Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

புரிதல் 2

நான் 12 ஆவது படிக்கும் பொழுது நடந்த சம்பவம் இது. இரவு படித்து விட்டு வெகு நேரம் கழித்து தூங்கினேன். நடு இரவில் திடீரென என் பக்கம் யாரோ நிற்பதை போல் உணர்ந்தேன், என்னுடைய இதயம் பலமாக அடித்துக் கொண்டது.. அந்த உருவம் என்னை நெருங்கியது.. என்மேல் அது உரசுவது போல் நின்றது. நான் கண்ணை இன்னும் இருக்கமாக மூடிக்கொண்டேன். மூச்சு முட்ட தொடங்கியது எனக்கு, சுவாசிக்க சிரமப்பட்டேன். எப்படியாவது கண்ணை திறந்து விட வேண்டும் என்று பார்த்தேன். பாதி திறந்த இமைகளுக்கு இடையே கரிய நிழல் உருவம் ஒன்று தெரிந்தது. என் பலம் கொண்டு கத்தினேன்.. அம்மாஆஆஆஆ

ம்ஹும்.. சத்தமே வரவில்லை.. மனதில் அந்த உருவத்திடம் போ.. போ .. என்று கத்திகொண்டிருந்தேன். பின் கந்த சஷ்டி கவசம் மனதில் பாட துவங்கினேன்.. அந்த உருவம் என்னை விட்டு விலகியது.. மூச்சு சீராக இயங்க துவங்கியது. பின் மெல்ல கண் விழித்து பார்த்தேன்.. யாரும் இல்லை அங்கே. திரும்பவும் தூங்க போக பயம்.. நேராக சாமி அறைக்கு சென்று பெரிய பட்டையாக திருநீரை பூசிக்கொண்டு படுத்தேன். அப்பாடாஆஆ..  ம்ம்ம்.. நல்ல தூக்கம்.

ஒரு வாரத்திற்கு எனக்கு இப்படி இது தொடர்ந்தது. இது நடக்கும் பொழுது எல்லாம் கண்ணை இருக்கி மூடிக்கொண்டு இது நிஜமல்ல நிஜமல்ல என்று சொல்லிக்கொள்வேன்... இது பேய் பிசாசு வேலை என்று நினைக்கிறீர்களா? அமுக்குவான் பேய் என்று இதை கூறுகின்றனர். இது வர சில அறிகுறிகள் உண்டு..

அப்படி சொல்வேன் என்று எதிர்பார்த்தீர்களா? 😂😂😜 அதுதான் இல்லை. எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் இங்கு பலருக்கு ஏற்பட்டிருக்கலாம். இதற்கு பேர் என்ன? எதனால் ஏற்படுகிறது? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்..

இந்த நிலைக்கு( sleep paralysis )துயில் வாதம் என்று பெயர். இந்த நிகழ்வின் போது விழித்திருக்கும் நிலையில் எச்செயலையும், அதாவது பேசவோ, எழுந்திரிக்கவோ, கை, கால்களை அசைக்கவோ முடியாத நிலையில் இருப்பதாகும். இது விழித்திருக்கும் நிலை மற்றும் தூக்கத்திற்கு இடைப்பட்ட, முழுத்தசை பலவீனத்தால் ஏற்படுவதாகும். பத்தில் 4 பேர் நிச்சயம் இந்த தூக்க பக்கவாதத்தை அனுபவித்திருப்பார்கள். இது எந்த வயதினருக்கும் ஏற்படலாம். முக்கியமாக இந்த நிலை ஏற்படுவதற்கு, அதிகப்படியான பயத்துடன் தூங்குவது, தூக்கமின்மை, தூங்கும் நேரத்தில் மாற்றம், அதிகப்படியான மன அழுத்தம், முதுகில் படுப்பது, ஒருசில மருந்துகள் போன்றவை இந்த தூக்க பக்கவாத்திற்கு காரணிகளாகும்.
( நான் ஓவரா படிச்சிட்டு குப்புறகௌந்தடிச்சு படுத்தது தான் எனக்கு அப்படி நடக்க காரணம்).

தூக்க பக்கவாதத்தில் இரண்டு வகைகள் உள்ளன. அவை தனிமைத் தூக்க பக்கவாதம் மற்றும் தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் ஆகும். தனிமை தூக்க பக்கவாதம் என்பது ஒருவருக்கு எப்போதாவது 2 நிமிடத்திற்கும் குறைந்த நேரத்தில் நிகழும். இதனால் எவ்வித பிரச்சனையும் இல்லை. தொடர் தனிமைத் தூக்க பக்கவாதமானது அடிக்கடி வரும். அதிலும் சிலருக்கு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இது நிகழும். இத்தகையவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று வருவது நல்லது.

தூக்க பக்கவாதம் என்பது தூங்கும் போது உடலானது மென்மையான இயக்கத்தில் இல்லை என்பதற்கான சாதாரண அறிகுறியே என்றும், அரிதாக தூக்க பக்கவாதத்திற்கும், உளவியல் பிரச்சனைக்கும் தொடர்ப்புள்ளதாகவும் தூக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆழ்ந்த தூக்க நிலையில் (REM ஸ்லீப் ஸ்டேஜ்) நாம் இருக்கும் போது நமது உடலின் செயல்பாடு முடக்க நிலையில் இருக்கும். இச்சமயத்தில் விழிப்பு தட்டும் போது விளையும் குழப்பமான நிலையே நீங்கள் மேற்கண்ட மொக்கை அனுபவம்! சிலருக்கு கட்டிலில் இருந்து இழுத்து செல்லப்படுவது, யாரோ கழுத்தை நெரிப்பது, மேலே உர்க்காந்து அமுக்குவது போன்ற அனுபவங்கள் ஏற்படலாம்.

இன்னும் சிலருக்கு மாய உருவங்கள் கூட தெரியலாம். நீங்கள் தூங்கும்போது, உங்கள் மூளை உங்கள் உடலின் தன்னார்வ தசைகளுக்கு ஒரு கட்டளையை கொடுக்கிறது, இது அமைதியான அடோனியா (atonia) என்ற ஒரு நிலைக்கு செல்கிறது. இது உங்கள் கனவுகளில் உங்கள் உடல் இயக்கங்களை கட்டுப்படுத்துகிறது, இதன்மூலம் உடலின் அசைவுகள் கட்டுப்படுத்தப்பட்டு வெளிப்புற காயத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. எந்த தூக்க சீர்குலைவு அல்லது கனவுகள் போது, அடோனியா ஒழுங்காக நடக்காது மற்றும் மனதில் தூங்கும் போது தன்னார்வ தசைகள் செயல்பட மக்கள் தூக்கத்தில் நடப்பது போன்ற விந்தை விஷயங்களை செய்ய முடியும்.

துயில் பக்கவாதத்தின் போது இதற்கு நேர்மாறாக நடக்கிறது, மூளை விழிப்புடன் இருக்கும் ஆனால் தசைகள் வேலை செய்யாது. நீங்கள் சுயநினைவுடன் விழிப்பாக இருப்பீர்கள், நெஞ்சில் ஒரு அழுத்தம் ஏற்படும். பலர் மூச்சு தினறளுடன் விழிக்க இதுவே காரணம். இந்த நிகழ்வு தூக்கத்திற்கு செல்லும் போதோ இல்லை விழிக்கும் போதோ ஏற்படுகிறது. நம் உடல் REM ( rapid eye movement) விரைவான கண் இயக்கம் நிலைக்கு சென்று திரும்ப வேண்டும். ஆனால் இதில் பிரச்சனை ஏற்படும் பொழுது நமக்கு இப்படி தூக்க பக்கவாதம் ஏற்படுகிறது.

நீங்கள் என்ன செய்தாலும் உங்களால் இதிலிருந்து விழிக்க முடியாது. சுமார் 20 நொடியிலிருந்து 1 நிமிடம் வரை இது நடக்கலாம், இதுதான் நடக்கிறது என்று தெரிந்தால் உங்களை நீங்களே கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும். நாம் கண் மூடி உறங்கும் போது ஏற்படும் கனவே பயங்கரமாக இருக்கும் போது, இது கண்ணை திறந்து வைத்து கனவு காண்பது போல. மாயா தோற்றங்களுக்கும் பயங்கர கற்பனைகளுக்கும் இது வழி வகுக்கும். இது பேய் அல்ல, நம் கற்பனையே என்று தெரிந்து கொள்ள வேண்டும். இதிலிருந்து விடுபட என் முறையையும் நீங்கள் பயன்படுத்தலாம் என்று தெரிவித்து கொள்கிறேன் 😜😜

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro

Tags: #paranormal