன் எம்பஸியில் விசா வாங்க ஐந்து நாட்கள் ஆனது. அங்கும் நேர்காணல் நடந்தது. இவளுக்கு லண்டன் கல்லூரியில் இடம் கிடைத்ததைக் கேட்டதும் அங்கிருந்த அலுவலர்கள் கூட வாழ்த்துத் தெரிவித்தனர்.
ஒரு மாதத்தில் முடிய வேண்டிய வேலைகள் மூன்றே வாரத்தில் முடிந்தது. அடுத்த நாள் அவளது லண்டன் ஃப்ளைட் டிக்கெட்டை அவள் கையில் தந்தார் மாமா.
கண்ணீர் மல்க அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு, மஹிமா டில்லி விமான நிலையத்தின் boarding deskஐ நோக்கி நடந்தாள்.
கைபேசி ஒலித்தது.
ஏதோ புது எண்.
எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்தபோது, அங்கு நின்றிருந்த செக்யூரிட்டி ஆபீசர், "மேடம் ஆப்கா ஃபோன் ஸைலன்ட் மோட் மே(ன்) ரகியே. ஏ சுரக்ஷித் லவுஞ்ச் ஹே" என்றபடி அருகில் வந்தார்.
"ஓ..ஸாரி ஸாரி" என்றபடி அதனை அமைதிப்படுத்தித் தன் கைப்பையில் போட்டாள்.
போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு அவள் தனது விமானம் நிற்கும் லவுஞ்ச்சை அடைந்தாள். அலைகடலென மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, பின் நேராகச் சென்று விமானத்தை அடைந்தாள்.சிறிது நேரத்தில் அவள் கனவுகளையும் சுமந்துகொண்டு அந்த விமானம் பறந்தது.
——————————————
லண்டன் நகரம் வானிலிருந்து பார்த்தபோதே அழகில் மயக்கியது. இருநூறு ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட குடும்பம்...இன்று இந்த லண்டன் நகரின் மிகப்பெரிய அரண்மனையில். ஆம், பக்கிங்ஹாம் பேலஸ் நிலவொளியில் நனைந்து கொண்டிருந்தது. அதைச் சுற்றி ஆயிரம் வண்ணவிளக்குகள் அதன்மேல் வானவில்லை வாரி இறைத்தன.
விமானத்தில் இருந்தே இவ்வளவு பிரம்மாண்டமாகத் தெரிந்தால், நேரில்?!
சிரித்துக் கொண்டாள் மஹிமா.
விருப்பமில்லை என்று கூறிவிட்டு வியக்கிறேனே!
சிந்தனைகளைத் தள்ளிவைத்து, ஆகாயத்திலிருந்து அழகைப் பருகினாள். அவள் விழிவிரித்து, ஜன்னலில் முகம் வைத்து வேடிக்கை பார்ப்பதை, விமானப் பணிப்பெண் கண்டு சிரித்தவாறு சென்றார்.
விமானம் தரையிறங்குவதற்கான அறிவிப்பை விமானி வழங்க, பணிப்பெண்கள் அனைவரையும் சீட்பெல்ட் அணியச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தனர்.
தலைக்கு மேல் ஒலிபெருக்கியில் அவ்வூரின் நேரத்தை ஒவ்வொரு எண்ணாக ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் சொல்லிக்கொண்டு இருந்தார் ஒரு பெண்.
நேரம் காலை பதினொன்று இருபது.
ஒன்பதரை மணிநேரம் பறந்து வந்திருந்தாலும், நேரமண்டலம் மாறுபடுவதால் வெறும் நான்கு மணிநேரமே கூடி இருந்தது அங்கே. வளிமண்டலத்தைக் கிழித்துக் கொண்டு சாய்வாகப் பறந்தது விமானம்.
அவள் தன் கைப்பையில் இருந்தவைகளை சரிபார்த்து எடுத்து வைத்தாள். இன்னும் சில நிமிடங்களில் முதல்முறையாகத் தன் தாய்மண்ணை விடுத்து அந்நிய மண்ணில் கால்பதிக்கப் போகின்ற கலக்கம் முகத்தில் தெரிந்தது.
விமானம் தன் வருகையை ultrasonic சத்தத்தில் அறிவித்தது. கொஞ்ச தூரம் நடைபயிலும் டைனாஸர் போல் ஊர்ந்து, பின் களைத்துப் போய் நின்றது.
மஹிமாவுக்கு அப்பா ஞாபகம் வந்தது. அவள் கண்கள் பனித்தன. அவர் இருந்தால் நன்றாக இருக்குமே எனத் தோன்றியது. எண்ணங்களைக் கலைக்கும்படி, ஒரு பணிப்பெண் அவளிடம் வந்து, "மேடம் கிஸி problem ஹை க்யா?" என்று வினவ, "Nothing.. Just some contemplation" எனப் பதிலுரைத்துவிட்டு நகர்ந்தாள். கண்களையும் அழுந்தத் துடைத்துக் கொண்டாள்.
சோதனைகள், ஆவண சரிபார்ப்புகள், தடுப்பூசிகள் என்று அனைத்து சாவடிகளையும் கடந்து, விமான நிலையத்தின் மையப்பகுதிக்கு வந்தாள் மஹிமா.
விமான நிலையத்தின் பிரம்மாண்டம் அவளை விழுங்கியது. டில்லி இந்திரா காந்தி டெர்மினலை விட மூன்று மடங்கு பெரிதாக இருந்தது இது. வருடத்திற்கு எட்டுக் கோடிப் பிரயாணிகளைப் பார்க்கும், உலகின் மூன்றாவது பெரிய விமான நிலையத்தில் தற்போது அவள் நின்றிருந்தாள்.
பல்வேறு நாடுகளின் மக்கள் அங்கு வருவதும் போவதுமாக இருந்தனர். இத்தனை மக்கள்... இத்தனை தேசங்கள்... இத்தனை கலாச்சாரங்கள், பண்பாடுகள்.. ஒரே கூரையின் கீழ்! நினைக்கும்போது மஹிமா வியந்துபோனாள்.
"லண்டனில் மொத்தம் ஆறு ஏர்ப்போர்ட் மஹிமா. நீ போகப் போறது 'ஹீத்ரோ(Heathrow)' டெர்மினல். அங்கேயே வந்து உன்னை நம்ம கம்பெனி ஸ்டாஃப் மீட் பண்ணுவாரு. அவரே உன்னை நீ தங்கற இடத்துக்குக் கூட்டிட்டுப் போவாரு. உனக்கு என்ன தேவைன்னாலும் அவரைக் கேளுடா"
அப்பாவின் வார்த்தைகள் காதில் ஒலித்தன.
சுற்றுமுற்றும் திரும்பி வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்று தன் பைகளை conveyor beltல் இருந்து மீட்டாள். அவற்றைச் சக்கரவண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டு ரிசெப்ஷன் லவுஞ்ச்சை அடைந்தாள். தன் பெயர் தாங்கிய பலகை எங்காவது தென்படுகிறதா என்று பார்த்தவாறு நின்றாள்.
மஹிமா என்று அழகாக ஆங்கிலத்தில் எழுதிப்பட்டிருந்த அட்டையை அவள் கண்டாள். அதைநோக்கி நடக்க எத்தனித்தவளை, வேறொரு பலகை தடுத்து நிறுத்தியது.
'மஹிமா' எனத் தமிழில் எழுதியிருந்து.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro