Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

11

நகரும் நதிகள்

காதல் வினோதமானது.

நாம் அதை எப்படி எதிர்பார்த்தாலும் அது வேறொரு வகையில் வந்து நம்மை வியக்க வைக்கின்றதே...

மஹிமா கனவா கண்டிருப்பாள்... தன் சிறுவயது நண்பனாக வந்து தன்னிடம் காதல் சொல்வான் என்று!?
விஷ்வா நினைத்துக் கூடப் பார்த்ததில்லை... மஹிமா அவ்வளவு விரைவாகத் தன் காதலைப் பிரதிபலிப்பாள் என்று!
ஜோஷி... ஐயோ அவன்தான் கற்பனை செய்திருப்பானா? தன் நண்பர்கள் இரண்டு பேர் இப்போது காதலர்களாய் மாறுவார்கள் என்று!?

மஹிமா எதிர்பார்க்கவில்லை தான். ஆனால் அவளளவிற்குத் தெளிவாகவே யோசித்திருந்தாள். விஷ்வாவைப் பிடிக்காமல் யாராவது இருப்பார்களா? அவன் தன்மீதில் வைத்திருக்கும் அன்பு உண்மைதான். அது வெறும் பருவக் கவர்ச்சி இல்லை. தனக்கும் விஷ்வாவிடம் தோன்றியது ஈர்ப்பு அல்ல. அது காதல் தான்.

ஆனால்.. காதலென்றால்...?
எப்படிப் பேசவேண்டும்? என்னென்ன பேசவேண்டும்? இன்னும் அவன் எனக்கு நண்பன்தானா... இல்லை அப்படி இல்லையா?

குழப்பங்கள் பெருகின. அதைத்தான் மஹிமா அவனிடம் சொன்னாள்.

"வித்தியாசமா இருக்கு விஷ்வா"

அவன் அதைக்கேட்டுக் கல்லாக அமர்ந்திருந்தான். கண்டு அவள் கவலைகொண்டாள்.

"விஷ்வா..."

"மஹி... நான் உன்ன இந்த relationshipல force பண்ண விரும்பல. நீ வித்தியாசமா நடந்துக்க வேணாம். நான் எப்பவும் உனக்கு நல்ல ஃப்ரெண்ட் தான். நாம லவ் பண்றோம்னு நீ எங்கிட்ட வித்தியாசமா நடந்துக்க வேணாம்.. love is friendship. "

"நான் கேட்கணும்னு நெனைச்சத நீ சொல்லிட்ட.. thanks விஷ்வா."

நிம்மதியோடு அவன் தோளில் சாய்ந்துகொண்டாள் அவள்.

கல்லாக இறுகிய முகம் இளகியது. அவள்தான் எத்தனை வெகுளி! விஷ்வா என்னவெல்லாம் நினைத்து வருந்தினான் நேற்றிரவு...

'மஹிமாவின் அழகுக்கும், அறிவிற்கும், அந்தஸ்துக்கும் உன்னை எப்படிக் காதலனாய் ஏற்பாள்? நீ முட்டாள்தனமாக ஆசையை வளர்த்துக் கொண்டாய் விஷ்வா...'

ஆனால் இன்று அவளோ இவனது அணைப்பில்.

விஷ்வாவுக்குப் பெருமையாக இருந்தது. அவளை அணைத்தவாறு அமர்ந்திருந்தவனின் மனதில் அத்தனை குதூகலம். நீண்டகாலப் பிரார்த்தனை பலித்ததுபோல் இருந்தது.

"மஹி... உங்கிட்ட நிறைய பேசணும்னு நெனைச்சிருந்தேன்... இப்ப ஏனோ வார்த்தையே வரமாட்டேங்குது"

"ஹ்ம்... ரொம்ப கஷ்டப்படாத... இன்னும் ரெண்டு நிமிஷம்தான் லஞ்ச் ப்ரேக். முடிந்ததும் எந்திரிச்சு போய்டலாம்"

"நான் எவ்ளோ ஃபீல் பண்ணி சொல்றேன்... இவளுக்கு பேச்சைப் பாரு"

அவளது இடுப்பில் கைவைத்துக் கிள்ள அவள் துள்ளியெழுந்தாள்.

ஒருநொடி பதறிப்போனான் விஷ்வா.

'தப்பு பண்ணிவிட்டோமோ?'

மறுநொடி அவள் முகம் பார்த்தவுடன் அதெல்லாம் காற்றில் கரைந்தது. அவள் செல்லமாக சிரித்துக் கொண்டே அவனது காதைத் திருகினாள்.

"நீ ஃபீல் பண்ணது போதும். ஒழுங்கா க்ளாஸ்க்கு வா!"

கன்றுக்குட்டி போல அவள் பிடியில் கட்டுப்பட்டு நடந்து சென்றான் அவன். வகுப்புத் தோழர்களுக்கு விஷயம் தெரிந்துவிட்டதால் அவர்கள் உற்சாகக் குரல் கொடுத்து வரவேற்றனர்.

"First couple of our class!"

"Congrats people!!"

"Vishwa! Vishwa! Mahi and Vishwa!"

வெட்கப்படத் தெரியுமா மஹிமாவுக்கு என்று விஷ்வாவே ஆச்சரியமாகப் பார்க்கும்படி அவளது முகம் சிவந்தது. அவனது சட்டையோடு முகம்புதைத்துக் கொண்டு சிணுங்கினாள் அவள்.
"பாரு விஷ்வா..."

"சரி சரி...இதெல்லாம் இனி daily basisல பாக்கணும். இப்பவே பழகிக்கோ"
அவனும் கைவிட்டுவிட,

"போ விஷ்வா. நீயும் ஓட்டாத" சிணுங்கிக் கொண்டே அவள் இடத்தில் அமர்ந்தாள்.

"ரெண்டு பேரும் ஃபர்ஸ்ட் டே ஒண்ணா உட்கார்ந்தபோதே நாங்க கண்டுபிடிச்சிருக்கணும். ஒரு வருஷம் லேட் ஆயிடுச்சு" அவளருகில் அமர்ந்திருந்த ப்ரதிபா சீண்ட, மீண்டும் வெட்கப்பட்டுச் சிவந்தாள் அவள்.

நண்பர்கள் எல்லாம் விஷ்வாவுக்கு கைகொடுத்து வாழ்த்துக்கள் சொன்னார்கள்.
"மச்சி ட்ரீட் வச்சிடுடா!"
"சரியான ஆளுடா நீ... எப்படான்னு வெய்ட் பண்ணிட்டிருந்த போல!"
"ஆல் தி பெஸ்ட் டா.."

அவன் புன்முறுவலோடு தலையசைத்தான். பேராசிரியர் வந்துவிட, வகுப்பு சற்றே அமைதியானது.

அன்று மாலை விஷ்வா சொன்னதுபோல் ட்ரீட் தந்தான். நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்துகொண்டு பேச்சுக்களும் சிரிப்புகளுமாய் ஆர்ப்பரித்தனர். மஹிமா விஷ்வாவின் அருகில் அமர்ந்திருந்தாள். அவளுடன் தோளில் கைபோட்டு ஜோடியாக செல்ஃபி எடுக்க விஷ்வா முயல, மஹிமா கண்ணாலேயே மறுத்தாள்.

"வீட்டில யாராச்சும் பாத்திருவாங்க" அவன் காதுக்கு மட்டுமே கேட்குமாறு சொன்னாள்.

"ம்...இன்னும் ரெண்டே வருஷம். படிப்பை முடிச்சதும் உடனே வீட்ல பேசிடலாம்" அவனும் மென்மையாக அவளிடம் கூறினான்.

கல்லூரி முடிந்து அனைவரிடமும் விடைபெற்று இவர்கள் இருவரும் பேருந்து நிறுத்தம் வந்தடைந்தனர். மணி ஆறு ஆகியிருந்தது. விஷ்வா உற்சாகத்தின் உச்சத்தில் இருந்தான்.

"நான் செம்ம happy மஹி!"

"..."

"நீயும் தானே?"

"இதென்ன கேள்வி... நானும் happy தான்!"

"ஹ்ம்.. இன்னிக்கு நைட் தூக்கம் வருமான்னே தெரில..."

மஹிமா சிரித்தாள்.

"விஷ்வா... நீ என்ன அவ்ளோ விரும்புறயா?"

"ஏன்...சந்தேகமா இருக்கா?"

" 'நம்ப முடியல'ங்கறது வேற, 'சந்தேகம்'ங்கறது வேற விஷ்வா. என்னால நம்பவே முடியல."

"நீ நம்புற மாதிரி ஒன்னு செய்யட்டா?" கண்கள் குறுகுறுக்க அவன் அவளை நோக்கி ஒரு அடி நெருங்க, அவள் முறைத்தாள்.

"ஹே...ஒரு கவிதை சொல்லத் தான் வந்தேன். அதுக்குள்ள நீ ஏதேதோ....சேச்சே... நான் ரொம்ப டீசன்ட் ஃபேமிலி!" அவன் சமாளிப்பது அவளைச் சிரிக்க வைத்தது.

"சொல்லுங்க கவிஞரே... என்ன சொல்ல வந்தீங்க?"

"பூவொன்றைக் கையிலேந்தி
பூமியில் நான் காத்திருந்ததெல்லாம்
பூவே உன் ஒற்றைச் சம்மதத்திற்காகவே."

"பயங்கரம் பாஸ் ...i want more emotion!"

"அதுக்கெல்லாம் ஒரு inspiration வேணும். உனக்கு இவ்ளோதான்!"

"அடி! இங்க பார், இனி உன்னோட எல்லா கவிதைக்கும் எப்போதும் நான்தான் inspiration. புரிஞ்சுதா?"

"யெஸ் மேடம்" அவன் கைகட்டித் தலையாட்ட, அவள் சிரித்தாள்.

பேருந்து வந்தது. கூட்டம் குறைவாகவே இருந்தது.

அவளை அமர்த்திவிட்டுப் பின்னால் செல்லத் திரும்பியவனைக் கையைப் பிடித்து இழுத்தாள் மஹிமா. தன்னருகிலேயே அமருமாறு சைகை காட்டினாள். அவனும் அமர்ந்தான். ஆயினும் சந்தேகித்தான்.

"பரவாயில்லையா...?"

"நீ என்ன அவ்ளோ நல்லவனா?"

"Basically!"

"அப்டின்னா எந்திருச்சு பின்னாடியே போ"

"இல்ல பரவாயில்ல...இங்கயே உட்கார்ந்துக்குறேன்"

குறும்புடன் சிரித்தனர் இருவரும்.

---------------

மஹிமாவின் இரவுகள் தனிமையைத் தொலைத்திருந்தன. வாட்ஸ்ஸாப்பில் பேசி, அது போரடித்தால் ஃபோன் பண்ணி பேசி, அதுவும் போரடித்தால் கனவில் அவனோடு பேசிக்கொள்வாள். அப்பாவிடம் பேசும்போது இயல்பாகவே காட்டிக் கொண்டாலும், அவரிடம் மறைப்பது அவளை வருத்தியது.

விஷ்வா வானத்தில் மிதந்துகொண்டிருந்தான். காதல் வாழ்க்கை அவன் நினைத்ததைவிட சிறப்பாக இருந்தது. வீட்டில் கேட்டு ஒரு பைக் வாங்கிவிட்டான் அவன்.

அவளை ஏற்றிக் கொண்டு காபிஷாப், கிப்ட் ஷாப், சினிமா, மால் என்று சுற்றினான். அண்ணன் தரும் பாக்கெட் மணி அளவுக்கதிகமாகவே இருந்தது அவனுக்கு. மஹிமாவும் எப்போதும் அவனையே பில்கட்ட வைப்பதில்லை என்பதால் பிரச்சனையில்லை.

ஆறு மாதம் கனவுலகில் இருப்பதைப் போல் போனது இருவருக்குமே. கல்லூரியில் பாதிப் பேரின் கண்கள் அவர்களின் மீது விழுந்திருந்ததென்றால் மிகையில்லை.

மஹிமா தன் கதையை அடித்துவிட்டு முதலிலிருந்து எழுதத் தொடங்கினாள்.

காதல் அதிசயம் நிறைந்தது. யாரிடம் எப்போது வருமென யாருக்கும் தெரிவதில்லை. பார்த்தவுடனும் வரலாம். ஆண்டுக்கணக்கில் பழகிய பின்னாலும் வரலாம்.. நாயகன் நாயகியும் அவ்வாறே... சிறுவயது நண்பர்களாய் அறிமுகமாகி, காதல் கொண்டு, காலமுள்ளவரை பிரியாமல் வாழ்ந்து வந்தனர்...

ஆனால் கதைகளில் வருவதுபோல் எல்லாம் காதல் இருப்பதில்லையே..
.......
....
..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro